For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பங்குனி மாதம் ராசி பலன்கள் 2019: மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு எப்படி?

Google Oneindia Tamil News

சென்னை: நவகிரகங்களின் தலைவனான சூரியன், ஆசிரியராகிய குருவின் வீட்டில் அதாவது, மீனத்தில் சஞ்சரிக்கும் மாதம் இது. அரசன் முதல் ஆண்டி வரை நாம் அனைவரும் செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்ளும் மாதமாக குரு பகவானின் ஆதிக்கம் நிறைந்த இந்த பங்குனி மாதம் விளங்குகிறது. நவ கிரகங்களின் பழைய கூட்டணி பிரிந்து புதிய கூட்டணி உருவாகிறது. செவ்வாய் பெயர்ச்சி, சுக்கிர பெயர்ச்சி நிகழ்கிறது. குருபகவான் அதிசாரமாக செல்கிறார்.

பங்குனி மாதத்தில் தெய்வீக திருமணங்கள் அதிகம் நிகழும். இந்த மாதத்தில் கோவில்களில் நடைபெறும் திருக்கல்யாணங்களைக் கண்டால் திருமணத்தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. பார்வதி - பரமேஸ்வரன், மீனாட்சி - சுந்தரேஸ்வரர், ஆண்டாள் - ரங்கமன்னார், தெய்வானை - முருகன் என திருக்கல்யாணங்கள் அனைத்தும் பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளில் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

மகாலட்சுமி பங்குனி உத்திர விரதத்தை அனுசரித்துதான் ஸ்ரீமகா விஷ்ணுவின் மார்பில் இடம் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. மகாலட்சுமியின் அவதாரம் நிகழ்ந்த நாளும் பங்குனி உத்திர நாள்தான். அன்னை காமாக்ஷி ஊசி முனையில் தவம் இருந்து ஏகாம்பரேஸ்வரரோடு ஐக்கியமானதும் இந்தப் பங்குனி மாதத்தில்தான். ஞானகுருவாகிய ஐயப்பன் அவதரித்தது இந்த பங்குனி மாதத்தில்தான். காரைக்கால் அம்மையார் முக்தியடைந்த தினமும் பங்குனி உத்திரம்தான்.

பங்குனி மாதம் பணபலத்தையும் மனோபலத்தையும் தரும் மாதமாக அமையட்டும். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் இந்த மாதம் எப்படி என்று பார்க்கலாம்.

கிரகங்களின் சஞ்சாரம், இடப்பெயர்ச்சி

சூரியன் - மீனம் ராசி

செவ்வாய் - பங்குனி 8ல் ரிஷபம் ராசிக்கு மாறுகிறார்

புதன் - பங்குனி 14 வக்ரம் முடிவு

குரு - பங்குனி 15ல் தனுசு ராசிக்கு அதிசாரமாக செல்கிறார்

சுக்கிரன் - 7ஆம் தேதி கும்பம் ராசிக்கு மாறுகிறார்

சனி - தனுசு ராசி

ராகு - மிதுனம் ராசி

கேது - தனுசு ராசி

<strong> காக்கைக்கும் ஆட்சி மாற்றத்துக்கும் தொடர்பு உண்டு - காக்கா முட்டைகளை எதிர்கட்சிகள் கவனிக்கவும் </strong> காக்கைக்கும் ஆட்சி மாற்றத்துக்கும் தொடர்பு உண்டு - காக்கா முட்டைகளை எதிர்கட்சிகள் கவனிக்கவும்

மேஷம்

மேஷம்

அரச கிரகமான சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் பெரியவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வாங்கி கொடுப்பீர்கள், அப்பாவுக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். ஜென்ம ராசியில் உள்ள செவ்வாயினால் முன்கோபம் அதிகரிக்கும். 7ஆம் தேதிக்கு மேல் இரண்டாமிடத்திற்கு செல்வதால் வீண் பேச்சினை தவிர்க்கவும். பேச்சில் கவனம் தேவை. புதன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுக்காக செலவுகள் அதிகரிக்கும், ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.

கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். புதிய சொத்துக்களை பற்றி பேசுவதும் எதிலுமே வெற்றி கிடைப்பது அஷ்டலட்சுமி கடாட்சமும் திருமணத்தைப் பற்றிப் பேசுவதும் குடும்ப வாழ்க்கையில் குழந்தை பாக்கியம் ஏற்படும். குரு உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் எதிர்பாராத வகையில் பண வரவு உண்டாகும், 15ஆம் தேதிக்கு மேல் செலவுக்கு போக பணம் அதிகமாக மிச்சமாகும், சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும் 7ஆம் தேதிக்குப் பின்னர் லாபம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பா செய்து கொண்டிருக்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும், தொழிலுக்காக வெளிநாடு செல்லும் அதிர்ஷ்டம் உண்டாகும். ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

