For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகத்துவம் நிறைந்த தை மாத ராசி பலன்கள்

மகர ராசிக்குள் சூரியன் நுழைவதே மகர மாதம். ஜோதிடவியலில் தை மாதம் பத்தாவது மாதமாக கூறப்படுகிறது. தை மாத ராசி பலன்களை அறிந்து கொள்வோம்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சூரியன் மகரம் ராசியில் சஞ்சரிப்பது தை மாதம் என்று அழைக்கப்படுகிறது. இதனை மகர மாதம் என்றும் அழைப்பார்கள். மகர ராசிக்குள் சூரியன் நுழைவதே மகர மாதம். ஜோதிடவியலில் தை மாதம் பத்தாவது மாதமாக கூறப்படுகிறது.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். உத்திராடம் சிறந்த நட்சத்திரம். உத்திராடத்தில் பிள்ளையும், ஊர் எல்லையில் கொல்லையும் (வயலும்) என்பது பழமொழி. அதாவது உத்திராடத்தில் பிள்ளை பிறந்தால் உடனடியாக அவர்களுக்கு அருகிலேயே நிலம், வீடு அல்லது விளை நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். எனவே உத்திராடத்தின் ராசியான மகரத்தில் சூரியன் நுழைவது வெகுச் சிறப்பான ஒன்றாகும்.

தை மாதம் பல்வேறு விரதநாட்கள் வருகின்றன. தை வெள்ளி, தை அமாவாசை, தை பூசம், ரத சப்தமி, பீஷ்ம அஷ்டமி என பல்வேறு சிறப்பு வாய்ந்த நாட்கள் தை மாதத்தில் வருகின்றன. பல்வேறு சிறப்புகள் கொண்ட தை மாத ராசி பலன்களை அறிந்து கொள்வோம்.

கிரகங்களின் ராசி மாற்றம்

கிரகங்களின் ராசி மாற்றம்


சூரியன் - ராசி மாற்றம் இல்லை
செவ்வாய் - 03ம் தேதி விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்
புதன் - 14ம் தேதி மகரம் ராசிக்கு மாறுகிறார்
குரு - ராசி மாற்றம் இல்லை
சுக்கிரன் - 24ம் தேதி கும்பம் ராசிக்கு மாறுகிறார்
சனி - ராசி மாற்றம் இல்லை
ராகு - ராசி மாற்றம் இல்லை
கேது - ராசி மாற்றம் இல்லை

மேஷம்

மேஷம்

உங்கள் ராசிக்கு ஐந்தாம் அதிபதியான சூரியன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் படித்து முடித்துவிட்டு வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் வீடு வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பர்களுக்கு வியாபாரம் மிகவும் சிறப்பாக இருக்கும், 03ம் எட்டாமிடத்திற்கு வருவதால் வாகனங்களை கவனமாக கையாளவும். உங்கள் ராசிக்கு 3,6க்குடைய புதன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் 14ம் தேதி பத்தாம் இடத்திற்கு வருவது படித்த படிப்புக்கு தக்கவாறு வேலை கிடைக்கும். உங்கள் ராசிக்கு 9,12க்கு அதிபதியான குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களால் நன்மை உண்டாகும், மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு 2,7க்கு அதிபதியான சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் நிலை சிறப்படையும் 24ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் தொழிலில் லாபம் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு 10,11க்கு அதிபதியான சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரையாக செய்துவரும் சிறப்படையும், மூத்த சகோதரர்களால் நன்மை உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் நன்கு கவனமாக படிக்க வேண்டும். கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும்.

ரிஷபம்

ரிஷபம்

உங்கள் ராசிக்கு 4ம் அதிபதியான சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்துக்களில் பங்கு கிடைக்கும், தாய் தந்தையரின் ஆசீர்வாதம் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 7,12க்கு அதிபதியான செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் எந்த வித பிரச்சினையிலும் சிக்கிக் கொள்ள வேண்டாம், 03ம் தேதி 7மிடத்திற்கு வருகிறார் உடன் பிறந்த சகோதரர்களால் நன்மை உண்டாகும். உங்கள் ராசிக்கு 2,5க்கு அதிபதியான புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனல் சங்கடம் உண்டாகும், 14ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 8,11க்கு அதிபதியான குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை, உங்களை விட பெரியவர்களிடம் சச்சரவைத் தவிர்க்கவும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் 24ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். உங்கள் ராசிக்கு 9,10க்கு அதிபதியான சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் அப்பாவினால் மனக் கஷ்டம் உண்டாகும், தொழிலில் தடை உண்டாகும். ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அண்டை அயலாருடன் சச்சரவைத் தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக் கோயிலுக்கு சென்று வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள்.

