For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சனிப்பெயர்ச்சி 2020-2023 : சனி புத்தி நடந்தாலும் பாதிப்பு எப்படி இருக்கும் தெரியுமா?

சிலர் பணக்காரணாக செல்வ செழிப்புடன் இருப்பார்கள். திடிரென பிச்சைக்காரனாக எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்து விடுவார்கள்.. இதெல்லாம் மோசமான திசை வரும் போதும் மோசமான புத்தி வரும் போதும் நடக்கும்

Google Oneindia Tamil News

Recommended Video

    28-08-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ

    சென்னை: அசுவினி தொடங்கி ரேவதி வரை 27 நட்சத்திரங்களும் 9 கோள்கள் அதிபதியாக உள்ளன. எந்த திசை நடந்தாலும் ஒவ்வொரு முறையும் சனி புத்தி ஏதாவது ஒரு கால கட்டத்தில் நடக்கும். அப்போதுதான் அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப சனிபகவான் நல்லதும் கெட்டதுமான பலன்களைத் தருவார். கோடீஸ்வரராக இருந்த கபே காபிடே ஓனர் கூட திடீர் கடனாளியாகி தற்கொலை செய்து கொண்டு சாகும் நிலைக்கு தள்ளப்பட்டது கூட புத்தியின் பலன்தான். சிலருக்கு ராகு திசையில் சனி புத்தி நடைபெறும் போது ராகுவும் சனியும் சரியில்லாத நிலையில் இருந்தால் இந்த நிலை ஏற்படும். சனி புத்தியில் என்னென்ன நடக்கும் என சாதக பாதகங்களை பார்க்கலாம்.

    புத்தி என்பது, ஒவ்வொரு திசையிலும் நவகிரகங்களும் தன் ஆதிக்கத்தை செலுத்தும். சனி திசை சனி புத்தியில் தொடங்கி புதன் புத்தி, கேது புத்தி, சுக்கிர புத்தி, சூரிய புத்தி, சந்திர புத்தி, செவ்வாய் புத்தி, ராகு புத்தி, வியாழன் புத்தி என தொடர்ந்து வரும். ஒருவர் பூசம், ஹஸ்தம், உத்திரட்டாதியில் பிறந்தவர்களுக்கு சனி அதிபதி. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிறக்கும் போதே சனி மகா திசை நடக்கும்.

    கேது திசை தொடங்கி புதன் திசை வரை மனிதர்களுக்கு தசாபுத்தி நடக்கும் போது சனி புத்தி ஏதாவது ஒரு கால கட்டத்தில் சில ஆண்டுகள் நடக்கும். சனி புத்தி நடக்கும் போது சனி இருக்கும் இடத்தை பொறுத்து சுப பலன்களோ அசுப பலன்களோ உண்டாகும். சனி புத்தி நடக்கும் போதும் சிலருக்கு உடல்நலக்குறைவு, பொருள் நஷ்டம் ஏற்படும். ஜாதகத்தில் சனி எந்த இடத்தில் இருக்கிறது என்பதைப் பொறுத்து பலன்கள் மாறுபடும்.

    ஒரு கிரகம் ஒருவருக்கு ஜாதகப்படி நல்ல இடத்தில் அமைந்து அந்த கிரகத்தின் தசை வரும் போது ராஜவாழ்க்கை தான். அதே போல புத்தியும் நல்லதாக இருந்தால் நல்ல விசயங்கள் தானாக நடக்கும். ஜாதகருக்கு தற்போது எந்த திசை நடப்பதாக இருந்தாலும் முதலில் விநாயக பெருமானை வழிபட்டு பின்பு, எந்த திசை நடக்கிறதோ அந்த திசைக்கேற்ற இறைவனை வழிபட நன்மைகள் தொடங்கும்.

    பலமான சனியால் நன்மை

    பலமான சனியால் நன்மை

    சனிதிசை சனி புக்தியானது 3 வருடங்கள் 3 நாட்கள் நடைபெறும். சனிபலம் பெற்று அமைந்திருந்தால் இரும்புப் பொருட்கள் மற்றும் வண்டி வாகனங்களால் அனுகூலங்கள், அரசு வழியில் அனுகூலம், பெயர் புகழ் உயரும் வாய்ப்பு, ஆடை ஆபரண சேர்க்கை, பகைவரும் நட்பாக மாறும் அமைப்பு, உற்றார் உறவினர்களால் உதவி, மனைவி பிள்ளைகளுடன் ஒற்றுமை, ஆசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் போன்ற யாவும் உண்டாகும்.

    கடன் பிரச்சினை வரும்

    கடன் பிரச்சினை வரும்

    சனி பலமிழந்திருந்தால் தொழில் வியாபாரத்தில் நஷ்டம், வேலையாட்களால் நிம்மதி குறைவு, மறைமுக எதிர்ப்புகளும் பகைவர்களும் அதிகரிக்க கூடிய நிலை, தேவையற்ற மனசஞ்சலம், பணநஷ்டம் மனைவி புத்திரர்களால் கடன் படும் நிலை, சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை, எலும்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகள், வீண்பழிகளை சுமக்கும் நிலை, சிறை செல்லும் அமைப்பு போன்றவை ஏற்படும்.