அரச கிரகமான சூரியன் ராசிக்கு சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் இந்த மாதம் தனியார் மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அதிகரிக்கும், வீட்டு வாடகை மூலம் பண வரவு உண்டாகும். செவ்வாய் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் பழைய வீட்டை விற்றுவிட்டு புது வீட்டை வாங்குவீர்கள் அல்லது பழைய வீட்டை புதுப்பீர்கள். 8ஆம் தேதிக்குப் பின்னர் பேச்சில் கோபத்தை குறைத்துக்கொள்ளவும். புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும், குடும்ப வருமானம் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் இருக்கிறார். கணவன் மனைவி இடையே காதல் உணர்வு அதிகரிக்கும். சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும், 7ஆம் தேதிக்குப் பின்னர் செயல்கள் சிறப்படையும்.சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் சிரத்தை தேவை, செய் தொழிலில் விரக்தி உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கியில் சேமிப்பு அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராத வகையில் பண வரவு அதிகரிக்கும். அஷ்டமத்து சனி நடப்பதால் சுப விரைய செலவுகள் தேடி வரும். தொழில் தொடங்க வேண்டாம். வண்டி வாகனத்தில் கவனமாக செல்ல வேண்டும் வீடு பூமி யோகம் உண்டாகும் இரண்டில் உள்ள ராகுவை அதிசாரத்தில் செல்லும் குருவும் சனீஸ்வரன் பார்ப்பதால் வாக்கில் கவனம் தேவை. கோபத்தை தவிர்க்க வேண்டும். மன்னிக்கும் குணம் வேண்டும் சிவ வழிபாடும் சனீஸ்வர வழிபாடு செய்ய வேண்டும்.

மிதுனம்

மிதுனம்

அரச கிரகமான சூரியன் தொழில் ஸ்தானம்ன பத்தாமிடத்தில் இருக்கிறார் இந்த மாதம் எக்கச்சமான பலன்களைத் தரும். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். செல்வம், செல்வாக்கு புகழ் கூடும். செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் லாபம் அதிகரிக்கும், வங்கி சேமிப்பு உயரும். புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வாக்கு வன்மை அதிகரிக்கும், பேச்சில் நகைச்சுவை உணர்வு அதிகரிக்கும். 8ஆம் தேதிக்குப் பின்னர் வீடு நிலம் வகையில் லாபம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் புதன் பத்தாமிடத்தில் செயல்கள் எல்லாம் வெற்றி பெறும், சொந்தமாக செய்யும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குரு உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் இருந்து அதிசாரமாக ஏழாம் வீட்டிற்கு சென்று சில காலம் தங்கியிருப்பார் தம்பதியரிடையே நெருக்கம் கூடும். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ளவும் 7ஆம் தேதி முதல் மனைவியினால் நன்மை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும், வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீட்டில் லட்சுமி கடாட்சம் யோகமும் மாணவர்கள் கல்வியில் விமானத்துறை மெக்கானிக்கல் ரயில்வே துறையிலும் அரசாங்க பதவி உயர்வும் கூட்டுறவுத்துறையில் சிறந்த வருவார்கள். ராசியை குரு பார்ப்பதால் ஒரு மாத காலம் மட்டும் சுபிட்சம் கிடைக்கும் திருமணம் புத்திர பாக்கியமும் பதவி உயர்வு தருவார்கள் ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார் நண்பர்களின் உதவி கிடைக்கும்.

கடகம்

கடகம்

சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முதலீடுகள் அதிகரிக்கும், தொழில் சம்பந்தமாக வெளிநாடு செல்லும் நிலை உண்டாகும். செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் சிறப்படையும், வேலையில் சுறுசுறுப்பு உண்டாகும். புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாட்டு தொழில் தொடர்புகள் நல்ல லாபத்தைக் கொடுக்கும், உயர் கல்வியில் மேன்மை நிலை உண்டாகும். எட்டாம் ஒன்பதாம் அதிபதி சனீஸ்வரனும் ஆறாம் ஒன்பதாம் அதிபதி குரு பகவானும் சேர்க்கை பெற்று ஏழாம் பார்வையாக ராசியை பார்ப்பதால் மாணவர்கள் கல்வியில் மேன்மை அடைவார்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். வாகனத்தில் கவனமாக செல்ல வேண்டும் மனைவி சொல்வதை கணவர் கேட்க வேண்டும். வேலை வாய்ப்பில் பதவி உயர்வு கிடைக்கும். சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் நன்மை உண்டாகும் 7ஆம் தேதிக்குப் பின்னர் பொன் நகைகளை யாருக்கும் இரவல் கொடுக்க வேண்டாம். வருமானம் வருவதை யாரிடமும் சொல்லக்கூடாது. அப்படி சொன்னால் வருவதை தாமதப்படுத்தும் யாருக்கும் பணம் கடன் கொடுக்கக் கூடாது. ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது. சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடலில் வலி உண்டாகும், சோம்பல் உண்டாகும். ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மருத்துவ செலவுகள் ஏற்படும். தானம் தர்மம் செய்யவும் ஏழைக் குழந்தைகளுக்கு உணவு உடை வாங்கித் தரவும்

