For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்ட சாமிங்களே...கோபப்படவே கூடாது ஏன் தெரியுமா

சபரிமலை ஐயப்பன் சாந்த சொரூபி. மாலை போட்ட ஐயப்ப பக்தர்கள் கோபத்தை தவிர்ப்பதோடு, யாரிடமும் பகைமை, மற்றும் விரோதம் கொள்ளக்கூடாது. அனைவரிடமும் அன்போடும், சாந்த குணத்தோடும் பணிவோடும் பேசிப் பழக வேண்டும். ச

Google Oneindia Tamil News

பட்டனம் திட்டா: சபரிமலை ஐயப்பன் பிரம்மச்சரிய கடவுள் என்பதால், ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதமிருப்பவர்கள், முழுமையாக பிரம்மச்சாரிய விரதத்தை கடைபிடிக்க வேண்டும். சபரிமலை ஐயப்பனுக்கு மாலையணிந்து விரதம் இருப்பவர்கள், அந்த விரத முறைகளை ஒழுங்காக கடைபிடிக்க வேண்டியது அவசியம் மற்றும் கட்டாயமும் கூட. முதலில் மாலையணிந்தவர்கள் தவிர்க்கவேண்டிய முக்கிய குணம் கோபம். சபரிமலை ஐயப்பன் சாந்த சொரூபி. அதனால், கோபத்தை தவிர்ப்பதோடு, யாரிடமும் பகைமை, மற்றும் விரோதம் கொள்ளக்கூடாது. அனைவரிடமும் அன்போடும், சாந்த குணத்தோடும் பணிவோடும் பேசிப் பழக வேண்டும்.

சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள், விரத முறைகளை உரிய முறையில் பின்பற்றி வரவேண்டும். மாமிசம், புகை பிடித்தல், போதை வஸ்த்துகள், மது போன்றவற்றை முழுமையாக தவிர்த்து விடவேண்டும். மது அருந்துபவர்களால், அதை தொடாமல் இருக்க முடியவில்லை என்றால், மாலை அணியவே கூடாது. விரத முறைகளை உரிய முறையில் கடைபிடித்தால் தான், சபரிமலை ஐயப்பனை முழுமையாக தரிசித்த பலனும், அவருடைய அருளாசியும் நமக்கு கிடைக்கும்.

இன்றைக்கு சிலர் விரதம் இருக்கிறேன் என்று சொல்லி விட்டு, காலை மற்றும் இரவு வேளைகளில் அல்லது மொத்தமாக மதிய வேளையில் இஷ்டத்திற்கு சாப்பிட்டுவிட்டு பின்னர் மீதி இரண்டு வேளைகளிலும் கொலை பட்டினியாக கிடப்பதுண்டு. இல்லாவிட்டால், மூன்ற வேளைகளில் சாப்பிட வேண்டிய உணவை ஒரே வேளையில் சாப்பிட்டு, மற்ற வேளைகளில் சாப்பாட்டை தவிர்த்து விடுவார்கள். அது உடலுக்கும் மனதுக்கும் தான் கெடுதல் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை.

விரதம் நல்லது

விரதம் நல்லது

உபவாசம் அல்லது விரதம் இருப்பது என்பது, நம் மனதில் எழுகின்ற தேவையற்ற ஆசைகளையும், உணர்வுகளையும், வயிற்றுப் பசியையும் கட்டுப்படுத்துவதற்கு தானே தவிர, பொழுது போக்குவதற்காகவோ அல்லது மற்றவர்களின் கவனத்தை தன் மீது திருப்ப வேண்டும் என்பதற்காகவோ அல்ல. பொதுவாக விரதம் இருப்பது என்பது, நம்முடைய உடல் நலத்தை சரியான முறையில் வைத்திருப்பதற்காக கடைபிடிப்பதாகும். வாரத்தில் ஒரு நாள், மாதத்தில் ஒரு நாள் அல்லது குறிப்பிட்ட நாட்களுக்கு தொடர்ச்சியாக என விரதம் இருப்பதாகும். விரதம் இருப்பதால், நம்முடைய உடல் நிலை சீராக இருக்கும்.

