For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மனமகிழ்ச்சி நிறைந்த மாசி மாதம் - 12 ராசிக்கும் பலன்கள்

Google Oneindia Tamil News

சென்னை: சூரியன் கும்பராசியில் ஒருமாதம் இருப்பார். தமிழ் மாதங்களில் இது 11வது மாதமாகும். இது கும்பமாதம் என்றும் போற்றப்படுகிறது. இந்த மாதத்தின் துவக்கத்தில் சூரியன் புதனுடன் இணைந்து கும்ப ராசியில் சஞ்சரிக்கின்றனர். கடகத்தில் உள்ள ராகு மிதுனம் ராசிக்கும் மகரத்தில் உள்ள கேது தனுசு ராசிக்கும் மாறுகிறார். இந்த மாதம் புதன் பெயர்ச்சி, சுக்கிரன் பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி நிகழ உள்ளது. கிரகங்களின் கூட்டணி, சஞ்சாரத்தினால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

மாசி மாதத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து புண்ணியத் தீர்த்தங்களிலும், சமுத்திரக் கரையிலும், புனித நதிகளிலும் அமிர்தம் நிறைந்திருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இதன் காரணமாகவே இந்த மாதத்தில் நீர்நிலைகளில் புனித நீராடுவதை இந்துக்கள் பழக்கமாகக் கொண்டுள்ளனர்.

வட இந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். கும்ப மாதத்தில் நடைபெறும் விழா என்பதால் இது கும்பமேளா. பொதுவாக அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்வது வழக்கம். ஆனால், கிரஹண காலம் தவிர்த்து, பௌர்ணமி நாளில் தர்ப்பணம் செய்வது என்பது மாசி மாதத்தில் மட்டுமே. சிவத்தோடு சக்தி இணைந்து முழுமை பெறுவதால் தன் கணவனின் நலனுக்காக பெண்கள் இந்த மாசி மாதத்தில் தாலிக் கயிற்றினை புதிதாக மாற்றிக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

மாசி மாத அமாவாசை நாளில் மயானக் கொல்லை என்ற திருவிழா நடைபெறுகிறது. அங்காள பரமேஸ்வரி அம்மன், மயானத்திற்குச் சென்று சூறையாடுவதாக ஐதீகம். கதி இல்லாமல் மயானத்தில் பேயாய் அலைவோருக்கு அம்பாள் மோட்சகதி தரும் வகையில் இந்த மயானக்கொல்லை விழா கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. மகத்துவம் நிறைந்த மாசி மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

கிரகங்களின் சஞ்சாரம்

சூரியன் - கும்பராசி

செவ்வாய் - மேஷம் ராசி

புதன் - 13ம் தேதி புதன் மீனம் ராசிக்கும் மாறுகிறார்

குரு - விருச்சிகம் ராசி

சுக்கிரன் - 12ம் தேதி மகரம் ராசிக்கு மாறுகிறார்

சனி - தனுசு ராசி

ராகு - கடக ராசி 22ஆம் தேதிக்கு மேல் மிதுன ராசி

கேது - மகர ராசி 22ஆம் தேதிக்கு மேல் தனுசு ராசி

மேஷம்

மேஷம்

சூரியன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் சஞ்சரிப்பதால் மாத வருமானம் அதிகரிக்கும், உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசாங்க வழியில் நன்மைகள் நடைபெறும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் ராசியில் அமர்ந்திருக்கிறார் உடலிலும் பேச்சிலும் உஷ்ணம் அதிகரிக்கும். புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் படிப்புக்காக செலவுகள் அதிகரிக்கும் அதிகரிக்கும் 13ம் தேதிக்குப் பின்னர் விரைய ஸ்தானத்திற்கு மாறுவதால் புத்திக் கூர்மை அதிகரிக்கும். குருபகவான் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருப்பதால் பணம் விசயத்தில் கவனமாக இருப்பது நல்லது. அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்லவும். புதிய சொத்துக்களில் சேர்க்கை ஏற்படும். உங்களின் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். பாக்ய ஸ்தானத்தில் சனி உடன் இருந்த சுக்கிரன் 10ஆம் வீட்டிற்கு மாறுகிறார். நான்காம் வீட்டில் இருந்த ராகு மூன்றாம் வீட்டிற்கு மாறுவதால் அம்மாவின் உடல் நலன் குணமடையும்.தொழில் ஸ்தானத்தில் இருக்கும் கேது பாக்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார். வேலை தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். பெண்களுக்கு உற்சாகமான மாதமிது. அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். உடல் நலம் உற்சாகமாக இருக்கும். வீட்டில் உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். மாணவர்களுக்கு இது மகிழ்ச்சிகரமான மாதம் நன்றாக படித்து நன்றாக தேர்வு எழுதுவீர்கள். இந்த மாதம் ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபடலாம். விநாயகருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடலாம்.

