For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாதவிலக்கு பிரச்சனை பாடாய் படுத்துகிறதா? துர்கைக்கு குங்குமார்ச்சனை செய்யுங்க!

Google Oneindia Tamil News

சென்னை: இன்றைய சூழ்நிலையில் கன்னிப்பெண்கள் முதல் மெனோபாஸை நெருங்கும் பெண்கள் வரை அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான பிரச்சனை மாதவிடாய் பிரச்சனை தான். பீரியட் பிரச்னை பெண்களை பாடாய்படுத்தும் பிரச்னைகளில் ஒன்றாக இருக்கிறது. நாட்கள் தள்ளி போவது, அதிகப்படியான உதிரப்போக்கு, அதிகவலி போன்ற மாதவிடாய் பிரச்னைகளால் பல பெண்கள் அவதிப்படுகிறார்கள். சில பெண்களுக்கு 'வரும்... ஆனா, வராது’ கதைதான். ஆனால் ஒரு சிலருக்கோ சீக்கிரமே வருவதும், சிலருக்கு தள்ளித் தள்ளி வருவதுமாக ஆளாளுக்கு தினுசு, தினுசாக பிரச்னைகள். பூப்பெய்திய பெண்கள் முதல் மெனோபாஸை நெருங்குகிறவர்கள் வரை யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. மாதவிலக்கு சுழற்சி முறையற்றுப் போவது ஏன்? இதற்கான ஜோதிட காரணங்கள் தான் என்ன?

possible reasons for a missed period some women completely miss or have irregular periods

மாதவிலக்கு சுழற்ச்சி:

ஹார்மோன் சுழற்சியின் வெளிப்பாடு தான் மாதவிடாய். மாதம் ஒரு கருமுட்டை பெண்ணின் முட்டைப் பையில் இருந்து வெளிப்படும். கருப்பையில் அல்லது ஹார்மோனில் குறைபாடுகள் ஏதாவது இருந்தால் அதை உணர்த்தும் எச்சரிக்கையாக இந்த பிரச்னை இருப்பதால் இதற்கு உடனே தீர்வு காண வேண்டியது அவசியமாகும்.

மாதவிலக்கு தள்ளிப் போகவோ, குறிப்பிட்ட நாளைவிட முன்னதாகவே வரவோ முக்கிய காரணம் ஹார்மோன் கோளாறு. கர்ப்பப் பையில உள்ள ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களால கர்ப்பப் பை திசுக்கள் இயங்கி, மாதவிலக்கு வருகிறது. இந்தச் செயலுக்கு சினைமுட்டைப் பையின் இயக்கமும், பிட்யூட்டரி சுரப்பியோட இயக்கமும் தேவை.

possible reasons for a missed period some women completely miss or have irregular periods

அதுக்கடுத்த முக்கிய காரணம் உடல் பருமன். பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன், பாதுகாப்பு கவசம்போல் செயல்படுகிறது. இந்த ஹார்மோன் சுரப்பு குறைந்து, ஆன்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பதால் அவர்களின் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்கிறது. ரத்த சோகை, தைராய்டு, சினைப்பை நீர்க்கட்டி, மன அழுத்தம், தூக்கமின்மை, கிருமித் தொற்று, கர்ப்பப் பை கட்டி, சீதோஷ்ண நிலை வேறுபாடுனு வேற சில காரணங்களாலும், மாதவிலக்கு சுழற்சி முறை தவறலாம்.

ஹார்மோன் அளவு மாறுபாடு, கருப்பையின் உட்புறச் சுவர் தடிமன் ஆவது போன்றவை இதற்கு காரணங்களாக இருக்கலாம். இதெல்லாம் சரியாக இருந்தும் கூட சிலருக்கு அதிக உதிரப் போக்கு மற்றும் கட்டியாக உதிரம் போதல் போன்ற தொல்லைகள் இருக்கும்.உதிரப்போக்கு அதிகம் போதல், கட்டியாக உதிரம் வெளிப்படும் போது அதிக வலியிருந்தால் சாதாரணமாக எண்ணி விடக்கூடாது. உடனடியாக கர்ப்பவியல் நிபுணர்களை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டும். ஸ்கேன் மற்றும் கருப்பைக்கான பரிசோதனைகள் மூலம் சரியான காரணத்தை கண்டறிய வேண்டியதும் அவசியம்.

