For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆன்மீக அலைகள் நிறைந்த மார்கழி மாத ராசிபலன்கள்

மார்கழி மாதத்தில் சூரிய பகவான் தனுசு ராசியில் சஞ்சரிப்பதால் இதை தனுர் மாதம் என்றும் அழைப்பார்கள். தனுசு ராசிக்கு அதிபதி குருபகவான். அதாவது, குரு பகவான் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் இது.

Google Oneindia Tamil News

சென்னை: மார்கழி மாதம் தனுர் மாதம். தனுசு ராசியில் குருவின் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம். இந்த மாதம் மூன்று கிரகங்கள் இடப்பெயர்ச்சி அடைகின்றன. புதன் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கும், துலாம் ராசியில் ஆட்சி நிலையில் இருக்கும் சுக்கிரன் விருச்சிகம் ராசிக்கும் இடம் பெயர்கின்றனர். கும்ப ராசியில் சனியில் வீட்டில் இருந்த செவ்வாய் இந்த மாதத்தில் மீனம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த மாதத்தில் தனுசு ராசியில் சனியோடு சூரியன் இணைந்துள்ளார். கூடவே புதனும் இணைவதால் இந்த கிரகங்களின் கூட்டணியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலனை கொடுக்கிறது என்று பார்க்கலாம்.

நவகிரகங்களில் அரசன் ஆகிய சூரியன், குருகுலவாசம் செய்யும் நேரம் என்பதால் அந்நாளில் அரசர்கள் உட்பட சத்திரியர்கள் யாரும் போர்த் தொழிலில் ஈடுபட மாட்டார்கள். பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பக்தி மார்க்கத்தில் ஈடுபட வேண்டிய காலமாக மார்கழியைக் கொண்டிருந்தார்கள் இந்த ஒரு மாதமாவது இறைவனின் மேல் நமது முழு சிந்தனையையும் செலுத்த வேண்டும் என்ற காரணத்தினால்தான் மார்கழியில் திருமணம் முதலான சுபநிகழ்ச்சிகளைத் தவிர்த்தார்கள் நம் முன்னோர்கள். பக்தி மார்க்கத்திற்கு வழிகாட்டும் மாதமாக மார்கழியைக் கருதினார்கள்.

'மாதங்களில் நான் மார்கழி' என்று கீதையில் கண்ணன் சொன்னது பக்தி மார்க்கத்தால் என்னை அடைய முடியும் என்பதை சுட்டிக்காட்டவே என்பதை நாம் உணர வேண்டும். வீடுபேறு எனும் மோட்சத்தினை அடைய உதவும் மாதம் இது. பகவான் கண்ணனை கணவனாக அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆண்டாள் விரதமிருந்த மாதம் இது. அதே போன்று ராம நாம ஜபத்தினையே தனது உயிராகக் கொண்டிருக்கும் ஆஞ்சநேயர் பிறந்ததும் மார்கழி மாத அமாவாசை நாளில்தான்.

மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி கொண்டாடுகிறோம். வைணவர்கள் மட்டுமின்றி இந்துக்கள் எல்லோருமே விரதம் இருக்கும் நாள் வைகுண்ட ஏகாதசி. அன்றைய தினத்தில் பெருமாளை தரிசிப்பவர்கள் சொர்க்கத்தை அடைவர் என்பது நம்பிக்கை. இதே போல மார்கழி பவுர்ணமியில் திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசனம் சிவ ஆலயங்களில் நடைபெறுகிறது. பக்தி சிந்தனைக்கு உரிய உயரிய மாதமான பெருமை மிகு மார்கழி மாத ராசி பலனை அறிந்து கொள்வோம்.

கிரகங்களின் சஞ்சாரம்

கிரகங்களின் சஞ்சாரம்

சூரியன் - தனுசு ராசி

செவ்வாய் - கும்பம் , 8 ஆம் தேதிக்கு மேல் மீனம்

புதன் - விருச்சிகம், 17ஆம் தேதிக்கு மேல் தனுசு

குரு - விருச்சிகம் ராசி

சுக்கிரன் - துலாம், 17 ஆம் தேதிக்கு மேல் விருச்சிகம்

சனி - தனுசு ராசி

ராகு - கடகம்

கேது - மகரம்

புதன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனால் மனசங்கடம் உண்டாகும் 17ம் தேதிக்குப் பின்னர் உயர் கல்வியில் மேன்மை நிலை உண்டாகும்.

