For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சித்திரை மாத ராசிபலன்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

மேஷ ராசிக்குள் சூரியன் நுழையும் மாதம் சித்திரை மாதமாகும். சூரியன் உச்சத்தில் இருக்கும் மாதமும் இதுவே. சித்திரை மாதத்தை வசந்த ராகம் என்றும் கூறுவர். மங்களம் பொங்கும் இந்த மாதத்தினை சைத்ரா என்றும்; சைத்ர விஷு என்றும் போற்றுகிறார்கள். சித்திரை முதல் தேதியன்று ஸ்ரீரங்கத்தில் பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மஹா விஷ்ணுவின் தசாவதாரங்களில், பல அவதரங்களுக்கு இடம்கொடுக்கும் பெருமை, சித்திரைக்கு உள்ளது. சைத்ர சுக்ல பஞ்சமியில், மீன் வடிவில் அவதாரம் எடுத்து, பிரளயத்திலிருந்து உலகை மீட்டு, உயிர்கள் மீண்டும் தோன்ற வழி செய்தார் பகவான். மச்ச அவதாரம் நிகழ்ந்ததும் சித்திரையில்தான் என்கின்றனர். நவமி திதியில் ஸ்ரீராம பிரானாக அவதாரம் எடுத்து மக்களைக் காத்தார் பகவான் விஷ்ணு. திருமாலின் நரசிம்ஹ அவதாரம், பரசுராமன் அவதாரம் நிகழ்ந்ததும் இந்த மாதத்தில்தான்.

ஆதிசங்கரர், ஸ்ரீராமானுஜர் அவதரித்ததும் இந்நாளில் தான். இதேபோல சித்திரை மாத, சித்திரை நட்சத்திரத்தில் சிவபெருமான் தங்கப் பலகையில் சித்திரம் ஒன்றினை வரைய, அதிலிருந்து சித்திரகுப்தன் தோன்றினாராம்.

சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் மூன்றாவது பிறை தோன்றும் நாளே அட்சய திருதியை என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் தங்கம் வாங்கினால் இல்லத்தில் செல்வம் குவியும் என்ற ஐதீகமும் உண்டு.

திருக்கோயில்களின் விழாக்கள், மிகவும் கோலாகலமாக நடைபெறும் மாதமும் சித்திரையாகும். மதுரை மாநகரில் அருள்மிகு மீனாட்சியம்மன் ஆலயத்தில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவும், அழகர் கோவில் கள்ளழகர் வைகையில் எழுந்தருளும் வைபவமும் சித்திரை மாதமே நிகழ்கிறது.

சித்திரை சுக்கில பட்ச அஷ்டமியில் அம்பிகை அவதரித்ததாக தேவி பாகவதம் கூறுகிறது. சித்திரையில்தான் அம்மன் கோவில்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை செய்வது போன்ற இறை வழிபாடுகள் நடக்கின்றன. பல்வேறு சிறப்புகள் கொண்ட சித்திரை மாதத்தின் 12 ராசிகளுக்கும் உரிய பலன்களை தெரிந்து கொள்வோம்.

கிரக மாற்றங்கள்:

கிரக மாற்றங்கள்:

சூரியன் - ராசி மாற்றம் இல்லை
செவ்வாய் - ராசி மாற்றம் இல்லை
புதன் - ராசி மாற்றம் இல்லை
குரு - ராசி மாற்றம் இல்லை
சுக்கிரன் - ராசி மாற்றம் இல்லை
சனி - ராசி மாற்றம் இல்லை
ராகு - ராசி மாற்றம் இல்லை
கேது - ராசி மாற்றம் இல்லை

மேஷ ராசிபலன்

மேஷ ராசிபலன்

சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உத்தியோகம் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும் அரசு அதிகாரிகளுக்கு புதிய பதவி தேடி வரும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வீடு மனை நிலம் மூலம் பண வரவு அதிகரிக்கும் பேச்சில் காட்டத்தை குறைத்துக் கொள்வது நல்லது. புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் சமயோசிதமாக செயல்பட்டு எல்லாவற்றிலும் வெற்றி பெறுவீர்கள் கமிஷன் வியாபாரம் சிறப்பாக இருக்கும். குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளுடன் சச்சரவைத் தவிர்க்கவும் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் மனைவிக்கு நகை நட்டுகள் வாங்கி கொடுப்பீர்கள் வீட்டுக்கு ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக் கோயிலுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள் நீண்ட தூரம் பயணம் செல்லும் நிலை உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும் மனதின் ஆசைகள் நிறைவேறும்.