ரிஷபம்:

ரிஷபம்:

உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கிறார். செய்யும் செயல்கள் சிறப்படையும். படித்துவிட்டு வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலைகள் கிடைக்கும். சிலருக்கு அரசு வேலையும் கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். வீடு நிலம் போன்றவற்றில் முதலீடுகள் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வீட்டில் உங்களின் பேச்சிற்கு மதிப்பு கிடைக்கும். கணவன் மனைவி இடையே அந்நியோன்னியம் அதிகரிக்கும். சகோதரர்கள் உதவி செய்வார்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் நன்மைகள் ஏற்படும். தாய்மாமனால் சில அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம். மேலதிகாரிகள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வார்கள். சிலருக்கு எதிர்பார்த்த இடமாறுதல் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். சக வியாபாரிகளுடன் இணக்கமாகப் பழகுவது நல்லது. குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும், வெளியூரில் இருந்து நல்ல தகவல் கிடைக்கும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மனதில் பாரம் உண்டாகும், உடலில் அசதி அதிகரிக்கும். எட்டாம் வீட்டில் சனியோடு இருக்கும் சுக்கிரன் ஒன்பதாம் வீட்டிற்கு மாறுவதால் வெளியூர் அல்லது வெளிநாடு பயணம் நன்மையை தரும். ராகு மூன்றாமிடத்தில் சஞ்சரிப்பதால் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சச்சரவு உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வ கோயிலுக்கு செல்வீர்கள். ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபட பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்

மிதுனம்

சூரியன் ஒன்பதாமிடத்தில் சஞ்சரிப்பதால் உயர் அதிகாரிகளினால் நன்மை உண்டாகும், உத்தியோகம் நிமித்தமாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வீட்டு வாடகை மூலம் வருமானம் அதிகரிக்கும் செய்யும் தொழிலில் வருமானம் கூடும். உங்கள் ராசிநாதன் புதன் ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் சொந்தமாக செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பெண்களால் நன்மை உண்டாகும். 13ஆம் தேதிக்கு மேல் தரகு கமிஷன் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். குடும்பத் தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். பெண்களால் நன்மை உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். பூர்விகச் சொத்துப் பிரச்னையில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு தடைப்பட்ட திருமணம் கூடி வரும். குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளால் தொல்லை உண்டாகும், கடன் வாங்குவதை தவிர்க்கவும். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபார வாடிக்கையாளர்களினால் நன்மை உண்டாகும், நண்பர்களுடன் நல்லுறவு அதிகரிக்கும். சுக்கிரன் சனியோடு இணைந்து ஏழாம் வீட்டில் இருக்கிறார் மனைவியினால் நன்மை உண்டாகும் 13ஆம் தேதிக்குப் பின்னர் விலை உயர்ந்த நகைகளை பத்திரமாக வைத்துக்கொள்ளவும். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். 22ஆம் தேதிக்கு மேல் மனதில் குழப்பம் ஏற்படும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திருக்கோயில்களுக்கு பிரயாணம் செல்வீர்கள். 22ஆம் தேதிக்கு மேல் தகவல் தொடர்பு சிறப்படையும்.

கடகம்

கடகம்

சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் அதிகாரிகளினால் தொல்லை உண்டாகும், அப்பாவினால் மனக் கஷ்டம் உண்டாகும்.

செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் விருத்தியடையும் புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் 13ஆம் தேதிக்கு மேல் உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் வங்கியில் சேமிப்பு அதிகரிக்கும், சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை, 13ஆம் தேதிக்குப் பின்னர் கணவன் மனைவி இடையே பாசம் அதிகரிக்கும். மனைவியால் நன்மை உண்டாகும்.

சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் கவனம் தேவை, தொழில் கூட்டாளிகளுடன் தகராறு ஏற்படும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். முன்னேற்றத்துக்கான வழிவகைகள் பிறக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் சிலருக்கு புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகளைக் கேட்பீர்கள். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும். 22ஆம் தேதிக்கு வங்கிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார் தகவல் தொடர்பு சிறப்படையும். 22ஆம் தேதிக்கு மேல் கோயில்களுக்கு பிரயாணம் செல்வீர்கள்.

