For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரத சப்தமி – சூரிய ஜெயந்தி விழாவில் த்ருச பாஸ்கர ஹோமம்

உலகிற்கு ஒளி தரும் சூரிய பகவானை பொங்கல் வைத்து வழிபடுகிறோம். அதனைத் தொடர்ந்து மற்றுமொரு வழிபாடு தை மாதம் வளர்பிறை ஏழாம் நாள் வருகின்றது. அது தான் ரதசப்தமி.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ரதசப்தமி அன்று தான் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் உலா வரும் சூரியபகவான் உதித்தார் என்கின்றன புராணங்கள். நமது கலாச்சாரத்தில் சூரிய வழிபாடு என்பது மிக முக்கியமான ஒன்றாக கருதப்பட்டு வருகின்றது.

ரத சப்தமி நாளில் சூரியனை வழிபட காலையில் எருக்கம் இலையைத் தலையில் வைத்துக்கொண்டு ஸ்நானம் செய்யச் சொல்வார்கள்.

Rathasapthami Festival Homam Surya Homam

ரதசப்தமி நாளன்று எருக்க இலை வைத்து ஸ்நானம் செய்து பின் சூரியனை வழிபடுவதன் மூலம் நீடித்த ஆயுளும் உடல் நலமும் பெறலாம்.

இந்த சூரிய வழிபாட்டின் மூலம் சூரியன் சாந்தியடைந்து உலகிற்கு நன்மை செய்வதுடன் பூஜிப்பவர்களுக்கும் வளமும் நலமும் தந்து அருள்கிறார். நீடித்த ஆயுள், இளமை, உயர்ந்த அறிவு, நிறைந்த செல்வம், சிறந்த ஆரோக்கியம் மற்றும் சிறப்பான வாழ்வை அருள்கிறார்.

உலகின் இருள் நீக்கி ஒளி தரும் சூரிய பகவானின் அருளை அனைவரும் பெறுவதற்கு சூரிய ஜெயந்தியான ரதசப்தமி அன்று அஸ்ட்ரோ வேத் நிறுவனம் பிரம்மாண்டமான ஹோமம் மற்றும் வேத பாராயணம் நடத்த உள்ளது.

அருண பாராயணம் எனப்படும் சூரிய நமஸ்கார மந்திர உச்சாடனம் செய்யப்படும். தைத்ரீய ஆரண்யக என்னும் கிருஷ்ண யஜுர் வேத நூலின் 32 பத்திகளைக் கொண்ட 135 பாசுரங்களின் பாராயணம். இதனைத் தொடர்ந்து த்ருச பாஸ்கர ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தின் பொழுது 3 ரிக் வேத மந்திரங்கள் சேர்ந்த சிறப்பு மந்திரம் ஓதப்படும்.

Rathasapthami Festival Homam Surya Homam

இந்த ஹோமத்தில் பங்கு பெறுவதன் மூலம் சூரிய பகவானின் அருள் பெறலாம். பாவங்கள் கரையும்
கவலை, துக்கம், வேதனை ஆகியவற்றை நீக்கும் நோய்கள் அகலும் அதிலும் குறிப்பாக இதயம் தொடர்பான நோய்கள் நீங்கும்.

தீய சக்திகள் விலகும். கிரஹ தோஷங்கள் நீக்கும். ஏழரை சனியின் தாக்கத்தை குறைக்கும். தசா புக்தி தோஷம் நீக்கும். அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கச் செய்யும்.

English summary
Surya homam at Ratha Sapthami. The homam is performed invoking the blessings of Aditya, the sun god.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X