For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புரட்டாசி அமாவாசை : சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இரவில் தங்க அனுமதி இல்லை

Google Oneindia Tamil News

புரட்டாசி அமாவாசை அன்று சமயபுரம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி கிடையாது என்று ஆலய நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசம் தொடர்பான நோய் உள்ளவர்கள் கர்ப்பிணிகள், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிவதை தவிர்க்க வேண்டும் என்றும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திருச்சி: புரட்டாசி அமாவாசை அன்று இரவு நேரத்தில் சமயபுரம் மாரியம்மன் கோவில் வளாகத்திற்குள் பக்தர்கள் தங்க அனுமதி கிடையாது என்று கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

Purattasi Amavasai: No night stay at Samayapuram Mariamman Temple

சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலில் உள்ள மாரியம்மனை தரிசனம் செய்வதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வார்கள். குறிப்பாக, அமாவாசை, பவுர்ணமி போன்ற தினங்களில் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், பல பரிசோதனைகளுக்கு பின்னரே கோவிலுக்கு உள்ளே செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்தநிலையில் புரட்டாசி மாத அமாவாசை நாளை வெள்ளிக்கிழமை வருகிறது என கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

புரட்டாசி மாத அமாவாசையான நாளை மறுநாள் கோவிலில் முடிகாணிக்கை மற்றும் தரிசன நேரம் காலை 5.30 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கோவில் சார்ந்த இடங்களில் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை. அரசு வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

Purattasi Amavasai: No night stay at Samayapuram Mariamman Temple

65 வயதிற்கு மேற்பட்டவர்கள், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசம் தொடர்பான நோய், இருதய நோய் போன்ற இணை நோய் கொண்டவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிவதை தவிர்க்கவும்.

அடுத்தவன் மனைவி மீது ஆசைப்படாதீங்க...அவமானப்படுத்துவார் சனிபகவான் அடுத்தவன் மனைவி மீது ஆசைப்படாதீங்க...அவமானப்படுத்துவார் சனிபகவான்

கோவிலுக்குள் தேங்காய், பழம், பூ கொண்டு வர அனுமதி இல்லை. பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும். மேலும், நோய் அறிகுறி இல்லாத பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

English summary
Temple officials have announced that devotees will not be allowed to stay overnight at the Samayapuram Mariamman temple premises on the new moon day. The notice also said that people over 65 years of age, people with high blood pressure, diabetes, respiratory diseases, pregnant women, children under 10 years of age and people with disabilities should avoid visiting Swami Darshan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X