• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராகு கேது பெயர்ச்சி 2020: 18 ஆண்டுகளுக்குப் பிறகு சுகமும் சந்தோஷமும் அடையப்போகும் ராசிக்காரர்கள்

|

சென்னை: ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள். 12 ராசிகளில் இந்த கிரகங்களுக்கு என்று சொந்த வீடு இல்லை என்பதால் எந்த ராசியில் நிற்கிறார்களோ அந்த ராசியில் ஆட்சி செய்யும் கிரகங்களின் பலன்களை ராகு கேது கொடுக்கும். இப்போது மிதுனம் ராசியில் உள்ள ராகு ரிஷபம் ராசிக்கும் தனுசு ராசியில் உள்ள கேது விருச்சிகம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றன. வாக்கியப்பஞ்சாங்கப்படி ஆவணி 16ஆம் தேதி அதாவது செப்டம்பர் 1ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நிகழ உள்ளது. திருக்கணித பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி புரட்டாசி மாதம் 7ஆம் தேதி அதாவது செப்டம்பர் 23ஆம் தேதி நிகழ உள்ளது. இந்த கிரகப் பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

  கந்த சஷ்டி கவசத்தின் அவசியம் | NANDANAM AREA KANDA SHASHTI THUDHI OORVALAM | ONEINDIA TAMIL

  உலகம் முழுவதும் நோய் பரவல்,அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை, வேலையிழப்பு என பலருமே ஏதோ ஒரு பிரச்சினையில் சிக்கித் தவித்து வருகின்றனர். இன்றைய சூழ்நிலையில் ராகு கேது பெயர்ச்சி மன ஆறுதலை தருமா? நோய் பாதிப்பை போக்குமா? வருமானத்தை அதிகரிக்குமா என்று பலருமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

  ரிஷப ராகுவும், விருச்சிக கேதுவும் சுக்கிரனைப்போலவும், செவ்வாயைப் போலவும் செயல்படப்போகிறார்கள். சுக்கிரன் அழகின் அதிபதி, செல்வத்தை தருபவர், செவ்வாய் வீரத்தின் நாயகன் ரத்தக்காரகன். ரிஷப ராசியில் அமரப்போகும் ராகுவும், விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கப் போகும் கேதுவும் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்களை தரப்போகிறார்கள் என்று பார்க்கலாம். இது பொதுவான பலன்தான். உங்களின் ஜாதகத்தில் கிரகங்களின் அமர்வு,தசாபுத்தியைப் பொறுத்து சிலருக்கு சாதகமாகவோ, பாதகமாகவோ பலன்கள் மாறலாம்.

  மேஷம்

  மேஷம்

  செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே ராகு கேது பெயர்ச்சி மிகப்பெரிய மாற்றத்தை தரப்போகின்றன. ராகு மூன்றாம் வீட்டில் இருந்து 2ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். 2ம் இடம் என்பது செல்வம், குடும்பம்,பணம் கையிருப்பு, அசையும் சொத்துக்கள், கண்கள்,வாக்கு, நாணயம் இவைகளை குறிக்கும் பாவமாகும். உங்களுக்கு தேவைகேற்ப தனவரவு, வரும். நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டு யோகமும் கைகூடி வரும். தடைபட்ட சுப காரியங்கள் தடைகள் நீங்கி நடைபெறும். எட்டாம் வீட்டில் அமரும் கேதுவினால் தொட்டது துலங்கும். போட்டி பொறாமை எதிரிகள் தொல்லைகள் நீங்கும். வருமானம் அபரிமிதமாக வரும்.

