For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வளம் தரும் வைகாசி மாத ராசி பலன்கள்

சூரியன் ரிஷபராசியில் நுழையும் மாதம் வைகாசி மாதமாகும். பல்வேறு சிறப்புகள் கொண்ட வைகாசி மாத ராசி பலன்களை அறிந்து கொள்வோம்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன்

சென்னை: சூரியன் ரிஷபராசியில் நுழையும் மாதம் வைகாசி மாதமாகும். வைகாசி மாதம் என்றாலே நல்ல காரியங்கள் செய்ய ஏற்ற மாதம் என்று கருதப்படுகிறது. வைகாசி மாதத்தை மாதவ மாதம் என்றும், வைசாகம் என்றும் அழைப்பார்கள். ஆயுள், செல்வம், புத்திரப்பேறு அனைத்தையும் அளிக்கக்கூடிய மாதம் வைகாசி. சூரியனின் சொந்த வீடு சிம்ம ராசி. பத்தாம் வீடு என்பது தொழிலைக் குறிக்கும். சூரியன் தனது சொந்த ராசிக்கு பத்தாம் வீடாகிய ரிஷபத்தில் அதாவது, தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலமே வைகாசி மாதம்.

அரசனுக்கு உரிய கோளாகக் கருதப்படும் சூரியன் உழைப்பிற்கு உரிய வீட்டில் அமர்வதால் அரசன் முதல் சாமானியன் வரை அனைவரும் உழைக்க வேண்டிய காலமாக அமைந்துள்ளது. சாமானியனையும் உழைப்பினால் சாதிக்க வைக்கும் மாதம் இந்த வைகாசி மாதம் என்றும் பொருள் கொள்ளலாம்.

Rasi Palan for the tamil Month of Vaikasi

ரிஷபம் என்பது சுக்கிரனின் சொந்த வீடு ஆகும். வாழ்க்கைக்குத் தேவையான செல்வம், வசதி வாய்ப்பு, சந்தோஷம், சுகம் ஆகிய அனைத்தையும் தருபவர் சுக்கிரன். சுகபோகத்தைத் தரும் சுக்கிரனின் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் இது என்பதால் இந்த மாதத்தில் தங்கள் வீட்டு விசேஷங்களை நடத்துவதில் ஆர்வம் செலுத்தினர் நம் முன்னோர்கள்.

சித்திரை மற்றும் கத்திரிக்காக தள்ளிப்போடப்பட்ட நல்ல நிகழ்ச்சிகளை வைகாசி மாதத்தில் செய்பவர்களும் உண்டு. வசந்தத்தை அள்ளி வழங்கும் வைகாசி மாதத்தில்தான் கோயில்களில் வசந்த உற்சவங்கள் கொண்டாடப்படுகின்றன. முருகனின் அவதார தினமான வைகாசி விசாகம் உள்ளதால், முருகன் உறையும் ஆறுபடை வீடுகளும் மற்றுமுள்ள அத்தனை முருகத் தலங்களிலும் விசாகத் திருவிழா கோலாகலமாக நடைபெறும். பல்வேறு சிறப்புகள் கொண்ட வைகாசி மாத ராசி பலன்களை தெரிந்து கொள்வோம்.

கிரகங்களின் ராசி மாற்றம்

சூரியன் - ராசி மாற்றம் இல்லை
செவ்வாய் - 12ம் தேதி மிதுனம் ராசிக்கு மாறுகிறார்
புதன் - 20ம் தேதி ரிஷபம் ராசிக்கு மாறுகிறார்
குரு - ராசி மாற்றம் இல்லை
சுக்கிரன் - 17ம் தேதி மேஷம் ராசிக்கு மாறுகிறார்
சனி - ராசி மாற்றம் இல்லை
ராகு - ராசி மாற்றம் இல்லை
கேது - ராசி மாற்றம் இல்லை

மேஷம் :

சூரியன் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் சம்பள உயர்வு உண்டாகும் பூர்வீக சொத்திலிருந்து பண வரவு உண்டாகும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழில் மூலம் பண வரவு உண்டாகும் 12ம் தேதிக்குப் பிறகு சகோதரர்களால் நன்மை உண்டாகும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் புத்திக் கூர்மை அதிகரிக்கும் 20ம் தேதிக்குப் பிறகு பேச்சினாலேயே காரியம் சாதித்துக் கொள்வீர்கள். குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளால் மனக் கஷ்டம் உண்டாகும் கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும் 17ம் தேதிக்குப் பிறகு மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்திலிருந்து பண வரவு கிடைக்கும் நீண்ட தூர பயணம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும் உல்லாசப் பயணம் செல்வீர்கள். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார். தொழில் லாபம் அதிகரிக்கும் மன ஆசைகள் எல்லாம் நிறைவேறும்.

