For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கார்த்திகை மாத மண்டல பூஜை - சபரிமலை ஐயப்பன் கோவில் நவ.16ல் நடை திறப்பு

இந்த ஆண்டு மண்டல பூஜை நிகழ்வும், அதனையடுத்து மகர ஜோதி தரிசனமும் நடைபெறவிருப்பதை முன்னிட்டு, ஐயப்ப பக்தர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். துளசி மாலை, வேஷ்டி போன்ற பூஜை பொருட்கள் விற்கும் கடைகளில் இப்ப

Google Oneindia Tamil News

பட்டனம்திட்டா: சபரிமலையில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் நடைபெறும் மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை வரும் 16ஆம் தேதி மாலை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். 41 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்காக கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும். இளம் பெண்களும் தரிசனத்திற்கு வருவார்கள் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல்துறையினரின் அனுமதியின்றி எந்த வாகனமும் சபரிமலைக்குள் நுழைய முடியாது என்பதால் இந்த ஆண்டும் பக்தர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.

ரம்மச்சரியா கடவுளான ஐயப்பனை மனமுருகி முறையாக 41 நாட்கள் கடுமையான விரதமிருந்து, பூஜைகள் செய்து, சபரிமலையில் நடைபெறும் மண்டல பூஜைக்கும், மகர ஜோதி தரிசனத்திற்கும் ஆண்டு தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் சென்று ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம். அதே போல், பெயரளவில் விரதமிருந்து, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

Sabarimala Ayyappan Temple to open on November 16 for Karthigai month Pooja

சபரிமலை ஐயப்பனை, ஆரம்ப காலங்களில், கேரளாவில் உள்ள பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்து வந்தனர். பின்னர் ஐயப்பனின் மகிமை இந்தியாவெங்கும் பரவியதை அடுத்து, நாடு முழுவதும் இருந்தும், ஏன் வெளிநாடுகளில் இருந்தும், முறையாக 41 நாட்கள் விரதமிருந்து பூஜைகள் செய்து, மண்டல பூஜைக்கும், மகர ஜோதி தரசின நிகழ்வை காணவும் படையெடுத்து வருகின்றனர்.

இந்த ஆண்டு மண்டல பூஜை நிகழ்வும், அதனையடுத்து மகர ஜோதி தரிசனமும் நடைபெறவிருப்பதை முன்னிட்டு, ஐயப்ப பக்தர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். துளசி மாலை, வேஷ்டி போன்ற பூஜை பொருட்கள் விற்கும் கடைகளில் இப்போதே கூட்டம் நிரம்பி வழிகின்றன.

சீக்கிரமே கார்த்திகை 1ஆம் தேதி வராதா என்று ஐயப்ப பக்தர்கள் ஏக்கத்துடன் மாலை போட காத்திருக்கின்றனர். வரும் கார்த்திகை 1ஆம் தேதியன்று அதிகாலையிலேயே குளித்து முடித்து கோவில்களில் மாலை அணிந்து விரதமிருக்க இப்போதிருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அதேபோல், சபரிமலை ஐயப்பன் கோவிலும் இப்போதே தயாராகி வருகின்றது. ஆண்டுதோறும், கார்த்திகை மாத பூஜை, மார்கழி மாத மண்டல பூஜை, தை முதல் நாள் நடைபெறும் மகர விளக்கு பூஜை மற்றம் மகரஜோதி தரிசனத்திற்காகவும், கார்த்திகை 1ஆம் தேதி தொடங்கி 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.

இந்த ஆண்டு கார்த்திகை மாத பூஜைகளுக்காக வரும் நவம்பர் 16ஆம் தேதியன்று சபரிமலை ஐயப்பன் சன்னிதான நடை திறக்கப்படவுள்ளது. வரும் 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி சபரிமலை சன்னிதான நடையை திறந்து வைத்து தீபாராதனை செய்கிறார். இதனையடுத்து மறுநாள் முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும்.

கார்த்திகை 1ஆம் தேதி நவம்பர் 17ஆம் நாள் அதிகாலை 4 மணிக்கு ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு ஐயப்பனுக்கு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. இதையடுத்து பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். நாளையிலிருந்து 41 நாட்கள் வரை அதாவது மண்டல பூஜை வரை கோயில் நடை திறந்திருக்கும்.

Sabarimala Ayyappan Temple to open on November 16 for Karthigai month Pooja

டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜை விழா முடிந்த பின்பு, மீண்டும் கோயில் நடை சாத்தப்படும். மூன்று நாட்களுக்குப் பிறகு டிசம்பர் 30ஆம் தேதியன்று மகர விளக்கு பூஜைக்காகத் திறக்கப்படும் கோயில் நடை ஜனவரி 14ஆம் தேதி வரை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர் பெண்களும் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய விரும்புவதால் இந்து அமைப்பினர் அதனை எதிர்த்து போராடி வருகின்றனர். கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் ஐயப்பன் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

English summary
The Sabarimala Ayyappan Temple will be opened on November 16th at 5 pm on the eve of Karthigai's birth, Makara Vilakku, and Mandala Pooja events. In the presence of Tantri Kandararu Mahesh Mohanaru, the Melsanthi Vasudevan Namboodiri performs the liturgical act with openings.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X