• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

ராகு கேது : 2020 ஆண்டில் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அள்ளிக்கொடுக்கப்போகிறார்

Google Oneindia Tamil News

சென்னை: 2020ஆம் ஆண்டு பிறக்கப் போகிறது. இந்த புத்தாண்டில் என்னென்ன நன்மைகள் நடக்கும் என்று பார்த்துக்கொண்டிருக்கிறோம். சனியின் சஞ்சாரம் பார்வைகள், குருவின் சஞ்சாரம் பார்வைகள் சிலருக்கு நன்மைகளையும் தீமைகளையும் பார்த்து வருகிறோம். சர்ப்ப கிரகங்களான ராகு கேதுவினால் 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம். காரணம் தனித்த ராகுவை இப்போது குரு பார்வையிருகிறார். கேது உடன் குரு சேர்ந்து இருக்கிறார். இதுநாள் வரை கேது உடன் இணைந்திருந்த சனியும் விலகி மகரத்திற்கு நகரப்போகிறார். இதனால் அனைத்து ராசிக்காரர்களுக்கும் நன்மைகள் நடைபெற உள்ளது. மேஷம் முதல் கன்னி வரை உள்ள ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் என்று பார்க்கலாம்.

நவ கிரகங்களில் சர்ப்ப கிரகங்களான ராகு கேது கிரகங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றன. கால புருஷ தத்துவதத்திற்கு மூன்றாவது வீடு தைரிய வீரிய ஸ்தானம். இளைய சகோதர ஸ்தானம். கால புருஷ தத்துவத்திற்கு ஒன்பதாம் வீடு பாக்ய ஸ்தானம் உயர்கல்வி, வெளிநாட்டு பயணம், தந்தையை குறிக்கும்.

பொதுவாகவே ராகு கேது கிரகங்கள் இருக்கும் இடத்துக்கேற்ப அந்த வீட்டின் அதிபதியைப் போல் பலன் தருவார். மிதுனம் புதன் வீட்டின் அதிபதி தனுசு குருவின் வீட்டின் அதிபதி என்பதால் ராகு அதிக காதலையும் தனுசில் உள்ள கேது அதிக ஆன்மிகத்தையும் அளிப்பார். மேஷம் முதல் கன்னி வரை உள்ள ராசிக்காரர்களுக்கும் இந்த ராகு கேது கிரகங்கள் 2020ஆம் ஆண்டில் என்னென்ன பலன்களை கொடுப்பார் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

2020ஆம் மேஷத்தில் எவ்லாமே அற்புதம்தான் காரணம் மூன்றில் ராகு ஒன்பதில் குரு கேது பத்தில் சனி சகலவித சந்தோஷத்தையும் தரப்போகின்றன.
மூன்றாமிடத்தில் அமர்ந்துள்ள ராகுவினால் உங்கள் மனதில் அசாத்தியமான தைரியத்தை இடம்பெறச் செய்யும். அடுத்தவர் செய்யத் தயங்கும் காரியத்தினை எவ்வித தயக்கமுமின்றி சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். குருவின் பார்வை ராகுவிற்கு கிடைத்துள்ளது. இதுநாள் வரை எதையும் கொடுக்காமல் அமைதியாக இருந்தார் 2020ஆம் ஆண்டில் இனி அள்ளிக்கொடுக்கப் போகிறார். காதலால் கசிந்து உருகுவீர்கள். அபரிமிதான பண வரவு கிடைக்கும். ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் குரு உடன் இணைந்து அமர்ந்து உள்ள கேதுவினால் நீங்கள் நினைத்தது நிறைவேறும் கோடீஸ்வர யோகம் கிடைத்துள்ளது. செய்யும் தொழில் மூலம் நல்ல லாபமும் புதிய தொழிலில் ஈடுபடும் வாய்ப்பும் கிடைக்கும். தேவைக்கேற்ப பணவசதி உண்டாகும். சிலருக்கு வண்டி வாகன யோகம் உண்டாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களையும் நடத்தி மகிழ்வீர்கள். வெள்ளிகிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கு ஏற்றி வைத்து வழிபடுங்கள். அத்தனையும் சுகமாக நடைபெறும்.

ரிஷபம்

ரிஷபம்

2020ஆம் ஆண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு ராகு கேது கிரகங்கள் நல்ல வளர்சியை கொடுக்கும் உங்கள் ராசிக்கு ராகு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் - கேது பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சனி குரு உடனும் அமர்ந்துள்ளார். 2020ஆம் ஆண்டு அஷ்டம சனி பாக்ய சனியாக மாறி விடுவார். பேசும் வார்த்தைகளில் கடுமையை வெளிப்படுத்த வேண்டாம் கனிவை வெளிப்படுத்துங்கள். பணவரவு பொருளாதார வரவு அதிகரிக்கும் அதே நேரத்தில் செலவும் கூடும் சேமிக்கத் தொடங்குங்கள். அஷ்டமத்தில் உள்ள கேது பகவான் குரு உடன் இணைந்துள்ளதால் உடல் நலத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் மன உளைச்சல்கள் தீரும் உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடாக இருங்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். கடன் கொடுக்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்வது நல்லது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம் சந்தோஷம். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பு மரியாதை கூடும். பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு மரியாதை கூடும். ரிஷப ராசிக்காரர்கள் ராகு காலத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

மிதுனம்

மிதுனம்

2020ஆம் ஆண்டில் மிதுன ராசிக்காரர்களே வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்று பாடும் நேரம் வந்து விட்டது. காரணம் ஜென்ம ராகுவை குரு பார்வையிடுகிறார். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பணம் விசயத்தில் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு தொந்தரவுகள் ஏற்பட்டு சீராகும். ஏழாம் இடத்தில் அமர்ந்து உள்ள கேதுவினால் சத்ரு நாசம் ஏற்படும். எதிரிகள் காணாமல் போவார்கள். புதிய நபர்களை நம்பி எந்த விஷயத்திலும் இறங்கக் வேண்டாம். பெண்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குரு உடன் இணைந்துள்ள கேது ஆன்மீக பயணத்தை ஏற்படுத்துவார். குழந்தைகளால் மதிப்பு கிடைக்கும் விற்பனையாகமல் இருந்த சொத்துக்கள் விற்பனையாகும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். பெண்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வரும். செவ்வாய்கிழமையில் துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபடலாம்.

