For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐடி துறையினருக்கு ராஜயோகம் தரும் ராகு-கேது!

By Staff
Google Oneindia Tamil News

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு பல கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் ஹோமங்களும் நடைபெற்றவண்ணம் இருக்கிறது. இந்நிலையில் ராகு-கேது பெயர்ச்சி தகவல் தொழில் நுட்பதுறையினரிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில், கடந்த, 20 ஆண்டுகளாக, வேலைவாய்ப்பை அள்ளி வழங்கிய, ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு மம் வங்கித்துறை களில், 20 லட்சத்திற்க்கும் அதிகமானோர் வேலையிழக்கும் வேலை இழந்து நிம்மதியற்ற நிலையில் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

rahu ketu transit 2017 major breakthroughs to take place in it segment

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய பல முன்னணி நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களில் ஒரு பகுதியினரை பணியை விட்டு நீக்கியுள்ள நிலையில், தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணி நிறுவனங்கள் பல சமீப காலமாக பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க முடிவு செய்து, கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பணி நீக்கத்தைத் தொடங்கியுள்ளது செய்திகளில் வருவது அனைவரும் அறிந்ததே!

இந்த நிலையில் ராகு-கேது பெயர்ச்சி

கணினி மற்றும் தகவல் தொழில் நுட்பதுறையில் பணிபுரிபவர்களுக்கு சந்தோஷத்தை அளிக்கும்படியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ராகு-கேது பெயற்ச்சி அரசியலோடு தகவல் தொழில் நுட்ப துறையில் பணி புரிபவர்களுக்கும் ராஜ யோகத்தை தந்து ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தபோகும் உண்ணதமான காலமாகும்.

ராஜ யோகம்:

ஒரு கிரகம் கேந்திரம் (1,4,7,10) திரிகோணம்(1,5,9) ஆகிய இரண்டு வீடுகளுக்கு அதிபதியாகி ஆட்சி பெற்றால் அது ராஜயோகம் தரும் கிரகம் எனப்படுகிறது. உதாரனமாக கும்ப லக்னத்திற்க்கு கேந்திர ஸ்தானமான நான்காம் வீட்டதிபதியும் ஒன்பதாம் வீட்டதிபதியுமான சுக்கிரன் ரிஷபத்திலோ அல்லது துலாத்திலோ ஆட்சி பெற்று தசா புத்தியை நடத்தினால் அது கும்ப லக்னத்திற்க்கு ராஜ யோகம் தரும் காலமாகும்.

ஆனால் வீடு இல்லாத ஸர்ப கிரகமான ராகு/கேது எவ்வாறு ராஜயோகம் தரும்?

ராகு/கேது கேந்திர ஸ்தானங்களில் அமர்ந்து திரிகோனாதிபதியோடு சேர்க்கை பெற்றால் அல்லது திரிகோண ஸ்தானங்களில் நின்று கேந்திராதிபதியோடு சேர்க்கை பெற்றால் ராஜயோகம் தரும் என பாரம்பரிய ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

தற்போது ராகு-கேது பெயற்ச்சியில் ராகு கடகத்திற்க்கும் கேது மகரத்திற்க்கும் பெயர்ந்துள்ளனர். கடகம் கால புருஷனுக்கு நான்காம் வீடாகி (கேந்திரம்) அதில் கால புருஷனுக்கு ஐந்தாம் விட்டதிபதியாகிய சூரியனும் (திரிகோணம்) கால புருஷனுக்கு கேந்திர திரிகோனாதிபதியாகிய செவ்வாயும் இணைந்து ராகுவை ராஜயோகம் தரும் ராகுவாக்கியிருக்கிறது.

மேலும் ராகுவும் கேதுவும் 180 பாகையில் எதிரெதிராக நின்று நிற்கும் வீட்டின் அதிபதியின் வேலையை செய்து அதனால் ராஜ யோகத்தை ஏற்படுத்தும் என்கிறது பாரம்பரிய ஜோதிடம்.

சனியை போல் ராகு செவ்வாயை போல் கேது என்பார்கள். என்றாலும் ராகு குரு மற்றும் சுக்கிரன் இருவரின் குணநலன்களை பிரதிபலிப்பதால் ராகுவை யோக காரகன் என போற்றுகிறோம். கேது செவ்வாய் மற்றும் சனியின் குணநலன்களை கொண்டதால் ஞானகாரகன் என கூறுகிறோம். கர்ம காரகன் சனியின் வீட்டில் செவ்வாய் உச்சமடையும் ராசியில் கேது நிற்பதும் சந்திரனின் வீட்டில் குரு உச்சமடையும் ராசியில் ராகு நிற்பதும் இதை உணர்த்தும்.