சிம்மம்

சிம்மம்

உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் அப்பாவினால் தொல்லை உண்டாகும், அலுவலகத்தில் வேலையில் மனம் ஈடுபாடு இருக்காது. எதிலும் வெற்றி கிடைக்கும். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பிதுரார்ஜித சொத்திலிருந்து பங்கு கிடைக்கும், தொழில் நுட்ப கல்வியில் மேன்மை நிலை உருவாகும். புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும், குரு நான்காம் இடத்தில் இருக்கிறார் அதிசாரமாக ஐந்தாம் வீட்டிற்கு செல்வதால் அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை உண்டாகும், வீடு மாறும் சூழ்நிலை உண்டாகும். மாணவர்களுக்கு இந்த மாதம் படிப்பில் கவனம் தேவை. கல்வியில் சிறப்பு நிலை உண்டாகும். வேலைவாய்ப்பில் பதவி உயர்வு தருவதும் திருமண பற்றி பேசுவதும் கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்லவும் முன்கோபத்தைத் தவிர்க்கவும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் மனைவியுடன் சச்சரவு உண்டாகும் 7ஆம் தேதிக்குப் பின்னர் பெண்களால் நன்மை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். உறவினர் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள். ராகு பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார் எண்ணங்கள் எல்லாம் நிறைவேறும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள்.

கன்னி

கன்னி

அரசு கிரகமான சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் அரசு வேலைக்காக வெளியூர் செல்லும் நிலை உண்டாகும், அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத் தொழில் சிறப்படையும். செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களின் செயல்கள் மனகஷ்டத்தை கொடுக்கும், வாகன போக்குவரத்தில் மிகவும் கவனமாக இருக்கவும். புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும், தாய் மாமனின் உதவி கிடைக்கும். சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களின் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள் 7ஆம் தேதிக்குப் பின்னர் பெண் எதிரிகளால் தொல்லை உண்டாகும். குடும்பத்தில் லட்சுமி கடாட்ச யோகம் உண்டாகும். வண்டி வாகனம் வாங்கும் போதும் தாயார் மனைவி பெயருக்கு வாங்க வேண்டும். எட்டாம் அதிபதி ஒன்பதாம் இடத்தில் இருப்பதால் முயற்சியில் வெற்றி கிடைக்கும். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகனங்களை ரிப்பேர் செய்து கொள்ளவேண்டும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும்.

துலாம்

துலாம்

அரசு கிரகமான சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் சிறு உல்லாசப் பயணம் செல்வீர்கள். கண் நோய்களை கவனமாக கையாளுங்கள். செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் மேன்மை நிலை உண்டாகும், புதிதாக வீடு நிலம் வாங்குவீர்கள். புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் கவனம் தேவை, வியாபார வாடிக்கையாளர்களிடம் கடுமையாக நடந்துக் கொள்ளக் கூடாது. வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். மாணவர்கள் கல்வித்தரம் உயரும். படித்து வேலை செய்யும் இளம் வயதினருக்கு திருமண யோகமும் குழந்தைகளுக்காக ஏங்கி தவித்தவர்களுக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள் 7ஆம் தேதிக்குப் பின்னர் உல்லாசப் பயணம் செல்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வீடு மாறும் சூழ்நிலை உண்டாகும், மனதில் சஞ்சலம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவுக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் புத்தியில் கலக்கம் உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிகம்

சூரியன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் தேர்வில் மதிப்பெண் அதிகரிக்கும், நுண்கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும்.செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளுடன் சச்சரவு உண்டாகும், கூர்மையான பொருட்களால் காயம் ஏற்படும். புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஊக வணிகம் சிறப்படையும், புத்திக் கூர்மை அதிகரிக்கும். மாணவர்கள் உயர்கல்விகாக எழுதும் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். அரசாங்க துறையிலும் வேலை வாய்ப்பில் பதவி உயர்வும் சிறப்பாக இருக்கும். திருமண யோகம் பூமி யோகம் கூடி வரும்.

சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனைவிக்கு வேண்டியதை வாங்கி கொடுப்பீர்கள் 7ஆம் தேதிக்குப் பின்னர் வாகன யோகம் உண்டாகும். சனி இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும், கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்படும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் யாரிடமும் விதண்டா வாதம் செய்யாதீர்கள். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும்.

