• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாழ்வில் வசந்தம் தரும் வைகாசி மாத ராசி பலன்கள்

By Kr Subramanian
|

-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன்

சூரியன் ரிஷபராசியில் நுழையும் மாதம் வைகாசி மாதமாகும். வைகாசி மாதம் என்றாலே நல்ல காரியங்கள் செய்ய ஏற்ற மாதம் என்று கருதப்படுகிறது. சித்திரை மற்றும் கத்திரிக்காக தள்ளிப்போடப்பட்ட நல்ல நிகழ்ச்சிகளை வைகாசி மாதத்தில் செய்பவர்களும் உண்டு. வசந்தத்தை அள்ளி வழங்கும் வைகாசி மாதத்தில்தான் கோயில்களில் வசந்த உற்சவங்கள் கொண்டாடப் படுகின்றன

வைகாசியில் தானம் செய்வது மிகவும் பலனுண்டு. தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்தபோது அமுதம் வெளிப்பட்டது வைகாசி மாத ஏகாதசியன்று. இறைவன் அதைக் காத்தது துவாதசியன்று. தேவர்கள் அமுதத்தை உண்டது த்ரயோதசி, பெளர்ணமி தினங்களில்தான். எனவே வைகாசி மாதத்தில் வரும் ஏகாதசி, துவாதசி, த்ரயோதசி, பெளர்ணமி தினங்களில் செய்யப்படும் தானத்திற்கு ஒன்றிற்குப் பலவாக பலன் கிட்டும் என்பது ஐதீகம்.

ராமலிங்க வள்ளலார், வடலூரில் சத்தியஞான சபை என்னும் அமைப்பைத் துவக்கி வைத்து, தர்ம சாலையில் ஏற்றி வைத்த ஜோதி இன்னமும் ஒளிவிட்டப் பிரகாசித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பம் ஒரு வைகாசி மாதத்தில்தான் நிகழ்ந்தது.

இந்த மாவதத்தில் வரும் விசாக நட்சத்திரம், ஞானச் சிறப்பு பெற்றது. சரவணப் பொய்கையில் முருகப் பெருமான் அவதரித்தது இந்தப் புனித நாளில்தான். இந்தத் திருநாளில் முருகப் பெருமானின் திருத்தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். புத்த‌ர் அவதரித்ததும் வைகாசி மாத பெளர்ணமியன்றுதான்.

நம்மாழ்வாரின் ஜென்ம நட்சத்திரம் வைகாசி விசாகம். நம்மாழ்வார் அவதரித்த ஆழ்வார் திருநகரியில் விசாக விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஆந்திராவில் உள்ள சிம்மாசலம் என்ற இடத்தில் உள்ள நரசிங்கப் பெருமாளுக்கு ஆண்டு முழுவதும் சாத்தியிருக்கும் சந்தனக் காப்பை வைகாசி விசாகத்தின் போது களைந்து திருமஞ்சனம் செய்வார்கள். அன்றுதான் மூர்த்தியை முழுமையாகத் தரிசிக்க முடியும். மறுநாளே மீண்டும் சந்தனக் காப்பிட்டு விடுவார்கள்.

வைகாசி மாதத்தை மாதவ மாதம் என்றும், வைசாகம் என்றும் அழைப்பார்கள். ஆயுள், செல்வம், புத்திரப்பேறு அனைத்தையும் அளிக்கக்கூடிய மாதம் வைகாசி எனவும், பூமியில் படுத்துறங்குதல், பிரம்மச்சரியம், விழிப்புடன் இருத்தல் ஆகிய மூன்றும் வைகாசி மாதத்தின் "மாதவம்' என்றும் வடமொழி நூல்கள் கூறுகின்றன.

இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட வைகாசி மாதத்தின் ராசி பலனை அறிந்து கொள்வோம்.

கிரகங்களின் ராசி மாற்றம்

கிரகங்களின் ராசி மாற்றம்

சூரியன் - ராசி மாற்றம் இல்லை

செவ்வாய் - ராசி மாற்றம் இல்லை

புதன் - 26ம் தேதி ரிஷபம் ராசிக்கு மாறுகிறார்

குரு - ராசி மாற்றம் இல்லை

சுக்கிரன் - 06ம் தேதி ரிஷபம் ராசிக்கும் 30ம் தேதி

மிதுனம் ராசிக்கும் மாறுகிறார்

சனி - ராசி மாற்றம் இல்லை

ராகு - ராசி மாற்றம் இல்லை

கேது - ராசி மாற்றம் இல்லை

மேஷம்:

மேஷம்:

சூரியன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார் பிறரை கட்டளையிடும் வகையில் உங்கள் பேச்சு இருக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வாகனப் போக்குவரத்தில் மிகவும் கவனமாக இருக்கவும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் பசமயோசிதமாக செயல்பட்டு வெற்றிபெறுவீர்கள் குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் வாழ்க்கை துணையின் உதவி கிடைக்கும் 06ம் தேதிக்கு பிறகு வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் உடல் நலத்தில் கவனம் செலுத்தவும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகள் மேல் கோபம் உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மூத்த சகோதரத்தால் உதவி கிடைக்கும்.

