For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏழரையே... சனியனே என்று யாரையும் திட்டாதீங்க #சனிபெயர்ச்சி

அட சனியனே என்று யாரையும் திட்ட வேண்டாம்... அப்படி திட்டினால் சனிபகவானுக்கு கோபம் வந்து விடும். திட்டியவர்களை பார்த்து கோபப்பார்வையை செலுத்தி விடுவார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    ஏழரை சனியை கஷ்டமின்றி கடக்க பரிகாரம் இருக்கு!- வீடியோ

    சென்னை: நமக்குப் பிடிக்காதர்கள் வந்தால் வர்றான் பாரு ஏழரை என்று திட்டுவார்கள். சின்னப்பிள்ளைகள் தவறு செய்தால் கூட அட சனியனே என்று திட்டுவார்கள் அப்படி திட்டக்கூடாது திட்டினால் சனிபகவானின் கோபப்பார்வை திட்டுபவர்கள் பக்கம் திரும்பி விடுமாம்.

    சனிபகவான் தான் இருக்கும் இடத்தில் இருந்து 3, 7, 10வது பார்வையாக பார்ப்பார். அவர் இருக்கும் இடத்தைப் பொறுத்தும் பார்க்கும் இடத்தை பொறுத்தும் பலன்கள் அமையும்.

    Remedies for Reducing the Malefic Effects of Shani bhagavan

    சனிபகவான் மெதுவாக நகர்ந்து செல்வார். இதனால் இவருக்கு மந்தன் என்ற ஒரு பெயர் உண்டு. பிள்ளைகள் படிப்பில் மந்தமாக இருந்தால் சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடலாம்.

    அதே போல ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடலாம். விநாயகரை சுற்றி பச்சரியை பொடி செய்து கோலம் போடலாம். ஒருவர் ஏழு தலைமுறைக்கு முன் செய்த பாவங்களும், இந்த தலைமுறையில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள், அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் என அனைத்தும் தீரும் என்பது நம்பிக்கை.

    சனிக்கிழமையன்று பச்சரிசியை ஒரு கையில் அள்ளி நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு, விநாயகப்பெருமானை மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச் சுற்றிப் போட்டால், அதை எறும்பு தூக்கிச் செல்லும்.

    அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும். அப்படித் தூக்கிச் சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும்.

    எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும் தன்மை நீங்கி விடும். இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு அவை இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும்.

    இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக் கொண்டிருப்பார்கள். இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை மாறும். அப்படி மாறியதும், அதன் வலு இழந்துபோய்விடும்.

    இதனால், நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப்போடவேண்டும். ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம். இதனால், சனிபகவானின் தொல்லைகள் கூட நம்மைத் தாக்காது . ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டமச்சனி முதலிய எல்லா சனிதோஷமும் இதில் அடங்கும்

    English summary
    Shanaiswara means slow mover. Shanaiswara, or Shani, is the son of Surya Dev and his shadow wife Chaya, and is the slowest of the Grahas. Saturn takes 2 1/2 years in each Rasi, completing one cycle every 30 years.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X