• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மே மாத ராசி பலன்கள் - 12 ராசியில் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தெரியுமா?

|

சென்னை: மேஷ ராசியில் இப்போது உச்சத்தில் மே மாதத்தின் நடுவில் சூரியன் ரிஷபம் ராசிக்கு மாறுகிறார். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் பலன்கள் எப்படி என பார்க்கலாம்.

சூரியன் 15ஆம் தேதி முதல் ரிஷபம் ராசிக்கு மாறுகிறார். தனுசு ராசியில் உள்ள செவ்வாய் பகவான் இன்று முதல் மகரம் ராசிக்கு மாறுகிறார். புதன் வரும் 9ஆம் தேதி மேஷம் ராசிக்கு மாறுகிறார். சுக்கிரன் ரிஷபத்தில் இருந்து மிதுனம் ராசிக்கு 15ஆம் தேதி முதல் இடப்பெயர்ச்சி அடைகிறார்.

துலாமில் குருபகவான், தனுசில் சனி பகவான், கடகத்தில் ராகு, மகரத்தில் கேது என கிரகங்கள் அமைந்துள்ளன.

மேஷம்

மேஷம்

சூரியன் ஜென்ம ராசியில் இருக்கிறார். அரசு வேலைக்கு முயற்சி செய்தால் கிடைக்கும். 15ஆம் தேதி முதல் இரண்டாமிடத்திற்கு சூரியன் மாறுவதால் பணவரவு அதிகரிக்கும். செவ்வாய் பகவான் இன்று முதல் ராசிக்கு 10வது இடத்திற்கு மாறி கேது உடன் அமர்கிறார். இதுநாள் வரை இருந்த மனப்போராட்டம் குறையும். ஆன்மீக விசயத்தில் ஆர்வம் அதிகரிக்கும். சுக்கிரன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். வரும் 15ஆம் தேதி முதல் 3வது இடத்திற்கு மாறுவதால் வாழ்க்கைத் துணை மீது அன்பு அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும், தொழிலில் லாபம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு மராமத்து பணியை செய்வீர்கள்.

ரிஷபம்

ரிஷபம்

சூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அப்பாவுக்காக செலவுகள் அதிகரிக்கும். வரும் 15ஆம் தேதி முதல் ஜென்ம ராசிக்கு சூரியன் மாறுகிறார். இன்று முதல் ராசிக்கு 9வது வீட்டில் செவ்வாய் பகவான் கேது உடன் குடியேறுகிறார். பிதுரார்ஜித சொத்துக்களிலிருந்து பங்கு கிடைக்கும். புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சுக்கிரன் ஜென்ம ராசியில் இருக்கிறார் முகவசீகரம் அதிகரிக்கும். வரும் 15ஆம் தேதி முதல் 2வது இடத்திற்கு மாறுகிறார். பணவரவு அதிகரிக்கும். சனி ராசிக்கு 8வது இடத்தில் அஷ்டம சனியாக சஞ்சாரம் செய்கிறார். ராகு மூன்றாமிடத்தில் இருப்பது மனதில் குழப்பத்தைக் கொடுக்கும். கேது ஒன்பதாமிடத்திலிருப்பது ஆன்மீகத்தில் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும்.

மிதுனம்

மிதுனம்

சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும், தொழில் உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை உங்கள் ராசிநாதன் புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் சொந்தமாக செய்யும் தொழில் சிறப்படையும் 9ஆம் தேதிக்குப் பின்னர் 11வது இடத்திற்கு மாறுவதால் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சனி 7வது வீட்டில் கண்டக சனியாக சஞ்சாரம் செய்கிறார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நல்லுரவு ஏற்படும். ராகு இரண்டாமிடத்தில் இருப்பது வங்கியில் டெபாசிட் சேமிப்பு அதிகரிக்கும். கேது எட்டாமிடத்திலிருப்பது எதிர்பாராத இடத்திலிருந்து பண வரவை அதிகரிக்கச் செய்யும்.

