• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புண்ணியம் தரும் புரட்டாசி மாத ராசி பலன்கள்

By Kr Subramanian
Google Oneindia Tamil News

-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்பிரமணியன்

கன்னி ராசிக்குள் சூரியனின் பிரவேசம் நிகழும் போது, புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதம், பிதுர்களுக்குரிய விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது.

மறைந்த நம் முன்னோர், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்ததும், எமதர்மன் அவர்களை பூமிக்குச் செல்லும்படி உத்தரவிடுகிறார். அவர்களும் தங்கள் உறவுகளை நாடி, இங்கே வருகின்றனர். புரட்டாசி வளர்பிறை பிரதமையில் இருந்து அதாவது நாளை மறுநாளில் இருந்து அமாவாசை வரையான, 15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்குவர்.

Puratasi month Rasi Palan 2015

இதையே, "மகாளய பட்சம்` என்பர்; "பட்சம்` என்றால், "15 நாட்கள்' எனப் பொருள். இந்த நாட்களில் நாம் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும். தகுதியானவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இந்த பட்சத்தில் வரும் பரணி, "மகாபரணி' என்றும், அஷ்டமியை, "மத்யாஷ்டமி' என்றும், திரயோ தசியை "கஜச்சாயை' என்றும் சொல்வர். இந்த மூன்று நாட்களுமே, பிதுர் வழிபாட்டுக்கு உகந்தவை.

புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையில் செய்யப்படும் பிதுர் பூஜை (இவ்வாண்டில் மற்ற அமாவாசைகளைக் காட்டிலும் அதிக பலன் தரும். மஹாலய விதிப்படி அந்தப் பதினாறு நாள்களும் பித்ருக் களுக்காக அன்ன சிராத்தம் செய்ய வேண்டும், இயன்றவர்கள் பொன் முதலிய பொருள்களைத் தகுந்தவர்களுக்குத் தானமாக வழங்கலாம்.

புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் காத்தும், தூய காய்கறி தானிய உணவு வகைகளையே உண்டும், துளசி தீர்த்தம் பருகியும், அவன் புகழ்பாடும் நூல்களைப் படித்தும், பாராயணம் செய்தும் போற்ற வேண்டும். சிலர் புரட்டாசி வரும் எல்லா சனிக்கிழமைகளிலும், அல்லது ஏதேனும் ஒரு சனிக்கிழமையன்றும் படையல் படைத்துச் சிறப்பாக வழிபடுவதுண்டு. பராசக்திக்குரிய பூஜை மாதமும் இதுவே. நவராத்திரி பூஜை இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். எனவே இம்மாதத்தில், தவறாமல் வழிபாடுகளைச் செய்து, தெய்வங்கள் மற்றும் முன்னோர்களின் நல்லருளும், நல்லாசியும் பெறுவோம். புரட்டாசி மாத ராசி பலனை அறிந்து கொள்வோம்

கிரகங்களின் ராசி மாற்றம்

சூரியன் - ராசி மாற்றம் இல்லை
செவ்வாய் - ராசி மாற்றம் இல்லை
புதன் - ராசி மாற்றம் இல்லை
குரு - ராசி மாற்றம் இல்லை
சுக்கிரன் - 13ம் தேதி சிம்மம் ராசிக்கு மாறுகிறார்
சனி - ராசி மாற்றம் இல்லை
ராகு-கேது - ராசி மாற்றம் இல்லை

மேஷம் : சூரியன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் ஆன்ம பலம் அதிகரிக்கும், உடல் நலம் சீராக இருக்கும்.. ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் புதிதாக நிலம் வாங்குவீர்கள்,பரம்பரை சொத்திலிருந்து பங்கு கிடைக்கும்.. புதன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் கவனம் தேவை,தோல் நோய் உண்டாகலாம். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் தெய்வ அருள் அதிகரிக்கும், வீட்டில் மங்கள சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும், சுகபோகம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும், தாழ்வு மனப்பான்மை உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் சாப்பிடும் உணவு பொருட்களில் கவனம் தேவை, ஒவ்வாமை உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது.. கேது உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் செலவுகளில் கவனம் தேவை, வெளியூர் பயணம் செய்யும் நிலை உண்டாகும்.

