For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சகல ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் சபரிமலை ஐயப்பன் கோவில் பதினெட்டாம் படி பூஜை

Google Oneindia Tamil News

பட்டனம் திட்டா: சபரிமலையில் பதினெட்டாம் படிகளுக்கு பூஜை செய்தால் குடும்பத்தில் செல்வம் பெருகும் என்பதோடு சபரிமலை ஐயப்பனின் பூரண அருள் அந்த குடும்பத்திற்கு கிடைக்கும் என்பது ஐதீகம். இதன் காரணமாகவே பெரும்பாலான பக்தர்கள் படி பூஜை செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். படி பூஜை செய்வதற்கு முன் பதிவு செய்யவேண்டியது கட்டாயம். முன்பதிவு செய்யாமல் படி பூஜை செய்ய முடியாது. வரும் 2036ஆம் ஆண்டு வரையில் முன்பதிவு முடிந்துவிட்டது.

கோவில்களில் பூஜை நடைமுறைகள், தரிசன முறைகள், அபிஷேக ஆராதனை முறைகள் என்று ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு விதமாக பின்பற்றப்படும். இது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் ஐதீகம். அந்த கோவிலில் நடைபெறும் பூஜைகள் மற்றும் கல்யாண உற்சவம், அபிஷேகம் போன்றவற்றுக்கு பக்தர்கள் தனியாக கட்டணம் செலுத்தி தரிசனம் செய்வதுண்டு. அதே போல் விஷேச நாட்களில் சிறப்பு தரிசனம், விஐபி தரிசனம் என தனியாக பூஜை முறைகளும் உண்டு.

திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் கல்யாண உற்சவத்தை நடத்தி வைத்தால் தங்கள் வீட்டில் சீக்கிரம் கல்யாணம் நடக்கும் என்று, பக்தர்கள் கட்டணம் செலுத்தி திருக்கல்யாண உற்சவத்தை நடத்துவார்கள். அதே போல் குருவாயூர் கோவிலில், பக்தர்கள் எடைக்கு எடை நாணயம், வெல்லம் என விதம் விதமான பொருட்களை நேர்த்திகடன் செலுத்துவார்கள்.

பதினெட்டாம் படி பூஜை

பதினெட்டாம் படி பூஜை

ஐயப்பனுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போலவே சபரிமலையில் ஐயப்பன் சன்னதிக்கு செல்ல பக்தர்கள் பயன்படுத்தும் பதினெட்டாம்படி பூஜையும் முக்கியத்துவம் வாய்ந்தது. சபரிமலை ஐயப்பன் கோவில் என்றாலே ஸ்பெஷல் தான் என்பது அனைத்து மதத்தினருக்கும் தெரியும். அங்கு நடைபெறும், மண்டல பூஜை, மகர விளக்கு, மகர ஜோதி தரிசனம், மாதாந்திர பூஜை மற்றும் படி பூஜை என்று சொல்லப்படும் 18 படிகளுக்கும் நடைபெறும் பூஜையும் சிறப்பு வாய்ந்தது.

பக்தர்கள் ஆர்வம்

பக்தர்கள் ஆர்வம்

சபரிமலை கோவிலில் பல்வேறு விதமான பூஜை முறைகள் காலம் காலமாக பின்பற்றப்படுகின்றன. உஷத் கால பூஜை, உச்சி கால பூஜை, அத்தாழ பூஜை, மாதாந்திர பூஜை, உதயஸ்தமன பூஜை, அஷ்டாபிஷேகம், 1008 கலச பூஜை மற்றும் மாதாந்திர படி பூஜை அகியவை வழக்கமாக நடைபெறுவது வழக்கம். இவற்றில் பிரபலமானது 18 படிகளுக்கு நடத்தப்படும் படி பூஜை.

