
ராகு கேது பெயர்ச்சி 2022: மேஷ ராசிக்காரர்களுக்கு அள்ளித்தரப்போகும் ராகு...கேதுவினால் கவனம்
மேஷம் : தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் அமரப்போகிறார் ராகு. களத்திர ஸ்தானத்தில் அமரப்போகிறார் கேது. இந்த ராகு கேது பெயர்ச்சியால் நீங்கள் அடையப்போகும் நன்மைகள் என்ன, பாதிப்புகள் என்ன வரும் பரிகாரம் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
ராகுவும் கேதுவும் இன்னும் சில நாட்களில் இடப்பெயர்ச்சியாகப்போகின்றனர். மார்ச் 21ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. ரிஷப ராசியில் உள்ள ராகு மேஷ ராசிக்கும் விருச்சிக ராசியில் உள்ள கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி ஆகின்றனர். இரண்டு கிரகங்களும் நிழல் கிரகங்கள் என்பதால் எதிர்திசையில் சுழலும். சொந்த வீடு இல்லை என்பதால் எந்த கிரகத்தில் வீட்டில் அமர்கின்றனவோ அந்த கிரகத்தைப் போல செயல்பட்டு பலனைத் தரப்போகின்றனர்.
பங்குனி மாத ராசி பலன்கள் 2022 : இந்த 6 ராசிக்காரர்களில் யார் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் தெரியுமா?
மேஷ ராசியில் அமரும் ராகு செவ்வாயைப் போலவும், துலாம் ராசியில் அமரும் கேது சுக்கிரனைப் போலவும் செயல்பட உள்ளனர். 21.3.2022 முதல் 8.10.2023 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும், கேதுவும் இணைந்து மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகின்றனர் என்று பார்க்கலாம்.

ஜென்ம ராகு
ராகு உங்கள் ராசியில் அமர்ந்து உங்கள் ராசிநாதன் செவ்வாயைப் போல செயல்படப்போகிறார். தைரியம் தன்னம்பிக்கை கூடும். காரியத்தடைகள் நீங்கும். பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும். எந்த பிரச்சினைகளையும் எளிதில் எதிர்கொள்வீர்கள். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன சங்கடங்கள் வந்தாலும் எளிதில் நீங்கும். திடீர் பண வரவு வரும் கூடவே செலவுகளும் வந்து கையைக் கடிக்கும். எதையும் உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுக்காதீங்கள். அலசி ஆராய்ந்து அறிவிப்பூர்வமாக முடிவு எடுப்பது நல்லது. முன்கோபம் அதிகரிக்கும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள் அவசரப்பட்டு பேசிவிட்டு பின்னர் வருத்தப்பட வேண்டாம்.

வேலை, தொழில்
வேலையில் திறமை அதிகரிக்கும் வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். வியாபாரத்தில் போட்டி பொறாமை அதிகரிக்கும். லாபமும் அதிகரிக்கும். பெரிய அளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம் தவறாகிவிடும். கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் பதவிகள் கிடைக்கும்.

திருமணம் கை கூடும்
21.3.2022 முதல் 22.5.2022 வரை ராகு பகவான் சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதத்தில் பயணம் செய்வதால் நிறைய நன்மைகள்நடைபெறும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அவர்கள் மீது அக்கறையும் கவனமும் செலுத்துங்கள். பிள்ளைகளுக்கு பிடித்தமான படிப்பில் சேர்த்து விடுவதே நன்மை. மகளுக்கோ, மகனுக்கோ நல்ல இடத்தில் வரன் அமையும் கல்யாணம் கை கூடி வரும். அயல்நாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.

வீடு கட்டலாம்
23.5.2022 முதல் 29.1.2023 வரை ராகு பகவான் சுக்ரனின் பரணி நட்சத்திரத்தில் செல்லும் போது வண்டி வாகனம் வாங்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவி கிடைக்கும். சொந்த வீடு கட்டுபவர்கள் வீடு கட்டி கிரகப்பிரவேஷம் செய்வீர்கள். பிரிந்த சொந்தங்கள் ஒன்று சேரும் காலம் வரப்போகிறது.

உடல் ஆரோக்கியத்தில் கவனம்
30.1.2023 முதல் 8.10.2023 வரை கேதுவின் நட்சத்திரமான அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணம் செய்கிறார். இக்காலகட்டத்தில் உடல்நலக் குறைகள், சிறு சிறு விபத்துகள், ஏமாற்றங்கள், இழப்புகள் மற்றும் உறவினர்கள் மத்தியில் மனக்கசப்புகள் வந்து நீங்கும். இந்த கால கட்டத்தில் ஜென்ம ராகு மனக்குழப்பத்தை தருவார். உடல் ஆரோக்கியத்தில் தலைச் சுற்றல், உணர்ச்சி வேகத்தில் தவறான முடிவுகள் எடுக்க வேண்டாம். அவ்வப்போது மன உளைச்சல், டென்ஷன், சோர்வு, தலைவலி வந்து நீங்கும். சின்னச் சின்ன மருத்துவ செலவுகள் வரலாம் கவனம் தேவை.

களத்திர கேது
களத்திர ஸ்தானமான ஏழாவது வீட்டில் கேது பயணம் செய்வதால் குடும்பத்தில் காரசாரமான விவாதங்கள் வந்து போகும். அந்தரங்க விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வாழ்க்கைத் துணைவருக்கு லேசாக முதுகுவலி வந்து நீங்கும். பயமும் பதற்றமும் விலகும். எதிரிகள் தொல்லைகள் அகலும். சகோதரியின் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள். தொழில் வியாபாரத்தில் அகலக்கால் வைக்க வேண்டாம். தொழில் ரகசியங்களை யாரிடமும் சொல்ல வேண்டாம். நேர்மையான வழியை கடைபிடியுங்கள் நல்லதே நடக்கும்.

அரசு வேலை தரும் கேது
கேது பகவான் சுக்கிரனைப் போல செயல்படுவார். 21.03.2022 முதல் 24.09.2022 வரை குருபகவானின் நட்சத்திரமான விசாகத்தில் பயணம் செய்யும் கேதுவினால் நல்ல செய்தி தேடி வரும். அரசு வேலை கிடைக்கும். அரசு, தனியார் துறையில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் தேடி வரும். பொறுப்புகளை கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள். திருமணமாகி குழந்தைக்களுக்காக காத்திருப்பவர்களுக்கு இந்த கேது பெயர்ச்சி நல்ல செய்தியை தரப்போகிறது.

அகலக்கால் வைக்காதீர்கள்
25.09.2022 முதல் 04.06.2023 வரை ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது பகவான் பயணம் செய்யும் போது சில தடைகள் வந்து நீங்கும். பண முதலீடுகளில் கவனம் தேவை. அடுத்தவரிடம் பணத்தைக் கொடுத்து விட்டு ஏமாந்து விட வேண்டாம். 4.6.2023 முதல் 8.10.2023 வரை செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் கேது பகவான் பயணம் செய்யும் காலத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புது வண்டி வாகனம் வாங்கும் யோகம் வரும்.
செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில்: 4.6.2023 முதல் 8.10.2023 வரை கேதுபகவான் சித்திரையில் செல்வதால் வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைக்கும். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். வாகனம் வாங்குவீர்கள். ஜென்ம ராகு, களத்திர கேதுவினால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ராகு கேதுவிற்கு பால் அபிஷேகம் செய்து வழிபடலாம். அங்கு நடைபெறும் ராகு கேது பெயர்ச்சி யாகத்தில் பங்கேற்கலாம்.