  ரிஷபம்

  ரிஷபம்

  ரிஷபம் ராசி நண்பர்களே. இது வரை ராகு உங்க ராசிக்கும் கேது ஏழாம் வீட்டிற்கும் வரப்போகிறார்கள். "ஆமேடம் எருது சுறா நண்டு கன்னி ஜந்து இடத்தில் கருநாகம் அமர்ந்திருக்க பூ மேவும் ராஜயோகம் தனிதுயில் என்று புகழலாமே" என்ற யோகத்தால் எதையும் சாதிக்கும் வல்லமையை ராகு கொடுத்தார்.18 வருஷம் முடிவே இல்லாத பிரச்சனைகளை ஒன்றரை மணிநேரத்தில் தவிடு பொடியாக்கி செல்வாக்கை தக்க வைத்தார். இப்பொழுது ஜென்ம ராசியில் வரும் ராகு, ஏழாம் வீட்டில் உள்ள கேதுவின் பார்வையும் ராசிக்கு கிடைக்கிறது. நீண்ட நாள் பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். சகோதர சகோதரிகள் வகையில் அனுகூலம் ஆதாயத்தை தரும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவியால் பொருளாதார நிலை உயரும் இதுநாள் வரை தடைப்பட்டிருந்த திருமணம் இனி தடை நீங்கி நடக்கும். உயர்கல்வியும் படிக்கும் வாய்ப்பு வரும். களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் கேது அமர்வதால் தவிர்க்க முடியாத செலவும் அதனால் கடன் வாங்கும் கட்டாயமும் வரலாம் கவனம் தேவை.

  மிதுனம்

  மிதுனம்

  மிதுனம் ராசி நண்பர்களே. இது வரை ராகு ஜென்ம ராசியிலும்,7ம் பாவத்திலும் சஞ்சாரம் செய்தார்கள்.இப்பொழுது இடம் மாறி 12மிடத்தில் ராகுவும் 6ம் இடத்தில் கேதுவும் மாறுகிறார்கள். கடந்த காலங்களில் ஏழரை சனி பாத சனியாக இருந்தது. ராகுவும் சனியும் பக்கத்து பக்கத்து வீட்டில் இருந்ததால் ராகு செய்ய வேண்டிய நல்ல பலனை சனி கெடுத்தார். சனி செய்ய வேண்டிய நல்ல பலனை ராகு கெடுத்தார். அதனால் பெரிதளவில் நல்ல பலனை அனுபவிக்க முடிய வில்லை. "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்" என்பதன் அடிப்படையில் இப்பொழுது 12ஆம் வீடான மறைவு ஸ்தானத்திற்கு ராகுவும் ஆறாம் வீடான ருண ரோக ஸ்தானத்திற்கு கேது வருவது நல்லது தான். சுபகாரியங்கள் திருமணம் வீடு கிரகப்பிரவேசம் உள்ளிட்ட சுபகாரியங்கள் நடக்கும். சிலர் வீடு மாற்றம் ஊர் மாற்றம் செய்ய நேரிடும். கேதுவின் சஞ்சாரத்தினால் புது வேலை வாய்ப்பு மற்றும் தொழிலை பெருக்கி லாபம் சம்பாதித்து சுகபோகங்களை பெருக்கி கொள்ளலாம்.புதிய கடன்களை வாங்கினாலும் அது சுப விரயமாக மாறும். ராகு கேது பெயர்ச்சி முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் தரும். மலை போல வரும் துன்பம் எல்லாம் பனி போல விலகி ஓடும். குடும்பத்தில் அமைதி

  கடகம்

  கடகம்

  உங்க ராசிக்கு சாதகமான இடத்திற்கு ராகு கேது வந்திருக்கிறார்கள். 11ல் வரும் ராகு எதிர்பாராத யோகத்தையும் திடீர் பண வரவு வரும். உங்களுக்கு இருந்த பிரச்சனைகள் இனி தானாகவே மறைந்து விடும். மோட்ச காரகன் கேது பூர்வ பூண்ணிய ஸ்தமான 5ல் வருவது யோகம் தான். புத்திர பாக்கியம் தெய்வ அருள் புண்ணியம் காதல் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானத்தில் கேது வருவதால் சோதனைகளை தாண்டி மாற்றங்களை கொடுக்கும். வாங்கிய கடனுக்கு அசலுக்கு அதிகமாக கடனை செலுத்தியவர்களுக்கு கடன் சுமை குறையும். கடன் பிரச்சினைகள் ஏமாற்றங்களால் ஊரை விட்டு ஓடி வீடுவோமா என்று நினைத்தவர்கள் சொந்த ஊரிலே தலை நிமிர்ந்து வாழலாம். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உருவாகும். தடைப்பட்ட திருமணங்கள், புத்திரபாக்கியம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும்.செய்யும் தொழிலில் பார்க்கும் வேலையில் திருப்திகரமான போக்கும் மாற்றமும் உருவாகும்.இது வரை உங்களை தரக்குறைவாக நடத்தியவர்கள் எல்லாம் இனி உங்களை கண்டு மதிப்பு மரியாதை கொடுப்பார்கள். 5ல் கேது இருப்பதால் குலதெய்வ பிரார்த்தனை செய்யுங்கள்.

