• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆன்மீக அலைகள் நிறைந்த கார்த்திகை மாத ராசி பலன்கள்

By Mayura Akilan
|
    சனி பெயர்ச்சி 2017: எந்த ராசிக்கு நன்மை?- வீடியோ

    ஜோதிடர் பேராசிரியர் கே. ஆர். சுப்ரமணியன்

    சென்னை: கார்த்திகை மாதம் தமிழ் மாதங்களில் 8வது மாதம். கார்த்திகையில் முதல் நாள் அன்று சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயருகிறார். அதாவது, அதுவரை துலாம் ராசியில் தனது பலத்தினை முழுமையாக இழந்து நீசம் என்ற நிலையில் சஞ்சரித்து வந்த சூரியன், தான் முழுமையாக வலிமை பெற தனது பயணத்தைத் துவக்கும் காலமே கார்த்திகை மாதம்.

    நம் உடம்பில் உள்ள நாடி, நரம்புகள் எல்லாம் கார்த்திகை மாதத்தில்தான் சீராக இயங்கும் என்று சொல்வார்கள். இந்த காலத்தில் தியானத்தில் ஈடுபடுவோர்க்கு நிச்சயம் ஞானம் சித்தியாகும் என்பது அனுபவித்தவர்கள் கண்ட உண்மை.

    கார்த்திகை மாதம் முதல் தேதி அன்று பஞ்சாங்கத்திலும், காலண்டரிலும் முடவன் முழுக்கு என்று குறித்திருப்பார்கள். ஐப்பசி மாதத்தில் துலா ஸ்நானம் செய்து இறைவனை தரிசிக்க விரும்பிய கால் ஊனமுற்ற ஒரு பக்தர் தான் வசிக்கும் ஊரிலிருந்து மிகவும் சிரமப்பட்டு நடந்தும் ஊர்ந்தும் வந்து காவிரி புண்ணிய நதியில் ஸ்நானம் செய்து சிரத்தையுடன் வணங்கினான். ஆனால், அவன் அவ்வாறு வணங்கிய நாள், துலாம் மாதம் முடிந்த மறுநாள்! அப்போதும் அவனது பக்தியை மெச்சி அவனுக்கு ரிஷப வாகனத்தில் இறைவன் அம்பிகையோடு இணைந்து தரிசனம் அளித்தார். அந்த நாளே இந்த கார்த்திகை மாதத்தின் முதல் நாள்.

    கார்த்திகையில் தீப திருவிழா சிறப்பு. கார்த்திகை மாதம் முழுவதும் பெரிய ஆலயங்கள் மட்டுமல்லாது, சிறு கோயில்களும் விளக்கொளியில் மின்னும். ஆன்மிக அதிர்வலைகளால் நம் அகத்தினில் உள்ள அழுக்கினை அகற்றி நெஞ்சத்திற்கு நெகிழ்ச்சியைத் தரும் கார்த்திகை மாதத்தின் ராசி பலனை காண்போம்.

    கிரகங்களின் ராசி மாற்றம்

    கிரகங்களின் ராசி மாற்றம்

    சூரியன் - ராசி மாற்றம் இல்லை

    செவ்வாய் - 13ம் தேதி துலாம் ராசிக்கு மாறுகிறார்.

    புதன் - 08ம் தேதி தனுசு ராசிக்கு மாறுகிறார்.

    குரு - ராசி மாற்றம் இல்லை

    சுக்கிரன் - 10ம் தேதி விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்.

    சனி - ராசி மாற்றம் இல்லை

    ராகு - ராசி மாற்றம் இல்லை

    கேது - ராசி மாற்றம் இல்லை

    மேஷம்

    மேஷம்

    சூரியன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும், அப்பாவின் செயல்கள் மனகஷ்டத்தைக் கொடுக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் ஆரோக்கிய பாதிப்பு உண்டாகலாம், 13ம் தேதி முதல் நண்பர்களுடன் நல்லுறவு உண்டாகும். புதன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் படிபில் தாய் மாமனால் மனக்கஷ்டம் உண்டாகும், 08ம் தேதிக்குப் பிறகு உயர்கல்வியில் மேன்மை நிலை உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் செல்வ வளம் சிறப்படையும், மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும், 10ம் தேதிக்குப் பிறகு பெண்களால் தொல்லை உண்டாகும்.. சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் ஆலோசனை தொழில் வளர்ச்சிக்கு உதவும், வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும். ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகனங்களை பராமரித்து நல்ல நிலைமையில் வைத்துக் கொள்வது சிறப்பு. கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் காரியங்கள் எல்லாம் சிறப்படையும்.

