India
  • search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராகு கேது பெயர்ச்சி 2022: மன கஷ்டம் மாயமாகும்! வாகனம் வாங்குவீங்க! எந்த ராசிக்கு இந்த யோகம் தெரியுமா

Google Oneindia Tamil News

சென்னை: எதைப்பற்றியும் கவலைப்படாமல் எடுத்த காரியத்தில் முழு மூச்சுடன் இறங்கும் கடக ராசிக்காரர்களே, ராகு தொழில் ஸ்தானமான 10ஆம் வீட்டில் அமர்ந்துள்ளார். கேது பகவான் சுக ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். இரண்டுமே அற்புதமான அமைப்பு. உத்தியோகத்தில் வேலைச்சுமை ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் பாராட்டும் பதவி உயர்வும் வந்து சேரும்.இந்த ராகு கேது பெயர்ச்சியால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

ராகு கேது பெயர்ச்சி வாக்கியப்பஞ்சாங்கப்படி நிகழ்ந்துள்ளது. ரிஷப ராசியில் இருந்து ராகு மேஷ ராசிக்கும் விருச்சிக ராசியில் இருந்து கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளனர். இரண்டு கிரகங்களும் நிழல் கிரகங்கள் என்பதால் எதிர்திசையில் சுழலும். இந்த கிரகங்களுக்கு சொந்த வீடு இல்லை செவ்வாயைப் போல ராகுவும், சுக்கிரனைப் போல கேதுவும் பலன் தரப்போகின்றனர்.

18 மாதங்கள் ராகுவும் கேதுவும் மேஷம் மற்றும் துலாம் ராசிகளில் பயணம் செய்யப்போகின்றனர். 18 மாதங்களில் ராகுவும், கேதுவும் இணைந்து கடக ராசியில் பிறந்தவர்களுக்கு எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகின்றனர் என்று பார்க்கலாம்.

உஷார்.. டெல்டா + ஓமைக்ரான்.. இரண்டும் கலந்த கலவை! தமிழ்நாட்டில் 90 பேருக்கு பாதிப்பு.. அறிகுறி என்ன?உஷார்.. டெல்டா + ஓமைக்ரான்.. இரண்டும் கலந்த கலவை! தமிழ்நாட்டில் 90 பேருக்கு பாதிப்பு.. அறிகுறி என்ன?

கடக ராசிக்காரர்களுக்கு எப்படி

கடக ராசிக்காரர்களுக்கு எப்படி

வேலை தொழில் ஸ்தானத்தில் அமர்ந்துள்ள ராகுவினால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் வேலையில் பாராட்டும் பதவி உயர்வும் கிடைக்கும். உங்களின் உழைப்புக்கு மதிப்பு மரியாதை கூடும். உயரதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். ஓடி ஓடி உழைத்த உங்களுக்கு இனி அதற்கேற்ப பலன் தேடி வரப்போகிறது. பயமும் பதற்றமும் நீங்கும்.

குடும்பத்தில் குதூகலம்

குடும்பத்தில் குதூகலம்

குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். சண்டை சச்சரவுகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். குடும்ப வருமானம் உயரும். மூத்த சகோதரருடன் இருந்த கருத்துமோதல்கள் விலகும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. குழந்தை இல்லையே என வருந்திய தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்வீர்கள்.

வேலையில் புது வாய்ப்புகள்

வேலையில் புது வாய்ப்புகள்

உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதேநேரம் வீண்பழிகள் வர வாய்ப்பு உண்டு. வேலைசுமை அதிகரித்தாலும் புதிய அனுபவங்களைக் கற்றுக்கொள்வீர்கள். வேலையில் புதிய வாய்ப்புகள் வந்தாலும் யோசித்து முடிவெடுங்கள். பழைய கடன்கள் வராமலிருந்த பாக்கிகள் வசூலாகும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

தடைகள் நீங்கும்

தடைகள் நீங்கும்

உங்களின் பேச்சில் கம்பீரம் பிறக்கும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்யம் திருப்தி தரும்.

பாதியிலேயே நின்றுபோன வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். மன உளைச்சல், டென்ஷன் விலகும். வீடு மாறுவீர்கள். வாகனம் வாங்குவீர்கள். 2023ஆம் ஆண்டு ஜனவரி தொடங்கி அக்டோபர் வரை கவனம் தேவை. மறைமுக எதிர்ப்புகள் வரலாம் யாரையும் விமர்சித்துப் பேசவேண்டாம். திடீர் மருத்துவச் செலவுகள் வரும்

மதிப்பு மரியாதை கூடும்

மதிப்பு மரியாதை கூடும்

பேச்சில் இனிமை கூடும். கனிவான பேச்சாலேயே காரியங்களைச் சாதிப்பீர்கள். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் இனி நடக்கும். பிள்ளைகளின் பிடிவாத குணம் மாறும். அவர்கள் உங்களின் பாசத்திற்குக் கட்டுப்படுவார்கள். பிள்ளைகளுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருள்களை வாங்குவீர்கள்.

கலைஞர்களின் திறமைக்குப் பரிசும் பாராட்டும் கிட்டும். வெகு நாட்களாக நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிறுவனத்திலிருந்து புது வாய்ப்பு தேடி வரும்.

பண விசயங்களில் கவனம் தேவை

பண விசயங்களில் கவனம் தேவை

சுக ஸ்தானத்தில் கேது அமர்வதால் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது பலமுறை யோசித்துக் கையெழுத்திடுவது நல்லது. வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை சிறுசிறு விபத்துகள் வரக்கூடும். வழக்குகளில் வழக்கறிஞரை மாற்றவேண்டி வரும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் மற்றும் பயணச் செலவுகள் அதிகரிக்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள், வீண் வாக்குவாதங்கள் வந்து போகும். தாய்வழி உறவினர்களிடம் கருத்துவேறுபாடுகள் வரலாம் கவனம் தேவை. யாரையும் நம்பி பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.

கனவு நிறைவேறும்

கனவு நிறைவேறும்

உங்களின் நீண்டகால லட்சியமான சொந்தவீடு கனவு இப்போது நிறைவேறும். ஆனாலும் தேவைப்படும் பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு வீடு கட்டத் தொடங்குவது நல்லது. புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மாணவ மாணவியர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கம் பெறுவார்கள்.

கவனமும் விழிப்புணர்வும் அவசியம்

கவனமும் விழிப்புணர்வும் அவசியம்

பாதியிலேயே நின்றுபோன பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகான்கள், சித்தர்களின் ஆசீர்வாதம் கிட்டும். குழந்தை பாக்கியம் உண்டு. அலுவலகத்தில் அடுத்தவர் விவகாரத்தில் தலையிடாதீர்கள். சோம்பல், ஏமாற்றம் வந்து செல்லும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். தாயாரின் உடல்நிலை சீராகும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் வேலைச்சுமை ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் பாராட்டும் பதவி உயர்வும் வந்து சேரும். குலதெய்வக் கோயிலுக்கு ஒருமுறையாவது சென்று வாருங்கள்.

English summary
Rahu ketu peyarchi palan 2022 Tamil: (கடக ராசி ராகு கேது பெயர்ச்சி பலன் 2022) Rahu ketu peyarchi 2022 on March 21st on Vakkiya Panchangam on April 12th 2022 on Tirukanitha Panchagnam. Here Check out Kadaga Rasi Rahu ketu peyarchi palan in Tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X