For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் படம் வைத்து பூஜை பண்ணுங்க - குடும்பம் ஒற்றுமையாகும் வெற்றி கிடைக்கும்

ஸ்ரீராம நாமத்திற்கு இணையான ஒரு வேதம் கிடையாது... மகாவிஷ்ணு மனிதனாக அவதரித்து மானிடர்கள் அனுபவிக்கும் அத்தனை துன்பங்களையும் அனுபவித்தவர்.

Google Oneindia Tamil News

அயோத்தி: ராமர் பட்டாபிஷேகம் புகைப்படம் வெற்றியின் குறியீடு. குடும்ப ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு. ராமபிரான் எப்போது தனித்து இருந்ததில்லை குறைந்த பட்சம் சீதை,லட்சுமணருடன் இணைந்தே இருப்பார். பட்டாபிஷேகம் படத்தில் குடும்ப குரூப் போட்டோவாக இருக்கும். இந்த பட்டாபிஷேக ராமர் படத்தை நமது பூஜை அறையில் வைத்து தினசரியும் பூஜை செய்தால் நமது குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும் வெற்றிகள் தேடி வரும் என்பது நம்பிக்கை.

அறமே வாழ்வின் ஆன்மிக ஜோதி. அறத்தை வளர்ப்பதற்கும், மனிதனிடம் மறைந்து கிடக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதற்கும் ஸ்ரீமன் நாராயணன் ராமனாக அவதாரம் செய்தார். ராமாவதாரம் பரிபூரண அவதாரம் ஆகும்.

Pray with the picture of Shri Ram Pattabhishekam - Family Unity will be successful

ஏக பத்தினி விரதனாகவும், அவதாரப் புருஷனாகவும் வாழ்ந்து காட்டிய ராமர், ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என உலகிற்கு வாழ்ந்து காட்டியவர்.

சீதையை இலங்கைக்கு கடத்திச்சென்ற ராவணனை வானர சேனை உதவியுடன் அனுமன் துணையோடு இலங்கை சென்று வதம் செய்து வெற்றி பெற்றார் ராமர். இது ஒரு கூட்டு முயற்சி. ராமர் மட்டுமே வெற்றியை வைத்துக்கொள்ளவில்லை. தம்பிகள், மனைவி, அனுமன் ஆகிய அனைவருக்குமே வெற்றியை பங்கிட்டு கொடுத்தார். அதை உணர்த்தும் விதமாகத்தான் இன்றைக்கும் ராமர் தனது தம்பிகள், மனைவி, அனுமன் ஆகியோருடன் இணைந்த படம் வைத்து பூஜை செய்வது மரபாக இருக்கிறது.

ராமர் வனவாசம் போன உடன் அவரது பாதுகையை வைத்து ஆட்சி செய்த பரதனின் தியாகம் சிறப்புக்கு உரியது. ராமர் வந்து தன்னை மீட்டுச்செல்வார் என்று காத்திருந்த சீதையின் காத்திருப்பு உண்மையானது. அண்ணன் ராமனுடன் வனவாசம் சென்று இரவும் பகலும் உறங்காமல் காவல் காத்த லட்சுமணரின் தியாகம் யாராலும் ஈடு செய்ய முடியாதது.

கண்கள் இருண்டாலும்... தன்னம்பிக்கை இருளவில்லை... ஐ.ஏ.எஸ்.தேர்வில் வெற்றிகண்ட பூர்ணசுந்தரிகண்கள் இருண்டாலும்... தன்னம்பிக்கை இருளவில்லை... ஐ.ஏ.எஸ்.தேர்வில் வெற்றிகண்ட பூர்ணசுந்தரி

எனவே ராமரை வணங்கினால் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும், சகோதர பாசம் அதிகரிக்கும், கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும், வெற்றிகள் தேடி வரும் என்பது நிச்சயம்.

பூஜை அறையில் ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் படம் அல்லது விக்ரகத்துடன் ராமாயணப் புத்தகத்தையும் வைத்துப் பூஜிக்கலாம். ஸ்ரீ ராம நவமி தினத்தில் வீடுகளில் ஸ்ரீராமர் பட்டாபிஷேகப் படத்தை வைத்துப் பூஜை செய்து, வடை, பருப்பு, நீர் மோர், பானகம், பாயசம் நிவேதனம் செய்து வழிபடுவது சிறப்பு.

English summary
Ram Pattabhishekam photo is a symbol of success. Example of family unity. Lord Rama has never been alone, at least with Sita and Lakshman. Pattabhishekam will be the family group photo in the film. We hope that if we keep this image of Pattabhishek Ram in our prayer room and perform daily prayers, we will be looking for successes that will increase unity in our family.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X