ரூ. 75000 கட்டணம்

ரூ. 75000 கட்டணம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் அனைத்து பூஜைகளும் விஷேசம் என்றாலும் கூட, 18 படிகளுக்கும் நடைபெறும் படி பூஜை என்பது மிகவும் பிரபலமானதும், விஷேசமானதும் ஆகும். இந்த படி பூஜை செய்வதற்கு விருப்பமுள்ளவர்கள் கட்டணம் செலுத்த வேண்டியது அவசியமாகும். இதற்கு 75 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியது அவசியம்.

செல்வம் பெருகும்

செல்வம் பெருகும்

இந்த படி பூஜையை செய்தால் குடும்பத்தில் செல்வம் பெருகும் என்பதோடு சபரிமலை ஐயப்பனின் பூரண அருள் அந்த குடும்பத்திற்கு கிடைக்கும் என்பது ஐதீகம். இதன் காரணமாகவே பெரும்பாலான பக்தர்கள் படி பூஜை செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். படி பூஜை செய்வதற்கு முன் பதிவு செய்யவேண்டியது கட்டாயம். முன்பதிவு செய்யாமல் படி பூஜை செய்ய முடியாது. வரும் 2036ஆம் ஆண்டு வரையில் முன்பதிவு முடிந்துவிட்டது.

பக்தர்கள் தரிசனம்

பக்தர்கள் தரிசனம்

இந்த படி பூஜை என்பது 18 தேவதைகளையும் 18 படிகளில் ஆவாஹணம் செய்து அவர்களை பூஜிப்பதாகும். படி பூஜை நடைபெறும்போது, 18 படிகளையும் நன்கு சுத்தம் செய்து, பட்டு விரித்து, அலங்கரித்து பூ மற்றும் பழங்களை வைத்து வெகு விமரிசையாக பூஜை நடத்தப்படும். ஆனால், படி பூஜை நடைபெறும் சமயங்களில் பக்தர்கள் படியேறுவது தடைபடுகிறது என்ற காரணத்தினால், கார்த்திகை மாதத்தில் நடைபெறும் படி பூஜையானது கடந்த 18 ஆண்டுகளான நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

கார்த்திகையில் படி பூஜை

கார்த்திகையில் படி பூஜை

பக்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும், கார்த்திகை மாதத்திலும் படி பூஜை நடத்த வேண்டும் என்று வெகு நாட்களாக கோரிக்கை விடுத்திருந்தனர்.
பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, கார்த்திகை மாதத்திலும் படி பூஜை நடத்துவதென்று தேவசம் போர்டு முடிவெடுத்தது. இதனையடுத்து கார்த்திகை மாத படி பூஜையானது கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. படி பூஜையின் போது சன்னிதானமும், 18 படிகளும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
18 படிகளுக்கும் புனித நீரை ஊற்றி சபரிமலை ஐயப்பன் கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு பூஜை செய்தார். இந்த பூஜை வரும் 24ஆம் தேதி வரையிலும் தொடர்ந்து 6 நாட்களுக்கு இரவு 7 மணி முதல் 8 மணி வரை நடைபெறும் என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

படி பூஜைக்கு முன்பதிவு

படி பூஜைக்கு முன்பதிவு

பதினெட்டாம் படி பூஜையை செய்தால் குடும்பத்தில் செல்வம் பெருகும் என்பதோடு ஐயப்பனின் பூரண அருள் அந்த குடும்பத்திற்கு கிடைக்கும் என்பது ஐதீகம். இதன் காரணமாகவே பெரும்பாலான பக்தர்கள் படி பூஜை செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். படி பூஜை செய்வதற்கு முன் பதிவு செய்யவேண்டியது கட்டாயம். முன்பதிவு செய்யாமல் படி பூஜை செய்ய முடியாது. வரும் 2036ஆம் ஆண்டு வரையில் முன்பதிவு முடிந்துவிட்டது.

English summary
According to the ritual, the family will get rich and will get the full blessing of Sabarimala Ayyappan. This is why most devotees are more interested in performing Sabarimala Padi Pooja. The Online booking has completed till 2036.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X