• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீட் தேர்வில் வெற்றி பெற்று டாக்டர் ஆகும் யோகம் யாருக்கு இருக்கு தெரியுமா?

|

சென்னை: நம் ஜாதக அமைப்பில் எந்த கிரகங்கள் சாதகமாக இருக்கின்றன என்பதை வைத்து நமக்கு எந்த உயர்கல்வி அமையும் என்பதை தெரிந்துகொள்ளலாம். ராகுவினால் சினிமா, மீடியா, சித்தா ஆயுர்வேத மருத்துவம் படிக்கலாம். கேதுவின் நிலையைக் கொண்டு மருத்துவம், ஆராய்ச்சி படிப்புகள் பற்றி அறியலாம்.

டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவு எல்லோருக்கும் உண்டு. இருந்தாலும் அதற்காண கிரக அமைப்புடன் பிறந்தவர்களுக்குதான் அது சாத்தியமாகியிருக்கிறது. ஏழையோ, பணக்காரனோ எல்லோராலும் டாக்டராகிவிட முடியாது. தமிழ்நாட்டில் லட்சக்கணக்கானோர் பிளஸ் 2 தேர்வு எழுதினால் சில ஆயிரம் பேர் மட்டுமே டாக்டர் படிப்பு படிக்க முடிகிறது.

தற்குக் காரணம் அவர்களின் ஜாதக அமைப்புதான். இப்போது நீட் தேர்வு வேறு பலரது டாக்டர் கனவை பாதித்துள்ளது. எனவே டாக்டராகும் அம்சத்தோடு தமது குழந்தை பிறந்துள்ளானா என்பதை அறிந்து அந்த படிப்பில் வழி நடத்தலாம்.

உயர்கல்வி தரும் அமைப்பு

உயர்கல்வி தரும் அமைப்பு

உயர்நிலை கல்வி வரை லக்னத்துக்கு நான்காம் இடமான கல்வி ஸ்தானத்தை கொண்டும், பட்டப்படிப்பு, பட்ட மேல் படிப்புக்கு பாக்ய ஸ்தானம் எனும் ஒன்பதாம் இடத்தை கொண்டும் அறிந்து கொள்ளலாம். இவை தவிர லக்னம், 2, 5 ஆகிய ஸ்தானங்களும் பலம் பெறுவது அவசியம். கல்வி, வித்தைக்கு அடித்தளம் அமைக்கும் கிரகம், வித்யாகாரகன் என்று அழைக்கப்படும் புதன் கிரகமாகும். புதன் லக்னத்தில் இருப்பது மிகவும் சிறப்பு. புதன் ஆட்சி, உச்சம் பெறுவது மேலும் பலம்.

ஜாதகத்தில் புதன்

ஜாதகத்தில் புதன்

மறைந்த புதன் நிறைந்த செல்வம் என்று சொல்வார்கள். லக்னம், லக்னாதிபதி பலம் முக்கியம். உயர்நிலைக் கல்வி வரை நான்காம் இடம், சிந்தனை, யோகத்தை தரக்கூடிய ஐந்தாம் இடம், மேல்படிப்பு, ஆராய்ச்சித்துறை ஒன்பதாம் இடம், பேச்சு, வாக்கு செயல்திறனைக் குறிக்கும் இரண்டாம் இடம் என பல பிரிவுகள் உள்ளன. இந்த வீடுகள் அதன் அதிபதிகள் பலம் பெறுவது முதல்தர கல்வி யோகமாகும்.

கேதுவின் அமைப்பு

கேதுவின் அமைப்பு

மருத்துவம் படிக்கவும், மருத்துவம் தொடர்பான தொழில்கள் செய்யவும் மருத்துவ கிரகமான கேது பகவான் அருள் வேண்டும். எண் கணித அமைப்பில் பிறந்த தேதி அல்லது கூட்டு எண் 1,2,7,9 என அமைவது சிறப்பு. லக்னத்துக்கு 4,9,10 ஆகிய இடங்களில் மருத்துவ கிரகமான கேது இருப்பது நல்ல யோகம். கேதுவுக்கு சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் தொடர்பு இருப்பது முதல்தர யோகம்.

மருத்துவர் ஆகும் அமைப்பு

மருத்துவர் ஆகும் அமைப்பு

மருத்துவராக, மருத்துவ சம்பந்தப்பட்ட துறையில் சேர்ந்து படிப்பதற்கு மிகப்பெரிய யோக அமைப்பு வேண்டும். இந்த படிப்பில் நுழைய முதலில் நீட் நுழைவுத்தேர்வில் ஜெயிக்க வேண்டும். அடிப்படை மருத்துவ கல்வி பயில எம்பிபிஎஸ் படிப்பில் தேர்ச்சி அடைய வேண்டும். இதற்கு பிறகு நமது உடலில் உள்ள பாகங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக சிறப்பு படிப்புகள் உள்ளன. ஒரு மருத்துவர் ஆக, ஜாதகத்தில் மிக முக்கிய அம்சமாக ராகு/கேது ஆகிய இரு சாயா கிரகங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.

