• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தை மாத ராசிபலன்கள் 2019: மகரத்தில் சஞ்சரிக்கும் சூரியன் - உத்தராயண புண்ணியகாலம்

|

மதுரை: தை முதல்நாளில் இருந்து உத்தராயண புண்ணியகாலம் தொடங்கப் போகிறது. சூரியனின் வடதிசை பயணம் தொடங்குகிறது. மகரம் ராசியில் சூரியன் சஞ்சரிப்பது தை மாதத்தில்தான் என்பதால் மகரமாதம் என்றும் அழைக்கின்றனர். காலபுருஷ தத்துவத்தின்படி மகரம் பத்தாவது மாதம். தொழில் ஸ்தானம். இந்த மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். உத்திராடம் சிறந்த நட்சத்திரம். உத்திராடத்தில் பிள்ளையும், ஊர் எல்லையில் கொல்லையும் என்பது பழமொழி. அதாவது உத்திராடத்தில் பிள்ளை பிறந்தால் உடனடியாக அவர்களுக்கு அருகிலேயே நிலம், வீடு அல்லது விளை நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த உத்திராட நட்சத்திரம் அமைந்துள்ள மகர ராசியில் சூரியன் நுழைவது வெகுச் சிறப்பான ஒன்றாகும்.

சூரியன் பெயர்ச்சி மட்டுமல்லாது தை மாதத்தின் துவக்கத்தில் புதன் மகரம் ராசியில் நுழைந்து இறுதியில் கும்பம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். சுக்கிரன் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார். செவ்வாய் மீனம் ராசியில் இருந்து தனது ஆட்சி வீடான மேஷம் ராசிக்கு நுழைகிறார். இந்த கிரகங்களின் பெயர்ச்சி பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த இருக்கிறது. தை மாதம் தை கிருத்திகை, தை வெள்ளி, தை அமாவாசை, தை பூசம், ரத சப்தமி, பீஷ்ம அஷ்டமி என பல்வேறு சிறப்பு வாய்ந்த நாட்கள் தை மாதத்தில் வருகின்றன. பல்வேறு சிறப்புகள் கொண்ட தை மாத ராசிபலன்களை பார்க்கலாம்.

கிரகங்களின் ராசி மாற்றம்

கிரகங்களின் ராசி மாற்றம்

சூரியன் - மகரம் ராசி

செவ்வாய் - தை 22ஆம் தேதி மீனம் ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மாறுகிறார்

புதன் - தை 6 ஆம் தேதி மகரம் ராசிக்கும் 24ஆம் தேதி கும்பம் ராசிக்கும் மாறுகிறார்

குரு - விருச்சிகம் ராசி

சுக்கிரன் - தை 15ஆம் தேதி தனுசு ராசிக்கு மாறுகிறார்

சனி - தனுசு ராசி

ராகு - கடகம் ராசி

கேது - மகரம் ராசி

மேஷம்

மேஷம்

உங்கள் ராசிக்கு ஐந்தாம் அதிபதியான சூரியன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் படித்து முடித்துவிட்டு வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீடு நிலம் போன்றவற்றில் முதலீடுகள் அதிகரிக்கும். 22ஆம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் பூர்வீக சொத்துகள் கிடைக்கும். டென்சன் அதிகரிக்கும் குறைத்துக்கொள்வது நல்லது. பேச்சில் இனிமையை கடைபிடியுங்கள். உங்கள் ராசிக்கு 3,6க்குடைய புதன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் 6ஆம் தேதி பத்தாம் இடத்திற்கு வருவதால் படித்த படிப்புக்கு தக்கவாறு வேலை கிடைக்கும். ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைக் கொடுக்கும் 24ஆம் தேதிக்கு மேல் தாய் மாமனுக்காக செலவுகள் அதிகரிக்கும். குரு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராத பண வரவு உண்டாகும், மனக் குழப்பத்தை தவிர்க்கவும். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் பெண் உறவினர்களால் மனகஷ்டம் உண்டாகும்15ஆம் தேதிக்கு மேல் ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். உங்கள் ராசிக்கு 10,11க்கு அதிபதியான சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரையாக செய்துவரும் சிறப்படையும், மூத்த சகோதரர்களால் நன்மை உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் நன்கு கவனமாக படிக்க வேண்டும். கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் செய்யும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். இந்த மாதம் தினசரியும் சூரியனை வணங்கி வேலைகளை தொடங்கினால் வெற்றி நிச்சயம். தை 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்கவும். இரண்டு நாட்கள் மவுன விரதம் இருப்பது நல்லது.