ரிஷபம்:

ரிஷபம்:

சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுடன் நல்லுறவு சிறப்படையும். புதன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுக்காக செலவுகள் செய்வீர்கள். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் கல்வியில் மேன்மை நிலை உண்டாகும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும் 06ம் தேதிக்குப் பிறகு குடும்ப சந்தோஷம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு நிலவும். ராகு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகனங்களை பராமரிக்கும் நிலை உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் நிலை சிறப்படையும்.

மிதுனம்:

மிதுனம்:

சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அரசு நிறுவனங்களில் முதலீடுகள் அதிகரிக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எண்ணியவை யாவை எளிதில் நிறைவேறும். குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் புது வீடு மாற்றம் உண்டாகும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும். 06ம் தேதிக்குப் பிறகு ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும் . சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் உடன்பிறப்புகளுடன் சச்சரவைத் தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகத்தில் கவனமாக செயல்படவும்.

கடகம்:

கடகம்:

சூரியன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள் புதன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரம் சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் சிறப்படையும். 06ம் தேதிக்குப் பிறகு பெண்களால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை விவசாய நிலத்தில் பங்கு கிடைக்கும். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் யாருடனும் சச்சரவு செய்ய வேண்டாம்.

சிம்மம்:

சிம்மம்:

உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் புதிதாக சொந்த தொழில் துவக்குவீர்கள். செவ்வாய் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். புதன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அயல் தேச தொழில் தொடர்புகள் சிறப்படையும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகப் பயணம் செல்வீர்கள் 06ம் தேதிக்குப் பிறகு தொழில் நிலை சிறப்படையும். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு மனை யோகம் உண்டாகும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் எந்தவித குழப்பத்திற்கும் இடம் தர வேண்டாம். கேது உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் பயணம் செல்வீர்கள்.

கன்னி:

கன்னி:

சூரியன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் சிவன் கோயில் பராமரிப்பு பணியில் ஈடுபாடு உண்டாகும். செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளால் நன்மை உண்டாகும். உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் கவனம் தேவை. குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் எல்லா விஷயங்களிலும் கவனமாக இருக்கவும் 06ம் தேதிக்குப் பிறகு திருக்கோயில் பயணம் செல்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் இட மாற்றம் உண்டாகும். ராகு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கிறார் வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் ஆரோக்கியக் சிறப்படையும்.

துலாம்:

துலாம்:

சூரியன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வீடு நிலம் வகையில் பண வரவு அதிகரிக்கும். புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் செழிப்படையும் குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எல்லா வகையிலும் வெற்றி கிடைக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும் 06ம் தேதிக்குப் பிறகு அதிக விலை மதிப்புள்ள பொருட்களை கவனமாகப் பார்த்துக் கொள்ளவும். சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எண்ணங்கள் யாவும் நிறைவேறும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள்.

விருச்சிகம்:

விருச்சிகம்:

சூரியன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் கூட்டுத் தொழில் சிறப்படையும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் அகங்காரம் அதிகரிக்கும். புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் சம்பந்தமாக கடன் வாங்கும் நிலை உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா காரியங்களும் வெற்றியடையும். சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை 06ம் தேதிக்குப் பிறகு பெண்களால் யோகம் உண்டாகும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் நிலை சிறப்படையும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புது வாகனம் வாங்குவீர்கள்.

தனுசு:

தனுசு:

சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் சச்சரவு வேண்டாம். செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் புதிதாக இயந்திரம் வாங்குவீர்கள். புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும் உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பிதுரார்ஜித சொத்திலிருந்து பங்கு கிடைக்கும். சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும் 06ம் தேதிக்குப் பிறகு வாழ்க்கைத் துணையுடன் சச்சரவைத் தவிர்க்கவும். சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற செலவுகளில் கவனம் தேவை. ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் முன்னோர்களை வழிபடுவது சிறப்பு. கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் இட மாற்றம் உண்டாகும்.

மகரம்:

மகரம்:

சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று வெற்றியடையலாம். செவ்வாய் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் வெற்றியடையும். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் கல்வியில் மேன்மை உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளின் விஷயத்தில் கவனம் தேவை. சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள் 06ம் தேதிக்குப் பிறகு ஆன்மீகப் பயணம் செல்வீர்கள். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நினைப்பதெல்லாம் நடக்கும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வாகனங்களைக் கையாளும் பொழுது கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.

கும்பம்:

கும்பம்:

சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக நிலம் வீடு வாங்குவீர்கள். செவ்வாய் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் காரியங்கள் சிறப்படையும். புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் தகவல் தொடர்பு மேம்படும். குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் செல்வீர்கள். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் நிலை சிறப்படையும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.

மீனம்:

மீனம்:

சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் வீடு மாறும் நிலை உண்டாகும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குலதெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள். புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் சமயோசிதமாக பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் நலம் சிறப்பாக இருக்கும். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள் 06ம் தேதி முதல் அடிக்கடி வெளியூர் பயணம் செல்லும் நிலை உருவாகும். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளை வெல்வீர்கள். கேது உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Rasipalan for the Tamil month of Vaikasi.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more