ஆன்மீக உணர்வு

ஆன்மீக உணர்வு

சரியான நேரத்தில் சரியான முறையில் அளவோடு உணவுகளை உட்கொண்டால் நம்முடைய உடலில் இலகுவான தன்மையை கொண்டுவரமுடியும். விரதம் இருப்பது என்பது ஆன்மீகம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, அறிவியல் தொடர்பானதும் கூட. விரதம் இருக்கும் போது, ஆன்மீக சிந்தனைகளும் கூடும். அதோடு வயிறு காலியாக இருக்கும்போது நம்முடைய ஜீரண மண்டல உறுப்புகள் சரியாக செயல்பட ஆரம்பிக்கும்.

சபரிமலை ஐயப்பன்

சபரிமலை ஐயப்பன்

ஆன்மீகத்தை பொருத்த வரையில், உபவாசம் என்னும் விரதம் இருக்கும் போதுதான் மனம் தூய்மையாகி இறை சிந்தனையில் லயிக்கின்றது. வேறு எந்த தவறான எண்ணமும் எழாதவாறு கட்டுப்படுத்தப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் விரதமும் இதையே உணர்த்துகிறது. மேலும், மாலையணிந்து மலையேறி செல்லும்போது, தேவையில்லாத உடல் உபாதைகள் ஏற்படுவதையும் தடுக்கிறது. அளவுக்கு அதிகமாக உண்பதால் மலையேறிச் செல்லும்போது, அநாவசியமாக பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடும். அதோடு, குளிர்காலத்தில் ஜீரண உறுப்புகள் சரிவர வேலை செய்யாது. அதனால் இலகுவான உணவுகளை உட்கொண்டால் எளிதில் ஜீரணமாகிவிடும். இதனாலேயே மாலை அணிந்து மலைக்கு செல்பவர்கள் விரதம் இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் வரைமுறைகளை வகுத்திருக்கின்றனர்.

விரோதம் வேண்டும்

விரோதம் வேண்டும்

சபரிமலை ஐயப்பனுக்கு மாலையணிந்து விரதம் இருப்பவர்கள், அந்த விரத முறைகளை ஒழுங்காக கடைபிடிக்க வேண்டியது அவசியம் மற்றும் கட்டாயமும் கூட. முதலில் மாலையணிந்தவர்கள் தவிர்க்கவேண்டிய முக்கிய குணம் கோபம். சபரிமலை ஐயப்பன் சாந்த சொரூபி. அதனால், கோபத்தை தவிர்ப்பதோடு, யாரிடமும் பகைமை, மற்றும் விரோதம் கொள்ளக்கூடாது. அனைவரிடமும் அன்போடும், சாந்த குணத்தோடும் பணிவோடும் பேசிப் பழக வேண்டும்.

ஐயப்பன் பாடல்கள்

ஐயப்பன் பாடல்கள்

அதிகாலையிலேயே, அதாவது விடிவதற்கு முன்பே குளிர்ந்த நீரில் குளித்து விட்டு, வீட்டிலும், கோவிலிலும் சபரிமலை ஐயப்பனை மனமுருக வேண்டி ஐயப்பனின் மந்திரங்களை சொல்லி வரவேண்டும். மாலையிலும் அதே போல் குளித்து விட்டு பூஜை செய்து ஐயப்பனின் மந்திரங்களை சொல்லவேண்டும்.
விரதம் இருக்கும் நாட்களில், அருவருக்கத்தக்க பேச்சுக்களையோ, அந்த மாதிரியான பாடல்களையோ அல்லது இச்சையை தூண்டும் வகையிலான பாடல்களையோ கேட்கக்கூடாது. அதே போல், பொழுதுபோக்கு அம்சங்களிலோ அல்லது திரைப்படங்களையோ பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