ரிஷபம்

ரிஷபம்

உங்கள் ராசிக்கு 4ஆம் அதிபதியான சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்துக்களில் பங்கு கிடைக்கும், தாய் தந்தையரின் ஆசீர்வாதம் கிடைக்கும். செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வீட்டு வாடகை வருமானம் அதிகரிக்கும், 22ம் தேதிக்குப் பின்னர் வீட்டை பராமரிக்கும் செலவு உண்டாகும். புதன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனால் சங்கடம் உண்டாகும், 6ஆம் தேதி ஒன்பதாமிடத்திற்கு மாறுவதால் உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும் 24ஆம் தேதிக்குப் பின்னர் தரகு கமிஷன் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களால் நன்மை கிடைக்கும் மனைவிக்காக செய்யும் செலவுகள் அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் அமர்ந்துள்ளார் பெண்களால் நன்மை உண்டாகும் 15ஆம் தேதிக்குப் பின்னர் விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ளவும். நகைகளை யாருக்கும் இரவல் தர வேண்டாம். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் அப்பாவினால் மனக் கஷ்டம் உண்டாகும், தொழிலில் தடை உண்டாகும். ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அண்டை அயலாருடன் சச்சரவைத் தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக் கோயிலுக்கு சென்று வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள்.

மிதுனம்

மிதுனம்

சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்களின் செயல்கள் மனதை சங்கடப்படுத்தும், எல்லா வேலைகளையும் அன்றைகன்று முடித்துவிடுவது சிறப்பு. செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் விருத்தியடையும் தீயணைப்பு துறையில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு உண்டாகும் 22ஆம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் லாபம் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு அதிபதியான புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் கமிஷன் வியாபாரம் விருத்தியாகும் 6ஆம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் எல்லா விஷயங்களிலும் கவனமாக இருக்கவும். 24ஆம் தேதிக்கு மேல் பின்னர் சொந்தமாக செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை, உங்களை விட பெரியவர்களிடம் சச்சரவைத் தவிர்க்கவும். சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை, 15ஆம் தேதிக்குப் பின்னர் மனைவியால் நன்மை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் வியாபாரத்தில் மேன்மை நிலை உண்டாகும், அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். ராகு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் பேச்சினை தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மாமியார் விஷயத்தில் மனைவியிடம் சண்டையிட வேண்டாம்.

கடகம்

கடகம்

சூரியன் ஏழாமிடத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரம் மூலம் பண வரவு அதிகரிக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

செவ்வாய் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் 22ஆம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் எல்லா செயல்களும் சிறப்படையும். புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும் 6ஆம் தேதி முதல் ஏழாமிடத்திற்கு வருகிறார் தொழில் விஷயமாக வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும். 24ஆம் தேதி முதல் உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உறவினர் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள் 15ஆம் தேதிக்குப் பின்னர் மனைவியுடன் கருத்து வேறுபாடு உண்டாகும் என்பதால் பேச்சில் கவனம் தேவை. பெண்களால் தொல்லை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் தொழில் கூட்டாளிகளுடன் சச்சரவைத் தவிர்க்கவும், உடலில் அசதி அதிகரிக்கும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருப்பதால் மனதில் உண்டாகும் குழப்பத்தினை தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் சூரியனுடன் அமர்ந்திருப்பதால் ஆன்மீகப் பயணம் மன அமைதியைத் தரும்.

சிம்மம்

சிம்மம்

உங்கள் ராசிக்கு அதிபதியான சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் அதிகாரிகளினால் தொல்லை உண்டாகும், பிறரின் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளால் கஷ்டம் உண்டாகும் 22ஆம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் நிலம் வீடு வாங்கும் யோகம் உண்டாகும். புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும் 06ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்க்கவும். 24ஆம் தேதிக்குப் பின்னர் வியாபாரத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அதிகமான கவனம் செலுத்தவும், அசையாத சொத்துக்கள் சேர்க்கை அதிகரிக்கும். சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள் 15ஆம் தேதிக்குப் பின்னர் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் வியாபார வாடிக்கையாளர்களுடன் நல்லுறவு நீடிக்கும், பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு 12மிடத்தில் விரைய ஸ்தானத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும்.