சிம்மம்

சிம்மம்

உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழிலின் காரணமாக அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை உண்டாகும், அப்பாவினால் நன்மை உண்டாகும். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பிதுரார்ஜித சொத்துக்கள் கிடைக்கும் புதன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் இருக்கிறார். புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் நஷ்டத்தைக் கொடுக்கும் 13ஆம் தேதி முதல் உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அம்மாவினால் நன்மை உண்டாகும் புதிய சொத்துகளை வாங்குவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். பணிகளில் அவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் சனியோடு சேர்ந்திருக்கிறார் உறவினர் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள் 12ஆம் தேதிக்குப் பின்னர் மனைவியுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்துடன் உல்லாசப் பிரயாணம் செல்வீர்கள், பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் அலைச்சல் அதிகரிக்கும். 22ஆம் தேதிக்கு மேல் காரியங்களில் வெற்றி கிடைக்கும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மருத்துவமனை செலவுகள் அதிகரிக்கும். 22ஆம் தேதிக்கு மேல் நுண்கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். சிலருக்கு வெளியூர், வெளி மாநிலப் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களின் அறிவுரையின்படி நடந்துகொண்டு, அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

கன்னி

கன்னி

சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் அப்பாவுடன் சச்சரவைத் தவிர்க்கவும், உத்தியோகத்தில் கவனம் தேவை. செவ்வாய் எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார் வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமாக மெதுவாக செல்லவும். மின் சாதனங்களை கையாளும் பொழுது கவனம் தேவை. உங்கள் ராசிநாதன் புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும் 13ஆம் தேதிக்குப் பின்னர் வியாபாரத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். குரு மூன்றாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாள் கனவு நனவாகும், நண்பர்களால் நன்மை உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் இருக்கிறார் வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள் புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும். ஆனாலும், உறவினர்களால் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கூடுமானவரை அளவோடு பேசவும். 13ம் தேதிக்குப் பின்னர் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். சிறு உல்லாச பயணம் செல்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் விவசாயம் விருத்தியடையும், பழைய வீட்டை வாங்குவீர்கள். ராகு பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார் எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும். 22ஆம் தேதிக்கு மேல் செயல்கள் சிறப்படையும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் நுண்கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். 22ஆம் தேதிக்கு மேல் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். சிலருக்கு தெய்வ பக்தியும் ஆன்மிகத்தில் நாட்டமும் அதிகரிக்கும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பும் ஏற்படும்.

துலாம்

துலாம்

சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும், மாணவர்களுக்கு தேர்வுகளில் அதிக மதிப்பெண் கிடைக்கும். செவ்வாய் ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சரிப்பதால் வீடு மனை வாங்கி விற்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

முயற்சிகள் சாதகமாக முடியும். எதிரிகளின் தொல்லை இல்லாமல் போகும். அவர்களால் மறைமுக ஆதாயமும் கிடைக்கக்கூடும். புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும் 13ம் தேதிக்குப் பின்னர் வியாபாரம் விருத்தியாகும். குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் செல்வச் செழிப்பு அதிகரிக்கும், பேச்சில் இனிமை கூடும் உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்த படியே இருக்கும். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த லைசென்ஸ் போன்ற விஷயங்கள் எளிதாக முடியும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனைவியுடன் வெளியூர் செல்வீர்கள் 12ஆம் தேதிக்குப் பின்னர் புதிய வாகனம் வாங்குவீர்கள். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும், தொழில் சம்பந்தமான வெளியூர் பயணம் நன்மையைத் தரும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் சிறப்படையும். 22ஆம் தேதிக்கு மேல் தந்தை வழி உறவினர்களுடன் சச்சரவு உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனதில் குழப்பம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஒதுக்கீட்டில் வீடு மனை கிடைக்கும், புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் ராசிக்கு ஆறாம் வீட்டில் மறைந்திருக்கிறார் சகோதரர்களுக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் மேன்மை நிலை உண்டாகும் 13ம் தேதிக்குப் பின்னர் வியாபாரத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும், உடல் ஆரோக்கியம் சிறப்படையும். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். 12ஆம் தேதிக்குப் பின்னர் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சனி இரண்டாமிடத்தில் இருக்கிறார் யாரிடமும் பிரச்சினையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம், வீண் விதண்டவாதத்தை தவிர்க்கவும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தந்தை வர்க்கத்தாருடன் சச்சரவு உண்டாகும். 22ஆம் தேதிக்கு மேல் அலைச்சல் அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் குழப்பம் அதிகரிக்கும். 22ஆம் தேதிக்கு மேல் வங்கி சேமிப்பு உயரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். சிலருக்கு வெளி மாநிலங்களில் உள்ள புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.

