
ராகு கேது பெயர்ச்சி 2022: மிதுன ராசிக்காரர்களின் வீட்டில் இனி அதிர்ஷ்ட மழைதான்
சென்னை: தெளிவான பேச்சும் புத்திசாலித்தனம் கொண்ட செயல்பாடுகளும் நிறைந்த மிதுன ராசிக்காரர்களே, ராகு லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார் கேது. இரண்டுமே அற்புதமான அமைப்பு. இந்த ராகு கேது பெயர்ச்சியால் நீங்கள் அடையப்போகும் நன்மைகள் அளவிடமுடியாதது.
ராகு கேது பெயர்ச்சி வாக்கியப்பஞ்சாங்கப்படி நிகழ்ந்துள்ளது. ரிஷப ராசியில் இருந்து ராகு மேஷ ராசிக்கும் விருச்சிக ராசியில் இருந்து கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளனர். இரண்டு கிரகங்களும் நிழல் கிரகங்கள் என்பதால் எதிர்திசையில் சுழலும். இந்த கிரகங்களுக்கு சொந்த வீடு இல்லை செவ்வாயைப் போல ராகுவும், சுக்கிரனைப் போல கேதுவும் பலன் தரப்போகின்றனர்.
ஓ.பன்னீர் செல்வத்திடம் 78 கேள்விகள்... 4 மணி நேரம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை - நாளையும் தொடரும்
18 மாதங்கள் ராகுவும் கேதுவும் மேஷம் துலாம் ராசிகளில் பயணம் செய்யப்போகின்றனர். 21.3.2022 முதல் 8.10.2023 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும், கேதுவும் இணைந்து மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகின்றனர் என்று பார்க்கலாம்.

லாபமும் அதிர்ஷ்டமும் தரும் ராகு
உங்கள் வீட்டிற்கு லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ள ராகுவினால் புத்துணர்ச்சியும், புதிய முயற்சிகளில் வெற்றியும் கிடைக்கும். செய்யும் செயல்களில் அதிரடி முன்னேற்றம் உண்டாகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். சவாலான காரியங்களையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். பணம் பல வழிகளில் வரும் நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்திருக்கும். வீண் செலவுகளைக் குறைத்து அவசிய செலவுகளை மட்டும் செய்வீர்கள்.

வேலையில் புரமோசன் சம்பள உயர்வு
அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் இருந்த மோதல் போக்கு விலகும். வெகுநாட்களாக எதிர்பார்த்த சம்பள உயர்வு இப்போது கிடைக்கும். உங்களின் திறமைகள் வெளிப்படும். பணியில் வேலைச்சுமை குறையும். அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலை கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். கூட்டுத்தொழிலில் விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.

குடும்பத்தில் சந்தோஷம்
குடும்பத்தில் இனி அமைதியும் சந்தோஷம் நிறைந்திருக்கும் இனி உங்கள் வார்த்தைக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சண்டைக்கோழிகளாக இருந்த கணவன் மனைவி இடையே சமாதனம் ஏற்படும். தம்பதியர் இடையே இனி அந்நியோன்யம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்த தம்பதியருக்குக் குழந்தை வரம் உண்டாகும். குழந்தை வரத்துக்காக குலதெய்வத்திடம் வைத்திருந்த வேண்டுதல் பிரார்த்தனையை நிறைவேற்றி வருவீர்கள்.

சுபகாரியம் நடைபெறும்
புதிய முயற்சிகள் வெற்றியடையும். இளைய சகோதரர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சொத்துச் சிக்கல் தீரும். அரசாங்கக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். பண வரவால் கடன் பிரச்சினை நீங்கும்.
மாணவர்கள் உயர்கல்வியில் வெற்றி பெறுவர். உங்கள் மகனின் திறமையைக் கண்டறிந்து அவரை உற்சாகப்படுத்துவீர்கள். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும்.

திடீர் பண வரவு வரும்
கடன் பட்டு கலங்கிய உங்களுக்கு கவலைகள் தீரப்போகிறது. திடீர் பணவரவு உண்டு. பழைய பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். உங்களைக் குறை கூறியவர்களும் இனி பாராட்டுவார்கள். கவுரவப் பதவிகள் தேடி வரும். வீடு, மனை மூலம் லாபம் உண்டாகும். அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை கவனம் தேவை. குடும்பத்தில் சில சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. சுப விரைய செலவுகளினால் கையே

கேதுவினால் கனவு நனவாகும் காலம்
கேது பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்வதால் பிள்ளைகளால் நல்ல செய்திகள் தேடி வரும். உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற உங்களின் கனவு நனவாகும். சேமிப்பின் உதவியோடு சொந்த வீடு வாங்குவீர்கள். வீடு பராமரிப்பு செலவு அதிகரிக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மாணவ மாணவியர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும்.

வீண் பிரச்சினைகள் தவிர்க்கவும்
வீண் வம்புகளில் இருந்து விலகிவிடுங்கள். மற்றவர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதாக நினைத்து வம்பில் சிக்கிக்கொள்ளாதீர்கள். சகோதரர்களின் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள். சகோதரர்களிடம் விட்டுக்கொடுத்து போங்கள். உத்தியோகத்தில் வெகு நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் இனி நீங்கள் இருக்கும் இடம் தேடி வரும்.