கன்னி

கன்னி

உங்கள் ராசிக்கு 12ம் அதிபதியான சூரியன் ஐந்தாமிடத்தில் இருப்பதால் இந்த மாதம் அடிக்கடி உல்லாசப் பயணம் செல்வீர்கள், அப்பாவின் சொத்துக்களை பராமரிப்பதற்க்காக செலவுகள் செய்வீர்கள். செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் வீடு வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பர்களுக்கு வியாபாரம் மிகவும் சிறப்பாக இருக்கும், 22ஆம்தேதி முதல் எட்டாமிடத்திற்கு மாறுவதால் வண்டி வாகனங்களை கவனமாக கையாளவும். தீ விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது ஜாக்கிரதை. உங்கள் ராசிக்கு அதிபதியான புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும் 06ஆம் தேதி ஐந்தாமிடத்திற்கு மாறுவதால் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும் 24ஆம் தேதி முதல் வியாபாரம் விருத்தியாகும். குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறந்த சகோதரர்களுடன் நல்லுறவு நிலவும், வெளியூர் பயணம் லாபத்தைத் தரும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் வீடு மாறும் நிலை உண்டாகும் 15ஆம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் பழைய வீடு வாங்குவீர்கள், வாகனங்களை பராமரிப்பு செய்வீர்கள். ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருப்பதால் தொழிலில் லாபம் அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் சூரியனுடன் சஞ்சரிப்பதால் ஆன்மீக பயணம் அதிகரிக்கும்.

துலாம்

துலாம்

உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் வீட்டு வாடகை மூலம் பண வரவு கிடைக்கும். அரசாங்க ஒதுக்கீட்டின் மூலம் வீடு நிலம் கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் 22ஆம் தேதிக்குப் பின்னர் ரியல் எஸ்டேட் தொழில் சிறப்படையும். புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும் 06ஆம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். 24ஆம் தேதிக்குப் பின்னர் வியாபாரத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். குரு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் அசையாத சொத்திலிருந்து பண வரவு கிடைக்கும், வியாபாரம் செல்வ வளம் சிறப்படையும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் இருப்பதால் வங்கி சேமிப்பு அதிகரிக்கும் குடும்பத்தில் குதூகலம் கூடும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருப்பதால் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அலுவலகத்திலிருந்து நல்ல தகவல் கிடைக்கும், அக்கம்பக்கத்தினரால் நன்மை உண்டாகும். ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு 10ஆமிடத்தில் இருப்பதால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும்.

விருச்சிகம்

விருச்சிகம்

உங்கள் ராசிக்கு 10ம் அதிபதியான சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஊழியர்களுக்கு பணியிட மாற்றம் உண்டாகும், தொழிலின் காரணமாக அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும். உங்கள் ராசிக்கு அதிபதியான செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் நில புலன்களின் மூலம் லாபம் உண்டாகும் 22ஆம் தேதி 6மிடத்திற்கு வருகிறார் கூர்மையான பொருட்களினால் காயம் உண்டாகலாம். புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் மூலம் பண வரவு அதிகரிக்கும் 6ஆம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல தகவல் கிடைக்கும். 24ஆம் தேதிக்கு மேல் நுண் கலைகளில் ஆர்வம் உண்டாகும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும், பொருளாதாரமும் உடல் ஆரோக்கியம் சிறப்படையும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும் 15ஆம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் பொன் நகைகள் வாங்குவீர்கள். சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் குழப்பத்தை தவிர்க்கவும், ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு 9ஆமிடத்தில் இருப்பதால் பரம்பரை சொத்துக்களில் பிரச்சினை உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு 3ஆமிடத்தில் இருப்பதால் அலைச்சல் அதிகரிக்கும்.

தனுசு

தனுசு

உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் வாக்கு ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் வருமானம் அதிகரிக்கும், பேச்சில் அதிகாரம் தூள் பறக்கும். வெளிநாட்டு தொழில் தொடர்புகள் லாபத்தைக் கொடுக்கும். செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் 22ஆம் தேதி முதல் ஐந்தாமிடத்திற்கு செல்வதால் உயர் கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் புத்தி கூர்மை அதிகரிக்கும் 06ஆம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் பேசியே காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். 24ஆம் தேதிக்குப் பின்னர் புதிய வீடு கட்டும் யோகம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்திற்காக அதிக செலவுகள் செய்வீர்கள் வங்கிகளில் முதலீடு அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் விரைய ஸ்தானத்தில் இருப்பதால் ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும் 15ஆம் தேதிக்குப் பின்னர் பெண்களால் நன்மை உண்டாகும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும், வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும். ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு எட்டாமிடத்தில் இருப்பதால் போக்குவரத்தில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் சூரியனுடன் இருப்பதால் தேவையற்ற குழப்பம் உண்டாக்கும் கோபமான பேச்சினை தவிர்க்கவும்.

