For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒடிசா வரலாற்றில் முதன் முறையாக பக்தர்கள் யாருமின்றி ரதத்தில் வலம் வரும் பூரி ஜெகந்நாதர்

உலகப்புகழ் பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை இன்று தொடங்கி உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல், கடுமையான கட்டுப்பாடுகளுடன் ரத யாத்திரையை நடத்த உச்ச நீதிமன்றம் அ

Google Oneindia Tamil News

பூரி: இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக என்று விளம்பரம் போடுவது போல பூரி ஜெகந்நாதர் கோவில் வரலாற்றில் முதன் முறையாக உலகப்புகழ் பெற்ற ரத யாத்திரை பக்தர்கள் அதிக பங்கேற்காமல் நடைபெறுகிறது. 16 சக்கரங்களைக் கொண்ட 44 அடி உயரத்திலான தேரில் ஜெகநாதரும், 14 சக்கரங்களைக் கொண்ட தேரில் பாலபத்திரரும், 12 சக்கரங்களுடன் அமைந்துள்ள தேரில் சுபத்ராவும் எழுந்தருள வண்ணமயமான ரத ராத்திரை நடைபெறுகிறது.

மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குண்டிச்சா கோயிலை சென்றடைந்ததும் ஜெகந்நாதர் ஓய்வெடுப்பார். திருவிழாவின் 4 நாளில் தனது கணவரை காண லட்சுமி தேவி குண்டிச்சா கோயிலுக்கு வருகை தர உள்ளார். அதைத் தொடர்ந்து மீண்டும் தேர்கள் புறப்பட்டு புரி ஜெகந்நாதர் கோயிலை வந்தடைந்ததும் விழா நிறைவடைய உள்ளது.

உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை இன்று தொடங்கி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவில் இந்தியாவின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் ரத யாத்திரையை கட்டுப்பாடுகளுடன் மக்கள் பங்கேற்பு இல்லாமல் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி மத்திய அரசு விதிமுறைகளைப் பின்பற்றி இன்று ரத யாத்திரை நடைபெறுகிறது.

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை பரிந்துரை செய்தார் கோகாய் உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை பரிந்துரை செய்தார் கோகாய்

வண்ணமயமான ரத யாத்திரை

வண்ணமயமான ரத யாத்திரை

பூரி ஒடிசா மாநிலத்தில் உள்ள அழகிய கடற்கரை நகரம். இங்குள்ள ஜெகந்நாதர் கோவில் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆண்டு தோறும் இங்கு நடைபெறும் ரத யாத்திரையை காண கண் கோடி வேண்டும் என்பார்கள். இந்த ஆலயத்தில் மூலவர்களாக பாலபத்ரா, அவரின் சகோதரர் ஜெகந்நாதர், சகோதரி தேவி சுபத்ரா ஆகியோருடன் சுதர்சன சக்கரமும் உடன் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த மூன்று மூலவர்களுக்குப் புதிய தேர் செய்யப்பட்டு, அதில் அவர்கள் இந்த தேரில் அமர்ந்து நகரை வலம் வருவார்கள்.

வண்ணமயமான ரதங்கள்

வண்ணமயமான ரதங்கள்

ஒடிசாவின் பூரி நகரில் மிக நீண்ட தெருக்களில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களையும் இழுக்கும் வைபவம் படாதண்டா என்று அழைக்கப்படுகிறது. 10 நாட்கள் இந்தத் திருவிழா நடக்கும். தங்கள் இருப்பிடத்தில் இருந்து புறப்படும் ஜெகந்நாதர், பாலபத்திரர், தேவி சுபத்ரா ஆகியோர் 2 கி.மீ. தொலைவில் உள்ள தங்களின் அத்தை கோயிலான மவுசிமா கோயிலுக்குச் சென்று ஓய்வு எடுப்பார்கள். அங்கிருந்து 9வது நாள் மீண்டும் புறப்பட்டு பூர்வீக இடத்துக்குத் திரும்புவார்கள்.

லட்சக்கணக்கான பக்தர்கள்

லட்சக்கணக்கான பக்தர்கள்

ஆண்டுதோறும் இந்த ரத யாத்திரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று பரவி வரும் நிலையில் நாடு முழுவதும் பல விழாக்கள் ரத்து செய்யப்பட்டன. ரத யாத்திரை விழாவை கடும் கட்டுப்பாடுகளுடன் நடத்த ஒடிசா மாநில உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்திருந்தது. இந்தப் புகழ்பெற்ற தேரோட்டத் திருவிழா இன்று 23ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான பூர்வாங்கப் பணிகள் நடந்துவந்தன.