மிதுனம்

மிதுனம்

உங்கள் ராசிக்கு 3ம் அதிபதியான சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்களின் செயல்கள் மனதை சங்கடப்படுத்தும், எல்லா வேலைகளையும் அன்றைகன்று முடித்துவிடுவது சிறப்பு. உங்கள் ராசிக்கு 6,11க்கு அதிபதியான செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் நில புலன்களின் மூலம் லாபம் உண்டாகும் 03ம் தேதி 6மிடத்திற்கு வருகிறார் கூர்மையான பொருட்களினால் காயம் உண்டாகலாம். உங்கள் ராசிக்கு அதிபதியான புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் கமிஷன் வியாபாரம் விருத்தியாகும் 14ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் எல்லா விஷய்ங்களிலும் கவனமாக இருக்கவும். உங்கள் ராசிக்கு 7,10க்கு அதிபதியான குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்துக்களிலிருந்து பண வரவு உண்டாகும், குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு 5,12க்கு அதிபதியான சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் பெண் உறவினர்களால் மனகஷ்டம் உண்டாகும் 24ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். உங்கள் ராசிக்கு 8,9க்கு அதிபதியான சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் வியாபாரத்தில் மேன்மை நிலை உண்டாகும், அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். ராகு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் பேச்சினை தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மாமியார் விஷயத்தில் மனைவியிடம் சண்டையிட வேண்டாம்.

கடகம்

கடகம்

உங்கள் ராசிக்கு 2ம் அதிபதியான சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் மூலம் பண வரவு அதிகரிக்கும், குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு 5,10க்கு அதிபதியான செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் 03ம் தேதி 5மிடத்திற்கு வருகிறார் உயர் கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு 3,12க்கு அதிபதியான புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும் 14ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் தொழில் விஷயமாக வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும். உங்கள் ராசிக்கு 6,9க்கு அதிபதியான குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அதிகமான கவனம் செலுத்தவும், அசையாத சொத்துக்கள் சேர்க்கை அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு 4,11க்கு அதிபதியான சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் வாகனம் வாங்கும் அதிர்ஷ்டம் உண்டாகும் 24ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் மனைவியுடன் பிரச்சினையை தவிர்க்கவும். உங்கள் ராசிக்கு 7,8க்கு அதிபதியான சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் தொழில் கூட்டாளிகளுடன் சச்சரவைத் தவிர்க்கவும், உடலில் அசதி அதிகரிக்கும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் உண்டாகும் குழப்பத்தினை தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகப் பயணம் உண்டாகும்.

சிம்மம்

சிம்மம்

உங்கள் ராசிக்கு அதிபதியான சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் அதிகாரிகளினால் தொல்லை உண்டாகும், பிறரின் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். உங்கள் ராசிக்கு 4,9க்கு அதிபதியான செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை உண்டாகும் 03ம் தேதி 4மிடத்திற்கு வருகிறார் புதிதாக நிலம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உங்கள் ராசிக்கு 2,11க்கு அதிபதியான புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும் 14ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்க்கவும். உங்கள் ராசிக்கு 5,8க்கு அதிபதியான குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறந்த சகோதரர்களுடன் நல்லுறவு நிலவும், வெளியூர் பயணம் லாபத்தைத் தரும். உங்கள் ராசிக்கு 3,10க்கு அதிபதியான சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் மனைவியுடன் பிரச்சினையைத் தவிர்க்கவும் 24ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள். உங்கள் ராசிக்கு 6,7க்கு அதிபதியான சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் வியாபார வாடிக்கையாளர்களுடன் நல்லுறவு நீடிக்கும், பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு 12மிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கன்னி