  சிம்மம்

  சிம்மம்

  சிம்மம் ராசிக்காரர்களே பத்தாம் வீட்டில் ராகுவும் நான்காம் வீட்டில் கேதுவும் சஞ்சரிக்கப் போகின்றன. கேந்திரத்தில் பாவ கிரகங்கள் வரும் பொழுது வலிமையான பலனை கொடுக்கும் சூரியனை கண்டு பனி விலகுவதை போல ஓவ்வொரு முயற்சியும் காரியமும் வெற்றியை கொடுக்கும். 10 ஆம் இடம் தொழில் ஸ்தானம், கீர்த்தி, செல்வாக்கு அந்தஸ்து ஸ்தானத்தில் ராகு வருவதால் தொழிலாளி முதலாளி ஆகலாம். நினைத்த மாதிரி வேலை வாய்ப்பு அமையலாம் நல்ல சம்பளம் வசதி வாய்ப்புகளை உருவாக்கி தரலாம். கடந்த காலங்களில் வேலையை இழந்து வருமானம் இல்லாமல் கணவன் மனைவி உறவு கசந்து சங்கடங்களை சந்தித்த உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சி யோகத்தைக் கொடுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கணவன் மனைவி ஓற்றுமை ஒங்கும்.குடும்பத்தில் சுபகாரியம் சுபமாக முடியும். கடன் பட்டு கலங்கி போனவர்களுக்கு இனி சிறிது சிறிதாக கடன் சுமை குறையும்.

  கன்னி

  கன்னி

  கன்னி ராசி நண்பர்களே ராகு 9ஆம் வீட்டிற்கும் கேது மூன்றாம் வீட்டிற்கும் வருவது யோகமான அமைப்புதான். தசைகள் யோகமாக இருந்தால் தலைக்கு வந்தது தலை பாகையோடு போய்விட்டது என்று ஆறுதல் படுத்திக்கொள்ளலாம். குடும்பத்தில் சுபகாரியம் புதுமுயற்சி,திருமணம்,புத்திர பாக்கியம் போன்ற சுபமங்கள நிகழ்ச்சிகள் நடக்கும். சில மாதங்களில் ராகு மீது குரு பார்வை கிடைக்கும். உங்க ராசிக்கும் குரு பார்வை கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவிகள் வேலை வாய்ப்புகள், தேடி வரும். வருமானம் திருப்தி தரும். குடும்பத்தில் பிரிவு மனக்கசப்புகளை சந்தித்தவர்களுக்கு ராகு கேது விடிவையும் விமோசனத்தையும் கொடுப்பார்.

