For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புரட்டாசி சனிக்கிழமை விரதம்: ஸ்ரீதன்வந்திரி பெருமாளுக்கு புஷ்பாஞ்சலி

புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகளுக்கு தனி மகத்துவம் உண்டு. பல தடைகளை நீக்கி நலன்களை வாரி வழங்கும் என்பது நம்பிக்கை. தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீதன்வந்திரி பெருமாளுக்கு புரட்டாசி சனிக்கிழமையில் புஷ்பாஞ்ச

Google Oneindia Tamil News

Recommended Video

    புரட்டாசி மட்டும் அசைவ உணவுக்கு தடை ஏன் தெரியுமா?..அற்புத தகவல்! | Purattasi Month Special

    சென்னை: இந்துக்களின் கலாச்சாரத்தில் விரதங்கள், பண்டிகைகள் முக்கியபங்கு வகிக்கின்றன. வாரந்தோறும் விரத நாட்கள் இருந்தாலும், ஒரு மாதம் முழுவதும் விரதம் கடைக்கப்பிடிக்கப்படுவது புரட்டாசி மாதம். புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகளுக்கு தனி மகத்துவம் உண்டு. பல தடைகளை நீக்கி நலன்களை வாரி வழங்கும் என்பது நம்பிக்கை. தன்வந்திரி பீடத்தில் புரட்டாசி சனிக்கிழமையில் புஷ்பாஞ்சலியும் சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது.

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதி புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு வருகிற 21.09.2019 காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு புஷ்பாஞ்சலியும் விசேஷ ஆராதனைகளும் நடைபெற உள்ளது.

    Purattasi sani viratham 2019: Puspanchali for Dhanvantri Perumal

    பொதுவாக இந்துக்கள் எல்லா சனிக்கிழமைகளிலும் விரதம் இருப்பார்கள். அப்படி இருக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதம் முழுக்க விரதம் இருந்தால் அதே பலன் கிட்டும். எனவேதான் புரட்டாசி மாதத்தை விரத மாதம் என்றும் அழைப்பார்கள்.

    ஜாதக அமைப்பின்படி சனி, புதன் திசை நடப்பவர்கள் எள் நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட தடைகள் அனைத்தும் நீங்கும். பாவங்கள் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் கூடி வரும். இந்த நாளில் மேற்கொள்ளப்படும் விரதம் பல தடைகளை நீக்கி நலன்களை வாரி வழங்கும் என்பது நம்பிக்கை.

    பணம் இல்லாமல் இவ்வுலகம் இல்லை. பணமிருந்தால் மட்டும் போதாது. அதை அனுபவிக்க போதிய ஆயுளும், ஆரோக்கியமும் அவசியம். செல்வம், ஆயுள், ஆரோக்கியம் ஆகிய முப்பலனையும் தருவது சனிக்கிழமை விரதம். பாவ வினைகளால் உண்டான பிணி, தடை, தோஷம், கண் திருஷ்டி போன்றவை விலகவும் கர்ம வினைகள் தொடராமல் இருக்கவும் ஆயுள், ஆரோக்கியம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், சௌபாக்கியம் கிடைக்கவும் விரத முறைகள் காலம் காலமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றனர்.

    இத்தகைய சிறப்புகள் வாய்ந்த புரட்டாசி சனிக்கிழமையில் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளை வேண்டி நடைபெறும் பூஜைகளில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று பயன்பெற தன்வந்திரி குடும்பத்தினர் அழைக்கின்றனர். தொடர்புக்கு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை. வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

    English summary
    Saturdays in Puratasi Month are most auspicious days during which puratasi,sani vratha is observed decrease your negative effects from Saturn. Special pujas for Dhanvantroi perumal and prayers are observed on Saturdays in Purattasi month.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X