ரிஷபம் : சூரியன் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருக்கிறார் அரசாங்க வேலைக்கான தேர்வுகளில் வெற்றி கிடைக்கும், கௌரவம் அதிகரிக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும், அம்மாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கல்வியில் மேன்மை உண்டாகும், ஷேர் மார்க்கெட் முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும், புது வீடுகட்டி முடிப்பீர்கள். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் சுகபோகங்கள் அதிகரிக்கும், புது வாகனம் வாங்குவீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களுடன் நல்லுறவு உண்டாகும், உடல் உழைப்பு அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் சிந்தனையில் தடுமாற்றம் உண்டாகும், படிப்பில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும், தொழிலில் லாபம் உண்டாகும்.

மிதுனம் : சூரியன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அரசு ஒதுக்கீட்டில் வீடு அமையும், அரசு வாகன யோகம் உண்டாகும். செவ்வாய் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களால் நன்மை உண்டாகும், வெளியூர் பயணம் செல்வீர்கள். ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும், தாய்மாமன் உறவு சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் இடமாற்றம் உண்டாகும், உடன் பிறப்புகளின் உதவி கிடைக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் உறவினர் வீட்டுக்கு செல்வீர்கள், வீட்டை அழகுபடுத்துவீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் தைரியம் அதிகரிக்கும், தொழில் விருத்தியடையும். ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு வாங்கும் யோகம் உண்டாகும் அதே சமயம் அம்மாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும், செயல்களில் வேகம் தேவை.

கடகம் : சூரியன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அரசு ஊழியர்களுக்கு இடமாற்றம் உண்டாகும், அதிகார பதவி கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும், நிலபுலன்களின் மூலம் வருமானம் அதிகரிக்கும். புதன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் மேன்மையடையும், தகவல் தொடர்பு சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும், குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் ஆடம்பர பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும், பேச்சில் வசீகரம் உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளில் ஆர்வம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வீடு மாற்றம் உண்டாகும், மனக் கவலையை தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருக்கிறார் குலதெய்வ கோயிலுக்கு செல்வீர்கள், பரம்பரை வீடு பாகம் பிரித்து பங்கு கிடைக்கும்.

சிம்மம் : உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் கோதுமை தானியம் தாமிரபொருட்கள் வியாபாரம் மூலம் பண வரவு அதிகரிக்கும், அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும், கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும். புதன் உங்கள் ஜென்ம ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வாக்கினில் வசீகரம் உண்டாகும், படிப்பில் மேன்மை உண்டாகும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கௌரவம் அந்தஸ்து மரியாதை அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும், முகம் வசீகரம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும், அம்மாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பணவரவு அதிகரிக்கும், பேச்சில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் போக்குவரத்தில் கவனம் தேவை, குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

கன்னி : சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுக்காக செலவுகள் அதிகரிக்கும், புதிய வகை இயந்திரங்கள் வாங்குவீர்கள். ராசிநாதன் புதன் உங்கள் ஜன்ம ராசியில் இருக்கிறார் புத்தி கூர்மை அதிகரிக்கும், கல்வியில் மேன்மை நிலை அடையலாம். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும், வங்கியில் முதலீடு செய்யவும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும், உல்லாசப் பயணம் செல்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் நிமித்தம் பயணம் உண்டாகும், சகோதரர்களிடம் விவாதம் வேண்டாம். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடல் அசதி அதிகரிக்கும், மனக் குழப்பத்தை தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும்.

துலாம் : சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அரசு முறை பயணம் உண்டாகும், அரசு விஷயங்களில் கவனம் தேவை. செவ்வாய் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நெருப்பு சம்பந்தப்பட்ட தொழிலில் லாபம் அதிகரிக்கும், காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். புதன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கிறார் தாய் மாமனின் உதவி கிடைக்கும், ஷேர் மார்க்கெட் முதலீடுகளைத் தவிர்க்கவும். குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும், குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொட்டதெல்லாம் துலங்கும், அனைத்திலும் வெற்றி உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் அமைதி காக்கவும், வீண் பேச்சை தவிர்க்கவும். ராகு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும், எதிர்பாராத வருமானம் கிடைக்கும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மன தைரியம் அதிகரிக்கும், உடல் ஆரோக்கியம் சீரடையும்.