கடகம்

கடகம்

சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் சிறப்படையும், 15ஆம் தேதிக்கு மேல் லாப ஸ்தானத்தில் அமர்கிறார். முயற்சிகள் வெற்றியடையும்பதவி உயர்வு கிடைக்கும். செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் வீடு மனை வாங்கி விற்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் உயர் கல்வியில் மேன்மை நிலை உண்டாகும். 9ஆம் தேதிக்குப் பின்னர் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அசையாத சொத்துக்கள் சேர்க்கை அதிகரிக்கும். சுக்கிரன் 11வது இடத்தில் இருக்கிறார். 15ஆம் தேதிக்குப் பின்னர் ஆடம்பர பொருட்கள் சேர்க்கை ஏற்படும். சனி ஆறாமிடத்தில் இருப்பது உடல் உழைப்பை அதிகரிக்கச் செய்யும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருப்பது புத்தியில் குழப்பத்தை கொடுக்கும் கேது ஏழாமிடத்திலிருப்பது உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சிம்மம்

சிம்மம்

உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் சொத்திலிருந்து பங்கு கிடைக்கும். 15ஆம் தேதிக்குப் பின்னர் 10வது வீட்டிற்கு மாறுகிறார். செவ்வாய் 6வது வீட்டில் அமர்ந்துள்ளார். சகோதரர்களுடன் சச்சரவு உண்டாகும். புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனின் செயல்கள் மனக் கஷ்டத்தைக் கொடுக்கும் 9ஆம் தேதிக்குப் பின்னர் மாணவர்களுக்கு தாங்கள் விரும்பிய பாடப் பிரிவில் இடம் கிடைக்கும். சுக்கிரன் 10வது வீட்டில் இருக்கிறார் தொழிலில் மனைவியின் ஒத்துழைப்பு கிடைக்கும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் தேவை, மன சந்தோஷத்தை அதிகரிக்கச் செய்யும். ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருப்பது செலவுகள் அதிகரிக்கும். ஆறாமிடத்திலிருப்பதால் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

கன்னி

கன்னி

சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் செய்யும் தொழிலில் கவனம் அதிகரிக்க வேண்டும், அதிகாரிகளால் தொல்லை உண்டாகும். 15ஆம் தேதிக்குப் பின்னர் ஒன்பதாமிடத்தில் இடத்திற்கு மாறுவதால் அப்பாவின் சொத்திலிருந்து பங்கு கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 5வது வீட்டிற்கு மாறுகிறார் உயில் மூலம் பரம்பரை சொத்து கிடைக்கும். பிள்ளைகளிடம் கவனம் தேவை. உங்கள் ராசிநாதன் புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் சில்லறை வியாபாரம் சிறப்படையும் 9ஆம் தேதிக்குப் தேதிக்குப் பின்னர் தாய் மாமனால் தொல்லை உண்டாகும்.

சனி நான்காம் இருப்பது வெளியூர் பிரயாணத்தை அதிகரிக்கச் செய்யும். ராகு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருப்பது ஆண்டு முழுவதும் பண வரவு தாராளமாக இருக்கும். கேது ஆறாமிடத்திலிருப்பது உடல் ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

துலாம்

துலாம்

சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் வேலை விசயமாக பயணம் செய்வீர்கள். 15ஆம் தேதிக்குப் பின்னர் எட்டாவது வீட்டிற்கு இடம்மாறுவதால் தொழிலில் கவனம் தேவை. செவ்வாய் 4வது வீட்டில் அமர்ந்துள்ளதால் புதிதாக நிலம் வீடு வாங்குவீர்கள். புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனால் தொல்லை உண்டாகும் 9ஆம் தேதிக்குப் தேதிக்குப் பின்னர் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் சிறப்படையும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும், மனதில் அமைதி அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 6வது வீட்டில் அமர்ந்துள்ளதால் விலை உயர்ந்த பொருட்களை யாருக்கும் இரவல் தர வேண்டாம். 15ஆம் தேதிக்குப் பின்னர் பிள்ளைகளால் நன்மை ஏற்படும். சனி மூன்றாமிடத்தில் இருப்பது இடமாற்றத்தைக் கொடுக்கும் ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருப்பது ஆண்டு முழுவதும் எடுத்த காரியமெல்லாம் வெற்றி பெறச் செய்யும் கேது நான்காமிடத்திலிருப்பதால் வீடு கட்டும் யோகம் ஏற்படும்.

விருச்சிகம்

விருச்சிகம்

சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் அப்பாவுடன் சச்சரவு உண்டாகும், அதிகாரிகளிடம் விதண்டாவாதம் செய்ய வேண்டாம். 15ஆம் தேதிக்குப் பின்னர் 7வது வீட்டில் அமர்வதால் அடிக்கடி பயணம் செய்வீர்கள். ராசிநாதன் செவ்வாய் மூன்றாம் வீட்டில் அமர்ந்துள்ளதால் உடன் பிறப்புகளால் நன்மை ஏற்படும். சுக்கிரன் தற்போது ஏழாவது வீட்டில் அமர்ந்துள்ளதால் கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் செலவுகள் அதிகரிக்கும். சனி இரண்டாமிடத்தில் இருப்பது பொருளாதார சிக்கலைக் கொடுக்கும் ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருப்பது பரம்பரை சொத்துக்களிலில் வில்லங்கத்தைக் கொடுக்கும் கேது மூன்றாமிடத்திலிருப்பது மன சஞ்சலத்தைக் கொடுக்கும்.