ரத்த சோகை எனும் ஹிமோக்ளோபின் குறைபாடு:

இரும்பு சத்து குறைவினால் அதாவது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைவதால் மாதவிலக்கு பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் பெண்களுக்கு மாத விலக்கு காலங்களில் ஏற்படும் உதிர இழப்பால் எலும்புகள் பலமிழக்கின்றன. உடல் சேர்வடைந்து விடுகிறது ரத்தத்தில் பித்தம் அதிகரித்து ரத்தம் சீர்கேடு அடைந்து தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி மயக்கம் ஏற்படுகின்றது. மேலும் கர்ப்பப்பை வீக்கம், ஒழுங்கற்ற உதிரப் போக்கு, வெள்ளைப்படுதல் போன் றவை ஏற்படுகிறது. இதனால் ரத்த சோகை அதாவது அனீமியா ஏற்படுகிறது. காரணங்கள் ரத்த சிவப்பணுக்கள் தொடக்கம் சீராக இல்லாத நிலையில் ரத்த சோகை உண்டாகும். வலுவற்ற, பாதிக்கப்பட்ட எலும்பு மஜ்ஜையினாலும் ரத்த சோகை உண்டாகும்.

possible reasons for a missed period some women completely miss or have irregular periods

ஜோதிடத்தில் மாதவிலக்கு பிரச்சனை:

ஜோதிடத்தில் மாதவிலக்கு பிரச்சனைகளுக்கு முக்கிய கிரகமாக கூறப்படுபவர் ரத்தத்தின் ரத்ததின் காரகரான இன்றைய தின நாயன் செவ்வாயும் சந்திரனும் தாங்க!

மாதவிடாய் பிரச்சனைக்ளுக்கான பாவம் காலபுருஷனுக்கு ஏழாம் பாவமான துலாம், மற்றும் எட்டாம் பாவமான விருச்சிகமும் மற்றும் ஜெனன ஜாதக ஏழு எட்டு பாவங்களும் முக்கிய தொடர்புள்ள பாவங்களாகும்.

possible reasons for a missed period some women completely miss or have irregular periods

ரத்தத்திலுள்ள ஹீமோக்ளோபின் எனப்படும் இரும்புசத்தின் காரகனும் செவ்வாய்தான் என்கிறது மருத்துவ ஜோதிடம். இளம்பெண்களுக்கும் செவ்வாய்க்கும் நெருங்கிய தொடர்பு இருக்குங்க! தனக்கு வரப்போகும் கணவர் இப்படி இருக்க வேண்டும் என்ற கற்பனைக்கேற்ப்ப கணவனை குறிக்கும் கிரகமும் செவ்வாய்தான் என்கிறது பாரம்பரிய ஜோதிட சாஸ்திரம்.

எந்த ஒரு பெண்ணும் வீரமுள்ள ஆண்மகனையே கணவனாக அடைய விரும்புவாள். எனவே வீரத்தை குறிக்கும் கிரகமும் செவ்வாய்தான். ஒருபெண்ணுக்கு சந்தோஷமான தருனமான பூப்படையும் தன்மையை ஏற்படுத்துவதும் செவ்வாய்தாங்க.

ஒரு ஜாதகத்தில் சந்திரன் உடம்பு மற்றும் உடம்பிலுள்ள நீர் தன்மையுள்ள பொருட்களை குறிக்கும் கிரகமாகும். காலபுருஷனுக்கு நான்காம் வீடான கடகத்தை ரத்தத்தின் தொடர்புள்ள பாவமாகவும் சந்திரனையும் ரத்தத்தின் அதிபதியாகவும் கூறப்படுகினறது. செவ்வாய் ரத்தத்தை குறிக்கும் கிரகமாகும். ஒரு பெண்ணின் வயது வரும் பருமடைந்தவுடன் ஜாதகத்தில் கோசார செவ்வாய் லக்னத்தையும் சந்திரனயும் ஒரே நேரத்தில் தொடர்பு கொள்ளும்போது பருவமடைகிறாள் என மருந்துவ ஜோதிடம் கூறுகிறது.