ஒருவர் வாழ்வில் உழைத்து முன்னேற வேண்டும் என்றால் லக்ஷமி ஸ்தானங்கள் எனும் திரிகோணத்தில் சுபகிரகங்களும் விஷ்னு ஸ்தானங்கள் எனப்படும் கேந்திர ஸ்தானங்களில் அசுப கிரகங்களும் நிற்க வேண்டும் என்கிறது பாரம்பரிய ஜோதிடம். கேந்திரங்களில் நிற்க்கும் கிரகம் உழைப்பையும் அதனால் ஏற்படும் முன்னேற்றத்தையும் தெரிவிக்கும். எனவே கேந்திர ஸ்தானங்களில் நான்கு மற்றும் பத்து ஆகிய இடங்களில் அசுப கிரகங்கள் இருப்பது மிகவும் நல்லது. ஒன்று மற்றும் ஏழு ஆகிய கேந்திரங்களில் அசுப கிரகங்கள் வேலை மற்றும் தொழில் முன்னேற்றத்தை தந்தாலும் திருமண வாழ்வில் சிறிது பாதிப்பை ஏற்படத்தவே செய்யும் என்பதையும் உணர வேண்டும். மேலும் கேந்திரங்களில் சுபகிரகங்கள் நின்றுவிட்டால் அவர்கள் உழைக்காமலே சுகமாக இருக்க விரும்புவார்கள்.

அரசியல் மற்றும் ஐடி துறை இரண்டிற்க்குமே காலபுருஷனின் கேந்திர ராசிகளான மேஷம் (கால புருஷ லக்னம்) கடகம் (கால புருஷ சுகஸ்தானம்) துலாம் (கால புருஷ களத்திரம்) மகரம் (கால புருஷ கர்ம/ஜீவன ஸ்தானம்) ஆகிய ராசிகளை லக்னமாகவும் அதன் அதிபதிகளின் தொடர்பும் முக்கியமானதாகும்.

அரசியலோ அல்லது ஐடி துறையோ இரண்டில் இருப்பவர்கள் பெரும்பாலும் மேஷ-கடக-துலாம்-மகரம் ஆகியவற்றில் ஒன்றை லக்கினமாக கொண்டிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நான்கு ராசிகளும் சர ராசிகள் என்பதால் கடின உழைப்பாளிகளாகவும் எதற்க்கோ ஒடிக்கொண்டே இருப்பவர்களாகவும் இந்த ராசி லக்ன காரர்கள் இருப்பார்கள்.

தொழில் மற்றும் உத்யோகத்தை குறிக்கும் குறிக்கும் லக்னத்திற்க்கு பத்தாம் வீட்டை கர்ம ஸ்தானம் மற்றும் ஜீவன ஸ்தானம் என சிறப்பாக கூறுகிறது பாரம்பரிய ஜோதிட நூல்கள்.

மேலும் பத்திலே ஒரு பாவி இருக்க வேண்டும். அல்லது பாம்பாவது இருக்க வேண்டும் என ஜோதிட நூல்கள் கூறுகிறது. இங்கு பாவிகள் என்பது சூரியன், செவ்வாய், சனி, தேய்பிறை சந்திரன் மற்றும் ராகு/கேது ஆகும்.

தற்போது கோசாரத்தில் மேஷ. லக்னத்திற்க்கு பத்தாமிடமாக மகரம் அமைந்து அங்கு ஸர்ப கிரகமான கேது அமர்ந்திருக்கிறது. கடக லக்னத்திலேய ராகு அமர்ந்து அதன் பத்தாம் வீடாக செவ்வாயின் மேஷம் அமைந்து இருப்பதும், துலா லக்னத்திற்க்கு பத்தாம் வீடாக கடகம் அமைந்து அங்கு சர்ப கிரகமான ராகு நிற்பதும், மகரத்தில் ஸர்ப கிரகமான கேது நின்று அதன் பத்தாம் வீடாக துலாம் அமைந்திருக்கிறது. எனவே இந்த லக்ன ராசிகாரர்கள் ஏன் எதற்கு என தெரியாமலே இடமாற்றத்தை அடைந்திருப்பார்கள். அவர்களுக்கு இடமாற்றம் முன்னேற்றத்தை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நான்கு ராசிகளை தவிர, கால புருஷனுக்கு எட்டாம் வீடாகிய விருச்சிகம் நுட்பமான அறிவை குறிக்குமிடமாகும். எனவே விருச்சிக லக்ன மற்றும் ராசிகளில் பிறந்தவர்கள் மருத்துவம் மற்றும் கணினி,தகவல் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்குகிறார்கள்.

குரு மற்றும் புதனின் வீடுகளான மீனம் மற்றும் கன்னி ராசிக்கு ராகு/கேதுவின் மூன்றாம் பார்வை அமைந்துவிடுவதால் அவருகளும் தற்போது தகவல் தொழில் நுட்பத்தில் உச்சத்தை எட்டுவார்கள்.

இவற்றோடு சிம்மம் மற்றும் கும்ப ராசிகளுக்கு அயன சயன போக ஸ்தானமான கடகம் மற்றும் மகரத்தில் ராகு கேதுக்கள் நிற்பதால் இவர்களின் தொழில் வெளிநாட்டில் அமைந்து ராகு கேதுகளின் பதினோராம் பார்வை பலத்தால் முன்னேற்றம் காண்பார்கள்.

எனவே ராகு-கேதுவை வணங்கி வெளிநாடு செல்லும் அமைப்பை பெற சுய ஜாதகத்தில் கிரகங்கள் நிற்கும் நிலையையும் அவ்வப்போது ஜோதிடர்கள் மூலமாக அறிவது மேலும் பலனை அதிகரிக்கும்.

English summary
Rahu and Ketu take the longest time to complete their transit in one Sign after Saturn and Guru. Thus, both these shadowy malefic planets have an extremely significant impact on our life trends. When planets as important as these change Signs, major transformations take place in the world as well as in various areas of our life. This Rahu ketu tansit is going to impact the Information Technology (IT) segment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X