For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காகத்திற்கு எள் சாதம் வைங்க... சனி தோஷம் நீங்கும்

சனி தோஷம் பிடித்து ஆட்டுகிறதே என்று கவலைப்படுபவர்கள் பலர் இருக்கின்றனர். எந்த வேலை செய்தாலும் தடங்கலாக இருக்கிற என்று அஞ்ச வேண்டாம் காகத்திற்கு தினம் சாதம் வைத்தால் தோஷம் நீங்கும் என்று சித்தர்கள் கூற

Google Oneindia Tamil News

சென்னை: எந்த காரியம் செய்தாலும் கல்லில் முட்டியது போல இருக்கே என்று கவலைப்படுகிறீர்களா? ஏழரை சனி,கண்ட சனி அஷ்டமசனி போன்ற பாதிப்பு சிலரை வாட்டி எடுக்கும் அவர்கள் காகத்திற்கு தினசரி எள் கலந்த சாதம் வைக்க நன்மைகள் நடைபெறும்.

காகம் வடிவில் முன்னோர்கள் இந்த பூவுலகில் உலா வருகின்றனர் என்பது நம்பிக்கை. காகத்திற்கு உணவு வைத்தால் எத்தகைய தோஷங்களும் நிவர்த்தியாகும்.

Sani Dhosham remedies to remove dhosham

ஏழரை சனி, அஷ்டம சனி, கண்ட சனி, ஜன்ம சனி, அர்த்தாஷ்டம சனி, மற்றும் சனிதிசை, சனிபுக்தி, சனிஅந்தரம் நடைபெறும் பொழுது பல இன்னல்களுக்கு மக்கள் ஆளாகின்றனர். அதனால் காரியத்தடை, திருமணத்தடை, குழந்தை பாக்யதடை, தொழில் அபிவிருத்தி தடை போன்ற பலதடைகளும் ஏற்பட்டு மன உளைச்சளுக்கு ஆளாகி வருகின்றனர்.

எடுத்த காரியங்களில் தோல்வி, பண முடக்கம், வம்பு, சண்டை, விரக்தி, தொழில் முன்னேற்றமின்மை எதிர் காலமே சூன்யமானது போன்ற இன்னல்களுக்கு ஆளாகின்றனர். சனி தோஷம் விலகவும், காரியத்தடைகள் நீங்கவும் சில பரிகாரங்களை சித்தர்கள் கூறியுள்ளனர்.

சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றிவழிபடவும். கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம். தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.

சனிக்கிழமை விரதம் இருந்து பெருமாளை வழிபட்டு, காக்கைக்கு உணவு வைக்க சனி பகவான் தோஷத்தில் இருந்து விடுபடலாம்.
வன்னி மர இலைகளை மாலையாக தொடுத்து சிவபெருமானுக்கு, சனிக்கிழமை தோறும் சாத்தி வழிபட்டு வரலாம்.

சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் குளியல் செய்தால் தீமைகள் குறையும். சனிக்கிழமை அசைவ உணவை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

ஆஞ்சநேயருக்கு வடை மாலை அல்லது வெற்றிலை மாலை சாத்தி வழிபடுதல் வேண்டும். அனுமன் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளை குறைக்கும். ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம். தேய்பிறை அஷ்டமி தினத்தில் கால பைரவரை வணங்குவது பலன் தரும்.

சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் கீல்வாதம், முதுகு வலி மற்றும் தசை சீர்குலைவு போன்ற பிரச்சனைகளில் இருந்து தீர்வு காணலாம். இந்த விரதம் ஒருவரை நம்பிக்கை மிக்கவராக மாற்றி, மன அழுத்தத்தில் இருந்து அவர்களை விடுவிக்கும். இந்த விரதத்தை அனுஷ்டிக்க சனிக்கிழமைகளில் உபவாசம் இருந்து மாலையில் சனி பகவானுக்கு எள்தீபம் ஏற்ற வேண்டும்.

அன்றைய தினம் ஏழைகளுக்கு அல்லது உடல் ஊனமுற்றவர்களுக்கு தானம் கொடுக்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் சனி காயத்ரி படிக்க வேண்டும். இதனை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் சனியில் ஏற்படும் பிரச்சனைகள் படிப்படியான குறையும்.

English summary
Know in detail, what is shani dosha; besides the shani dosh causes and its effects, also informed are how to remove shani dosha and its remedies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X