ரத யாத்திரை நடத்த எதிர்ப்பு

ரத யாத்திரை நடத்த எதிர்ப்பு

இதனிடையே ரத யாத்திரை நடத்துவதற்கு எதிராக ஒடிசா விகாஸ் பரிஷத் அமைத்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், ஒடிசாவின் கடலோர மாவட்டத்தில் வருடம்தோறும் நடைபெறும் ரத யாத்திரையில் சுமார் 10 லட்சம் மக்கள் பங்கேற்பார்கள் என்றும், இந்த மத நிகழ்வு 10 முதல் 12 நாட்கள் வரை நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தது. கொரோனா நோய் தொற்றுக்கு மத்தியில் இந்த ரத யாத்திரை நடைபெற்றால் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதிப்படைவதற்கான அழைப்பாக இருக்கும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

கொரோனா காலத்தில் ரத யாத்திரை

கொரோனா காலத்தில் ரத யாத்திரை

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிந்த பின்னர் தீர்ப்பளித்த நீதிபதிகள், பொது சுகாதாரம் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பிற்காக இந்த ஆண்டு ரத யாத்திரையை அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர். தொற்றுநோய் பரவும் சமயத்தில் ரத யாத்திரை நடத்த அனுமதி கொடுத்தால் பகவான் ஜெகநாதரே எங்களை மன்னிக்க மாட்டார் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

ரத யாத்திரைக்கு அனுமதிக்க வேண்டும்

ரத யாத்திரைக்கு அனுமதிக்க வேண்டும்

இந்தச் சூழலில் பூரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்டத்தை பக்தர்கள் இல்லாமல் நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரி மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, தினேஷ் மகேஸ்வி, ஏஎஸ்.போபண்ணா ஆகியோர் முன்னிலையில் காணொலி மூலம் இன்று விசாரிக்கப்பட்டது. பூரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்டம் நூற்றாண்டுகளாக நடத்தப்பட்டு வரும் பழமையான வழக்கம். அதைத் தடுக்க வேண்டாம். கொரோனாவைக் காரணம் காட்டித் தடை விதிப்பது நம்பிக்கையில் தலையிடுவதாகும் என்று வாதிடப்பட்டது.

தேரோட்டம் நடத்த அனுமதி

தேரோட்டம் நடத்த அனுமதி

பக்தர்கள் யாரும் பங்கேற்காமல் பூரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்டத்தை நடத்த அனுமதிக்கலாம். தேர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள பணியில் இருப்போர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டத்தில் யாருக்கும் கரோனா இல்லை. பூரி நகர மன்னர் மற்றும் கோயில் நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது எனத் தெரிவித்தார். இந்த வாதத்தைக் கேட்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, இந்த ரத யாத்திரை பூரி நகரில் மட்டுமே நடத்தப்பட வேண்டும். வேறு எந்த நகரிலும் இதுபோன்ற திருவிழாக்கள், ரத யாத்திரைகள் நடத்த அனுமதிக்கக்கூடாது என உத்தரவிட்டார்.

வலம் வரும் ரதங்கள்

வலம் வரும் ரதங்கள்

பூரி ஜெகந்நாதர் ஆலய வரலாற்றில் முதல் முறையாக பக்தர்கள் யாருமின்றி குறைவான சேவாத்ரிகளுடன் ரத யாத்திரை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை நேரலையாக பக்தர்கள் வீட்டில் இருந்தே பார்த்து வருகின்றனர். 16 சக்கரங்களைக் கொண்ட 44 அடி உயரத்திலான தேரில் ஜெகநாதரும், 14 சக்கரங்களைக் கொண்ட தேரில் பாலபத்திரரும், 12 சக்கரங்களுடன் அமைந்துள்ள தேரில் சுபத்ராவும் எழுந்தருள வண்ணமயமான ரத ராத்திரை நடைபெறுகிறது.

அதிர்ஷ்டம் ஆரோக்கியம்

அதிர்ஷ்டம் ஆரோக்கியம்

இதையொட்டி பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பகவான் ஜெகந்நாதரின் ரத யாத்திரை நடைபெறும் புனிதமான இந்த சந்தர்ப்பத்தில் மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இந்த புனித நாள், மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு, அதிர்ஷ்டம் மற்றும் ஆரோக்கியத்தை வழங்க பிரார்த்தனை செய்கிறேன். ஜெய் ஜெகந்நாத்' என மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

English summary
Lord Jagannath Rath Yatra in Puri is happening today. There are some conditions of Rath Yatra including no attendance by general public. In a good news for millions of devotees of Lord Jagannath.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X