  துலாம்

  துலாம்

  துலாம் ராசிக்காரர்களே ராகு 8ஆம் வீட்டிற்கும் கேது இரண்டாம் வீட்டிற்கும் வருகிறார்கள். ஜாதகத்தில் 8ஆம் இடம் என்பது கெட்ட ஸ்தானமாகும். சஞ்சலம்,ஏமாற்றம் விபத்து,பீடை,கௌரவ பங்கம்,கவலை,இழப்பு அந்த இடத்திற்கு பாவ கிரகம் வந்தால் அழிப்பார். இந்த ராகு பெயர்ச்சி யோகத்தையும் அதிர்ஷ்ட்டத்தையும் பெருமை புகழையும் கொடுக்கும். ராகு சூது கிரகம். எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார். திருமணம் சுபகாரியம் நடக்கும். கோர்ட் வம்பு வழக்கு சாதகமாகும்.சிலருக்கு இடமாற்றம்,ஊர்மாற்றம் நேரலாம். இது வரை வெளியூரில் இருந்தால் உள்ளுரில் செட்டில் ஆகலாம். சிலர் பிள்ளைகள் படிப்புக்கு ஊரை மாற்றலாம். பிள்ளைகள் படிப்புக்காக பிரிந்து போகலாம். குடும்ப ஸ்தானத்தில் கேது வருவதால் சொல்லும் செயலும் வெற்றி பெறும். உங்க முயற்சி தன்னம்பிக்கை மூலம் தான் வாழ்க்கையில் முன்னேற்றம் வரும். ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும்.

  விருச்சிகம்

  விருச்சிகம்

  விருச்சிகம் ராசிக்காரர்களே, உங்க ராசியில் கேதுவும் 7 ஆம் இடத்தில் ராகுவும் பெயர்ச்சியாகிறார்கள். களத்திரம் கூட்டு தொழில் ஸ்தானம் நண்பர்கள் ஸ்தானத்தில் ராகு வருவதால் தொழில் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் கூடும். கடன் வாங்கி நொந்து போனவர்களுக்கு புதிய நட்பு கூட்டு தொழில் உதவி கிடைக்கும். கணவன் மனைவி பிரச்சினை நீங்கி ஓன்று சேரலாம். கோர்ட் விவாகரத்து என்று அலைந்தவர்களுக்கு தீர்ப்பு சாதகமாக அமைந்து மறுமணம் நடக்கலாம் ராசியில் கேது வருவதால் கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து தரும். கேதுவுக்கு குரு பார்வை கிடைப்பதால் கஷ்ட நஷ்டங்களிலிருந்து விடிவு விமோசனம் ஆகியவற்றை அடையலாம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் உத்யோகத்தில் முன்னேற்றம் வரும். வருமானம் திருப்தி தரும். பிள்ளைகள் படிப்புக்காக கடன் வாங்குவீர்கள். ராகு கேது பெயர்ச்சியால் மாற்றம் முன்னேற்றம் வரும்.

  தனுசு

  தனுசு

  தனுசு ராசிக்காரர்களுக்கு எதிரி போட்டி பொறாமை கடன் வைத்தியசெலவு,ஆகிய ஸ்தானத்தில் ராகு வருவதால் கடன் அடைப்படும் தீராத நோய் தீரும். ஏழரை சனியாலும் ஜென்ம கேதுவாலும் பாதிக்கப்பட்ட பிரச்சினை முடிவுக்கு வரும். போட்டி பொறாமை பொடிபொடியாகும். தொழில் முயற்சிகள் கை கூடும். படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும் வீடு மனை வாங்கும் யோகம் வரும். தடைபட்ட திருமணம் நடைபெறும். நீண்ட நாள் கனவான புத்திரசம்பத்து கிடைக்கும். மோட்ச ஸ்தானத்தில் மோட்சகாரகன் கேது வருவதால் புது முயற்சிகள் கை கூடும். விரைய செசேமிப்புகள் உயரும். சுப தேவைகளுக்கு கடன் வாங்குவீர்கள். உங்களின் நீண்ட நாள் கடன்களும் அடையும். இந்த ராகு கேது பெயர்ச்சி யோகம் செல்வாக்கு சொத்து சுகத்தை கொடுக்கும்.

