For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரத சப்தமி, தைப்பூசம்,மகா சிவராத்திரி - பிப்ரவரி மாதத்தில் என்னென்ன விஷேசம் இருக்கு தெரியுமா

தை மாதமும் மாசி மாதமும் இணைந்த மாதம் பிப்ரவரி மாதம். இந்த மாதத்தில் மிக முக்கிய பண்டிகைகளான ரத சப்தமி, தைப்பூசம், மகா சிவராத்திரி என மிக முக்கிய விரத நாட்களும் முகூர்த்த நாட்களும் உள்ளன. எந்தெந்த நா

Google Oneindia Tamil News

சென்னை: உத்தராயண புண்ணிய காலம் தொடங்கி விட்டது. தை மாதம் பண்டிகைகள் ஆரம்பமாகி விட்டது. தை, மாசி ஆகிய இரண்டு மாதங்களும் இணைந்த பிப்ரவரி மாதத்தில் முகூர்த்த நாட்களும் விரத நாட்களும் உள்ளன. இந்த மாதத்தில் சூரிய ஜெயந்தியான ரத சப்தமி, முருகன், சிவபெருமானுக்கு உகந்த தைப்பூசம், மகா சிவராத்திரி, குல தெய்வத்தையும் முன்னோர்களையும் வணங்கும் மாசி அமாவாசை என மிக முக்கிய பண்டிகை நாட்கள் உள்ளன. இந்த நாட்களை உங்கள் டைரியில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். பண்டிகை நாட்களை உற்சாகமாகக் கொண்டாடுங்கள்.

Ratha Sapthami Thai Poosam February month important festival Days

பிப்ரவரி மாத முக்கிய விரத நாட்கள்:

பிப்ரவரி 1, 2020 ரத சப்தமி சூரிய ஜெயந்தி - இன்று சூரிய வழிபாடு செய்ய முன்னோர்கள் ஆசி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் அதிகமாகி நீண்ட ஆயுள் கிடைக்கும். பெருமாள் கோவில்களில் சூரிய பிரபை வாகனத்தில் வலம் வரும் பெருமாளை தரிசிக்கலாம். சூரியனுக்கு சிவப்பு வஸ்திரம் அணிவித்து சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்யலாம். நெய்தீபம் ஏற்றி சூரியனை வணங்கலாம்.

பிப்ரவரி 2 பீஷ்மாஷ்டமி : பீஷ்மர் ரத சப்தமி திதி முடிந்த மறுநாளில் வளர்பிறை அஷ்டமி திதி அன்று உயிர் நீத்தார். அந்த அஷ்டமியை பீஷ்மாஷ்டமியாக கடைபிடிக்கிறோம். இந்நாளில் நாம் பீஷ்மருக்காகவும் நம் முன்னோர்களுக்காகவும் தர்ப்பணம் செய்தால் இப்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி சுபீட்சம் பெறலாம் என்கிறது புராணங்கள்.

பிப்ரவரி 3 தை கிருத்திகை விரதம் முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபடலாம்.

பிப்ரவரி 5 பீஷ்ம ஏகாதசி, ஜெய ஏகாதசி

பிப்ரவரி 6 பீஷ்ம துவாதசி விரதம்

பிப்ரவரி 7 வராக கல்பாதி பிரதோஷம்

பிப்ரவரி 8 தை பௌர்ணமி தைப்பூச திருநாள் முருகன் ஆலயங்களிலும் சிவ ஆலயங்களிலும் திருவிழாக்கள் நடைபெறும். வடலூரில் ஜோதி தரிசனம் நடைபெறும்.

பிப்ரவரி 12 சங்கடஹர சதுர்த்தி விரதம்

பிப்ரவரி 13 மாசி 1 கும்ப சூரியன் விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆரம்பம்.

பிப்ரவரி 16 மகேஷ்வர அஷ்டமி

பிப்ரவரி 19 ஷட்திலா ஏகாதசி

பிப்ரவரி 20 தில துவாதசி பிரதோஷம் வியாதீபாத சிரார்த்தம்

பிப்ரவரி 21 மகா சிவராத்திரி சிவ ஆலயங்களுக்கு சென்று சிவ தரிசனம் செய்த புண்ணியம் சேரும். இரவு முழுவதும் கண் விழித்து சிவ ஆலயம் சென்று நான்கு கால பூஜைகளிலும் பங்கேற்கலாம்.

பிப்ரவரி 23 மாசி அமாவாசை முன்னோர்களையும், குல தெய்வத்தையும் வழிபட நன்மைகள் நடைபெறும்.

பிப்ரவரி 24 சிறிய திருவடி இந்த நாளில் ஸ்ரீ ராமரையும் ஆஞ்சநேயரையும் வழிபட பிரிந்த நண்பர்கள் ஒன்று கூடுவார்கள்.

பிப்ரவரி மாத முகூர்த்த நாட்கள் 2020

பிப்ரவரி 5,7,12,14,20,26 ஆகிய நாட்களில் திருமணம், சீமந்தம், உப நயனம், கிரகப்பிரவேசம், மாங்கல்யம் செய்ய வித்யாரம்பம் செய்ய,புது வண்டி வாங்க தொழில் தொடங்க நல்ல நாட்கள்.

English summary
Ratha Saptami, Thai poosam maha Sivarathiri here is the list for february month viratham days for important Mukurtham days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X