கன்னி

உங்கள் ராசிக்கு 12ம் அதிபதியான சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி உல்லாசப் பயணம் செல்வீர்கள், அப்பாவின் சொத்துக்களை பராமரிப்பதற்க்காக செலவுகள் செய்யும் நிலை உண்டாகும். உங்கள் ராசிக்கு 3,8க்கு அதிபதியான செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் கோபமான பேச்சினை தவிர்க்கவும் 03ம் தேதி 3மிடத்திற்கு வருகிறார் உடன் பிறப்புகளால் நன்மை உண்டாகும். உங்கள் ராசிக்கு அதிபதியான புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும் 14ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு 4,7க்கு அதிபதியான குரு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் அசையாத சொத்திலிருந்து பண வரவு கிடைக்கும், வியாபாரம் செல்வ வளம் சிறப்படையும். உங்கள் ராசிக்கு 2,9க்கு அதிபதியான சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும் 24ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் பெண்களால் தொல்லை உண்டாகும். உங்கள் ராசிக்கு 5,6க்கு அதிபதியான சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் பழைய வீடு வாங்குவீர்கள், வாகனங்களை பராமரிப்பு செய்வீர்கள். ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு 11மிடத்தில் இருக்கிறார் தொழிலில் லாபம் அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

துலாம்

துலாம்

உங்கள் ராசிக்கு 11ம் அதிபதியான சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் வீட்டு வாடகை மூலம் பண வரவு உண்டாகும், அரசாங்க ஒதுக்கீட்டின் மூலம் வீடு நிலம் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 2,7க்கு அதிபதியான செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் உண்டாகும் கோபத்தைக் கட்டுப்படுத்தவும் 03ம் தேதி 2மிடத்திற்கு வருகிறார் வீட்டு வாடகை மூலம் பண வரவு உண்டாகும். உங்கள் ராசிக்கு 9,12க்கு அதிபதியான புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும் 14ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 3,6க்கு அதிபதியான குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும், செல்வ வளம் சிறப்படையும். உங்கள் ராசிக்கு அதிபதியான சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் தாய் வழி உறவினர்களினால் சந்தோஷம் அதிகரிக்கும் 24ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் உறவினர் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள். உங்கள் ராசிக்கு 4,5,க்கு அதிபதியான சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அலுவலகத்திலிருந்து நல்ல தகவல் கிடைக்கும், அக்கம்பக்கத்தாரால் நன்மை உண்டாகும். ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு 10மிடத்தில் இருக்கிறார் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும்.

விருச்சிகம்

விருச்சிகம்

உங்கள் ராசிக்கு 10ம் அதிபதியான சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஊழியர்களுக்கு பணியிட மாற்றம் உண்டாகும், தொழிலின் காரணமாக அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும். உங்கள் ராசிக்கு அதிபதியான செவ்வாய் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீடு நிலம் போன்றவற்றில் முதலீடுகள் அதிகரிக்கும். 03ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் டென்சனை குறைத்துக் கொள்ளுங்கள். உங்கள் ராசிக்கு 8,11க்கு அதிபதியான புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் மூலம் பண வரவு அதிகரிக்கும் 14ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல தகவல் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 2,5க்கு அதிபதியான குரு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்திற்காக செலவுகள் அதிகரிக்கும், வங்கிகளில் முதலீடு செய்வீர்கள். உங்கள் ராசிக்கு 7,12க்கு அதிபதியான சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் வீடு மாறும் நிலை உண்டாகும் 24ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 3,4,க்கு அதிபதியான சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் குழப்பத்தை தவிர்க்கவும், அக்கம்பக்கத்தாரால் தொல்லை உண்டாகும். ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு 9மிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்துக்களில் பிரச்சினை உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு 3மிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும்.

