• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சூரிய கிரகணம் 2019: மும்மூர்த்திகளும் வாசம் செய்யும் தர்ப்பை புல் - கிரகண தோஷத்தை தடுக்கும்

|

மதுரை: தர்ப்பை புல்லின் அடிப்பாகம் பிரம்மனும், மத்தியில் விஷ்ணுவும், நுனியில் ருத்ரனும் இருப்பதால் பரம பவித்ரமானது. தர்ப்பைப்புல் புண்ணிய பூமி தவிர வேறு எங்கும் முளைக்காது. இதற்கு அக்னி கற்பம் என்பது பெயர். கிரகண காலத்தில், அமாவாசையிலும் தர்பைக்கு வீரியம் அதிகமாகும், ஆகவே தான் கிரகண காலத்தில், உணவு பண்டங்களில் கிரகண சக்தி தாக்காமல் இருக்க தர்பையை போடுவது வழக்கம்.

தர்ப்பபை சுபத்தை, புனிதத்தன்மையை தருவது, எல்லா பாவங்களையும் போக்க வல்லது. இந்த புல்லில் அதிகமான தாமிர சத்து உள்ளது. நமது உடலில் வெளியிலிருந்து உள்ளே புகும் தீமையைத் தடுக்கிறது.

Ring of fire eclipse 2019: Darbha grass as sacred plant

தர்ப்பைப்புல் புண்ணிய பூமி தவிர வேறு எங்கும் முளைக்காது. இதற்கு அக்னி கற்பம் என்பது பெயர். இந்த புல் தண்ணீர் இல்லாவிட்டால் வாடாது. நீருக்குள் பலநாட்கள் இருந்தாலும் அழுகாது. 'அம்ருத வீரியம்' என்பது இதன் பெயர். அக்கிரஸ்தூலமுடையது பெண் தர்பை, மூலஸ்தூலம் உடையது அலி தர்பை, அடி முதல் நுனி வரை ஒரே சமமாக இருப்பது ஆண் தர்பை.

ஹோம குண்டங்களில், யாக சாலையில் இருந்து பிம்பத்திற்கும், கலசங்களுகும் மந்திர ஒலிககளை கடத்தி சக்தியை அளிக்கும்.நான்கு பக்கமும் தர்பை புல்லை வைப்பது, அந்த குண்டங்களை பாதுகாக்கும் அரணாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

இறைவழிபாடு ஜெபம், ஹோமம், தியானம், பித்ரு தர்ப்பணம், பிராணயாமம் முதலிய காரியங்களில் கையில் பவித்ரம் அணிந்து கொள்ளாமல் செய்வது பலனை தராது. விஷேட காரியங்கள் நடத்தும் போது வலது கை மோதிர விரலில் பவித்திரம் என தரப்பை புல்லை போடுவார்கள் மோதிர விரல் மூளையுடன் சம்பந்தப்பட்டது .ஆகவே தர்பை பவித்ரம் போடும் பொது பிரபஞ்ச சக்தி விரல் மூலம் மூளைக்கு செல்கிறது உடலில் பரவும்.

தர்பையை தேவ காரியங்களுக்கு கிழக்கு நுனியாகவும், பித்ரு காரியங்களுக்கு தெற்கு நுனியாகவும் பயன்படுத்த வேண்டும், தர்பை உஷ்ண விரீயமும் அதிக வேகமும் உடையது. பஞ்சலேங்களில், தாமிரத்தில் மின்சார சக்தியை கடத்தும் சக்தியை போல் தர்பையிலும் உண்டு. தங்கம், வெள்ளி கம்பிகளின் இடத்தில் பிரபஞ்சத்திலுள்ள சக்திகளை ஆகர்­ணம் செய்யும். எல்லா ஆசனங்களை காட்டிலுமும், தர்பாசனத்தில் அமர்ந்து பூஜை செய்வது மிகவும் உயர்ந்த பலனை தரும்.

அசுப காரியங்கள் ஒரு தர்பையாலும், சுப காரியங்களுக்கு இரண்டு தர்பைகளாலும், பித்ரு காரியங்களாலும், தேவ காரியங்களுக்கு 5 தர்பைகளாலும், சாந்தி கர்ம காரியங்களுக்கு 7 தர்பைகளாலும் ( பவித்ரம் ) தர்பை மோதிரம் முடியவேண்டும்.

தட்சிணாமூர்த்தி கைகளுடன் ஆலமரத்தின் கீழ் தென்திசையை நோக்கி அமர்ந்திருப்பார் . அவருடைய வலதுகால் 'அபஸ்மரா' என்ற அரக்கனை மிதித்த நிலையில் இருக்கும். அது அறியாமையை குறிக்கின்றது. அவரது ஒரு மேல் கையில் ஒரு ருத்திராட்ச மாலையையும் பாம்பையும் பிடித்திருப்பார். அவரது மற்றொரு மேல் கையில் நெருப்பும் கீழ் இடது கையில் தர்பைப் புல்லையும் ஓலைச்சுவடியையும் வைத்து இருப்பார்.

கொடி மரத்தின் முன்னே சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிற போது கொடி மரத்தில் சுற்றி இருக்கும் தரப்பை புல் பிரபஞ்ச சக்தி ஈர்த்து வைத்திருக்கும், அது வீழ்ந்து வாங்கும் பக்தர்களின் முதுகெலும்பு வழியாக உடலில் பரவும்.

கிரகண காலத்தில், அமாவாசையிலும் தர்பைக்கு வீரியம் அதிகமாகும், ஆகவே தான் கிரகண காலத்தில், உணவு பண்டங்களில் கிரகண சக்தி தாக்காமல் இருக்க தர்பையை போடுவது வழக்கம்.

 
 
 
English summary
At the time of eclipse, people place that grass in food items that could ferment and once the eclipse ends the grass is removed. Since Vedic age, Darbha grass is treated as sacred plant and according to early Buddhist accounts, it was the material used by Buddha for his meditation seat
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X