For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆன்மீக அருள் நிறைந்த ஆவணி மாத ராசி பலன்கள்

ஆன்மீக அருள் நிறைந்த ஆவணி மாதத்திற்கு 12 ராசிகளுக்கும் உரிய ராசி பலன்களை அறிந்து கொள்வோம்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஆவணியில் சூரியன் சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார். ஆவணி மாதத்தை சிங்க மாதம் என்றும் வேங்கை மாதம் என்றும் சித்தர்கள் கூறுவர். மாதங்களுக்கு எல்லாம் அரசன் என்று பொருள். சூரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு.

ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பது சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் ஞாயிறு என்றாலே சூரியன். அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6-7 மணி வரை சூரிய ஹோரையில் சூரிய நமஸ்காரம் செய்வது சிறப்பு. தேகநலனுக்காக சூரியநமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் சிறப்பு.

நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சூரியனே. எனவே தான், ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாகச் சொல்வர். சஞ்சலமாக இருந்த அர்ஜூனனுக்கு, ஆத்மபலத்தை அளிக்க கீதையை உபதேசம் செய்ய கிருஷ்ணர் இம்மாதம் பிறந்தார்.

இந்த ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில்தான் மகாவிஷ்ணு என்ற நெடிய உயர்ந்த தெய்வம், வாமனன் என்ற குட்டையான வடிவு கொண்டு பூமியை தன் காலடியால் அளக்க அவதரித்தார். வடமொழியில் சிரவண நட்சத்திரம் என்றழைக்கப்படும் திருவோணத்தில் பௌர்ணமி வருவதால் சிரவண மாதம், ஆவணி மாதம் ஆகியது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திருவோண நாளை விரத நாளாக அனுசரிக்கின்றனர். பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆவணி மாதத்தில் 12 ராசிகளுக்கும் உரிய ராசி பலன்களை அறிந்து கொள்வோம்.

கிரகங்களின் ராசி மாற்றம்

கிரகங்களின் ராசி மாற்றம்

சூரியன் - ராசி மாற்றம் இல்லை
செவ்வாய் - 11ம் தேதி சிம்மம் ராசிக்கு மாறுகிறார்
புதன் - ராசி மாற்றம் இல்லை
குரு - 27ம் தேதி துலாம் ராசிக்கு மாறுகிறார்.
சுக்கிரன் - 05ம் தேதி கடகம் ராசிக்கும் 30ம் தேதி சிம்மம் ராசிக்கும் மாறுகிறார்.
சனி - ராசி மாற்றம் இல்லை
ராகு - ராசி மாற்றம் இல்லை
கேது - ராசி மாற்றம் இல்லை

மேஷம்

மேஷம்

சூரியன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்திலிருந்து பங்கு கிடைக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வீடு வாங்குவீர்கள் 11ம் தேதிக்குப் பிறகு புனித யாத்திரை செல்வீர்கள் புதன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உயர்கல்வி நிலை சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பொருளாதார விஷயத்தில் கவனம் தேவை 27ம் தேதிக்குப் பிறகு வியாபாரம் விருத்தியடையும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் செல்லும் நிலை உண்டாகும் 05ம் தேதிக்குப் பின்னர் புதிதாக வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் உழைப்பு அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் பெரியவர்களின் உதவி கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஒதுக்கீட்டில் வீட்டுமனை கிடைக்கும். செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் வீடு மாறும் நிலை உண்டாகும் 11ம் தேதிக்குப் பிறகு புதிதாக நிலம் வாங்குவீர்கள். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்திலிருந்து பங்கு கிடைக்கும் 27ம் தேதிக்குப் பிறகு பொருளாதார விஷயத்தில் கவனம் தேவை.. உங்கள் ராசிநாதன் சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் முக வசீகரம் அதிகரிக்கும் 05ம் தேதிக்குப் பிறகு அலைச்சல் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்தில் மேன்மை நிலை உண்டாகும். ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

மிதுனம்

மிதுனம்

சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் தகவல் தொடர்பு சிறப்படையும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் மருந்து வியாபாரம் சிறப்படையும் 11ம் தேதிக்குப் பிறகு சகோதரர்களின் உதவி கிடைக்கும் உங்கள் ராசிநாதன் புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாட்கள் எதிர்பார்த்திருந்த தகவல் வந்து சேரும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிய வண்டி வாங்குவீர்கள் 27ம் தேதிக்குப் பிறகு குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் 05ம் தேதிக்குப் பிறகு செல்வச் சேர்க்கை அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகள் யாவரையும் வெல்வீர்கள். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் பயணத்தினால் லாபம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.