மேஷம்

மேஷம்

சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும் தொழில் லாபம் அதிகரிக்கும் 8ஆம் தேதிக்கு மேல் பிரயாணத்தினால் அலைச்சல் அதிகரிக்கும். புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் தேவை வியாபாரம் விருத்தியாகும், 17 ஆம் தேதிக்குப் பின்னர் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும் வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும். உயர் கல்வியில் மேன்மை நிலை உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் இருக்கிறார் தம்பதியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். 17ஆம் தேதிக்குப் பின்னர் பெண்கள் விசயத்தில் கவனம் தேவை. பொன்நகைகளை யாருக்கும் இரவல் கொடுக்க வேண்டாம். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்தான பழைய வீடு உங்கள் பங்குக்கு கிடைக்கும். ராகு நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு நிலம் போன்ற அசையா சொத்துகளை வாங்கும் யோகம் உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். இந்த மாதம் உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல மாதம் வேண்டிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்கும். பண விசயங்களில் யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம். சொந்த பந்தங்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். பெருமாள் ஆலயத்திற்கு சென்று வணங்கலாம். விநாயகருக்கு எருக்கம் பூ மாலை சாற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.

ரிஷபம்

ரிஷபம்

சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் டென்சன் உண்டாகும் அப்பாவிடம் மனஸ்தாபம் உண்டாகும் செவ்வாய் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் நிலபுலன் வகையில் நன்மை உண்டாகும். 8 ஆம் தேதிக்குப் பின்னர் செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதன் ராசிக்கு ஏழாம் வீட்டில் இருக்கிறார் கூட்டுத் தொழில் சிறப்படையும் வியாபாரம் விருத்தியாகும் தாய் மாமனால் நன்மை உண்டாகும் 17ஆம் தேதிக்குப் பின்னர் படிப்பில் கவனம் தேவை. குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத்துணையினால் சந்தோஷம் அதிகரிக்கும் உறவினர்களுடன் நல்லுறவு அதிகரிக்கும். சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் தொல்லை உண்டாகும், 17ஆம் தேதிக்குப் பின்னர் கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராத பண வரவு உண்டாகும் இருப்பினும் உத்தியோகத்தில் மன உளைச்சல் இருக்கும். ராகு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளால் நன்மை உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக் கோயிலுக்கு சென்று வர நன்மைகள் அதிகம் நடைபெறும். சிவ ஆலயத்தில் நடைபெறும் பிரதோஷ வழிபாட்டில் பங்கேற்று பாலபிஷேகத்திற்கு பால் வாங்கிக் கொடுக்கவும். நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்

மிதுனம்

சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் அரசுமுறை பயணம் உண்டாகும் அரசாங்கத்துடன் செய்துகொண்ட ஒப்பந்த தொழில் சிறப்படையும் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்துகளில் பங்கு கிடைக்கும் சகோதரர்களுடன் நல்லுறவு உண்டாகும். 8ஆம் தேதிக்குப் பின்னர் வேலையில் முக்கிய திருப்பம் ஏற்படும். புதன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் பிரச்சினையை தவிர்க்கவும் ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்க்கவும் 17ஆம் தேதிக்குப் பின்னர் தரகு கமிஷன் வியாபாரம் சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பண தட்டுபாடு உண்டாகும் பொருளாதார விஷயங்களில் கவனம் தேவை. சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் நன்மை உண்டாகும், 17ஆம் தேதிக்குப் பின்னர் நகைகளை அடகு வைக்க வேண்டியிருக்கலாம். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தகவல் தொடர்பு சிறப்படையும், தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு நீடிக்கும். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வாக்கு வன்மை அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீரென்று பண வரவு உண்டாகும்.

