
ராகு கேது பெயர்ச்சி 2022: வேலையில் புரமோசன்... குடும்பத்தில் குதூகலம் - யாருக்கு தெரியுமா
சென்னை: எதையும் தைரியத்தோடு எதிர்கொள்ளும் சிம்ம ராசிக்காரர்களுக்கு பாக்ய ஸ்தான ராகுவும், தைரிய ஸ்தான கேதுவும் எண்ணற்ற நன்மைகளைத் தரப்போகின்றன. எதிலும் முதன்மையானவராக இருக்க வேண்டும் என்று நினைக்கும் உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
ராகு கேது பெயர்ச்சி வாக்கியப்பஞ்சாங்கப்படி நிகழ்ந்துள்ளது. ரிஷப ராசியில் இருந்து ராகு மேஷ ராசிக்கும் விருச்சிக ராசியில் இருந்து கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளனர். இரண்டு கிரகங்களும் நிழல் கிரகங்கள் என்பதால் எதிர்திசையில் சுழலும். இந்த கிரகங்களுக்கு சொந்த வீடு இல்லை செவ்வாயைப் போல ராகுவும், சுக்கிரனைப் போல கேதுவும் பலன் தரப்போகின்றனர்.
உல்லாச வீடியோவை காட்டி.. 6 மாதங்களாக 22 வயது பெண் பலாத்காரம்.. திமுக நிர்வாகிகள் உள்பட 8 பேர் கைது
18 மாதங்கள் ராகுவும் கேதுவும் மேஷம் மற்றும் துலாம் ராசிகளில் பயணம் செய்கின்றனர். 18 மாதங்களில் ராகுவும், கேதுவும் இணைந்து சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகின்றனர் என்று பார்க்கலாம்.

அதிரடி திட்டங்கள்
புதிய வெற்றிகளை குவிக்கப் போகிறீர்கள். 'கையிலே வாங்கினேன் பையிலே போடலை காசு போன இடம் தெரியலை'என்று புலம்பிய நீங்கள் இனி,காசு... பணம்... துட்டு...மணி என்று பாடப்போகிறீர்கள். அந்த அளவிற்கு பணம் பாக்கெட்டில் நிறையப்போகிறது. சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் குடியேறும்.

தடை அதை உடை
காரியத்தடைகள் உடைபடும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடி வரும். வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் வரும். உயரதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். சுப காரியங்கள் நடைபெறும். திருமணமானவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். கௌரவப்பதவிகள் தேடி வரும். மனக்கவலைகள் நீங்கும். வீடு வாகனம் வாங்கலாம்.

வியாபாரத்தில் லாபம்
தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளுக்கு லாபம் கிடைக்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் கைகூடி வரும். உறவினர்கள் வகையில் சின்னச்சின்ன சண்டைகள் வந்து நீங்கும் விட்டுக்கொடுத்து செல்லவும்.

வெளிநாட்டு பயணம்
வெளிநாட்டு பயணங்கள் கைகூடி வரும். செப்டம்பர் மாதம் முதல் 2023 ஜூன் மாதம் வரைக்கும் எதிர்ப்புகள் அதிகமாகும் வீண் விமர்சனங்களைத் தவிர்க்கவும். பழைய கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தேடி வரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிக சம்பளத்துடன் புதிய வேலை கிடைக்கும். குலதெய்வ கோயிலுக்குக் குடும்பத்துடன் போய் நேர்த்திக்கடனை முடிப்பீர்கள்.