கிரகங்களின் தொடர்பு

கிரகங்களின் தொடர்பு

கேதுவை மருத்துவ கிரகம் என்று சாஸ்திரம் சொல்கிறது. ராகு மறைந்து இருக்கின்ற பொருள், உள் விஷயங்கள் மற்றும் விஷத்தை குறிக்கின்ற கிரகம். எனவேதான் நிழல் கிரகங்கள் என்று சொல்லக்கூடிய ராகுகேது மருத்துவத்திற்கும், ரசாயனத்திற்கும், வேதிப்பொருள்களுக்கும் உரிமை உடையவர்களாக ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ராகுகேதுவுடன் மற்ற கிரகங்கள் தொடர்பு பெறும் போது மருத்துவத்துறையில் நுழையும் யோகம் கிடைக்கிறது.

ராகு கேது செவ்வாய் நட்சத்திரங்கள்

ராகு கேது செவ்வாய் நட்சத்திரங்கள்

அஸ்வினி, மகம், மூலம், திருவாதிரை, சுவாதி, சதயம், கார்த்திகை, உத்திரம், உத்திராடம், ரோகிணி, அஸ்தம், திருவோணம், மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறப்பது மருத்துவ யோகத்துக்கு வாய்ப்பாகும். கல்வியில் தடை, தடங்கல், தோல்விகள் ஏற்படுவதற்கும் கிரக திசா புக்திகள், கோச்சார கிரக நிலைகளே காரணமாக இருக்கின்றன.

அறுவை சிகிச்சை நிபுணர்

அறுவை சிகிச்சை நிபுணர்

மருத்துவராக தொழில் புரிய லக்னம் இரண்டாமிடம் ஆறாமிடம் பத்தாமிடம் ஆகியவை முக்கிய பாவங்களாகும். 4. மருத்துவராகும் கிரக அமைப்பை பெற்று ஆறாம் பாவத்தோடு தொடர்பு கொள்ளும் கிரகத்தை கொண்டு அவர் எந்த பிரிவில் சேவை செய்வார் என்பதை அறியலாம். ஜாதகத்தில் மருத்துவ அறிவை தரும் கிரகம் செவ்வாயும்,சூரியனும். இவை ஒன்றுடன் ஒன்று இணைந்தோ தொடர்போ பெறும் போதோ மருத்துவத் துறை சார்ந்த அறிவு கிடைக்கும். அத்துடன் சனியும் சேர்ந்தால் அறுவை சிகிச்சை மருத்தவராவார்.

வைத்தியநாத ஸ்வாமி

வைத்தியநாத ஸ்வாமி

செவ்வாயுடன் கேது இணையும் போது சித்தமருத்துவராவதற்கு வாய்ப்பு அதிகம். அதே நேரத்தில் செவ்வாய் உடன் சூரியன் ஆங்கில மருத்துவராவார். செவ்வாய்,சூரியன்,சனி ஆங்கில அறுவை சிகிச்சை மருத்துவராக படிப்பார். ஜாதகத்தில் அமைப்பிருந்துவிட்டாலும் மருத்துவ படிப்பிற்க்கு தெய்வ அருளும் வேண்டுமல்லவா? எந்த தெய்வத்தை வணங்கினால் மருத்துவம் படிக்கலாம்? வைத்தீஸ்வரன் கோயில் சென்றால் வைத்தியராகும் யோகம் வரும்.

கல்வியில் பாதிப்பு யாருக்கு

கல்வியில் பாதிப்பு யாருக்கு

அதே நேரத்தில் ராகு-கேது தசா புத்தி காலத்திலும் படிப்புக்கு தடைகள், தோல்விகள் ஏற்படும். படிக்கும் காலத்தில் 6, 8, 12 ஆகிய கிரகங்களின் தசா புத்திகள் நடைபெற்றால் மறதி அதிகரிக்கும். லக்னம், 5, 7, 8ஆம் இடங்களில் சந்திரன் - சுக்கிரன் சம்பந்தம் ஏற்படும் திசாபுக்திகளால் தேவையற்ற சஞ்சலங்கள் ஏற்பட்டு கவனம் சிதறும். சனிப்பெயர்ச்சி காரணமாக 4ல் சனி, ஏழரை சனி, அஷ்டமச்சனி நடப்பது ஆகியவையும் கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
Ragu and Kethu Rules applicable for Medical profession in Astrology. Mars in their horoscope they can choose medicine profession. Vaithyanatha swamy in Vaitheeswaran koil is the lord of medicine.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more