தனுசு

தனுசு

சூரியன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஒதுக்கீட்டில் வீடு நிலம் கிடைக்கும். அப்பாவினால் நன்மை உண்டாகும்.

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வேலைவாய்ப்பில் பதவி உயர்வு தேடி வரும் திருமணப்பேச்சுவார்த்தையில் வெற்றி கிடைக்கும். செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளால் சந்தோஷம் உண்டாகும். 8ஆம் தேதிக்கு மேல் சிறு உல்லாசப் பயணம் செல்வீர்கள். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும், தாய் மாமனின் உதவி கிடைக்கும். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் புதிதாக பொன்னகைகளை வாங்குவீர்கள் 7ஆம் தேதிக்குப் பின்னர் இடம் மாறும் சூழல் உருவாகும்.

சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும், உடலில் அசதி உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் அக்கம்பக்கத்தினரால் நன்மை உண்டாகும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடலில் அசதி அதிகரிக்கும்.

மகரம்

மகரம்

சூரியன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை ஏற்படும், அலுவலகத்திலிருந்து நல்ல தகவல் வரும். செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வண்டி வாகனம் வாங்குவீர்கள், தொழிற்சாலைக்காக இயந்திரங்கள் வாங்குவீர்கள். 8ஆம் தேதிக்கு மேல் புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் தகவல் தொடர்பு சிறப்படையும், வியாபார வாடிக்கையாளர்களுடன் நல்லுறவு நீடிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் திருமண யோகம் கூடி வரும். வீட்டில் லட்சுமி கடாட்ச யோகம் வந்து விட்டது. எதிலும் தைரியமாக செயல்படுவீர்கள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் அழகு அதிகரிக்கும் 7ஆம் தேதிக்குப் பின்னர் பொன் நகைகளை வாங்குவீர்கள். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழிலுக்காக முதலீடுகள் அதிகரிக்கும், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் தைரியம் அதிகரிக்கும். கேது உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி முதலீடுகள் அதிகரிக்கும்.

கும்பம்

கும்பம்

அரசு கிரகமான சூரியன் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க அதிகாரிகளால் நன்மை உண்டாகும், அரசாங்கத்திடமிருந்து வர வேண்டிய பணம் கைக்கு கிடைத்து விடும். செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களால் நன்மை உண்டாகும், அடிக்கடி வெளியூர் செல்வீர்கள். 8ஆம் தேதிக்கு மேல் புதிதாக வண்டி வாகனம் வாங்குவீர்கள். நிலம் வீடு வாங்கலாம் லாபம் கிடைக்கும். புதிய சொத்துக்களை வாங்கும் போது தாய் மனைவி பெயருக்கு பத்திரம் சேர்த்து எழுத வேண்டும். புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வாக்கு வன்மை அதிகரிக்கும், பேச்சில் நகைச்சுவை உணர்வு அதிகரிக்கும். சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும் 7ஆம் தேதிக்குப் பின்னர் முக வசீகரம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதின் ஆசைகள் எல்லாம் நிறைவேறும், சுய தொழிலில் ஏற்றம் ஏற்படும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

மீனம்

மீனம்

சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும் அதிகாரம் மிக்க பதவி தேடி வரும். செவ்வாய் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற வீண் பேச்சினை தவிர்க்கவும், வாயை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. 8ஆம் தேதிக்கு மேல் சகோதரர்களால் நன்மை உண்டாகும், அடிக்கடி வெளியூர் செல்வீர்கள். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மதி நுட்பம் அதிகரிக்கும். குரு பகவான் பத்தாம் இடத்தில் ஆட்சி பெற்று பலமாக பதினோராம் பன்னிரண்டாம் அதிபதியுடன் சேர்க்கை பெற்று கேதுவுடன் சேர்ந்திருப்பது நன்மை தரும் அமைப்பாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். திருமணபாக்கியம் புத்திர சந்தான பாக்கியம் கிடைக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு தேடிவரும் அதன் மூலமாக வருமானம் அதிகரிக்கும். சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் 7ஆம் தேதிக்குப் பின்னர் செலவுகள் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் முயற்சிகள் எல்லாம் வெற்றியடையும், காரியங்கள் எல்லாம் சிறப்படையும். ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகனங்களை பராமரிப்பு செய்து சரி செய்து வைத்துக் கொள்வது நல்லது. கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் எளிமையாக நிறைவேறும். சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் முயற்சிகள் வெற்றியடையும், காரியங்கள் எல்லாம் சிறப்படையும்.

English summary
Rasi Palangal for the Tamil Month of Panguni from 15-03-2019 to 17-03-2019.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X