விருச்சிகம் : சூரியன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும், அரசு அதிகாரிகளின் ஆதரவு கிடைகும். ராசிநாதன் செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் நல்ல லாபம் உண்டாகும், சகோதரர்கள் தொழிலுக்கு உதவுவார்கள்.. புதன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் அபிவிருத்தி அடையும், படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தன லாபம் அதிகரிக்கும், குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் அழகு சாதன பொருட்கள் வியாபாரம் சிறப்படையும், பெண்களால் யோகம் உண்டாகும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் தொழிலில் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ராகு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் செய்தொழில் சீரடையும், எல்லா காரியங்களும் வெற்றியடையும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் விருந்தினர்கள் வீட்டுக்கு வருவார்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

தனுசு : சூரியன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க அதிகாரிகளின் உதவி கிடைக்கும், அரசு தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பா கட்டிய வீடு பங்கு கிடைக்கும், குழந்தைகளின் படிப்பு மேன்மையடையும். புதன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் ஷேர்மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைத் தரும், வியாபாரம் விருத்தியடையும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தான தர்மம் செய்வீர்கள், குலதெய்வ கோயிலுக்கு செல்வீர்கள். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் மனைவியால் அதிர்ஷ்டம் உண்டாகும், பெண்தெய்வத்தின் அருள் கிடைக்கும். சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் தொடர்பாக வெளிநாடு செல்வீர்கள், அலைச்சல் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்திற்க்காக புதிய கிளையை துவங்குவீர்கள், முதலீடுகள் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வீடு வாங்கும் எண்ணம் நிறைவேறும், அம்மாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மகரம் : சூரியன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்தில் பங்கு கிடைக்கும், அப்பாவின் ஆதரவு கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வீடு நிலம் வகைகளில் பிரச்சினையை தவிர்க்கவும், வாகனங்களைக்கையாளும் பொழுது கவனம் தேவை. புதன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வேண்டுதல் நிறைவேற்றுவதற்க்காக குல தெய்வ கோயிலுக்கு செல்வீர்கள், தார்மீக கடமைகளை நிறைவேற்றுவீர்கள். குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை, அறிமுகமில்லாத நபர்களுக்கு சாட்சி கையெழுத்து போட வேண்டாம். சுக்கிரன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வீண் செலவுகளைத் தவிர்க்கவும், பெண்களின் விஷயத்தில் கவனம் தேவை. உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் லாபம் அதிகரிக்கும், எடுத்த காரியமெல்லாம் நிறைவேறும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் நீண்ட தூரம் பயணம் செய்யும் நிலை உண்டாகும், பழமையான பூர்வீக சொத்து கிடைக்கும். கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அண்ணன் தம்பிகளால் நன்மை உண்டாகும், சிறு தூர பயணம் உண்டாகும்.

கும்பம் : சூரியன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் இருந்து வந்த தடைகள் நீங்கும், உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு வாங்கும் எண்ணம் நிறைவேறும், அதிகாரப் பதவி கிடைக்கும். புதன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் ஒப்பந்தத் தொழில் சிறப்படையும், கல்வி நிலை மேன்மையடையும். குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் பணவரவு அதிகரிக்கும், எடுக்கும் காரியங்கள் எல்லாம் சாதகமாக முடியும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் ஆடம்பரப் பொருட்கள் சேர்க்கை உண்டாகும், முக வசீகரம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் புதிய உத்வேகம் உண்டாகும், செயல்களெல்லாம் வெற்றியடையும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் இருந்து வந்த தடைகள் நீங்கும், பண வரவு அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும், பேச்சில் இனிமை கூடும்.

மீனம் : சூரியன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க விழாக்களில் பங்கு கொள்வீர்கள், அரசாங்கம் பணி தொடர்பாக வெளியூர் செல்வீர்கள். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் தைரியம் உண்டாகும், உடன் பிறப்புகளுடன் விவாதம் தவிர்க்கவும். புதன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் மேன்மையடையும், சமயோசிதமாக செயல் படுவீர்கள். ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பழைய கடன்கள் அடைபடும், வீண் செலவுகளைத் தவிர்க்கவும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கை துணைக்காக அதிகமாக செலவழிப்பீர்கள், குடும்பத்தில் விவாதத்தை தவிர்க்கவும். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகப் பெரியவர்களின் சந்திப்பு உண்டாகும், பரம்பரை சொத்து பழைய வீடு கிடைக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத் துணையின் உதவி கிடைக்கும், சிறு பயணம் உண்டாகும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் ஆன்மீக நாட்டம் உண்டாகும், மனதில் குழப்பம் உண்டாகும்.

English summary
Tami Month Purattasi Rasi Palan 2015 from 18-09-2015 to 18-10-2015.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X