ரிஷபம் :

சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் தொழில் உத்தியோகம் சிறப்படையும் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் கோபம் அதிகரிக்கும் 12ம் தேதிக்குப் பிறகு வீடு மனை மூலம் பண வருமானம் கிடைக்கும். புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் கல்விக்காக செலவுகள் அதிகரிக்கும் 20ம் தேதிக்குப் பிறகு வியாபாரத்தில் விருத்தி உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்திலிருந்து பங்கு கிடைக்கும் பண வசதி அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் நினைப்பதெல்லாம் நிறைவேறும் 17ம் தேதிக்குப் பிறகு ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் கவனம் தேவை மனதில் குழப்பம் அதிகரிக்கும். ராகு நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு மற்றும் வாகனங்களை பராமரிப்பு செய்யும் நிலை உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகம் சிறப்படையும்.

மிதுனம் :

சூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அரசு ஊழியர்களுக்கு இட மாற்றம் உண்டாகும் செலவுகள் அதிகரிக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுக்காக செலவுகள் அதிகரிக்கும் 12ம் தேதிக்குப் பிறகு தலைமைப் பதவி கிடைக்கும். உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும் 20ம் தேதிக்கு பிறகு வியாபார லாபம் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக நிலம் வீடு வாங்குவீர்கள் வாகன யோகம் உண்டாகும். சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் நிலை சிறப்படையும் 17ம் தேதிக்குப் பிறகு எல்லா செயல்களிலும் வெற்றி கிடைக்கும். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபார வாடிக்கையாளர்களிடம் நல்லுறவு நீடிக்கும் நீண்ட தூரம் பிரயாணம் செய்ய வேண்டியிருக்கும். ராகு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் இடமாற்றம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும்.

கடகம் :

சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் சம்பளம் அதிகரிக்கும் பண வருமானம் கூடும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு உண்டாகும் 12ம் தேதிக்குப் பிறகு புதிதாக நிலம் வீடு வாங்குவீர்கள். புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும் 20ம் தேதிக்குப் பிறகு ஷேர் மார்க்கெட் முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் குழப்பம் அதிகரிக்கும் வீடு மாறும் நிலை உண்டாகும். சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும் 17ம் தேதிக்குப் பிறகு தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் தைரியம் அதிகரிக்கும் எதிரிகளை வெல்லும் திறன் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும் பிறருடன் சச்சரவைத் தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் மனதில் பாரம் உண்டாகும்..

சிம்மம் :

உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும் உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தீயணைப்பு துறையில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு உண்டாகும் 12ம் தேதிக்குப் பிறகு ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூர் பிரயணாம் செய்யும் நிலை உண்டாகும் 20ம் தேதிக்கு பிறகு தரகு கமிஷன் தொழிலில் லாபம் அதிகரிக்கும். குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் செல்வ சேமிப்பு அதிகரிக்கும் பேச்சில் இனிமை அதிகரிக்கும். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் தொல்லை உண்டாகும் 17ம் தேதிக்குப் பிறகு குல தெய்வத்தின் அருள் கிடைக்கும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் சாப்பாட்டில் எச்சரிக்கையாக இருக்கவும். கேது உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களுடன் நல்லுறவு உண்டாகும்.

கன்னி :

சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் குல தெய்வக் கோயிலுக்குச் சென்று வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு மனை வாங்கி விற்கும் தொழில் மேன்மை உண்டாகும் 12ம் தேதிக்குப் பிறகு இயந்திரத் தொழில் சிறப்படையும். உங்கள் ராசிநாதன் புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகளைத் தவிர்க்கவும் 20ம் தேதிக்குப் பிறகு தொழில் வியாபாரம் காரணமாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும் பொருளாதார நிலை சிறப்படையும். சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும் 17ம் தேதிக்குப் பிறகு பெண்களால் தொல்லை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு வாங்கும் யோகம் உண்டாகும் வாகனங்களை பராமரிப்பு செய்வீர்கள். ராகு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும்.

துலாம் :

சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகாரிகளால் தொல்லை உண்டாகும் அப்பாவுடன் சச்சரவைத் தவிர்க்கவும். செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை 12ம் தேதிக்குப் பிறகு பூர்வீக சொத்தில் பங்கு கிடைக்கும். புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் கமிஷன் தொழில் சிறப்பாக இருக்கும் ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் கவனம் தேவை. குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும் தான தர்மங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத் துணையுடன் சச்சரவு உண்டாகும்20ம் தேதி முதல் தொழில் வியாபாரம் சிறப்படையும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூர் பயணம் செல்லும் நிலை உண்டாகும் வீடு மாறும் நிலை உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் லாபம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும்.