தனுசு

தனுசு

உங்கள் ராசிக்கு 9ம் அதிபதியான சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் அப்பா மூலம் பண வரவு உண்டாகும், வெளிநாட்டு தொழில் தொடர்புகள் லாபத்தைக் கொடுக்கும். உங்கள் ராசிக்கு 12ம் அதிபதியான செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுக்காக செலவுகள் அதிகரிக்கும். 03ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் காவல் துறையில் பணி புரிபவர்களுக்கு இட மாற்றம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 7,10க்கு அதிபதியான புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் புத்தி கூர்மை அதிகரிக்கும் 14ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் பேசியே காரியம் சாதித்துக் கொள்வீர்கள். உங்கள் ராசிக்கு அதிபதியான குரு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும், பண லாபம் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு 6,11க்கு அதிபதியான சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் முகத்தில் அழகு அதிகரிக்கும் 24ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் உடன் பிறப்புகளால் நன்மை உண்டாகும். உங்கள் ராசிக்கு 2,3,க்கு அதிபதியான சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும், வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும். ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு 8மிடத்தில் இருக்கிறார் போக்குவரத்தில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு 2மிடத்தில் இருக்கிறார் தேவையற்ற குழப்பம் உண்டாக்கும் பேச்சினை தவிர்க்கவும்.

மகரம்

மகரம்

உங்கள் ராசிக்கு 8ம் அதிபதியான சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உயர் அதிகாரிகளினால் மன சங்கடம் உண்டாகும், அப்பாவுக்காக செலவுகள் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு 11ம் அதிபதியான செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் தீயணைப்பு துறையில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு உண்டாகும் 03ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் லாபம் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு 6,9க்கு அதிபதியான புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும் 14ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் சமயோசிதமாக செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு 3,12க்கு அதிபதியான குரு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் காரணமாக அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும், குழந்தைகளுக்காக செலவுகள் அதிகரிக்கும் உங்கள் ராசிக்கு 5,10க்கு அதிபதியான சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும் 24ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் பொன் நகைகள் வாங்குவீர்கள். உங்கள் ராசிக்கு அதிபதியான சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் செலவுகள் அதிகரிக்கும், வெளிநாட்டு தொடர்புகள் உண்டாகும். ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு 7மிடத்தில் இருக்கிறார் நண்பர்களால் நன்மை உண்டாகும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும்.

கும்பம்

கும்பம்

உங்கள் ராசிக்கு 7ம் அதிபதியான சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க கட்டணங்களை செலுத்திவிடுவது சிறப்பு, தொழில் உத்தியோகம் காரணமாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 10ம் அதிபதியான செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் 03ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் எல்லா செயல்களும் சிறப்படையும். உங்கள் ராசிக்கு 5,8க்கு அதிபதியான புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் 14ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்க்கவும். உங்கள் ராசிக்கு 2,11க்கு அதிபதியான குரு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பண வரவு சரளமாக இருக்கும், குல தெய்வத்தின் அருள் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 4,9க்கு அதிபதியான சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும் 24ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு அதிபதியான சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதின் ஆசைகள் எல்லாம் நிறைவேறும், தொழில் லாபம் அதிகரிக்கும். ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு 6மிடத்தில் இருக்கிறார் எதிரிகளை வெல்லும் மனதைரியம் உண்டாகும். கேது பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் கோவில்களுக்காக செலவுகள் அதிகரிக்கும்.

மீனம்

மீனம்

உங்கள் ராசிக்கு 6ம் அதிபதியான சூரியன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் அதிகாரிகளால் தொல்லை உண்டாகும், எதிரிகளின் பணம் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 9ம் அதிபதியான செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளால் கஷ்டம் உண்டாகும் 03ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் நிலம் வீடு வாங்கும் யோகம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 4,7க்கு அதிபதியான புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் கல்வியில் மேன்மை நிலை உண்டாகும் 14ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் வியாபார லாபம் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு அதிபதியான குரு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராத பண வரவு உண்டாகும், மனக் குழப்பத்தை தவிர்க்கவும். உங்கள் ராசிக்கு 3,8க்கு அதிபதியான சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் புதிய நகைகள் வாங்குவீர்கள் 24ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு 11,12ம் அதிபதியான சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் உழைப்பு அதிகரிக்கும், காரியங்கள் எல்லாம் சிறப்படையும். ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு 5மிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள். கேது பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எண்ணங்கள் நிறைவேறும்.

English summary
Rasi palan for the Tamil Month of Thai from January 14,2018 to Feb 13,2018.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X