• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சமத்துவ பொங்கல் - குருவிற்கு 22 ஆம் ஆண்டு ஆராதனை விழா

By Mayura Akilan
|

வேலூர்: சமத்துவ பீடமாக அமைந்துள்ள வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உழவர் திருநாளை முன்னிட்டு 14ஆ ம் ஆண்டு சமத்துவ பொங்கலுடன் சமய நூல் வழங்கும் விழா நடைபெற்றது. குருவிற்கு 22 ஆம் ஆண்டு ஆராதனை விழா நடைபெற்றது.

பொங்கல் தினமான நேற்று காலை 6.00 மணிக்கு கோபூஜை, நித்ய பூஜைகள், ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மிக்கும் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

நாட்டு நலனுக்காகவும், விவசாய பெருமக்களின் நலனுக்காகவும் இயற்கை வளத்திற்காகவும் ஸ்ரீ சூக்த ஹோமம், பூ சூக்த ஹோமம், தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமம், ஆரோக்ய லக்ஷ்மி ஹோமமும், 27 நட்சத்திரங்கள், 9 நவகிரகங்களுக்குரிய விருட்சங்களுக்கு காலச்சக்ர பூஜையும், நடைபெற்றது.

சமத்துவ பொங்கல்

சமத்துவ பொங்கல்

தன்வந்திரி பீடத்தில் உள்ள சேவார்த்திகளும் பக்தர்களும் சேர்ந்து வண்ணக் கோலமிட்டு தோரணங்கள் அமைத்து புதிய அடுப்பு செய்து புதுபானையில் பொங்கல் வைத்து, கரும்பு, மஞ்சள், பூசணியிலை, வாழை இலை போன்ற பொருட்களில் பழ வகைகள், பல வண்ண புஷ்பங்களுடன் சூரிய பகவானுக்கு படைத்து பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல் என்ற கோஷத்துடன் பக்தர்கள் சூரிய வழிபாடு செய்தனர்.

பெரியபுராணம்

பெரியபுராணம்

இதனை தொடர்ந்து அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய தேவராம், மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், சேக்கிழார் எழுதிய பெரியபுராணம் போன்ற பன்னிரு திருமுறைகள், மற்றும் கம்பராமாயணம், திருவிளையாடல் புராணம், கண்ணனின் பகவத்கீதை, மஹாபாரதம், திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், அதே போல் 12 ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்தம், என பல்வேறு சமயநுல்களும் வழங்கப்பட்டது.

பக்தியும் ஒழுக்கமும்

பக்தியும் ஒழுக்கமும்

ஆன்மிகம் வளரவும், நற்சிந்தனைகள் தழைத்தோங்கவும், அவரவர்களின் மத குருமார்களையும், தெய்வங்களையும் பக்தியுடனும், சிறத்தையுடனும் வழிபட வேண்டியும், நல் ஒழுக்கமும், மனித நேயமும், மத நல்லிணக்கமும், தர்ம சிந்தனைகளும், தழைத்தோங்க வேண்டியும் என்ற உயரிய நோக்கத்தில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கி ஆசிர்வதித்தார். இதில் அனந்தலை கிராம முன்னாள் தலைவர் திரு. வெங்கடேசன், முன்னாள் துணை தலைவர் திரு. ராஜேந்திரன், ஊர் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள், மானவ மாணவியர்கள் ஏராளமானவர் பங்கேற்றனர்.

ஸ்ரீதன்வந்திரி பெருமாள்

ஸ்ரீதன்வந்திரி பெருமாள்

தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் 468 சித்தர்கள் 75 விதமான திருச்சன்னதிகள் உள்ளன. ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கும், ஸ்ரீ கூர்ம லக்ஷ்மி நரசிம்மர், ஸ்ரீ சத்திய நாராயணர், ஸ்ரீ பட்டாபிஷேக ராமர், ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சனேயார், ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் சந்நிதிகள் உள்ளன.

மகான்களின் ஆலயம்

மகான்களின் ஆலயம்

யக்ஞஸ்வரூபிணி ஸ்ரீ ஐஸ்வர்ய ப்ரித்யங்கிரா தேவி, ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி, ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர், ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீ மரகதேஸ்வரர் மஹா அவதார பாபா, வல்லலார், குழந்தையானந்த ஸ்வாமிகள், காஞ்சி மஹாபெரியவர், ஸ்ரீ ராகவேந்திரர், போன்ற பல்வேறு தெய்வங்களுக்கும் மஹான்களுக்கும் 468 சித்தர்களுக்கும் 75 வித விதமான திருச்சன்னதிகள் அமைத்துள்ளார்.

குருபூஜைகள்

குருபூஜைகள்

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தை பெற்றோர்களுக்கு அர்ப்பணைக்கும் விதத்திலும் வரும்கால சந்ததிகள் பெற்றோர்களின் அருமை பெருமைகளை தெரிந்துகொள்ளும் விதத்திலும் ஸ்வாமிகளின் பெற்றோர்களுக்காக, எண்ணற்ற மஹான்கள், சாதுக்கள், சன்னியாசிகள், ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள், பக்தர்கள், தன்வந்திரி குடும்பத்தினர்கள் முன்னிலையில் தன்வந்திரி பீடத்தில் ஆலயம் அமைத்து பிரதி தினம் ஹோமங்கள், நிவாரண பூஜைகள், ஜயந்தி விழாக்கள், ஆராதனைகள், குரு பூஜைகள், மகேஸ்வர பூஜைகள் நடத்தி வருகிறார்.

தை மாதம் குருபூஜை

தை மாதம் குருபூஜை

தை மாதம் சதுர்தசி திதி அவருடைய தந்தையும் குருவுமான ஸ்ரீ. ஊ.வே.ஸ்ரீனிவாச ஐயங்காருக்கு 22 ஆம் ஆண்டு ஆராதனை நாள் என்பதால் அவர்களுக்காக அமைத்துள்ள ஆலயத்திலும், ஸ்ரீபாத அஸ்தி மண்டபத்திலும் சிறப்பு அபிஷேகமும், ஹோம பூஜைகளும், ஆராதனையும் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் திருக்கரங்களால் நடைபெற்றது.
இதில் ஸ்வாமிகளின் குடும்பத்தினர்கள், தன்வந்திரி பக்தர்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டு குருவின் குரு அருள் பெற்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

 
 
 
English summary
Samathuva pongal festival gurupoojai Vizha in Dhanvanthiri peedam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X