கடகம்

கடகம்

சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சச்சரவு உண்டாகும் தொழிலிலும் பிரச்சினை உண்டாகும் செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் கவனம் தேவை நெருப்பினால் காயம் உண்டாகும். 8ஆம் தேதிக்குப் பின்னர் பரம்பரை சொத்தில் பங்கு கிடைக்கும், முருகனின் அருள் கிடைக்கும். புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உயர்கல்வியில் மேன்மை உண்டாகும் நுண்கலைகளில் ஆர்வம் உண்டாகும். 17ஆம் தேதிக்குப் பின்னர் வியாபாரத்தில் கவனம் தேவை. குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாட்களாக வெளியில் பாக்கியிருந்த பணம் வசூலாகும், கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் வீட்டுக்கு ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள் 17ஆம் தேதிக்குப் பின்னர் உல்லாசப் பயணம் செல்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சச்சரவைத் தவிர்க்கவும், மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை கேது உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களினால் நன்மை கிடைக்கும். திங்கட்கிழமைகளில் சிவ ஆலயங்களில் சென்று வழிபட நன்மைகள் நடைபெறும்.

சிம்மம்

சிம்மம்

உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க வேலைக்கான போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும் உறவினர் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வீடு நிலம் போன்ற வகை தொழில்களில் விருத்தி உண்டாகும் உறவினர்களுடன் நல்லுறவு உண்டாகும். 8ஆம் தேதிக்குப் பின்னர் வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை. புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் நன்றாகப் படிப்பீர்கள், 17ஆம் தேதிக்குப் பின்னர் தரகு கமிஷன் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் சொத்துக்கள் சேர்க்கை அதிகரிக்கும், படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூர் பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும், 17ஆம் தேதிக்குப் பின்னர் வீட்டை அழகுபடுத்துவீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும், உறவினர்களின் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள். ராகு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளால் தொல்லை உண்டாகும்.

கன்னி

கன்னி

சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும் அரசு ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு வகையில் சிக்கல் உண்டாகும் கூர்மையான பொருட்களால் காயம் உண்டாகலாம். 8ஆம் தேதிக்குப் பின்னர் நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் எதிர்பார்த்திருந்த தகவல் வந்தடையும். தகவல் தொடர்பு சிறப்படையும், 17ஆம் தேதிக்கு பிறகு கல்வியில் மேன்மை நிலை உண்டாகும். குரு மூன்றாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் நல்லுறவு நிலவும், அக்கம் பக்கத்தரின் உதவி கிடைக்கும். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பொன் நகைகளை வாங்குவீர்கள், 17ஆம் தேதிக்குப் பின்னர் வீடு மாறும் நிலை உண்டாகும்.
சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் இயந்திரத் தொழில் சிறப்படையும், ராகு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் சிறப்படையும் கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும். உடல் நிலை பாதிப்பில் இருந்து தப்பிக்க புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபட நன்மைகள் அதிகம் நடைபெறும்.

துலாம்

துலாம்

சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அரசு ஊழியர்களுக்கு பணியிடமாற்றம் உண்டாகும் செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு அதிகாரப் பதவி கிடைக்கும் அரசாங்க விருது கிடைக்கலாம். 8ஆம் தேதிக்குப் பிறகு நெருப்பு, இரும்பு பொருட்களில் கவனமாக இருக்கவும். புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வாக்கு வன்மை அதிகரிக்கும் கமிஷன் வியாபாரம் சிறப்படையும் 17ஆம் தேதிக்குப் பின்னர் எதிர்பார்த்த தகவல் வரும். குரு உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் வங்கி சேமிப்பு உயரும் சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் 17ம் தேதிக்குப் பிறகு பொன்நகைகள் சேர்க்கை அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை உண்டாகும் மன தைரியம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் புதிய கிளை துவங்குவீர்கள் கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் சம்பளம் அதிகரிக்கும் அப்பாவின் மூலம் பண வரவு உண்டாகும் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் இருக்கிறார். 8ஆம் தேதிக்குப் பின்னர் அரசாங்க வேலை கிடைக்க யோகம் உண்டு. புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் புத்தி கூர்மை அதிகரிக்கும் கலைகளில் நிபுணத்துவம் பெறுவீர்கள். 17ஆம் தேதிக்குப் பின்னர் வாக்கு வன்மை அதிகரிக்கும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும், சமுதாயத்தில் மரியாதை உயரும். சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் பொன்னகைகளில் முதலீடுகள் அதிகரிக்கும், 17ஆம் தேதிக்குப் பின்னர் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சனி இரண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்றா வீண் பேச்சை தவிர்க்கவும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குலதெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள் கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்களால் நன்மை உண்டாகும்.

