For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாமன்னர் ராஜராஜ சோழன் 1034வது சதய விழா: தஞ்சாவூரில் விழாக்கோலம்

மாமன்னர் ராஜராஜ சோழனின் 1034வது ஆண்டு சதய விழா தஞ்சை பெரிய கோயிலில் களைகட்டியுள்ளது.

Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1034வது சதய விழா இன்று தஞ்சையில் கோலகலமாகக் கொண்டாடப்படுகிறது. இரண்டு நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழா செவ்வாய்கிழமை மங்கல இசையுடன் தொடங்கியது.

தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா ஒவ்வொரு ஆண்டும் பெரிய கோவிலில் தமிழக அரசு சார்பில் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு 1034வது ஆண்டு சதய விழா இன்று மங்கள இசையுடன் துவங்கியது. மாவட்ட ஆட்சியர் அணணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர். அதன் பின், ராஜராஜசோழனின் பெருமையை உணர்த்தும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தக கண்காட்சிகள், பட்டிமன்றங்கள் நடைபெற்ற நிகழ்ச்சியை ஆட்சியர் அண்ணாதுரை துவக்கி வைத்தார்.

ராஜராஜ சோழன் பிறந்த தினமும், முடிசூட்டிய தினமுமான ஐப்பசி மாதம் சதய நட்சத்திர தினம், ஆண்டுதோறும் ராஜராஜன் சதய விழாவாக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கவியரங்கம், பட்டிமன்றம், இசை அரங்கம், நாட்டிய அரங்கம் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. முக்கிய நிகழ்வான ராஜராஜ சோழனுக்கு அரசு சார்பில் மாலை அணிவித்தல், யானை மீது திருமுறை வீதி உலா உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெற உள்ளன.

சதய விழாவில் முக்கிய நிகழ்வான ராஜராஜசோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். ராஜராஜசோழன் சிலைக்கு முக்கிய பிரமுகர்களும் மரியாதை செலுத்தவுள்ளதால் மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சதய விழாவை கொண்டாடும் வகையில் தஞ்சை மாவட்டம் முழுவதும் புதன்கிழமையான இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜராஜ சோழன் கட்டிய கோவில்

ராஜராஜ சோழன் கட்டிய கோவில்

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன். ஒரே கல்லால் கட்டப்பட்ட இக்கோயில் கட்டிட கலையிலும் ராஜ ராஜன் சிறந்து விளங்கியதற்கு அடையாளமாக திகழ்கிறது. எனவேதான் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் அவரது பிறந்தநாளை சதயவிழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர்.

ஐப்பசி சதயம் விழா

ஐப்பசி சதயம் விழா

இந்த ஆண்டு விழா நவம்பர் 5, 6 ஆகிய இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. ராஜராஜ சோழன் பெரிய கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில், செவ்வாய்கிழமையன்று காலை மங்கள இசை முழங்க விழா தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் அணணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர். அதன் பின், ராஜராஜசோழனின் பெருமையை உணர்த்தும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தக கண்காட்சிகள், பட்டிமன்றங்கள் நடைபெற்ற நிகழ்ச்சியை ஆட்சியர் அண்ணாதுரை துவக்கி வைத்தார்.

ராஜராஜனுக்கு மரியாதை

ராஜராஜனுக்கு மரியாதை

இன்று சதய விழாவின் முக்கிய நிகழ்வாக ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது. அதன் பிறகு பெருவுடையார், பெரியநாயகி திருமேனிக்கு 48 வகையான பொருள்களால் பேரபிஷேகம் நடைபெறும். அபிஷேகம் முடிந்த பிறகு 108 கலச பூஜை நடைபெறுகிறது. அதன் பிறகு தேவாரம், திருவாசகம் ஆகியவற்றுக்குப் பூஜை செய்யப்பட்டு நான்கு ராஜ வீதிகளிலும் தேவார வீதி உலா நடைபெறும்.

தஞ்சையில் விழாக்கோலம்

தஞ்சையில் விழாக்கோலம்

ராஜராஜ சோழனின் சதய விழாவால் தஞ்சை நகரம் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது. பெரிய கோயில் மின் விளக்கு அலங்காரத்தினால் ஜொலிக்கிறது. ஒரே கல்லால் கட்டப்பட்ட இக்கோயில் கட்டிட கலையிலும் ராஜ ராஜன் சிறந்து விளங்கியதற்கு அடையாளமாக திகழ்கிறது. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் புகழோடு விளங்கும் மாமன்னர் ராஜராஜனின் சதயவிழாவை நாமும் கொண்டாடுவோம்.

English summary
The 1034rd sadhaya vizha of King Raja Raja Cholan, who built Big temple,held on November 5th,Tuesday and November 6th Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X