ரிஷபம்

ரிஷபம்

சூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் வகையில் அலைச்சல் அதிகரிக்கும் அரசு பணியாளர்களுக்கு தொலை தூரத்திற்கு இடமாற்றம் உண்டாகும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும் கோபம் அதிகரிக்கும். புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும் ஷேர்மார்க்கெட் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும் கலை காவியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும் எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மனதில் பாரம் அதிகரிக்கும் வாகனங்களை கையாளும் பொழுது கவனம் தேவை. ராகு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும் பழைய வீட்டை வாங்கி பராமரிப்பு செய்வீர்கள். கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் எல்லா காரியங்களும் வெற்றியடையும்.

மிதுனம்

மிதுனம்

சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களின் உதவி கிடைக்கும் லாபம் அதிகரிக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு வகையில் செலவுகள் அதிகரிக்கும் இயந்திரங்கள் பழுது அடையலாம். உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் கல்வி நிலை சிறப்படையும் சொத்துக்கள் சேர்க்கை அதிகரிக்கும். சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் வாழ்க்கைத் துணையின் உதவி கிடைக்கும் விலை உயர்ந்த துணிமணிகள் வாங்குவீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழிலுக்காக அடிக்கடி பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும் பரம்பரை தொழில் வியாபாரம் விருத்தியாகும். ராகு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும் வீடு மாறும் சூழ்நிலை உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும் அயல் தேசத்திற்கு பயணம் செல்வீர்கள்.

கடகம்

கடகம்

சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும் தொழிலில் பண வரவு அதிகரிக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும் ரியல் எஸ்டேட் தொழில் சிறப்படையும். புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் கமிஷன் வியாபாரம் விருத்தியாகும் தொழில் கல்வி சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் இடமாற்றம் உண்டாகும் உறவினர்களால் நன்மை உண்டாகும். சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் கடவுளின் அனுகிரகம் கிடைக்கும் பெண்களால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் குழப்பத்தை தவிர்க்கவும் வீண் விவாதத்தை தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் போக்குவரத்தில் கவனம் தேவை மனதில் குழப்பம் அதிகரிக்கும்.

சிம்மம்

சிம்மம்

உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தூர தேசம் பயணம் செல்லும் நிலை உண்டாகும் குல தெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள். செவ்வாய் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தீயணைப்பு துறையில் பணி புரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் ரியல் எஸ்டேட் தொழிலில் மேன்மை உண்டாகும். புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும் உயர்கல்வியில் மேன்மை நிலை உண்டாகும். குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு உயரும் பேச்சில் இனிமை அதிகரிக்கும். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் தொல்லை உண்டாகும் உடன் பிறப்புகளால் மனக் கஷ்டம் உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உறவினர் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள் வெளியூருக்கு குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை மனதில் குழப்பம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் உறவு நிலை சிறப்படையும் வியாபாரம் விருத்தியாகும்.

கன்னி

கன்னி

சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் தொல்லை உண்டாகும் உயர் அதிகாரிகளால் மனக் கஷ்டம் உண்டாகும். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பிதுரார்ஜித சொத்துகளில் பங்கு கிடைக்கும் சகோதரர்களால் நன்மை உண்டாகும். உங்கள் ராசிநாதன் புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்தில் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும் தாய் மாமனால் மனக் கஷ்டம் உண்டாகும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் நன்மை உண்டாகும் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் பழைய வீட்டை வாங்குவீர்கள் விவசாயம் விருத்தியாகும். ராகு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும் தேவையற்ற செலவுகளில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் யாரிடமும் பிரச்சினை வேண்டாம் தாய் வழி உறவினர்களால் தொல்லை உண்டாகும்.

