For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். ஒவ்வொரு நாளும் பண்டிகைதான். நாளை புரட்டாசி 1ஆம் தேதி மஹாபரணியில் தொடங்கி மத்தியாஷ்டமி, சுக்கிர ஜெயந்தி, மகாளய அமாவாசை, நவராத்திரி விரதம் என 30 நாட்களும் பண்

Google Oneindia Tamil News

சென்னை: புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். நவகிரகங்களில் புதன் ஆட்சி உச்சம் பெற்று அமரும் கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கிறார். இந்த மாதத்தில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். கோவில்களில் பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் அதிகம் இருக்கும். முன்னோர்கள் இந்த பூலோகம் வரும் மகாளய பட்ச காலமும் புரட்டாசி மாதம்தான் கடைபிடிக்கப்படுகிறது. மகாளய அமாவாசை காலத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் மூன்று தலைமுறைக்கும் புண்ணியம் சேரும்.

பெருமாளுக்கு உகந்த புரட்டாசி சனிக்கிழமை நாளில் விரதம் இருந்தால் பெருமாளின் அருள் கிடைப்பதோடு அன்னை மகாலட்சுமியின் அருளும் செல்வமும் சேரும்.

Purattasi Masam 2019: Start and End Date viratham benefits

இந்த மாதத்தில் அம்மனுக்கு உகந்த நவராத்திரி பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. கொலு வைத்து ஒன்பது நாளும் விரதம் இருந்து வழிபட முப்பெரும் தேவியரின் அருள் கிடைக்கும்.

இந்த மாதத்தில் புரட்டாசி 1ஆம் தேதி தொடங்கி 30 நாளும் பண்டிகைதான். எந்த நாளில் என்ன விரதம் இருக்கலாம் என்று பார்க்கலாம்.

புரட்டாசி 1 புதன்கிழமை மகா பரணி இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் தர சிறப்பானது.

புரட்டாசி 2 வியாழக்கிழமை கிருத்திகை விரதம் முருகனுக்கு விரதம் இருந்து வழிபடலாம்

புரட்டாசி 3 வெள்ளிக்கிழமை சஷ்டி விரதம் முருகனுக்கு சஷ்டி விரதம் இருக்க நன்மைகள் நடக்கும்.

புரட்டாசி 5 ஞாயிறு அஷ்டமி தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவரை வழிபடலாம். மத்யாஷ்டமி, சம்புகாஷ்டமி

புரட்டாசி 7 செவ்வாய்கிழமை ஸ்ரீ சுக்கிர ஜெயந்தி நவகிரகங்களில் சுக்கிரனை வழிபடலாம். சுக்கிர தோஷம் உள்ளவர்கள் நவகிரகத்தில் சுக்கிரனுக்கு வெண் பட்டு சாற்றி வெள்ளை மலர்களால் அர்ச்சனை செய்ய நன்மைகள் நடக்கும்.

புரட்டாசி 8 புதன்கிழமை அஜா ஏகாதசி

புரட்டாசி 09 வியாழக்கிழமை கல்கி துவாதசி

புரட்டாசி 11 மகாளய அமாவாசை முன்னோர்களுக்கு திதி கொடுக்கவும் படையல் படைக்கவும் ஏற்ற நாள். முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.

புரட்டாசி 12 நவராத்திரி விரதம் ஆரம்பம். கொலு வைத்து விரதம் இருக்கத் தொடங்கலாம்.

புரட்டாசி 18 சனி பத்ரகாளி அவதார தினம். வீட்டில் தேவி பாகவதம் படிக்கலாம். வீட்டில் தொழில் ஸ்தானங்களில் சண்டி ஹோமம் செய்யலாம்.

புரட்டாசி 20 திங்கள் கிழமை ஆயுதபூஜை சரஸ்வதி பூஜை செய்ய நல்ல நாள்.

புரட்டாசி 21 செவ்வாய்கிழமை விஜயதசமி இன்று புது தொழில் தொடங்கவும் வித்யாரம்பத்திற்கு நல்ல நாள்.

புரட்டாசி 26 ஞாயிறு கிழமை கௌமதி ஜாகரா விரதம் இரவு முழுவதும் கண் விழித்து லட்சுமி பூஜை செய்ய வருடம் முழுவதும் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.

English summary
In 2019, Purattasi masam begins in September 18 ends in October 17th 2019 as per tamil Traditional calender.here is the list of Viratham Dates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X