• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தை வரம் தரும் குடிநெல்வாயல் கருகாத்தம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்

|

திருவள்ளூர்: மனிதர்களாக பிறந்த அனைவரும் தங்களின் சந்ததி இந்த உலகத்தில் வளரவேண்டும் என்று நினைப்பார்கள். பிறந்து வளர்ந்து படித்து வேலை கிடைத்த பின்னர் திருமணம் செய்து கொண்டு நமது அடுத்த தலைமுறையை இந்த மண்ணிற்கு விட்டுச் செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். பிள்ளை வரம் கிடைப்பதிலேயே பிரச்சினை என்றால் அவர்களின் மனது கவலைப்படும். மக்களின் கவலையை போக்கும் விதமாகவே கருகாத்தம்மன் இருக்கிறார். குடிநெல்வாயல் கிராமத்தில் குலம் காக்கும் அன்னையாய் திகழ்கிறாள் கருகாத்தம்மன்.

சக்தியின் சொரூபமான அம்பிகையின் அருளாற்றல் நிரம்பிய நூற்றுக்கணக்கான ஆலயங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அவ்வகையில் பொன்னேரி அருகில் உள்ள கருகாத்தம்மன் என்ற திருநாமம் கொண்டு தன்னை வணங்கும் அடியவர்களின் குறைகளைத் தீர்க்கிறாள் அன்னை. மகப்பேறு நல்கியும், வயிற்றில் வளரும் கருவினைக் காத்தும், சுகப்பிரசவம் அருள்கிறாள்.

500 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு சமீபத்தில் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. கிரமப்பெரியவர்கள் முன்னிலையில் நடைபெற்ற நடைபெற்ற இந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்தனர்.

அதெப்படி கோவிலுக்கு போகலாம்... மனைவியை அடித்துக்கொன்று கணவன் எடுத்த விபரீத முடிவு

குழந்தை பாக்கியம்

குழந்தை பாக்கியம்

ஒருவர் எத்தனைதான் விதவிதமான செல்வங்களைப் பெற்றிருந்தாலும், குழந்தைச்செல்வம் இல்லையென்றால் பிறவிப் பயன் கிட்டுவதில்லை. திருமணமான ஒவ்வொரு தம்பதியும் திருமணம் ஆன நாளில் இருந்து தங்களுக்கு ஒரு வாரிசை எதிர்பார்த்து கனவு காண்பது இயற்கையே! அந்த கனவு நனவாகி பிள்ளை பிறக்கும்போது தாய் தந்தையர் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. வேத சாஸ்திரங்களும் புத்திர பாக்கியத்தின் பெருமையை எடுத்துச் சொல்கின்றன.

புத்திர ஸ்தானம்

புத்திர ஸ்தானம்

ஜாதகத்தில் ஐந்தாம் பாவம் அல்லது ஐந்தாம் வீடு புத்திர ப்ராப்தியை குறிக்கும் இடமாகும். குரு புத்திரகாரகன். ஜாதகத்தில் குரு கெடாமல் இருந்தால், குரு புத்திர ஸ்தானத்தையோ, புத்திர ஸ்தானாதிபதியையோ பார்த்தால் அவர்களுக்கு நிச்சயம் குழந்தைப்பேறு இருக்கும். குரு புத்திரஸ்தானத்தில் இருந்தாலும் குழந்தைப் பேறு இருக்கும் என்று சில ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

புத்திரகாரகன் குரு

புத்திரகாரகன் குரு

ஆண், பெண் இருவரின் ஜாதகங்களில் குரு, செவ்வாய், சுக்கிரனின் பங்களிப்பு மிகவும் முக்கியமாகும். குருவிற்கு புத்திர பாக்யம் தருவதில் மிக முக்கிய பங்கு உண்டு. ஏனென்றால் குரு புத்திர காரகன் ஆவார். அதாவது புத்திர யோகத்தை தரக்கூடிய அதிகாரம் பெற்றவர். செவ்வாய் அருளால்தான் தாம்பத்யத்தில் முழுமையாக ஈடுபட முடியும்.

கருகாத்தம்மன்

கருகாத்தம்மன்

கால புருஷனுக்கு ஐந்தாம் வீடான சிம்ம ராசியில் அசுப கிரகங்கள் இருப்பது, சூரியன் ஸர்ப கிரகங்களின் பிடியில் இருப்பது, சூரியனும் சுக்கிரனும் நெருங்கிய பாகையில் நிற்பது போன்றவை புத்திரபேறை தாமதப்படுத்தும் அமைப்பாகும். ஐந்தாம் வீட்டோடு 6, 8, 12ம் அதிபதிகள் தொடர்பு கொண்டு இருந்தால் கருச் சிதைவு ஏற்படும். கரு உருவாகாமல் தடுப்பதையும், கரு உருவாகியும் சிதைவு ஏற்படுவதையும் தடுக்க காவல் காக்கிறாள் கருகாத்தம்மன்.

குடிநெல்வாயல் கிராமத்தில் குலம் காக்கும் அன்னையாய் திகழ்கிறாள் கருகாத்தம்மன்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Karukathamman Temple this temple is very famous near Ponneri Kudinelvayal Village. Women with infertility problems and others who are trying to conceive and women who are pregnant looking for normal delivery.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more