ஒவ்வொரு மாத சுழற்சியில் ஜாதகத்தில் ஜனன செவ்வாயை கோசார சந்திரன் தொடுவதற்க்கு 5 மணி நேரத்திலிருந்தும் சந்திரன் செவ்வாயை கடந்து 5 மணி நேரம் வரையும் மாதவிடாய் இரத்தப்போக்கு ஏற்படும் என்கிறது மருத்துவ ஜோதிடம். அதாவது ஒரு ராசியில் சந்திரன் இரண்டரை நாள் பயனம் செய்வார். அவர் ராசியை அடைவதற்க்கு முன்பும் கடந்த பின்புமாக மொத்தம் மூன்று நாட்கள் மாதவிடாய் ஏற்படுவதின் காரணம் செவ்வாய் சந்திர தொடர்பே என்கிறது ஜோதிடம்.

ஒரு பெண்விரும்பாத தருணமான அதிக உதிரப்போக்குடன் கூடிய பெரும்பாடு எனப்படும் மாதவிடாய் கோளாரினை ஏற்படுத்துவதும் சந்திரன் செவ்வாய் சேர்க்கைதான்.

ரத்த சோகைநோய்க்கான கிரக சேர்க்கைகள்:

அசுபத்தன்மை பெற்ற செவ்வாய், தேய்பிறை சந்திரன் சேர்க்கை,செவ்வாய் குரு சேர்க்கை, செவ்வாய் சனி சேர்க்கை கடகத்தில் ஏற்படுவது, சனி சந்திரன் சேர்க்கை, சனி கடகத்தில் நிற்பது, எந்த விதத்திலேனும் புணர்ப்பு தோஷம் பெருவது, சூரியன் சனி சேர்க்கை போன்றவை ரத்த சோகை நோயை ஏற்படுத்தும் அசுபத்தன்மை பெற்ற செவ்வாய் ஹீமோகுளோபின் எனும் இரும்பு சத்தின் அளவை குறைத்து ரத்த சோகையை ஏற்படுத்தும். மீனம் அல்லது 12ம் வீட்டில் செவ்வாய் நிற்பது அல்லது சேர்க்கை பெருவது அதிக உதிரப்போக்குடன் கூடியதும் அதிக வலியுடன் கூடியதுமான மாதவிடாய் ஏற்படுத்துகிறது.

possible reasons for a missed period some women completely miss or have irregular periods

மலட்டு ராசி மற்றும் காலபுருஷனுக்கு ஆறாம் வீடான கன்னியில் செவ்வாய் சந்திர சேர்க்கை ஏற்படும்போது உதிரத்தை வெளிப்படுத்தாத மாதவிடாய் கோளாரை ஏற்படுத்துகிறது. நீச சுக்கிரனும் சேர்க்கை பெற்றால் வெள்ளை படுதல் எனும் நோய் ஏற்படுகிறது. காலபுருஷனுக்கு எட்டாம் வீடான விருச்சிகத்தில் செவ்வாய் ஆட்சி பெற்று நீச சந்திரன் மற்றும் சனியோடு சேர்க்கை பெரும்போது கருப்பை கோளாருகள், கருப்பை அகற்றுதல் ஆகியவை ஏற்படுகிறது.

மாதவிலக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் கிரக நிலைகள்:

1. ரத்ததிலுள்ள சிகப்பு அணுக்களுக்கும் இரும்பு சத்திற்கும் காரகர் செவ்வாய் பகவான் ஆவார். அவருடன் சந்திரபகவான் அசுப தொடர்பு கொள்ளும்போது ஜாதகருக்கு ரத்த சோகை நோய் ஏற்படுகிறது. அதனால் மாதவிலக்கு பிரச்சனைகள் ஏற்படுகிறது.

2. சந்திரனின் வீடான கடகத்தில் செவ்வாய் நீச நிலையில் நிற்பது மற்றும் சனியின் பூச நக்‌ஷத்திர சாரம் பெற்று நிற்பது.

3. காலபுருஷனுக்கு எட்டாம் வீடான விருச்சிகத்தில் சந்திரன் நீசமடைந்து நிற்பது மற்றும் சனியின் அனுஷ நக்‌ஷத்திர சாரத்தில் நிற்பது.

4 . செவ்வாய் மற்றும் சனியின் அசுப தொடர்புகள் ரத்தசோகை நோயை ஏற்படுத்துகிறது. மருத்துவ ஜோதிடத்தில் விட்டமின் சியின் காரகர் சனைச்சர பகவான் ஆவார். இரும்பு சத்து சரியான விகிதத்தில் ரத்ததில் சென்றடைய விட்டமின் சி அவசியமாகும். செவ்வாய் மற்றும் சனியின் அசுப தொடர்புகள் விட்டமின் சி குறைபாட்டை ஏற்படுத்தி அதனால் ரத்த சோகை நோயை ஏற்படுத்துகிறது.