விருச்சிகம் :

சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் அரசு ஊழியர்களுக்கு பணியிட மாற்றம் உண்டாகும் தொழில் சம்பந்தமாக நீண்ட தூரம் பயணம் செல்லும் நிலை உண்டாகும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழில் சிறப்படையும் 12ம் தேதிக்குப் பிறகு சகோதரர்களுடன் பிரச்சினை உண்டாகும். புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் சச்சரவைத் தவிர்க்கவும் 20ம் தேதிக்குப் பிறகு வியாபாரம் விருத்தியாகும். குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும் சுய தொழில் சிறப்படையும். சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுது போக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும் 17ம் தேதிக்குப் பிறகு மனைவியுடன் பிரச்சினை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும் வீண் பேச்சை தவிர்க்கவும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் சிறப்படையும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புது வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.

தனுசு :

சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் பிரச்சினை உண்டாகும் அப்பாவுக்கு மருத்துவமனை செலவு செய்ய வேண்டியிருக்கும். செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழில் மங்கலாக இருக்கும் 12ம் தேதிக்குப் பிறகு நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில் சிறப்படையும். புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் சிறப்படையும் 20ம் தேதிக்குப் பிறகு தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா காரியங்களும் சிறப்படையும் சொந்தத் தொழில் சிறப்படையும். சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள் 17ம் தேதிக்குப் பிறகு வீட்டுக்கு விருந்தினர்கள் வருவார்கள். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் சோம்பேறித்தனம் அதிகரிக்கும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அயல் நாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வீடு மாறும் நிலை உண்டாகும்.

மகரம் :

சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் வாங்குவீர்கள் சிவன் கோயில் வழிபாட்டிற்கு செல்வீர்கள். செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்தில் பங்கு கிடைக்கும் 12ம் தேதிக்குப் பிறகு சகோதரர்களுடன் சச்சரவைத் தவிர்க்கவும். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் கல்வி நிலை சிறப்படையும் 20ம் தேதிக்குப் பிறகு ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைத் தரும். குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் திருக்கோயில் தான தர்மங்களில் ஈடுபாடு அதிகரிக்கும் செல்வ நிலை சிறப்படையும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வீடு மாறும் நிலை உண்டாகும் 17ம் தேதிக்குப் பிறகு வாகனம் வாங்குவீர்கள். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும் உடல் சோர்வு அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வாகனப் போக்குவரத்தில் விபத்துக்கள் உண்டாகும் வாய்ப்புக்கள் உண்டு. கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற வீண் பேச்சுகளைத் தவிர்க்கவும்.

கும்பம் :

சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஒதுக்கீட்டில் வீடு நிலம் கிடைக்கும் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுடன் நல்லுறவு உண்டாகும் 12ம் தேதிக்குப் பிறகு பரம்பரை சொத்தில் பங்கு கிடைக்கும். புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் சுப மங்கலத் தகவல் கிடைக்கும் 20ம் தேதிக்குப் பிறகு படிப்பில் கவனம் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் திடீரென்று எதிர்பாராமல் பணம் கிடைக்கும். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் இனிமை அதிகரிக்கும் 17ம் தேதிக்குப் பிறகு வீடு மாறும் நிலை உண்டாகும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நினைப்பதெல்லாம் நிறைவேறும் தொழில் லாபம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு நீடிக்கும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும்.

மீனம் :

சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் காரணமாக அடிக்கடி வெளியூர் செல்வீர்கள் தகவல் தொடர்பு சிறப்படையும். செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் இடமாற்றம் உண்டாகும் 12ம் தேதிக்குப் பிறகு வாகன யோகம் உண்டாகும். புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சிலேயே காரியம் சாதித்துக் கொள்வீர்கள் 20ம் தேதிக்குப் பிறகு நீங்கள் எதிர் பார்க்கும் நல்ல தகவல் கிடைக்கும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும் உறவினர்களுடன் நல்லுறவு சிறப்படையும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் 17ம் தேதிக்குப் பிறகு பொன்னகைகளின் சேர்க்கை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் காரியங்களெல்லாம் வெற்றியடையும் தொழிலில் மேன்மை நிலை உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் தைரியம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் பயணம் லாபத்தைத் தரும்.

English summary
Rasi Palan for the tamil Month of Vaikasi from 15 -05-2017 to 14-06-2017.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X