• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புற்று நோய் போக்கும் பசுவந்தனை கைலாசநாதர்

By Kr Subramanian
|

-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன்

நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் இன்று தரிசிக்கவிருப்பது தூத்துகுடி மாவட்டம் கோவில்பட்டிக்கு அருகில் அமைந்துள்ள பசுவந்தனை அருள்மிகு கைலாசநாத சுவாமி திருக்கோயில் ஆகும்.

தலச் சிறப்பு:

அடர்ந்த காட்டில் இருந்து மேய்ந்து வந பசுக் கொட்டத்தில் இருந்த ஒரு பசு திருக்குளத்தில் நீராடி தானே பாலைச் சொரிந்து வந்தது. இந்த இடத்தில் லிங்கம் இருந்துள்ளது. பசு வந்து அணைந்து பால் சொரிந்துள்ளதால் இத்தலம் பசுவந்தனை பெயர் பெற்று அழைக்கப்படுகிறது.

Pasuvandhanai Kailasanathar Temple

புராணச் சிறப்பு

பூவுலகில் சிறந்தது கயிற்றாறு என்னும் புண்ணிய நாடு, அதனை ஆண்டு வந்த மன்னன் பசுக்களை போற்றி வந்தார்.

பசுக் கூட்டங்கள் மன்னனின் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியில் தினமும் புல் மேய்வது வழக்கம் அந்த பசுக் கூட்டத்தில் இருந்த ஒரு பசு அங்குள்ள ஒரு குளத்தில் நீராடி வில்வ மரத்தடியில் இருந்த ஒரு சிவலிங்கத்தின் மீது பாலைச் சொரிந்துவிட்டு பின்னர் கூட்டத்தில் வந்து சேர்ந்துவிடும். தினமும் இந்த நிகழ்ச்சியால் பால் குறைவதை அறிந்த மன்னன் காவலர்களை அனுப்பி உண்மையைக் கண்டறிந்தார். இறையுணர்வு மிக்க தனது பசு பால் சொரியும் இடத்தை சென்றடைந்த மன்னன் அங்கிருந்த சிவலிங்கத்தைக் கண்டு பணிந்து வணங்கினார். இரவு படையுடன் அங்கு தங்கியிருந்த மன்னன் வானவர்கள் வந்து அந்த சிவலிங்கத்தை அர்ச்சித்து வழிபாடு செய்வதைக் கண்டு மெய் உருகி வழிபட்டான். பசு பால் சொரிந்து வானவர்கள் வழிபட்ட சிவலிங்கத்திற்கு அந்த இடத்திலேயே ஆலயம் ஒன்று எழுப்ப முனைந்தார். அதன்படி அந்த இடத்தில் ஆனந்தவல்லி சமேத கைலாசநாதருக்கு சிறியதாக ஓர் ஆலயம் அமைத்தார். திருக்கோயிலைச் சுற்றி முறைப்படி வீதிகள் அமைத்து நகரமாக்கினார். பசு அருகில் வந்து பால் சொரிந்து வளர்த்ததும் வானவர்கள் வந்து தினமும் வழிபட்ட சிவலிங்கம் உள்ள இத்திருத்டலம் பசு வந்து அணை எனப் பெயர் பெற்று பின்னர் பசுவந்தனை என அழைக்

கப் பெறலாயிற்று. பசுவந்து ஹீராடிய குளம் சிவ தீர்த்தம் என்றும் கோசிருஙவாவி என்றும் அழைக்கப்படுகிறது.

தனிச் சிறப்பு:

இத்திருக்கோயிலில் சுவாமிக்கும் அம்மனுக்கும் நடுவே பாலமுருகன் சன்நிதி அமைப்பெற்றுள்ளது. இத்திருக்கோயிலின் தனிச் சிறப்பாகும். இதுவே சோமஸ்கந்தர் என்று அழைக்கப்படுகிறது. இச்சந்நிதியில் சஷ்டியப்த பூர்த்தி (அறுபது வயது கடந்தவர்களுக்கும்) சதாபிசேகம் (எண்பது வயது கடந்தவர்களுக்கும்) திருமணம் நடைபெறுவது மிகச் சிறப்பு வாய்ந்தது.

இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கும் மூர்த்தியின் சிறப்பை உணர்த்தும் உண்மைச் சம்பவம் பின் வருமாறு, எட்டையபுரம் அருகிலுள்ள தெற்கு முத்தலாபுரம் என்ற கிராமத்தில் ஐம்பத்து ஒரு ஆண்டுகளுக்கு முன்பு சுப்பா நாயக்கர் என்பவர் வாழ்ந்து வந்தார். திடீரென ஒரு நாள் நன்றாக இருந்த அவரது இரு கண்களும் பார்வையை இழந்துவிட்டன. அவர் இத்திருத்தலத்து இறைவன் மீது கொண்ட பக்தியினால் திருக்கோயிலுக்கு வந்து தினசரி வாவியில் நீராடி ஈசனை வழிபட்டு நாற்பத்தியொரு நாட்கள் மண் சோறு உண்டு விரதமிருந்தார் நாற்பத்தி இரண்டாவது நாள் இறையருளால் பார்வை வரப் பெற்றது. இந்நிகழ்ச்சியினால் இத்திருத்டலத்து இறைவன் இப்பகுதி கக்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறார்.

வீர பாண்டியபுரம் சிற்றசர் காமாட்சி ரெட்டியார் குழந்தைபேறு வேண்டி சோமயாகம் செய்தார். அதனால் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. சோமயாக செய்ததற்கு சாட்சியாக கிணறு என்றும் வற்றாததாக உள்ளது. இத்திருக்கோயிலில் சுவாமி சுயம்புலிஙமாக வீற்றிருப்பதால் பசு வந்து அணைந்து பால் சொரிந்துள்ளாதால் சுவாமிக்கு பால் அபிசேகம் செய்த தீர்த்தை உண்டால் புற்று நோய் போன்ற கொடிய நோய்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அமைவிடம்:

கோவில்பட்டியில் இருந்து இருபத்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலும் திருநெல்வேலியிலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

இறைவன்: அருள்மிகு கைலாசநாதர்

இறைவி: அருள்தரும் ஆனந்தவல்லி அம்மன்

தீர்த்தம்: சிவதீர்த்தம்

தலவிருட்சம்: வில்வமரம்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Pasuvandhanai village lies the Arulmighu Sri Kailasanathasamy Thirukovil dedicated to Lord Shiva. Devotees belives the temple milk prasatham cure cancer.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more