For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சனி கிரக தோஷம் நீக்கும் சனி சாந்தி ஹோமம்

ஏழரை சனி, அஷ்டம சனி, கண்ட சனி, ஜன்ம சனி, அர்த்தாஷ்டம சனி, மற்றும் சனிதிசை, சனிபுக்தி, சனிஅந்தரம் பாதிப்புகள் நீங்க சனிசாந்தி ஹோமத்தில் பங்கேற்கலாம்

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் சனிக் கிழமை, சனி கிரக ப்ரீதிக்காக சனி சாந்தி ஹோமம் நடந்து வருகிறது. நாளை 03.03.2018 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் சனி கிரக தோஷம் நீக்கும் சனிசாந்தி ஹோமம் நடைபெறுகிறது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
உலகில் வேறெங்கும் இல்லாதவாறு 27 நட்சத்திரங்களுக்கும், 9 நவகிரகங்களுக்கும், விருட்சங்கள் கொண்டு காலச்சக்ர கோயிலாக அமைத்து, இயற்கை வளத்திற்காகவும், விவசாய நலனுக்காகவும், குடும்ப நலனுக்காகவும், பக்தர்களின் தேவைக்காக, தினசரி விருட்சங்களுக்கு விருட்ச பூஜையுடன் நட்சத்திர நவகிரக சாந்தி பூஜைகள் நடைபெறுகிறது.

Remedies To Get Rid Of Elarai Sani

வாழ்வில் முன்னேற்றமடைய பலவிதமான முயற்சிகளை நாம் மேற்கொண்டாலும் பலவிதமான தடைகள் வந்து அநத முயற்சியை தடுக்கிறது. அந்த தடைகளை வரிசைப்படுத்தி பார்க்கும் பொழுது பித்ருதடை, ஜாதகத்தடை, கிரகத்தடை, வாஸ்துதடை, நவகிரகத்தடை, கர்மவினை, ஊழ்வினைதடை, போன்ற பல்வேறு விதமான தடைகள் நம்முன் வந்து நிற்கின்றன. அதில் பெரிதும் பங்கேற்பது நவகிரகங்களில் ஒன்றான சனிகிரகத்தின் தடைகள் பெரிதும் பாதிக்கிறது.

Remedies To Get Rid Of Elarai Sani

பெரும்பாலான ஜாதகருக்கு ஏழரை சனி, அஷ்டம சனி, கண்ட சனி, ஜன்ம சனி, அர்த்தாஷ்டம சனி, மற்றும் சனிதிசை, சனிபுக்தி, சனிஅந்தரம் நடைபெறும் பொழுது பல இன்னல்களுக்கு மக்கள் ஆளாகின்றனர். அதனால் காரியத்தடை, திருமணத்தடை, குழந்தை பாக்யதடை, தொழில் அபிவிருத்தி தடை போன்ற பலதடைகளும் ஏற்பட்டு மன உளச்சளுக்கு ஆளாகி வருகின்றனர்.

Remedies To Get Rid Of Elarai Sani

இத்தகைய தடைகளுக்கு நிவாரணம் தேடும் வகையில் தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி பிரதி மாதம் முதல் சனிக்கிழமை சனிசாந்தி ஹோமமும் சனி ப்ரீத்தி பூஜையும் நடைபெற்று வருகிறது. இந்த ஹோமம் பித்ரு தோஷ நிவர்த்தி , ஆயுள் அபிவிருத்திக்காகவும் நடைபெறுகிறது.

Remedies To Get Rid Of Elarai Sani

இதில் கருப்பு நிற வஸ்த்திரம், நீலநிற வஸ்த்திரம், பச்சரிசி, நெல், எள், நெல்பொரி, நல்ல எண்ணை, வெல்லம், வன்னி சமித்து, நாயுருவி, கறுப்பு திரட்சை போன்ற பல பொருட்கள் யாகத்தில் சேர்க்கப்படும்.

ஹோமத்தின் நிறைவாக காலசக்கர பூஜையும், பைரவருக்கும், ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சனேயருக்கும் சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர். ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள், ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513. வேலூர் மாவட்டம். மொபைல்: 94433 30203.

English summary
Saturan transit, Elarai sani, Shani Mahadasha is a period of 19 years of hard work and persistence. Saturn emphasises on strict discipline and labour by creating delays and difficulties and added responsibilities on the person.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X