துலாம்

துலாம்

சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் வியாபாரத்தில் மேன்மை நிலை உண்டாகும் நீண்ட தூரம் பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும். செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் நெருப்பு காயம் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு சகோதரர்களால் தொல்லை உண்டாகும். புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் படிப்புக்காக வெளியூர் செல்லும் நிலை உண்டாகும் கமிஷன் வியாபாரம் சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் பொன்னகைகளை கவனமாக பார்த்துக் கொள்ளவும் தேவையற்ற செலவுகள் செய்வீர்கள். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத் துணையுடன் பிரச்சினையை தவிர்க்கவும் சகோதரிகளுடன் சச்சரவு உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வீடு மாறும் நிலை உண்டாகும் அண்டை அயலாரால் நன்மை உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும் மன விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் படிப்பில் மேன்மை நிலை உண்டாகும் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகளால் தொல்லை உண்டாகும் உத்தியோகத்தில் கவனம் தேவை. உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு வகை வியாபாரம் சிறப்படையும். புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும் வியாபார வகையில் கடன் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும் மன ஆசைகள் எல்லாம் நிறைவேறும். சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலை காவியங்களில் ஆர்வம் அதிகரிக்கும் பெண்களால் நன்மை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் பண வரவு அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா காரியங்களும் சிறப்படையும் தொழில் நிலை மேன்மையடையும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

தனுசு

தனுசு

சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்துகள் கிடைக்கும் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் கூர்மையான பொருட்களை கையாளும்பொழுது கவனம் தேவை உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும் உயர் கல்விநிலை சிறப்படையும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் சொந்தத் தொழில் சிறப்படையும் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும். சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள் வீட்டுக்கு அழகு ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடலில் மந்தத் தன்மை உண்டாகும் மனதில் குழப்பம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும் பூர்வீக சொத்தில் வில்லங்கம் உண்டாகலாம். கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்களால் நன்மை உண்டாகும் நண்பர்களுடன் நல்லுறவு உண்டாகும்.

மகரம்

மகரம்

சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் அரசு வாகன யோகம் உண்டாகும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள் வீடு மனை நிலம் சம்பந்தப்பட்ட தொழில் சிறப்படையும். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் நல்லுறவு உண்டாகும் புதிதாக வீடு கட்டுவீர்கள். குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும் திருக்கோயில் நற்பணிகளுக்காக நன்கொடை கொடுப்பீர்கள். சுக்கிரன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் புதிதாக வீடுகட்டி குடிபோவீர்கள் பெண்களால் நன்மை உண்டாகும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் தொடர்பாக வெளிநாடு செல்வீர்கள் தொழிற்சாலை முதலீடுகள் அதிகரிக்கும்.. ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் சச்சரவு உண்டாகும் மனதில் பாரம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.

கும்பம்

கும்பம்

சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் இடமாற்றம் உண்டாகும் அடிக்கடி வெளியூருக்கு பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும். செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக நிலம் வீடு வாங்குவீர்கள் வாகன யோகம் உண்டாகும். புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் சிறப்படையும் தகவல் தொடர்பு சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் எதிர்பாராத பண வரவு கிடைக்கும். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும் பொன்னகைகளின் சேர்க்கை அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும் எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் நல்லுறவு உண்டாகும் தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு உண்டாகும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மன நிலை தெளிவாக இருக்கும் கடவுள் பக்தி அதிகரிக்கும்.

மீனம்

மீனம்

சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்கம் மூலம் பண வரவு உண்டாகும் பேச்சில் அதிகாரம் அதிகரிக்கும். செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களால் நன்மை உண்டாகும் புதிதாக வீடு கட்டும் யோகம் உண்டாகும். புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும் வாக்கு வன்மை அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும் குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் முகத்தில் வசீகரம் அதிகரிக்கும் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும் காரியங்கள் எல்லாம் வெற்றியடையும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் தைரியம் அதிகரிக்கும் பழைய கடன்கள் வசூலாகும். கேது உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வெளியூருக்கு ஆன்மீக பயணம் உண்டாகும்.

English summary
Chithirai Matha Rasi Palan from April 14,2017 to May 14,2017.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X