For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரத சப்தமி: ஏழு எருக்கம் இலையை வைத்து குளிப்பது ஏன் தெரியுமா?

ரத சப்தமி என்பது சூரியனுக்குறிய சிறப்பு தினமாகும். இது பொங்கலை போன்றே சூரியனை வணங்கும் தினம் என்பதால் மறுபொங்கல் என்றும் கூறுவர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    ரத சப்தமி அன்று ஏழு எருக்கம் இலையை வைத்து குளிப்பதால் கிட்டும் நன்மை

    சென்னை: இன்று ரத சப்தமி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காலை ஏழு எருக்க இலை, பசுவின் சாணம், சிறிது மஞ்சள் அட்சதை இவற்றைத் தலையில் வைத்துக்கொண்டு 7 ஸ்நானம் செய்வதால் பாபங்கள் நீங்கும்.

    ரத சப்தமியை எதற்காக கொண்டாடி வருகிறோம் என அறிந்தால் நம் முன்னோர்களின் தீர்க தரிசனத்தையும் அறிவையும் கண்டு வியக்காமல் இருக்க முடியாது.

    Ratha Sapthami prayer to Sun God

    ரத சப்தமி நாளில் சூரியனை வழிபட காலையில் எருக்கம் இலையைத் தலையில் வைத்துக்கொண்டு ஸ்நானம் செய்யச் சொல்வார்கள். ரத சப்தமியன்று காலை ஏழு எருக்க இலை, பசுவின் சாணம், சிறிது மஞ்சள் அட்சதை இவற்றைத் தலையில் வைத்துக்கொண்டு 7 ஸ்நானம் செய்வதால் பாபங்கள் நீங்கும்.

    அர்க்கன் என்றால் சூரியன். சூரியனுக்கு உகந்த பத்ரமாக இருப்பதால் எருக்க இலைக்கு, "அர்க்க பத்ரம்' என்று பெயர். அர்க்க பத்ரம் என்பதே பிறகு எருக்க பத்ரம், எருக்க இலை என்று ஆனது. பாபங்களும், ரோகங்களும் சூரிய பகவான் அருளால் நீங்க வேண்டும் என்று ரத சப்தமியன்று "அர்க்க பத்ர ஸ்நானம்' கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    English summary
    Ratha Sapthami falls on the 7th day of the bright fortnight of the month of January. Ratha Saptami – A Day of Prayers to Surya Bhagavan or the Sun God. Ratha Saptami or Surya Jayanti is the day dedicated to the worship of Surya Bhagavan or the Sun God.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X