5. மாதவிடாய் சுழற்சி என்பது ஒவ்வொரு பெண்ணும் மாதந்தோறும் அனுபவிக்கும் ஒன்று. இக்காலத்தில் பெண்கள் பல கஷ்டங்களை அனுபவிப்பார்கள். மேலும் மாதவிடாய் காலத்தின்போது, ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படுவதால், அவர்களின் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டு, எரிச்சலுடனும் கோபத்துடனும் நடந்து கொள்வார்கள். இதற்கு காரணம் மனோகாரகன் சந்திர செவ்வாயுடன் இணைவதே ஆகும்.

5.மாதவிலக்கு ஏற்படுவதற்க்கு காரணமான ஹார்மோனான ஈஸ்ட்ரோஜனுக்கு காரகர் சுக்கிரபகவானாகும். ஒருவருடைய ஜாதகத்தில் சினை முட்டை உருவாவதற்க்கும் காரகர் சுக்கிர பகவானே ஆகும். சுக்கிர பகவான் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 6/8/12 மற்றும் அசுப தொடர்புகள் பெற்று செவ்வாயோடு தொடர்பு கொள்ளும்போது ஈஸ்ட்ரோஜன் குறைபாட்டினால் மாதவிலக்கு சீரற்ற நிலையில் ஏற்படுகிறது.

6. பாலிசிஸ்டிக் ஒவரிஸ் டிஸிஸ் (பிசிஓடி) எனப்படும் கருப்பையில் ஏற்படும் நீர் கொப்புளங்களால் சிலருக்கு மாதவிடாய் கோளாருகள் ஏற்படுகின்றன. சுக்கிரன் காற்று கிரஹங்களான புதன், மற்றும் சனியுடன் சேர்ந்து காலபுருஷனுக்கு எட்டாம் வீடு மற்றும் கருப்பையை குறிக்கும் விருச்சிகம் மற்றும் ஜெனன ஜாதக எட்டாம் வீட்டில் நிற்கும்போது பிசிஓடி பிரச்சனைகள் ஏற்படுகிறது.

7. சினைமுட்டையை குறிக்கும் சுக்கிரபகவான் கேதுவுடன் சேர்ந்து நிற்பது, கேதுவின் திரிகோண பார்வையில் நிற்பது, கேதுவின் சாரம் பெற்று நிற்பது ஆகியவை கருப்பையில் சிறு கொப்புளங்களை ஏற்படுத்தி அதனால் சினை முட்டை உற்பத்தியில் தாமதத்தை ஏற்படுத்துகிறது. அவர்களுக்கு மாதவிடாய் எளிதில் ஏற்படுவதில்லை. பல முறை கருகலைப்பு செய்தவர்களுக்கு கர்ம வினையின் காரணமாக இதுபோன்ற அமைப்பு ஏற்படுகிறது.

மாதவிடாய் பிரச்சனைகளை தீர்க்கும் தெய்வீக ஸ்தலங்கள்:

சந்திரன் மற்றும் செவ்வாய் சேர்க்கையால் ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனைகளுக்கு செவ்வாய் கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு செவ்வரளி மலர் சாற்றி குங்கும அர்ச்சனை செய்து வர மாதவிலக்கு பிரச்சனைகள் தீரும். வீட்டில் பெண் குழந்தைகள் நீண்ட நாட்களாக வயதுக்கு வராமல் இருப்பவர்களும் இதனை செய்துவர சிறந்த பலனளிக்கும்.

