For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென்காசி அய்யாபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் 26வது ஆண்டு பூக்குழி திருவிழா கோலாகலம்

தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை பஞ்சாயத்திற்கு உட்பட்ட அய்யாபுரம் கிராமத்தில் உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் 26ம் ஆண்டு பூக்குழி திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் தீச்சட்டி ஊர்வலம்

Google Oneindia Tamil News

தென்காசி: குற்றாலம் அருகே உள்ளது குத்துக்கல்வலசை பஞ்சாயத்திற்கு உட்பட்ட அய்யாபுரம் இங்குள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் 26ஆம் ஆண்டு பூக்குழி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை பஞ்சாயத்திற்கு உட்பட்ட அய்யாபுரத்தில் சுமார் 6 தலைமுறையாக நடத்தி வரும் இத்திருவிழா தேவி ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு கடந்த 26 வருடங்களாக நடைபெறுகிறது.

ஆண்டுதோறும் நடைபெறும் இத்திருவிழா, கடந்த அக்டோபர் சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. முதல் நாளில் தீச்சட்டி ஊர்வலம் நடந்தது, இரவில் தேவி ஸ்ரீமுத்துமாரியம்மனுக்கு சிறப்பு மாக்காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. இரண்டாம் நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் எடுத்த முளைப்பாரி ஊர்வலமும், தீர்த்தம் கொண்டு வருதலும், இரவில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

பூக்குழி பக்தி பரவசம்

பூக்குழி பக்தி பரவசம்

இரவு சரியாக 12 மணியளவில் 21 அடி நிலம் கொண்ட பூக்குழியில் பூவளர்த்து உலகின் அனைத்து தெய்வங்களையும் எழுந்தருள செய்தனர். அதிகாலை 4.30 மணிக்கு பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழியில் இறங்கினர்.

 சிறப்பு அபிஷேகம்

சிறப்பு அபிஷேகம்

பின்னர் மஞ்சள் நீராட்டும் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடந்தது. விழாவைக் காண அய்யாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை அய்யா புரம் இந்து நாடார் அமைப்பினர் மற்றும் ஊர் பொதுமக்கள், நாட்டாண்மைகள் சிறப்பாக செய்திருந்தனர்.

திருவிழா சிறப்பு

திருவிழா சிறப்பு

இந்த விழாவில் பக்தர்கள் மட்டுமின்றி சுற்று வட்டாரத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பூக்குழி இறங்கினர். பாதுகாப்பு பணியினை தென்காசி காவல் ஆய்வாளர் ஆடிவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் மற்றும் தீயணைப்பு துறையினர், இலத்தூர் மருத்துவ குழுவினர், தென்காசி மின்சார வாரியம் மற்றும் ஊர் இளைஞர்கள் சிறப்பாக செய்து திருவிழா வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.

பொதுமக்கள் பாராட்டு

பொதுமக்கள் பாராட்டு

அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது. திறம்பட 26 ஆண்டுகள் பாடு பட்டு செயல்பட்டு பக்தர்கள் மத்தியில் தன்மையாக நடந்து கொண்ட நாட்டான்மைகள் மற்றும் வில்லிசை குழுவினர்கள், நையாண்டி மேளதாரர்கள், டிரம் செட் உரிமையாளர்கள், மைக்செட் உரிமையாளர்கள் என அனைவரையும் பொதுமக்கள் பாராட்டினர்.

English summary
Tenkasi district Ayyapuram arulmigu Mariamman temple 26th year pookuli festival held on Today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X