பிரம்மச்சரிய விரதம்

பிரம்மச்சரிய விரதம்

சபரிமலை ஐயப்பன் பிரம்மச்சரிய கடவுள் என்பதால், ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதமிருப்பவர்கள், முழுமையாக பிரம்மச்சாரிய விரதத்தை கடைபிடிக்க வேண்டும். விரும்பியபோது மாலையை கழற்றவோ, அணிவதோ கூடாது. ஒருவேளை ரத்த சம்பந்தம் உள்ளவர்களின் மரணம் ஏற்பட்டால் மட்டுமே, ஐயப்பனை வேண்டிக்கொண்டு, குருசாமியிடம் சொல்லி மாலையை கழற்றிய பிறகே துக்க நிகழ்வில் கலந்து கொள்ளவேண்டும்.

சாப்பிடவே சாப்பிடாதீங்க

சாப்பிடவே சாப்பிடாதீங்க

எந்த ஒரு காரணத்திற்காகவும் மாலையை கழற்ற நேர்ந்தால், அந்த ஆண்டு கண்டிப்பாக சபரிமலைக்கு செல்லவே கூடாது. ஓர் ஆண்டு முடிந்த பிறகே சபரிமலைக்கு செல்ல வேண்டும். பெண்களின் திருமணம் தவிர்த்து வேறு வகையான பெண்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியிலும், குழந்தை பிறந்த வீட்டுக்கும் செல்லக் கூடாது. மாலை அணிந்தவர்கள் வீடு தவிர மற்றவர்கள் வீடுகளில் சாப்பிடக்கூடாது. மாலை அணிந்தவர்களின் வீட்டுப் பெண்கள் மாத விடாய் நாட்களில், ஏழு நாட்கள் கழிந்த பின்பே அவர்கள் சமைத்த உணவை சாப்பிடலாம்.

மது மாமிசம் வேண்டாம்

மது மாமிசம் வேண்டாம்

மாமிசம், புகை பிடித்தல், போதை வஸ்த்துகள், மது போன்றவற்றை முழுமையாக தவிர்த்து விடவேண்டும். மது அருந்துபவர்களால், அதை தொடாமல் இருக்க முடியவில்லை என்றால், மாலை அணியவே கூடாது. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளில் மாலை அணிந்தவர்களுக்கு என்று தனியாக ஒரு இடத்தை ஒதுக்கி, அந்த இடத்தில் மது அருந்துவதற்கு வசதி ஏற்படுத்தி தருகிறார்கள். இதெல்லாம் ஐயப்பனுக்கும், நம்முடைய மத சம்பிரதாயங்களுக்கும் செய்யும் இழுக்காகும்.

சாமியே சரணம் ஐயப்பர்

சாமியே சரணம் ஐயப்பர்

காலணிகளை பயன்படுத்தக் கூடாது. காலணிகளை பயன்படுத்தினால், மலையேறும் போது சிரமப்பட நேரிடும் என்பதால் தான் காலணிகளை பயன்படுத்தக்கூடாது என்று சொல்லப்படுகிறது. மேலும் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குள் நுழையும்போது கால்களை கழுவிக்கொண்டு தான் வீட்டுக்குள் செல்ல வேண்டும். நம் எதிரில் வரும் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்களை ஐயப்பனாகவும், மாளிகைப்புரத்து அம்மனாகவும் மனதில் நினைத்து சாமி சரணம் என்று சொல்ல வேண்டும். அதே போல் அவர்களிடம் பேசிவிட்டு விடைபெறும் போதும் சாமி சரணம் என்று சொல்லிவிட்டு தான் செல்ல வேண்டும். மேற்கண்ட விரத முறைகளை உரிய முறையில் கடைபிடித்தால் தான், சபரிமலை ஐயப்பனை முழுமையாக தரிசித்த பலனும், அவருடைய அருளாசியும் நமக்கு கிடைக்கும்.

English summary
Those who fast for Sabarimala Ayyappan should follow fasting methods. Avoid meat, smoking, addicts, and alcohol altogether. If we observe fasting methods, we will have the benefit of the full blessing of Sabarimala Ayyappan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X