  மகரம்

  மகரம்

  மகரம் ராசிக்காரர்களுக்கு ராகு 5ஆம் இடத்திற்கும் கேது லாப ஸ்தானமான 11ஆம் வீட்டிற்கும் வருகிறார்கள். 18 ஆண்டுகளுக்கு ஓருமுறை இந்த ஸ்தானங்களில் ராகு கேது சஞ்சரிப்பார்கள். விரைய செலவுகளால் அல்லல் பட்டு வந்தீர்கள். போதுமான வருமானம் வந்தாலும் நிம்மதி குறைந்த வாழ்க்கை வாழ்ந்த உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சி நிம்மதியை தரும். கேது லாப ஸ்தானத்திற்கு வருவதால் தொட்டது துலங்கும். தேவையற்ற செலவுகள் குறையும் செய்யும் முயற்சிகள் வெற்றி பெறும். கடன் சுமை குறையும் தொழில் விசயங்கள் ஏற்றத்தை தரும். இது வரை திருமணம் ஆகி புத்திரபாக்கியம் தடைப்பட்ட தம்பதியினருக்கு புத்திரபாக்கியமும் குடும்பத்தில் அமைதியும் நிலவும். கருத்து வேற்றுமையால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள். 11ல் கேது வருவதால் சிலருக்கு மறுமணம் நடக்கும். ராகு கேது பெயர்ச்சி சிலருக்கு ஆறுதலையும் முன்னேற்றத்தையும் வீடு மனை வாங்கும் யோகத்தை கொடுக்கும். 18 வருஷத்துக்கு பிறகு 5ஆம் இடத்திற்கு ராகு வருவதால் முன்னோர் வகையில் உள்ள தோஷம் நீங்கி சுகம் பெறலாம்.

  கும்பம்

  கும்பம்

  கும்பம் ராசிக்காரர்களே ராகு கேந்திர ஸ்தானமான 4ஆம் இடத்திற்கும், கேது 10ஆம் இடத்திற்கும் மாறுகிறார்கள். கேந்திரத்தில் வரும் ராகு கேது இது வரை தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு உதவுவார்கள். தாயார் வழியில் சில தேவைற்ற செலவுகள் வரும். பூமி வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார். சிலருக்கு இடமாற்றம் தொழில் மாற்றம் வரலாம். பழைய கடன்கள் அடைப்படும். பிள்ளைகளின் திருமணம் படிப்புக்கு செலவு செய்வீர்கள். கடனுக்கு வட்டி கட்டிய நேரம் மாறி வரவுகள் சேமிப்பாக உயரும். பத்தாம் இடம் என்பது தொழில், மாமியார் வீடு, உத்தியோகம் வேலை வாய்ப்பு ஆகிய ஸ்தானங்களுக்கு கேது வருகிறார். தனம் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். திடீர் அதிர்ஷ்டம் யோகத்தை கொடுக்கும். வசதி வாய்ப்புகள் கூடும் எதிர்பாராத திருப்பம் ஏற்படும். தொழிலில் இடமாற்றம் உத்தியோக உயர்வு கிடைக்கும்.

  மீனம்

  மீனம்

  மீனம் ராசி நண்பர்களே ராகு பதினொன்று,முன்று,ஆறாம் இடத்திற்கு சேரின் பாகு தேன் பழமும் பாலும் வற்றாத தனமும் உண்டாகும். "காரியங்களுண்டாம்,அன்னதானங்களுண்டாம்.வாகு மதி மணமுண்டாம்,வரத்து மேல் வரத்துண்டாம் என்ற ஜோதிட பாடல் படி ராகு
  இப்பொழுது யோகத்தை வழங்க போகிறார். செய்யும் தொழிலிலோ பார்க்கிற வேலையிலோ திருப்தி இல்லாத நிலைமாறி தைரியத்துடன் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும். புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும்.தேவைகள் பூர்த்தியாகும் உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாள் இருந்த பிரச்சனைகள் தீரும். பாக்ய ஸ்தானத்திற்கு மோட்சத்தை கொடுக்க கூடிய கேது வருவதால் இதுவரை தடைபட்டு நடக்காத காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை அமையாதவர்களுக்கு நல்ல வேலையும் கை நிறைய சம்பாத்தியம் கிடைக்கும். கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி யாரை எல்லாம் தேடி தேடி உதவி கேட்டீர்களோ அவர்கள் எல்லாம் தானாக நாடி வந்து உதவி செய்வார்கள்.

   
   
   
  English summary
  Rahu Ketu peyarchi 2020 Tamil Mesham To Meenam 12 Zodiac signs
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X