For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருமணம், குழந்தைப்பேறு வரம் அருளும் திருவோண விரதம் - பெருமாளை வணங்குவோம்

திருவோண தினத்தன்று விரதம் இருந்தால் திருமண தடை நீங்கும், குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

Google Oneindia Tamil News

சென்னை: திருவோண விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் வாழ்வில் மனக்குறைகள் அகன்று சந்தோஷ வாழ்வு மலரும். பெண்கள் விரும்பியதை அடைவர். திருமணம் தாமதமாகி வந்தவர்களுக்கு விரைவில் வரன் அமையும். நீண்ட காலம் குழந்தை இல்லாதவர்கள் குறைகள் நீங்கி குழந்தைப்பேறு உண்டாகும்.

தமிழ் மாதமான ஆவணி, கேரளாவில் 'சிங்க மாதம்' என்று அழைக்கப்படுகிறது. சிங்க மாதத்தின் திருவோண நட்சத்திரத்தில் வளர்பிறையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

மகாவிஷ்ணுவிற்கு உகந்த நட்சத்திரம் திருவோணம் ஆகும். மகாவிஷ்ணு மூன்றடி மண் கேட்பதற்காக வாமன அவதாரம் எடுத்தது திருவோணம் நட்சத்திரத்தில்தான் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

திருவோணத்தின் மகிமை

திருவோணத்தின் மகிமை

27 நட்சத்திரங்களில் திருவாதிரை, திருவோணம் ஆகிய இரண்டு நட்சத்திரங்களும் சிறப்பு வாய்ந்தவையாக கொண்டாடப்படுகின்றன. திருவாதிரை சிவனுக்கு உரியது. திருவோண நட்சத்திரம் பெருமாளுக்குரியது. வாமன அவதாரம் எடுத்தபோது திருமால் திருவோண நட்சத்திரத்தில்தான் அவதரித்தார். மார்க்கண்டேய மகரிஷியின் மகளாக அவதரித்த பூமாதேவியை ஒப்பிலியப்பர் பெண் கேட்டு வந்தது பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தன்றுதான். ஒப்பிலியப்பன் திருமணம் செய்து கொண்டது ஐப்பசி மாத திருவோண நட்சத்திர நாளில்தான்.

சந்தோஷமான வாழ்வு

சந்தோஷமான வாழ்வு

திருவோணம் விரதம் விரதம் பெருமாளுக்கு உகந்தது. திருவோணத்தன்று பெருமாள் பக்தர்கள் விரதம் இருப்பார்கள். விரதம் இருக்கும் பக்தர்கள் திருவோணத்துக்கு முதல் நாள் இரவு உணவை தவிர்க்க வேண்டும். திருவோண நட்சத்திரமன்று திருவோண விரதம் இருந்தால் சந்திரதோஷம் விலகுவதுடன், சந்தோஷமான வாழ்வு அமையும். திருவோணம் விரதம் இருப்பவர்கள் மாலையில் சந்திர தரிசனம் காண வேண்டும்.

குழந்தைபேறு கிடைக்கும்

குழந்தைபேறு கிடைக்கும்

திருவோண விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வச்செழிப்பு ஏற்படும். மனக்குறைகள் அகன்று சந்தோஷ வாழ்வு மலரும். பெண்கள் விரும்பியதை அடைவர். திருமணம் தாமதமாகி வந்தவர்களுக்கு விரைவில் வரன் அமையும். நீண்ட காலம் குழந்தை இல்லாதவர்கள் குறைநீங்கி குழந்தைப்பேறு உண்டாகும். நீங்காத செல்வம் நிலைத்து நிற்கும்.

பெருமாளை வணங்குவோம்

பெருமாளை வணங்குவோம்

எல்லா மாதங்களிலும் வரம் திருவோணம் நட்சத்திரத்தில் பெருமாளை வேண்டி விரதம் இருந்தாலும் ஆவணி திருவோண விரதம் மிக முக்கியமானதாகும். இந்த விரதம் இருப்போர் கேரள மாநிலம் திருக்காக்கரை விஷ்ணுகோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ரங்க மன்னார் கோவில், திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் ஆகிய தலங்களில் உள்ள பெருமாளை தரிசனம் செய்யலாம். இத்தலங்களுக்கு செல்ல முடியாதவர்கள் 108 திவ்யதேசங்களில் ஏதேனும் ஒரு தலத்திற்கு சென்று பெருமாளை வழிபடலாம்

English summary
Tiruvonam or Sravana Vratham is an auspicious fasting observed by Vaishnava devotees. This fasting is observed every month on the day of ‘Sravana Nakshatram’. It is believed that performing pujas for Lord Vishnu as well as Lord Shiva on the day of Tiruvonam Vratham is fruitful.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X