தனுசு

தனுசு

சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் அப்பா சம்பாதித்த சொத்து கிடைக்கும் உத்தியோக நிலை சிறப்படையும். செவ்வாய் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருக்கிறார் உடன் பிறப்புகளின் உதவி கிடைக்கும், வீடு மாறும் நிலை உண்டாகும். 8ஆம் தேதிக்குப் பின்னர் வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அதிக செலவுகள் ஏற்படும் ஷேர்மார்க்கெட் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது 17ஆம் தேதிக்குப் பின்னர் ஷேர் மார்க்கெட் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளுக்கு மருத்துவச் செலவு உண்டாகும், நகைகளை விற்கும் நிலை வரும். சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனைவியால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் 17ஆம் தேதிக்குப் பிறகு செலவுகள் அதிகரிக்கும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் வாக்கு வன்மை அதிகரிக்கும், கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீர் பண வரவு உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.

மகரம்

மகரம்

சூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வேலைக்காக வெளியூர் செல்வீர்கள் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும், வெளிநாடு செல்ல முயற்சிகள் செய்யலாம். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு மூலம் பண வருமானம் உண்டாகும் குடும்ப சந்தோஷம் அதிகரிக்கும். 8ஆம் தேதிக்குப் பின்னர் உடன் பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் தொழிலில் லாபம் உண்டாகும், 17ஆம் தேதிக்குப் பின்னர் வியாபாரத்திற்காக கடன் வாங்கும் நிலை உண்டாகும். புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் தொழிலில் லாபம் உண்டாகும், 17ஆம் தேதிக்குப் பின்னர் வியாபாரத்திற்க்காக கடன் வாங்கும் நிலை உண்டாகும். சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முன்னேற்றம் அடையும், 17ஆம் தேதிக்குப் பிறகு செயல்கள் சிறப்படையும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழிலுக்காக செலவுகள் அதிகரிக்கும், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களால் நன்மை உண்டாகும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் கடவுள் பக்தி அதிகரிக்கும். சனி பகவானை சனிக்கிழமைகளில் எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

கும்பம்

கும்பம்

சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும் செயல்கள் சிறப்படையும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் அதிகாரப் பதவி கிடைக்கும் ரியல் எஸ்டேட் தொழிலில் லாபம் உண்டாகும். 8 ஆம் தேதிக்குப் பின்னர் ரியல் எஸ்டேட் மூலம் பண வருமானம் அதிகரிக்கும். புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் ஒப்பந்தத் தொழில் சிறப்படையும்,17ஆம் தேதிக்குப் பின்னர் தரகு கமிஷன் வியாபாரம் லாபத்தைத் தரும். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் வங்கி ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும், ஆசிரியர் வேலைக்கு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் வெற்றியாக இருக்கும் 17ஆம் தேதிக்குப் பின்னர் வேலைக்காக செய்யும் முயற்சிகளெல்லாம் வெற்றியடையும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாட்கள் ஆசைகள் நிறைவேறும், தொழில் லாபம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளின் பணம் கிடைக்கும். கேது உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் கோயில்களுக்காக அதிக செலவுகள் செய்வீர்கள். சிவ ஆலயங்களுக்கு மாலை நேரங்களில் சென்று தரிசனம் செய்ய நன்மைகள் அதிகம் நடைபெறும்.

மீனம்

மீனம்

சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் சிறப்படையும் வேலைப்பளு அதிகரிக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும் பிரயாணத்தினால் அலைச்சல் உண்டாகும். 8ஆம் தேதிக்குப் பிறகு அதிகாரப்பதவி கிடைக்கம். புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும் வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் அன்ன தானத்திற்கு நிதி உதவி செய்வீர்கள். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ளவும், 17ஆம் தேதிக்குப் பின்னர் பெண்களால் நன்மை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகம் சிறப்ப்டையும், செயல்கள் சிறப்படையும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும், கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும். இந்த மாதம் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி இலையால் அர்ச்சனை செய்ய அதிகம் நன்மைகள் நடைபெறும்.

English summary
Rasipalan for the Tamil Month of Margazhi December 16,2018 to January 14,2018
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X