புற்று கோவில்களுக்கு சென்று வணங்கவும்.

தனுசு

தனுசு

சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க வேலைக்கான போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். 15ஆம் தேதிக்குப் பின்னர் 6வது வீட்டிற்கு சூரியன் மாறுவதால் அப்பாவுடன் சச்சரவு ஏற்படும். செவ்வாய் இரண்டாவது வீட்டில் இருப்பதால் வீடு மனை, நிலம், மூலம் வருமானம் அதிகரிக்கும். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும் 9ஆம் தேதிக்குப் பின்னர் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். குரு பதினொன்றாமிடத்தில் இருப்பதால் பண புழக்கம் சரளமாக இருக்கும் சனி உங்கள் ஜென்ம ராசியில் இருப்பதால் உழைப்பு அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருப்பதால் தேவையற்ற மனக் குழப்பம் உண்டாகும் கேது இரண்டாமிடத்திலிருப்பதால் சின்னச் சின்ன சச்சரவு ஏற்படும். அதை தவிர்க்க விநாயகரை வணங்கவும்.

மகரம்

மகரம்

சூரியன் நான்காம் வீட்டில் இருப்பதால் புதிதாக வீடுகட்டுவீர்கள். வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். செவ்வாய் ஜென்ம ராசியில் கேது உடன் அமர்கிறார். மனதில் ஏற்படும் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளவும். புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் நல்ல தகவல் கிடைக்கும் 9ஆம் தேதிக்குப் பின்னர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

சுக்கிரன் 5வது வீட்டில் இருப்பதால் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள். சனி பன்னிரெண்டாமிடத்தில் இருப்பது தொழில் முதலீடுகளை அதிகரிக்கச் செய்யும் ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருப்பது அனைவரிடமும் நல்லுறவை நிலவச் செய்யும் கேது உங்கள் ஜென்ம ராசியில் இருப்பது ஆன்மீகத்தில் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும்.

கும்பம்

கும்பம்

சூரியன் முயற்சி ஸ்தானமான மூன்றாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க சம்பந்தப்பட்ட வேலைக்காக வெளியூருக்கு பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும். 15ஆம் தேதிக்குப் பின்னர் 4வது வீட்டிற்கு இடம் மாறுகிறார் தலைமை அலுவகத்திலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். செவ்வாய் 12வது வீட்டில் இருக்கிறார். புதிதாக வீடு மனை வாங்கும் எண்ணம் நிறைவேறும். 9ஆம் தேதிக்குப் பின்னர் புதன் மூன்றாம் வீட்டிற்கு இடம் மாறுவதால் பின்னர் வியாபாரம் விருத்தியடையும். சனி பதினொன்றாமிடத்தில் இருப்பது தொழிலில் லாபம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருப்பது இதுவரை பட்ட கடன்களை எல்லாம் திருப்பி கொடுத்துவிடுவீர்கள் கேது பன்னிரெண்டாமிடத்தில் இருப்பது ஆன்மீகத்திற்காக செலவுகளைஅதிகரிக்கச் செய்யும்.

மீனம்

மீனம்

சூரியன் உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் இருக்கிறார் வருமானம் அதிகரிக்கும், பேச்சில் அனல் பறக்கும். 15ஆம் தேதிக்கப் பின்னர் அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைக்காக வெளியூருக்கு பிரயாணம் செல்லும் நிலை ஏற்படும். செவ்வாய் 11வது வீட்டில் அமர்ந்துள்ளதால் தொழில் வியாபாரத்திர் லாபம் அதிகரிக்கும். புதன் ஜென்ம ராசியில் அமர்ந்துள்ளார். நகைச்சுவை உணர்வு அதிகரிக்கும் 9ஆம் தேதி வாக்கு வன்மை அதிகரிக்கும்.

குரு எட்டாமிடத்தில் இருப்பதால் பண வரவு தாமதமாகும். சனி பத்தாமிடத்தில் இருப்பதால் வேலை அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருப்பது பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும் கேது பதினொன்றாமிடத்தில் இருப்பதால் பல நாட்களாக நினைத்திருந்த எண்ணங்கள் நிறைவேறும். மாரியம்மனை வணங்க மனதில் நினைத்தது நிறைவேறும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
May month rasipalan for 12 zodiac signs.Monthly Horoscope Predictions for All Twelve Zodiac Sign. We provides monthly horoscope for all zodiac sign Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius and Pisces

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more