    ரிஷபம்

    ரிஷபம்

    சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகம் நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை உண்டாகும், அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத் தொழில் சிறப்படையும். செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்திலிருந்து பங்கு கிடைக்கும், 13ம் தேதிக்குப் பிறகு சகோதரர்களுடன் சச்சரவு உண்டாகும். புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் சில்லறை வியாபாரம் சிறப்படையும் 08ம் தேதிக்குப் பிறகு தாய் மாமனால் மனக் கஷ்டம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் கடன் வாங்கும் நிலை உண்டாகும், குழந்தைகளால் மனக் கஷ்டம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் தொல்லை உண்டாகும் 10ம் தேதிக்குப் பின்னர் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும், அசதி அதிகரிக்கும். ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களுடன் சச்சரவு உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூருக்கு நீண்ட தூரம் பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும்.

    மிதுனம்

    மிதுனம்

    சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைக்கும், அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள், 13ம் தேதிக்குப் பின்னர் காவல் துறையில் பணிபுரியும் உயர் அதிகாரிகளுக்கு அரசாங்க விருது கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. உங்கள் ராசிநாதன் புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் தேவை, 8ம் தேதிக்குப் பின்னர் வியாபாரம் விருத்தியாகும். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் சமுதாயத்தில் மதிப்பு அதிகரிக்கும் அதிகரிக்கும், வங்கி சேமிப்பு உயரும். சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும் 13ம் தேதிக்குப் பிறகு வாழ்க்கைத் துணையுடன் சச்சரவு உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களின் உதவி கிடைக்கும், வியாபாரம் விருத்தியாகும். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீர் யோகம் உண்டாகும்.

    கடகம்

    கடகம்

    சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் வேலை வாய்ப்புக்கான தேர்வில் வெற்றி கிடைக்கும், உயர்கல்வியில் மேன்மை நிலை உண்டாகும். செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அண்டை அயலாரால் நன்மை உண்டாகும், 13ம் தேதிக்குப் பின்னர் வீட்டு மனை வாங்குவீர்கள். புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் புத்திக் கூர்மை அதிகரிக்கும், 08ம் தேதிக்குப் பிறகு தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகனம் வாங்குவீர்கள், அம்மாவின் ஆரோக்கியம் சிறப்படையும். சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் வீட்டை அழகு படுத்துவீர்கள், 10ம் தேதிக்குப் பிறகு உல்லாசப் பயணம் செல்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளால் தொல்லை உண்டாகும், யாருக்கும் பணம் கடன் கொடுக்க வேண்டாம். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார் வியாபாரக் கூட்டாளிகளுடன் நல்லுறவு உண்டாகும்.

    சிம்மம்

    சிம்மம்

    உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அரசாங்க வாகன யோகம் உண்டாகும், அரசாங்க ஒதுக்கீட்டில் வீட்டு மனை ஒதுக்கீடு கிடைக்கும்.. செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்கள் மூலம் பண வரவு உண்டாகும், 13ம் தேதிக்குப் பின்னர் இட மாற்றம் உண்டாகும். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் கல்வியில் மேன்மை நிலை உண்டாகும், 08ம் தேதிக்குப் பின்னர் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைத் தரும்.. குரு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்களின் உதவி கிடைக்கும், வெளியூர் செல்லும் நிலை உண்டாகும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் விருந்தினர் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள், பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் கடன் வாங்கும் நிலை உண்டாகும்.

    கன்னி

    கன்னி

    சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் நிமித்தமாக வெளியூர் செல்வீர்கள், உறவினர்களால் நன்மை உண்டாகும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் கோபம் அதிகரிக்கும், 13ம் தேதிக்குப் பின்னர் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பணம் கிடைக்கும். உங்கள் ராசிநாதன் புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும், 08ம் தேதிக்குப் பின்னர் வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும். குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும், வங்கி சேமிப்பு அதிகரிக்கும். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் இனிமை அதிகரிக்கும் 10ம் தேதிக்குப் பிறகு மனதில் நினைத்தது நிரைவேறும். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் விவசாயம் விருத்தியாகும், பழைய வீட்டை வாங்குவீர்கள். ராகு பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார் லாபம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும்.

    துலாம்

    துலாம்

    சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும், பேச்சில் அதிகாரம் தொனிக்கும். செவ்வாய் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுக்காக செலவு செய்யும் நிலை உண்டாகும், 13ம் தேதிக்குப் பின்னர் பதவி உயர்வு கிடைக்கும். புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் கமிஷன் பேசியே காரியம் சாதித்துக் கொள்வீர்கள், 08ம் தேதிக்குப் பின்னர் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த சுப மங்கள தகவல் வந்து சேரும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும், உறவினர்களுடன் நல்லுரவு நீடிக்கும்.. உங்கள் ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் முகத்தில் வசீகரம் அதிகரிக்கும் 10ம் தேதிக்குப் பிறகு பொன்னகைகளின் சேர்க்கை அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களால் நன்மை உண்டாகும், பக்கத்து ஊருக்கு செல்லும் நிலை உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும்.