கடகம்

கடகம்

சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கோபத்தை தவிர்க்கவும் 11ம் தேதிக்குப் பிறகு ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் நகைச்சுவை அதிகரிக்கும் குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் பயணம் உண்டாகும் 27ம் தேதிக்குப் பிறகு படிப்பில் மேன்மை நிலை உண்டாகும். சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆடம்பர செலவுகள் உண்டாகும் 05ம் தேதிக்குப் பிறகு மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் வீண் விவாதத்தை தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார் மனதில் அழுத்தம் உண்டாகும்.

சிம்மம்

சிம்மம்

உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழிற்சாலை முதலீடுகள் அதிகரிக்கும் 11ம் தேதிக்குப் பிறகு பதவி உயர்வு கிடைக்கும் புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் புத்திக் கூர்மை அதிகரிக்கும் குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வருமானம் அதிகரிக்கும் 27ம் தேதிக்குப் பிறகு வீடு மாறும் நிலை உண்டாகும். சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் லாபம் அதிகரிக்கும் 05ம் தேதிக்குப் பிறகு மனதின் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் பழைய வாகனம் ஒன்றை வாங்குவீர்கள். ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் சிந்தையில் சலனம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத்துணையுடன் சச்சரவு உண்டாகும்.

கன்னி

கன்னி

சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அயல் தேசத்திற்கு செல்லும் நிலை உண்டாகும் செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மூத்த சகோதரர்கள் எல்லா விஷயங்களிலும் உதவுவார்கள் 11ம் தேதிக்குப் பின்னர் புதிதாக வீடு வாங்குவீர்கள். உங்கள் ராசிநாதன் புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுக்காக செலவுகள் அதிகரிக்கும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் 27ம் தேதிக்குப் பிறகு பண வருமானம் அதிகரிக்கும்.. சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் நிலை சிறப்படையும் 05ம் தேதிக்குப் பிறகு நினைப்பவை யாவும் நிறைவேறும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும். ராகு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளின் தொல்லை ஒழியும்

துலாம்

துலாம்

சூரியன் பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மூத்த சகோதரர்களால் நன்மை கிடைக்கும். செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். நெருப்பு சம்பந்தமான தொழில் சிறப்படையும். 11ஆம் தேதிக்குப் பிறகு வீடு வாங்கி விற்கும் தொழில் சிறப்படையும். புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரம் லாபம் அதிகரிக்கும். தாய் மாமனால் நன்மை விளையும். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தங்க நகைகளில் முதலீடுகள் செய்வீர்கள். சுப செலவுகள் அதிகரிக்கும், 27ஆம் தேதிக்குப் பிறகு மரியாதை அந்தஸ்து அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். கடவுள் அருள் கிடைக்கும். 5ஆம் தேதிக்குப் பிறகு ஆடை ஆபரண தொழில் சிறப்படையும். சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் வருமானம் அதிகரிக்கும். வீண் விவாதத்தைத் தவிர்க்கவும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் இருக்கிறார் வியாபாரத்தில் புதிய கிளையை துவக்குவீர்கள். கேது உங்கள் ராசிக்கு 4ஆம் இடத்தில் இருக்கிறார், புதிதாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிகம்

சூரியன் பத்தாம் இடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகத்தில் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பிதுர் ராஜ்ஜித சொத்துக்களில் பங்கு கிடைக்கும். தீயணைப்புத் துறையில் பணிபுரிபவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். 11ஆம் தேதிகளுக்குப் பிறகு விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி கிடைக்கும். புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் ஷேர்மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைத் தரும். குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். தொழில் லாபம் அதிகரிக்கும். 27ஆம் தேதிக்குப் பிறகு வெளிநாடு செல்லும் எண்ணம் நிறைவேறும். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் விலை உயர்ந்த பொருட்களில் கவனம் தேவை. 5ஆம் தேதிக்குப் பிறகு வாழ்க்கை துணையினால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும். மனதில் மந்தத்தன்மை அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு 9ஆம் இடத்தில் இருக்கிறார் அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை உண்டாகும்.