மகரம்

மகரம்

சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருப்பதால் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளினால் மன சங்கடம் ஏற்படும், அப்பாவுக்கான செலவுகள் அதிகரிக்கும். செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை உண்டாகும் 22ஆம் தேதி முதல் நான்காமிடத்திற்கு செல்வதால் புதிதாக வீடு நிலம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும் 06ஆம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் சமயோசிதமாக செயல்படுவீர்கள் அடிக்கடி வெளியூர் பிரயாணம் உண்டாகும். 24ஆம் தேதிக்குப் பின்னர் புத்திக் கூர்மை அதிகரிக்கும் பேச்சின் இனிமை பிறக்கும். குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாம் வீட்டில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில் லாபம் அதிகரிக்கும், எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும்.

சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் புதிய நகைகள் வாங்குவீர்கள் 15ஆம் தேதி முதல் விரைய ஸ்தானமான பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு அதிபதியான சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் செலவுகள் அதிகரிக்கும், வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்யலாம் வெற்றி கிடைக்கும். ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களால் நன்மை உண்டாகும். கேது உங்கள் ஜென்ம ராசியில் சூரியனுடன் இருப்பதால் கடவுள் பக்தி அதிகரிக்கும். கோவில்களுக்கு செல்வீர்கள்.

கும்பம்

கும்பம்

சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் விரைய ஸ்தானத்தில் இருக்கிறார் இந்த மாதத்தில் தொழில் உத்தியோகம் காரணமாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் கோபமான பேச்சினை தவிர்க்கவும் 22ஆம் தேதி 3மிடத்திற்கு வருகிறார் உடன் பிறப்புகளால் நன்மை உண்டாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் 6ஆம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்க்கவும். 24ம் தேதி முதல் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

குரு ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் செய்யும் செயல்கள் யாவும் சிறப்படையும், முயற்சிகள் எல்லாம் வெற்றியடையும்.

சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் நிலை சிறப்படையும் 15ஆம் தேதி முதல் பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் தொழிலில் லாபம் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு அதிபதியான சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதின் ஆசைகள் எல்லாம் நிறைவேறும், தொழிலில் லாபம் அதிகரிக்கும். ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளை வெல்லும் மனதைரியம் உண்டாகும். கேது பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீக பயணத்திற்காக செலவுகள் அதிகரிக்கும்.

மீனம்

மீனம்

உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் சூரியன் சஞ்சரிக்கிறார். அதிகாரிகளால் தொல்லை உண்டாகும், எதிரிகளின் பணம் கிடைக்கும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கோபத்தைக் கட்டுப்படுத்தவும் 22ஆம் தேதி முதல் இரண்டாமிடத்திற்கு செல்வதால் வீட்டு வாடகை மூலம் பண வரவு உண்டாகும் புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் கல்வியில் மேன்மை நிலை உண்டாகும் 06ஆம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் வியாபார லாபம் அதிகரிக்கும். 24ஆம் தேதிக்கு மேல் புத்திக்கூர்மை அதிகரிக்கும். குரு ஒன்பதாமிடத்தில் இருப்பதால் பண வரவு சரளமாக இருக்கும், குல தெய்வத்தின் அருள் கிடைக்கும். சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் 15ஆம் தேதி முதல் பத்தாமிடத்திற்கு வருவதால் செய்யும் முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். உங்கள் ராசிக்கு 11,12ம் அதிபதியான சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் உழைப்பு அதிகரிக்கும், காரியங்கள் எல்லாம் சிறப்படையும். ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு 5மிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள். கேது பதினொன்றாமிடத்தில் சூரியனுடன் இருப்பதால் எண்ணிய எண்ணங்கள் எல்லாம் நிறைவேறும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Rasi palan for the Tamil Month of Thai From January 15 to February 12,2019.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more