கடகம்

கடகம்

2020ஆம் ஆண்டு கடக ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் வரும் காலம் வந்து விட்டது. விரைய ஸ்தானத்தில் உள்ள ராகுவை குரு பகவான் பார்வையிடுகிறார். ஆறாம் இடத்தில் குரு உடன் சேர்ந்து உள்ள கேதுவினால் நன்மைகள் அதிகம் நடைபெறப்போகிறது. உங்களுக்கு நீண்டநாளாக இருந்த உடல் உபாதைகள் நீங்கும். குரு பார்வையால் நிறைய பணவரவு வரும். அபரிமிதாக சம்பாதிக்கும் பணத்தினை முறையான வழியில் சேமிப்பது அவசியம். பண விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பணத்தை யோசித்து முதலீடு செய்யுங்கள். பத்திரமான இடத்தில் பணத்தை சேமிப்பது நன்மை தரும். ப்ராடு நிதி நிறுவனங்கள் சீட்டு கம்பெனிகளில் போட்டு விட்டு ஏமாந்து போய் விட வேண்டாம். உங்க உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கேது பகவான் உங்க எதிரிகளை வெல்ல வைப்பார். பண வருமானத்தை குருவும் கேதுவும் அள்ளி கொடுப்பார்கள் கடன் பிரச்னைகள் குறையும். பொறுமையுடன் இருந்தால் நன்மைகள் அதிகம் நடைபெறும். ஆன்மீக யாத்திரைகள் புதிய அனுபவங்களை கொடுக்கும். இந்த ஆண்டு புதிய முதலீடுகளை தவிர்த்து விடுங்கள் செவ்வாய் கிழமைகளில் விநாயகரை வழிபட நன்மைகள் அதிகம் நடைபெறும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது கிரகங்கள் 2020ஆம் ஆண்டு வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் தரப்போகிறது. ராகு பகவான் லாப ஸ்தானமான 11வது வீட்டிலும் கேது பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாவது வீட்டிலும் அமர்ந்துள்ளதால் உங்கள் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். அசாத்தியமான வெற்றியைப் பெற்றுத் தருவார் ராகு. லாப ஸ்தானத்தில் உள்ள ராகுவின் மீது பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உள்ள கேது, குருவின் பார்வை விழுகிறது. நிறைய பண வரவு கிடைக்கும். பணத்தை சேமிக்கும் அளவிற்கு செலவுகள் கட்டுப்படும். மனதில் நினைத்ததை செயல்படுத்துவதில் வேகம் காட்டுவீர்கள். மனதில் நல்ல சிந்தனைகளையும், நல்லெண்ணங்களையும் கேது அருள்வார். கேதுவினால் விவேகமும், ராகுவினால் வேகமும் கிடைக்கும். எல்லா விஷயங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். உங்க வருமானம் 2020ஆம் ஆண்டு அபரிமிதமாக உயரும். அதற்கான வேலைகளை ராகுவும் கேதுவும் செய்வார்கள். அரசியல்வாதிகளுக்கு நினைத்த பதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு மதிப்பு மரியாதை கூடும் உயர்பதவிகள் தேடி வரும். விரும்பிய இடத்திற்கு டிரான்ஸ்பர் கிடைக்கும். உங்க பிள்ளைகளுக்கு நன்மைகள் நடைபெறும். பிள்ளைகளிடம் இருந்த பிரச்சினைகள் தீரும் திருமண பாக்கியம் கிடைக்கும்.

கன்னி

கன்னி

2020ஆம் ஆண்டு கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு கேது கிரகங்களால் புதிய அனுபவங்களை கிடைக்கும். ராகு பகவான் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்திலும் கேது பகவான் நான்காம் வீடான சுக ஸ்தானத்திலும் அமர்ந்து உள்ளனர். சொத்து, சுகம் சேருவதோடு உங்க வாழ்க்கையின் தரமும் உயரும். நீங்கள் எடுக்க போகும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அம்மாவின் உடல் நலனில் அக்கறைக் காட்டுங்கள். குரு இருப்பதால் நிறைய பிரச்சினைகள் தீரும். அர்த்தாஷ்டம சனியால் ஏற்பட்ட பாதிப்புகள் முடிவுக்கு வரும். சுகமான ஆண்டாக அமையப்போகிறது. புதிய தொழில் முயற்சிகள் கை கொடுக்கும். குடும்பத்தோடு ஆலயங்களுக்கு சென்று வருவீர்கள். புதிய வீடு நிலம் வாங்குவீர்கள் அதற்கான வேலையை ராகு செய்வார். உங்க வேலையில் முன்னேற்றமும், ஊதிய உயர்வும் கிடைக்கும். உங்களுடைய முன்கோபத்தை குறையுங்கள். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலில் விளக்கேற்றி வழிபடுங்கள். நன்மைகள் நிறைந்த ஆண்டாக 2020ஆம் ஆண்டு அமையப்போகிறது.

English summary
Check out for 2020 new year Rasi Palangal.Rahu Ketu planets Rasipalangal 2020 predictions for Mesham to Kanni Rasi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X