For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராகு கேது பெயர்ச்சி ரஜினிகாந்துக்கு எப்படி - புரட்டாசியில் புரட்டி போடும் அறிவிப்பை வெளியிடுவாரா

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சியின் பங்களிப்பு இந்த சட்டசபைத் தேர்தலில் கண்டிப்பாக இருக்கும்.

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் அடி எடுத்து வைப்பாரா என்று அண்ணனின் அடி விழுதுகள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அவர் அரசியலில் குதித்தால் மட்டுமே நாமும் கட்சி கரை வேட்டிக்கட்டிக்கொண்டு எம்எல்ஏவாக வலம் வர முடியும், வட்டம், மாவட்டம் என்று பதவியை அனுபவிக்க முடியும் என்று நம்பிக்கொண்டிருக்கின்றனர் அவரது ரசிகர்கள் நடிகர் ரஜினிகாந்த் இந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாவது அரசியல் பிரவேசம் செய்வாரா? ராகு கேது பெயர்ச்சி, வரப்போகிற குருப்பெயர்ச்சி, வாக்கியப்பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி எல்லாம் ரஜினிகாந்துக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

நடிகர் ரஜினிகாந்த் மகரராசி திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர். ரஜினிக்கு இப்போது ஏழரை சனி கோச்சாரப்படி நடக்கிறது. குரு பகவான் இப்போது தனுசு ராசியில் விரைய ஸ்தானத்தில் இருக்கிறார். நவம்பர் மாதம் குரு பெயர்ச்சியாகி மகரம் ராசிக்கு வருகிறார். இது ரஜினிக்கு ஜென்ம குரு. திருக்கணித பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி இருந்தாலும் வாக்கிய பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி இந்த ஆண்டு டிசம்பர் இறுதியில்தான் நிகழப்போகிறது.

ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை கொண்ட ஆன்மீக அரசியல்வாதியான நடிகர் ரஜினிகாந்த் இந்த கிரகப்பெயர்ச்சியை எல்லாம் வைத்துதான் ஒரு முடிவுக்கு வரப்போகிறார். அவரது அரசியல் பிரவேசம் புரட்டாசி மாதத்திற்கு பிறகு அதிரடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

மகாளய பட்சம் 2020: தலைமை பதவி தேடி வர முன்னோர்களுக்கு இந்த நாளில் தர்ப்பணம் கொடுங்க மகாளய பட்சம் 2020: தலைமை பதவி தேடி வர முன்னோர்களுக்கு இந்த நாளில் தர்ப்பணம் கொடுங்க

புதன் திசையில் ரஜினிகாந்த்

புதன் திசையில் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் மகரம் ராசி திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர். இவருக்கு இப்போது சனி தசை முடிந்து புதன் திசை தொடங்கியுள்ளது. புதன் திசை அரசியல் பயணத்திற்கும் அரசியல்வாதிகளுக்கும் ஏற்ற தசாகாலம். எனவே ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் செய்வதற்கான காலம் கணிந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

புரட்டி போடும் புரட்டாசி

புரட்டி போடும் புரட்டாசி

நடிகர் ரஜினிகாந்திற்கு இந்த ராகு கேது பெயர்ச்சி பல நன்மைகள் கொடுக்கப்போகிறது. கோச்சாரப்படி ராகு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். கேது பகவான் லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். இந்த இரண்டு ஸ்தானங்களுமே யோகமானதாகத்தான் இருக்கிறது.

நிதானமும் கவனமும் தேவை

நிதானமும் கவனமும் தேவை

கட்சி தொடங்கும் ரஜினிகாந்த் முதலில் மக்களின் ஆதரவைப் பெற சிறிது போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றாலும் பெயர் புகழுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது. மக்களின் ஆதரவு கிடைக்கும். எடுக்கும் காரியங்களை திறம்பட செயல்படுத்துவார். அதே நேரத்தில் மேடை பேச்சுகளில் நிதானமுடன் நடந்து கொள்வது நல்லது. கட்சி பணிகளுக்காக நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். செய்தியாளர்கள் சந்திப்பிலும் கவனம் தேவை.

அரசியல் அறிவிப்பு எப்போது

அரசியல் அறிவிப்பு எப்போது

புரட்டாசி முடியும் போது ரஜினி முக்கிய முடிவு எடுப்பார் என்றாலும் குரு பெயர்ச்சி முடிந்து சனிப்பெயர்ச்சி நிகழும் காலகட்டமான டிசம்பர் வரைக்கும் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக கவனமாக இருக்க வேண்டும். 23-09-2020 முதல் 26-01-2021 வரையிலான கால கட்டத்தில் ராகு பகவான் மிருகஷீரிடம் நட்சத்தில் பயணம் செய்கிறார் கேது கேட்டை நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். இந்த காலகட்டத்தில் எடுக்கும் முடிவு ஒருவித ஸ்திர தன்மையை ஏற்படுத்தும். கொடுத்த வாக்குறுதிகளை எப்பாடுபட்டாவது காப்பாற்ற முடியும்

சட்டசபை தேர்தலில் போட்டி

சட்டசபை தேர்தலில் போட்டி

ஏழரை சனியில் ஜென்ம சனி நடைபெறுகிறது. ஜென்ம குருவும் அமர்ந்துள்ளது சங்கடம் தரக்கூடிய அமைப்புதான் என்றாலும் 27-01-2021 முதல் 01-06-2021 வரை ராகு பகவான் ரோகிணி நட்சத்திரத்திலும் கேது பகவான் கேட்டை நட்சத்திரத்திலும் பயணம் செய்கிறார். இந்த காலகட்டம் தமிழகத்தில் தேர்தல் பரபரப்புகள் இருக்கும். ரஜினிகாந்தின் பங்களிப்பு இந்த தேர்தலில் நிச்சயம் இருக்கும். அவர் ஏற்கனவே சொன்னது போல ரஜினி தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்திக்கொள்ள மாட்டார். தமிழக சட்டசபைத் தேர்தலில் ஒரு சின்ன மாற்றத்தை மட்டுமே ஏற்படுத்துவார் ரஜினிகாந்த்.

நெருக்கடிகள் நீங்கும்

நெருக்கடிகள் நீங்கும்

ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு அதிசாரமாக 06-04-2021 முதல் கும்பம் ராசிக்கு பயணிப்பார். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படும் ஆற்றல் உண்டாகும். நெருக்கடிகள் நீங்கும் அரசியலின் ஆழத்தை உணர்ந்து கொள்ள முடியும். ரஜினிகாந்துக்கு இந்த தேர்தல் நிறைய படிப்பினைகளை கற்றுக்கொடுக்கும் என்பது நிச்சயம்.

English summary
Actor Rajinikanth's contribution to the political system will definitely be there. Sources say that Rajinikanth will wait for the Planets transits predicting that he will enter politics after Purataisi month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X