சிதம்பரத்தை அடுத்த வைதீஸ்வரன் கோயில் ஒரு சிறந்த செவ்வாய் பரிகார ஸ்தலமாகும். செவ்வாய் கிழமைகளில் இந்த திருத்தலத்திற்க்கு வந்து வணங்குவது சிறந்த பரிகாரமாகும். மேலும் ரத்தத்தில் குறைபாடு உள்ளவர்கள் செவ்வாய் எனும் அங்காரகனின் அதிதேவதையான முருகப்பெருமானின் வாகனமான கோழி மற்றும் சேவல் இறைச்சி சாப்பிடுவதை அறவே நிறுத்திவிட வேண்டும்.

possible reasons for a missed period some women completely miss or have irregular periods

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ளது காமாக்யா தேவி கோயில். இந்த கோவிலின் கருவறையில் கடவுளுக்கு சிலைகள் எதுவும் கிடையாது மாறாக ஒரு பாறையில் யோனியை செய்து அதையே தெய்வமாக வழிபடுகின்றனர். இந்த பாறையில் இருந்து எப்பொழுதும் நீர் கசிந்துகொண்டிருக்குமாம். மாதாமாதம் பெண்களுக்கு எப்படி உதிரி போக்கு இருக்கிறதோ அதே போல் வருடத்தில் மூன்று நாட்கள் இந்த கோவிலில் உள்ள தேவி தீட்டாகும் நாட்களாம்.

அதனால் இங்கு ஓவ்வொரு வருடமும் ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் கோவில் கருவறையை அடைத்துவிடுவார்கள். அந்த மூன்று நாட்களும் தேவி குளிப்பாட்டப்பட்டு, சிகப்பு நிற ஆடை அணிவிக்கப்பட்டு பழங்கள் மற்றும் பூக்களை வைத்து வணங்கப்படுவாள்.இந்த மூன்று நாட்களும் சிகப்பு நீர் கசிவதாக நம்பப்படுகிறது. மூன்று நாட்கள் கழித்து நான்காவது நாள், பக்தர்கள் வழிபாட்டிற்காக கோவிலின் கருவறை திறக்கப்படும்போது, தண்ணீரில் சிகப்பை கலந்து அதை பிரசாதமாக பக்தர்களுக்கு அளிக்கின்றனர். இந்த கோயிலில் உள்ள பார்வதியம்மனை வணங்கினால் நீண்ட நாட்களாக அவதியை தரும் மாதவிலக்கு பிரச்சனைகள் நீங்கும் என நம்பப்படுகிறது.

கேரள மாநிலம் செங்கண்ணூர் எனும் ஊரிலுள்ள பகவதி கோயில் தலத்தில் பார்வதிதேவி பூப்படைந்தாள் என்றும், இதையொட்டி இங்கு ருதுசாந்தி கல்யாணம் (பூப்புனித நீராட்டு விழா) நடைபெற்றது என்று தலபுராணம் கூறுகிறது. இத்தலத்திலுள்ள பகவதியம்மன் பெண்களைபோலவே மாதந்திர விலக்கு ஏற்படுவதாக நம்பப்படுகிறது. இத்தலத்திலும் பெண்கள் வணங்குவது அவர்களின் கருப்பை சார்ந்த பிரச்சனைகள் தீரும் என கூறுகிறார்கள்.

தமிழ் நாட்டில் திருச்சி சமயபுரம், சென்னை மயிலாப்பூர் முண்டக கண்ணியம்மன், திருவேற்காடு மாரியம்மன், திருச்சி அகிலாண்டேஸ்வரி, கன்னியாகுமரி போன்ற ஸ்தலங்களில் செவ்வாய் கிழமைகளில் சிகப்பு நிற வஸ்திரம் சாற்றி குங்கும அர்ச்சனை செய்வது மாதவிலக்கு பிரச்சனைகள் நீங்கும் எளிய பரிகாரங்களாகும்.

இரும்பு சத்தின் காரகர் செவ்வாய் ஆகும். தகுந்த மருத்துவ ஆலோசனையோடு இரும்பு சத்து அதிகரிக்கும் மருந்துகள் சாப்பிடுவது, சனைச்சர பகவானின் காரகம் பெற்ற ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள் சாப்பிடுவாது சிறந்த பலனளிக்கும்.

ஆயுர்வேத மருந்துகளில் அசோகாரிஷ்டம், ரஜப்ரவர்தனி வடி, புஷ்யானுக சூர்ணம் போன்ற மருந்துகள் சிறந்த பலனளிக்கும்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

949809878

English summary
Actually, most women will experience irregular bleeding at some point in their life. A period showing up unexpected or delayed does not always mean something serious is going on. But your period showing up whenever it wants can be stressful. So here we’re going to talk about some easy ways of how you can regulate your menstrual cycle. Irregular menstrual bleeding comes in many forms, and varies from woman to woman.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X