For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரமலான் 2020 - கொரோனா காலத்தில் கூட்டுத்தொழுகை வேண்டாம் சமூக விலகலை கடைபிடிப்போம்

ரம்ஜான் மாதத்தில் ஊரடங்கு, சமூகவிலகலைக் கடைபிடிப்போம் ஏழைகளுக்கு உதவுவோம் இஸ்லாமிய மக்களுக்கு அரசு, காவல்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: ரம்ஜான் மாதத்திலும் ஊரடங்கு மற்றும் சமூகவிலகலை நாம் கடைபிடிப்பதுடன் பசியோடும், தேவையோடும் இருப்பவர்களுக்கு உதவ வேண்டும் என இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த தமிழக அரசு அதிகாரிகள், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இஸ்லாமிய பெருமக்களின் புனிதமாதமான ரமலான் மாதம் இன்னும் இரு நாட்களில் தொடங்க உள்ளது. நோன்பு இருக்கும் இஸ்லாமிய மக்கள் மாலை நேரங்களில் நோன்பு திறக்கும் முன்பாக கூட்டு தொழுகை நடத்துவார்கள். கொரோனா வைரஸ் பரவி வருவதால் நாடு முழுவதும் மசூதிகள் மூடப்பட்டுள்ளன. கூட்டு தொழுகை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Ramadan 2020: coronavirus pandemic Rules during the holy month

இந்த சூழ்நிலையில் காவல்துறையினர் முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

சகோதர, சகோதரிகளே, அஸ்ஸலாமு அலைக்கும், ரம்ஜான் வாழ்த்துகள்

பெருந்தொற்று ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் ரம்ஜான் நம்மை நோக்கி வந்துள்ளது. பெரும் நெருக்கடியில் இருந்து மனித குலத்தை விடுவிக்க இந்த புனித மாதத்தில் அல்லாஹ் அருள் புரியட்டும்.

கரோனா வைரஸ் நேரடி தொடர்பால் பரவி வரும் சூழலில் சமூக விலகல் என்பது மிக முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். தற்போது காஃபாவில் தவாஃப் இவ்வாறே உள்ளது.

Ramadan 2020: coronavirus pandemic Rules during the holy month

கடந்த 2 மாதங்களாக எந்த ஒரு மசூதிகளிலும் கூட்டுத்தொழுகை நடைபெறவில்லை. கடுமையான மழை, குளிர் போன்ற மோசமான வானிலை காலங்களில் ஜமாத் தொழுகைக்காக மசூதிக்கு வரத் தேவையில்லை, வீடுகளில் இருந்து தொழுகை நடத்துங்கள் என முஅத்தினிடம் நபிகள் நாயகம் (அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.) அறிவிக்க சொன்னார்கள்.

வானிலை என்பதை பெருந்தொற்று காலத்துடன் ஒப்பிட முடியாது. அலட்சியமாக செயல்படுவதன் மூலம் மரணம் அல்லது துன்பம் நேரும்படி செய்தால் சட்டத்தின்படி கடுமையான குற்றமாகவும், மார்கத்தின்படி பாவமாகவும் ஆகிவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்தகாலத்தில் கவனக்குறைவுடன் செயல்படுவது பெரும் சமூக மற்றும் அரசியல் விளைவுகளை கொண்டு வந்து விடும். மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள ஊரடங்கு மற்றும் சமூகவிலகலை நாம் கடைபிடிப்போம்.

Ramadan 2020: coronavirus pandemic Rules during the holy month

ரம்ஜான் மாதத்தில் நம்மில் பலர் தராவீஹ் தொழுகைக்கு ஆவலுடன் இருப்போம். ஆனால் அது ஃபர்ளு அல்ல என்பது நமக்கு தெரியும். தற்போதைய சூழ்நிலையில் ஃபர்ளான தொழுகைகள் ஜமாத்தாக நடைபெறாத நிலையில் தராவீஹ் தொழுகையை கூட்டாக நடத்துவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

சகோதர, சகோதரிகளே, மனிதகுலமே பெரும் வேதனைக்கு ஆளாகியுள்ளது. வேலையில்லா திண்டாட்டம், வறுமை, பசி போன்றவை பெரும் மக்களை வாட்டுகிறது. மனித குலத்துக்கு தொண்டாற்றுவதே இறைவனுக்கு தொண்டாற்ற சிறந்த வழி. தொண்டை விட சிறந்த வழிபாடு இல்லை. பசியோடும், தேவையோடும் இருப்பவர்களுக்கு உதவுவதன் மூலம் இந்த ரம்ஜானில் இறையருளை பெறுவோம். உங்கள் துஆக்களை அல்லாஹ் ஏற்று பெருந்தொற்றை இந்த மாதத்தில் நீக்கி தரட்டும் ஆமின்.

சையது முனீர் ஹோடா ஐஏஎஸ் ( ஓய்வு)
குத்சியா காந்தி ஐஏஎஸ்( ஓய்வு)
எம்எப் பரூக்கி ஐஏஎஸ்( ஓய்வு)
கே.அலாவுதீன் ஐஏஎஸ்( ஓய்வு)
எம்.எஸ் ஜாபர் சேட் ஐபிஎஸ், டிஜிபி/சிபிசிஐடி
எம்.டி நிஜாமுதீன், ஐஏஎஸ், கூடுதல் தலைமைச் செயலாளர் , தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை
சையது முஸமில் அப்பாஸ் ஐஎப்எஸ், பிசிசிஎப்/ தலைர் வனத்துறை கழகம்
எம்டி ஷகில் அக்தர், ஐபிஎஸ், ஏடிஜிபி/ குற்றம்
எம்ஏ சித்திக் ஐஏஎஸ் ஆணையர், வணிக வரித்துறை
நஜ்மல் ஹோடா ஐபிஎஸ், ஐஜிபி/சிவிஓ, டிஎன்பிஎல்
அனிசா ஹுசைன் ஐபிஎஸ், ஐஜிபி/ டிஐஜி, ஐடிபிபி
கலிமுல்லா கான் ஐபிஎஸ் (ஓய்வு)
விஎச் முகமது ஹனீபா ஐபிஎஸ் (ஓய்வு)
என்எஸ் ஆசியாம்மாள் ஐபிஎஸ், டிஐஜி ,தொழில்நுட்ப சேவை
ஜியாவுல் ஹக், ஐபிஎஸ், எஸ்பி திருச்சி
எப்ஆர் இக்ராம் முகமது ஷா ஐஎப்எஸ் (ஓய்வு ) ஆகியோர் இணைந்து இந்த கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

English summary
This year, the world will witness Ramadan celebrations at their homes due to escalating coronavirus pandemic. Many countries have restricted people gathering at public spaces, be at markets or religious places. In the month of Ramzan, we observe curfew and social distance and help the hungry and the needy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X