தனுசு

தனுசு

சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அலுவலகத்திலிருந்து நல்ல செய்தி கிடைக்கும், அரசாங்க ஊழியர்களுக்கு இடமாற்றம் உண்டாகும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார் பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்பதினருடன் சிறு உல்லாசப்பயணம் செல்வீர்கள் புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும் 13ம் தேதிக்குப் பின்னர் நுண் கலைகளில் ஆர்வம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் செலவுகள் உண்டாகும், குழந்தைகளுக்கு நோயின் தாக்கம் ஏற்படும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். அரசாங்க விவகாரங்கள் சாதகமாக முடியும். 12ம் தேதிக்குப் பின்னர் பொன்நகைகளின் சேர்க்கை அதிகரிக்கும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும் உடலில் அசதி அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும். 22ஆம் தேதிக்கு மேல் வியாபாரம் சிறப்படையும் கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு உயரும். 22ஆம் தேதிக்கு மேல் ஆன்மீக பயணம் அதிகரிக்கும்.

மகரம்

மகரம்

சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் சம்பளம் அதிகரிக்கும், பேச்சில் அதிகாரத் தொனி உண்டாகும். செவ்வாய் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சரிக்கிறார். வீடு மனை வாங்கும் யோகம் வரும், வண்டி வாகனம் வாங்குவீர்கள். புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் தகவல் தொடர்பு சிறப்படையும் 13ஆம் தேதிக்குப் பின்னர் புதிய வீடு கட்டும் யோகம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும், எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும். அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். உங்கள் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும் ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு 12வது வீட்டில் விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார் ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும் 12ம் தேதிக்குப் பின்னர் பெண்களால் நன்மை உண்டாகும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழிலுக்காக முதலீடுகள் அதிகரிக்கும், தொழில் முறை வெளியூர் பயணம் வெற்றியடையும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் சிறப்படையும். 22ஆம் தேதிக்கு மேல் மனதில் தைரியம் அதிகரிக்கும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும். 22ஆம் தேதிக்கு மேல் திருக்கோயில் திருப்பணிகளுக்காக செலவுகள் அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் உங்களின் கௌரவம் ஒரு படி உயரும்.

கும்பம்

கும்பம்

சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும், அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருக்கிறார் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் வாக்கு வன்மை அதிகரிக்கும் 13ஆம் தேதிக்குப் பிறகு நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தகவல் வந்து சேரும் பேச்சில் இனிமை கூடும். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் செய்யும் செயல்கள் யாவும் சிறப்படையும், முயற்சிகள் எல்லாம் வெற்றியடையும். தொழில், வியாபாரத்தில் உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு 11ஆம் வீட்டில் லாப ஸ்தானத்தில் இருப்பதால் பெண்களினால் நன்மை உண்டாகும் 12ஆம் தேதிக்குப் பின்னர் ஆடம்பரப் பொருட்கள் வாங்கும் நிலை ஏற்படும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் உள்ள ஆசைகள் நிறைவேறும், நினைத்தவை எல்லாம் நடக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் தைரியம் அதிகரிக்கும். 22ஆம் தேதிக்கு மேல் சிறு உல்லாச பயணம் செல்வீர்கள். கேது உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் திருக்கோயில் திருப்பணிகளுக்காக செலவுகள் அதிகரிக்கும். 22ஆம் தேதிக்கு மேல் பணவருமானம் அதிகரிக்கும்.

மீனம்

மீனம்

சூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்திவிடுவது நல்லது, அப்பாவுக்காக செலவுகள் அதிகரிக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் இருக்கிறார் பேச்சில் சூட்டை குறைக்கவும் கோபத்தை கட்டுப்படுத்தவும். புதன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் சமயோசிதமாக செயல்பட்டு வெற்றியடைவீர்கள் 13ம் தேதிக்குப் பின்னர் அடிக்கடி வெளியூர் பிரயாணம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும், குல தெய்வ அருள் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வதன் மூலம் பாதிப்புகளைத் தவிர்க்கலாம்.சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் இருக்கிறார். மனைவியினால் நன்மை உண்டாகும் 12ஆம் தேதிக்குப் பின்னர் செய் தொழிலில் சிறப்பு உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும், காரியங்கள் எல்லாம் சிறப்படையும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள். 22ஆம் தேதிக்கு மேல் வீடு, வாகனத்தை பழுது பார்ப்பீர்கள். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பண வருமானம் அதிகரிக்கும். 22ஆம் தேதிக்கு மேல் செய்யும் செயல்கள் யாவும் சிறப்படையும்.

English summary
Rasi Palangal for the Tamil Month of Masi from 13-02-2019 to 14-03-2019.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X