தனுசு

தனுசு

சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரையாக செய்து வரும் தொழில் சிறப்படையும். அப்பாவின் ஆலோசனை தொழிலுக்கு உதவிகரமாக இருக்கும். செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் கூர்மையான பொருட்களிடம் இருந்து ஜாக்கிரதையாக இருக்கவும் காயம் உண்டாகலாம். வாகன போக்குவரத்தில் விபத்துக்கள் ஏற்படலாம். புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் எண்ணம் உண்டாகும். தொழில் உத்யோகம் தொடர்பாக நல்ல தகவல்கள் கிடைக்கும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் சொந்தத் தொழில் சிறப்படையும். 27ஆம் தேதிக்குப் பிறகு நீண்டகால ஆசை நிறைவேறும். சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் தம்பதியரிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். 5ஆம் தேதிக்குப் பிறகு பெண்களால் தொல்லை உண்டாகும். சனி பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும். வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மனதில் பாரம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குதர்க்கமான பேச்சைத் தவிர்க்கவும்.

மகரம்

மகரம்

சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் பணியில் கவனம் தேவை. அப்பாவுடன் மனஸ்தாபம் உண்டாகும். செவ்வாய் ஏழாமிடத்தில் நண்பர்களால் நன்மை உண்டாகும். 11ஆம் தேதிக்குப் பிறகு நெருப்பு காயங்கள் உண்டாகலாம். புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்தில் யாருக்கும் கடன் தர வேண்டாம். படிப்பில் கவனம் செலுத்தவும். குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். 27ஆம் தேதிக்குப் பிறகு தொழில் நிலை சிறப்படையும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார். பெண்களால் தொல்லை உண்டாகும். 5ஆம் தேதிக்குப் பிறகு திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் முயற்சிகள் வெற்றி பெறும். தொழில் லாபம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார் நீண்டதூரம் பயணம் செய்யும் நிலை உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஜென்மத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும்.

கும்பம்

கும்பம்

சூரியன் ஏழாம் இடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகம் சிறப்படையும், அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் மன தைரியம் அதிகரிக்கும். 11ஆம் தேதிக்குப் பிறகு புதியதாக நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் ஒப்பந்தத் தொழில் சிறப்படையும். வியாபாரம் விருத்தியடையும். குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பார்த்ததை விட அதிக பலன் கிடைக்கும். 27ஆம் தேதிக்குப் பிறகு அதிர்ஷ்டம் அதிகரிக்கும். சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் சகோதரிகளினால் நன்மை விளையும். 5ஆம் தேதிக்குப் பிறகு வாழ்க்கைத்துணையுடன் சச்சரவு உண்டாகும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்யோகத்தில் பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பழைய கடன்கள் வசூலாகும். கேது உங்கள் ராசிக்கு பனிரெண்டாம் இடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகமாகும்.

மீனம்

மீனம்

சூரியன் ஆறில் இருக்கிறார் அப்பா உடன் சச்சரவு உண்டாகும். தொழிலில் எதிரிகளின் தொல்லை உண்டாகும். செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை நிலத்தில் பங்கு கிடைக்கும். 11ஆம் தேதிக்குப் பிறகு மனதைரியம் அதிகரிக்கும். புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் தாய்மாமனுடன் பிரச்சினை உண்டாகும். வியாபாரம் தொடர்பாக கடன் வாங்கும் நிலை உண்டாகும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் நல்லுறவு நீடிக்கும். 27ஆம் தேதிக்குப் பிறகு கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார், வீட்டை அழகுபடுத்துவீர்கள். 5ஆம் தேதிக்குப் பிறகு உல்லாசப் பயணம் செல்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும். நீண்ட தூரம் பயணம் செல்லும் நிலை உருவாகும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளின் படிப்பில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார் பெரியவர்களின் ஆசி கிடைக்கும்.

English summary
Rasipalan for the Tamil Month of Aavani from August 17 to Septemper 17.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X