
ராகு கேது பெயர்ச்சி 2022: மன மகிழ்ச்சியும் நிம்மதியும் யாருக்கு கிடைக்கும் தெரியுமா?
சென்னை: அன்பால் எதையும் சாதிக்கும் குணம் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, களத்திர ஸ்தானத்தில் ராகுவும் ஜென்ம ராசியில் கேதுவும் பயணம் செய்கின்றனர். உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
ராகு கேது பெயர்ச்சி வாக்கியப்பஞ்சாங்கப்படி நிகழ்ந்துள்ளது. ரிஷப ராசியில் இருந்து ராகு மேஷ ராசிக்கும் விருச்சிக ராசியில் இருந்து கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளனர். இரண்டு கிரகங்களும் நிழல் கிரகங்கள் என்பதால் எதிர்திசையில் சுழலும். இந்த கிரகங்களுக்கு சொந்த வீடு இல்லை செவ்வாயைப் போல ராகுவும், சுக்கிரனைப் போல கேதுவும் பலன் தரப்போகின்றனர்.
18 மாதங்கள் ராகுவும் கேதுவும் மேஷம் மற்றும் துலாம் ராசிகளில் பயணம் செய்கின்றனர். 18 மாதங்களில் ராகுவும், கேதுவும் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகின்றனர் என்று பார்க்கலாம்.
ராகு கேது பெயர்ச்சி 2022: கனவுகள் நனவாகும் காலம்... யாருக்கு கை கூடி வரப்போகிறது தெரியுமா?

துலாம்
அன்பான மனதும் அசராத துணிச்சலும் கொண்டவர் நீங்கள். எத்தனை பெரிய உயரத்திற்கு போனாலும் எதையும் எளிதில் மறக்கமாட்டீர்கள். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்து அசரடித்த ராகு பகவான். களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் ராகு பயணம் செய்கிறார்.
இதுவரை உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்ந்து உங்களைப் படாத பாடு படுத்தியெடுத்த ராகு பகவான்
உங்களின் திறமைகள் வெளிப்படும்.

தம்பதியர் ஒற்றுமை
உங்கள் மனதில் இருந்த டென்சன் நீங்கும். உடலில் இருந்த நோய்கள் நீங்கும். மன உளைச்சல் நீங்கி மன மகிழ்ச்சி அதிகரிக்கும். காரியத்தடைகள் நீங்கி மன உற்சாகம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே சின்னச் சின்ன விவாதங்கள் வந்து நீங்கும். பெரிதுபடுத்தாமல் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். திருமணமாகி நீண்ட நாட்கள் பிள்ளை இல்லையே என்று ஏங்கித்தவித்த உங்களுக்கு புத்திரபாக்கியம் கை கூடி வரும்.

சுப செலவுகள் அதிகரிக்கும்
திடீர் சுப செலவுகள் வந்து நீங்கும். வேலை விசயமாக முடிவு எடுக்கும் முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்வது நல்லது. பண வரவு நன்றாக இருக்கும். சுப காரியங்கள் கை கூடி வரும். அடுத்த ஆண்டு துவக்கத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரைக்குமே கவனத்தோடு இருக்க வேண்டிய காலகட்டமாகும். வேலைப்பளு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். குலதெய்வத்திற்குச் செய்ய வேண்டிய நேர்த்திக்கடனைச் சிறப்பாக முடிப்பீர்கள்.

பதவி உயர்வு கிடைக்கும்
உயரதிகாரியின் ஆதரவினால் பதவி உயர்வு கிடைக்கும். வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்று பாடப்போகிறீர்கள். கலைத்துறையைச் சார்ந்தவர்களுக்கு வெற்றிகள் தேடி வரும் காலமிது. ஜென்ம ராசியில் அமர்ந்துள்ள கேது மனதை பக்குப்படுத்துவார். தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். குடும்பத்தினருக்காக அதிக நேரம் செலவு செய்வீர்கள். வருமானம் அதிகரித்தாலும் கூடவே செலவுகளும் வந்து போகும்.

ஆரோக்கியத்தில் அக்கறை
அரசாங்க ஆதாயம் உண்டு. தேவையற்ற விவாதங்களில் தலையிட வேண்டாம். வீடு மனை சொத்து வாங்குவீர்கள். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். மொத்தத்தில் இந்த ராகு கேது பெயர்ச்சி மகிழ்ச்சியும் மன நிம்மதியையும் தரப்போகிறது.