For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏழுமலையானுக்கு 7 டன் பூக்களால் புஷ்பயாகம் - தரிசனம் காண குவிந்த பக்தர்கள்

திருப்பதி ஏழுமலையான் கோவில் புஷ்ப யாகத்தை முன்னிட்டு, பெங்களூர், ஐதராபாத் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ரோஜா, முல்லை, மல்லி போன்ற 27 வகை மலர்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இருந்து 7 டன் பூக்

Google Oneindia Tamil News

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவில் புஷ்ப யாகத்தை முன்னிட்டு, பெங்களூர், ஐதராபாத் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ரோஜா, முல்லை, மல்லி போன்ற 27 வகை மலர்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்காக தமிழ்நாட்டில் இருந்து 7 டன் பூக்களை பக்தர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளனர். பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பல பொருட்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டு பின்னர் புஷ்ப யாகம் நடைபெறுவதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையான் ஆலயத்தில் திரண்டுள்ளனர்.

ஏழுமலையானை தங்கம் வைரங்களால் அலங்காரம் செய்து பார்த்திருப்போம். அதே ஏழுமலையானை பலகோடி பூக்களால் அலங்கரித்து பார்ப்பதை காண கண் கோடி வேண்டும். அது ஒவ்வொரு ஆண்டு ஐப்பசி மாதம் நடக்கிறது. திருமலையில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்தை தொடர்ந்து, புஷ்ப யாகம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நவம்பர் 4ஆம் தேதியான இன்று புஷ்பயாகம் நடைபெறவுள்ளது.

புஷ்பயாகம் எந்தவித தடங்களும் இன்றி நடைபெற நேற்று அங்குரார்ப்பணம் நடத்தப்பட்டது. இன்று மாலையில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு புஷ்பயாகம் நடைபெறுகிறது. இதற்காக தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மலர்கள் அனைத்தும் பாபவிநாசம் வனத்தில் வைக்கப்பட்டு, இன்று காலை 10 மணிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர், மேள தாளங்கள் முழங்க ஏழுமலையான் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

ஏழுமலையானுக்கு புஷ்பயாகம்

ஏழுமலையானுக்கு புஷ்பயாகம்

திருமலை வெங்கடாச்சலபதிக்கு ஆண்டு தோறும் புஷ்பயாகம் நடைபெறுவது தொன்றுதொட்டு நடைபெற்ற வருகிறது. மொகலாயர்கள் ஆட்சி செய்து வந்த 15ஆம் நூற்றாண்டு வரையிலு இது எவ்வித தடங்களும் இல்லாமல் நடைபெற்று வந்தது. பின்னர், காலப்போக்கில் அது கைவிடப்பட்டது.
ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்து பின்பு, திருமலை திருப்பதி தேவஸ்தான ஆஸ்தான வித்வான் வேதாந்த ஜெகந்நாதாச்சாரியலு 1980ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி முதல் மீண்டும் திருமலை ஏழுமலையானுக்கு புஷ்பயாகத்தை தொடர்ந்து நடத்த ஆரம்பித்தார்.

ஏழு டன் பூக்கள் நன்கொடை

ஏழு டன் பூக்கள் நன்கொடை

அன்று முதல் வழக்கம் போல், ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவம் முடிந்த பின்னர் வரும் கார்த்திகை மாத ஸ்ராவன நட்சத்திர தினத்தன்று, புஷ்பயாகம் நடத்தப்பட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் நவம்பர் 4ஆம் தேதியான இன்று புஷ்பயாகம் நடைபெறுகிறது. இதற்காக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து மல்லி, முல்லை, ரோஜா, சாமந்தி உள்ளிட்ட பல்வேறு மலர்கள் கொண்டவரப்பட்டன. குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து 7 டன் மலர்கள்களை ஏழுமலையான் பக்தர்கள் நன்கொடையாக வழங்கினார்கள். இந்த மலர்கள் அனைத்தும் திருமலையில் உள்ள பாபவிநாசம் வனத்தில் வைக்கப்பட்டது. அதோடு, புஷ்ப யாகம் எவ்வித தடங்கலும் இன்றி நடைபெற வேண்டும் என்பதற்காக, அங்குரார்ப்பணம் நடத்தப்பட்டது.

பூமாதேவி

பூமாதேவி

இதற்காக ஏழுமலையான் சேனாதிபதி விஷ்வக்சேனர் தலைமையில் அர்ச்சகர்கள் குழுவினர், சாஸ்திர சம்பிரதாயப்படி, அருகில் உள்ள நந்தவனத்திற்கு சென்று அங்கிருந்து புற்றுமண் எடுத்து வந்து, அதை கொட்டி தரையில் பரப்பி அதில். பூமாதேவி உருவத்தை வரைந்தனர். பின்னர், அர்ச்சகர்கள் குழுவினர், பூமா தேவியின் வயிற்றுப் பகுதியில் இருந்து மண்ணை தனியாக பிரித்தெடுத்து, அதில் நவதானியங்களை கொட்டி முளைவிட்டனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஏழுமலையானுக்கு அபிஷேகம்

ஏழுமலையானுக்கு அபிஷேகம்

இன்று மாலையில் ஏழுமலையானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு வருடாந்திர புஷ்பயாகம் நடைபெறுகிறது. இன்று 7 டன் மலர்களால் ஏழுமலையானுக்கு புஷ்ப யாகம் நடைபெறுகிறது. இவற்றில் மொத்தம் 12 வகையான பூக்கள் மற்றும் துளசி, மருவம், தவணம், பில்வம், பன்னீர் உள்பட 6 வகை வாசனை பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

English summary
Pushpayagayam is celebrated in the month of Karthik, following the Brahmotsavam which is held every year in the month of October in Tirumala. Pushpayagam will be held on today evening, November 4th this year. Angurarthanam was held yesterday without any trace. A special decoration and a floral tribute will be held this evening.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X