    விருச்சிகம்

    விருச்சிகம்

    சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும், அப்பாவின் ஆலோசனை தொழில் மேன்மைக்கு உதவும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும் 13ம் தேதிக்கு பின்னர் சகோதரர்களுக்காக செலவு செய்யும் நிலை உண்டாகும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் புத்தி கூர்மை அதிகரிக்கும், 08ம் தேதிக்குப் பின்னர் வாக்கு வன்மை அதிகரிக்கும் குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும், வெளியூர் தொழில் முயற்சிகள் வெற்றியைத் தரும். சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீட்டுக்கு ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள், 10ம் தேதிக்குப் பின்னர் பெண்களால் நன்மை உண்டாகும். சனி இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும், செல்வம் சேர்ப்பதற்க்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாட்டுக்கு செல்லும் யோகம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களால் நன்மை உண்டாகும்.

    தனுசு

    தனுசு

    சூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஊழியர்களுக்கு வெகு தூரத்தில் பணியிட மாற்றம் உண்டாகும், செலவுகள் அதிகரிக்கும். செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் நிலை சிறப்படையும், 13ம் தேதிக்குப் பின்னர் தீயணைப்பு துறையில் பணி புரிபவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும். புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும், 08ம் தேதிக்குப் பின்னர் புத்திக் கூர்மை அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும், பண வரவு அதிகரிக்கும். சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் புதிதாக நகைகள் வாங்குவீர்கள் 10ம் தேதிக்குப் பிறகு மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும், மக்களிடம் மரியாதை உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீர் யோகம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்ப வருமானம் அதிகரிக்கும்.

    மகரம்

    மகரம்

    சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மூத்த சகோதரர்களால் மனக் கஷ்டம் உண்டாகும், தொழில் லாபம் அதிகரிக்கும். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள், 13ம் தேதிக்குப் பின்னர் ரியல் எஸ்டேட் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் மூலம் லாபம் உண்டாகும் 8ம் தேதிக்குப் பின்னர் வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும், காரியங்கள் சிறப்படையும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் சிறப்படையும், 10ம் தேதிக்குப் பின்னர் மனைவியால் நன்மை உண்டாகும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும், தொழிலில் கடும் உழைப்பு தேவைப்படும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் வாடிக்கையாளர்களால் நன்மை உண்டாகும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும்.

    கும்பம்

    கும்பம்

    சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகம் சிரப்படையும், உயர் அதிகாரிகளால் நன்மை உண்டாகும். செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் கூர்மையான பொருட்களை கையாளும் பொழுது கவனம் தேவை 13ம் தேதிக்குப் பின்னர் நிலபுலன்களில் இருக்கும் வழக்கு சாதகமாக முடியும். புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் ஒப்பந்தத் தொழிலில் மேன்மை நிலை உண்டாகும் 08ம் தேதிக்குப் பின்னர் தரகு கமிஷன் தொழில் மூலம் பண வரவு அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும், உறவினர்களுடன் நல்லுறவு நிலவும். . சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள் 10ம் தேதிக்குப் பின்னர் தொழிலில் மனைவியின் உதவி கிடைக்கும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதின் ஆசைகள் எல்லாம் நிறைவேறும், தொழில் லாபம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பழைய கடன்கள் வசூலாகும். கேது உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் திருக்கோயில் திருப்பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

    மீனம்

    மீனம்

    சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பெரியவர்களின் உதவி கிடைக்கும், முன்னோர்களின் சொத்து கிடைக்கும். செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுடன் நல்லுறவு உண்டாகும் 13ம் தேதி முதல் கூர்மையான பொருட்களை கையாளும் பொழுது கவனம் தேவை. புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் தொழிலில் மேன்மை நிலை உண்டாகும் 08ம் தேதிக்குப் பின்னர் ஷேர்மார்க்கெட் தொழில் சிறப்படையும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீர் யோகம் உண்டாகும், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.. சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் மனம் சங்கடப்படும் சூழ்நிலை உண்டாகும் 10ம் தேதிக்குப் பின்னர் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.. சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் எல்லாம் சிறப்படையும், தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் லாபம் அதிகரிக்கும்.

    திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

     
     
     
    English summary
    Karthigai Month Rasi Palangal from 17th November 2017 to 15th December 2017.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more