    சாதக பாதகங்கள்

    சாதக பாதகங்கள்

    கேது திசையில் சனிபுக்தியானது 1வருடம் 1மாதம் 9நாட்கள் நடைபெறும். சனி பலம் பெற்றிருந்தால் இரும்பு மற்றும் கருப்பு நிற பொருட்கள் மூலம் லாபம் வரும். திருமணம் புத்திர பாக்கியம் அமையும். உயர் பதவிகள், பொன் பொருள், வண்டி வாகனம் சேரும். சனி பலமிழந்திருந்தால் கடுமையான சோதனைகள், உடல் நிலையில் பாதிப்பு, வீண் விரயம் தாய் தந்தைக்கு தோஷம் எதிர்பாராத விபத்துகளால் உடல் உறுப்புகளை இழக்கும் நிலை ஏற்படும்.

    லாபமும் நஷ்டமும்

    லாபமும் நஷ்டமும்

    சுக்கிர திசையில் சனிபுக்தியானது 3வருடம் 2மாதம் நடைபெறும். சனி பலம் பெற்றிருந்தால் இரும்பு சம்மந்தப்பட்ட தொழிலில் மேன்மை, அரசு வழியில் அனுகூலம். வண்டி வாகனம் அசையா சொத்துக்கள் சேரும் யோகம், நிறைய வேலையாட்களை வைத்து வேலை வாங்கும் அமைப்பு போன்ற அனுகூலமான பலன்கள் உண்டாகும். சனி பலமிழந்திருந்தால் எலும்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் எதிர்பாராத விபத்துக்களால் கண்டம் மற்றவர்களிடம் அடிமையாக தொழில் செய்யும் அமைப்பு வண்டி வாகனங்களை இழக்கும் நிலை ஏற்படும்.

    தற்கொலை எண்ணம்

    தற்கொலை எண்ணம்

    ராகு திசையில் சனிபுக்தியானது 2 வருடம் 10 மாதம் 6 நாட்கள் நடைபெறும். சுய ஜாதகத்தில் சனிபகவான் பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் ஒற்றுமை, சுகமான வாழ்க்கை, சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். தன தான்ய அபிவிருத்தி, தொழில் வியாபார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரண சேர்க்கை, அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சனிபகவான் பலமிழந்து புக்தி நடைபெற்றால் எதிர்பாராத விபத்துக்களால் ஊனமாகும் நிலை, மனைவி பிள்ளைகளுக்கு உடல் நிலை பாதிப்பு வரும். பூர்வீக சொத்துக்களை இழக்கும் நிலை, புத்திரதோஷம், வீண் வம்பு வழக்குகள், கடன் தொல்லையால் அவமானம் போன்றவை ஏற்படும் சிலருக்கு தற்கொலை வரை கொண்டுபோய் விடும்.

    வண்டி வாகன யோகம்

    வண்டி வாகன யோகம்

    குருதிசையில் சனிபுக்தியானது 2 வருடம் 6 மாதம் 12 நாட்கள் நடைபெறும். சுய ஜாதகத்தில் சனி பலம் பெற்றிருந்தால் தன தான்யம் பெருகும், இரும்பு சம்மந்தப்பட்டத் தொழிலில் அதிக லாபம் கிட்டும். சேமிப்பு பெருகும். அரசு வழியில் உயர்வான பதவிகள் கிட்டும். வண்டி வாகன யோகம், சேமிப்பு பெருகும் யோகம், அதிக வேலையாட்களை அமர்த்தி சிறப்பாக வேலை வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். சனி பகவான் பலமிழந்திருந்தால் பண வரவுகளில் நஷ்டம், அரசு வழியில் தொல்லை, அபராதம் செலுத்தும் நிலை உண்டாகும். வண்டி வாகனங்களால் விபத்துகள் ஏற்படும். உறவினர்கள் நண்பர்களால் பிரச்சனைகளை சந்திக்க கூடிய சூழ்நிலை உண்டாகும்.

    தெய்வ பக்தியால் நன்மை

    தெய்வ பக்தியால் நன்மை

    புதன் திசையில் சனி புக்தியானது 2 வருடம் 8 மாதம் 9 நாட்கள் நடைபெறும். சனி பகவான் பலம் பெற்றிருந்தால் தொழில் வியாபாரம் முலம் லாபம், இரும்பு சம்பந்தபட்ட தொழிலில் அனுகூலம் ஏற்படும். தன தான்ய விருத்தி, ஆடை ஆபரணம் சேரும் புண்ணிய தீர்த்த யாத்திரை, தெய்வ பக்தி உண்டாகும். அதே நேரத்தில் சனி பகவான் பலமிழந்திருந்தால் விபத்துகளை சிந்திக்கும் நிலை ஏற்படும். ஊரை விட்டு ஒதுங்கி வெளியூரிலோ, வெளி நாட்டிற்கோ சென்று வாழும் நிலை ஏற்படும். திருமணதடை வீண் பழி, வம்பு வழக்குகளை சந்திக்க வேண்டியிருக்கும். தொடர் தோல்விகள் ஏற்படும்.

    விநாயகர் ஆஞ்சநேயர்

    விநாயகர் ஆஞ்சநேயர்

    சனி பகவானால் ஏற்படும் சங்கடங்களை சரி செய்ய விநாயகர் வழிபாடு நன்மை செய்யும், ஆஞ்சநேயரை வழிபடலாம். சனிபகவானின் குருவான பைரவரை வழிபட பாதிப்புகள் குறையும். எண்ணம் போல் வாழ்வு என்பார்கள் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

    English summary
    Saturn Bhukti Effects Remedies To Reduce The Impact Saturn is generally perceived as a potent malefic planet which is believed to impart mostly with negative effects and in some cases it might be extremely benefic based on its placement in one’s horoscope. Shani can also relax as astrologers have found several ways to control the adverse effects that come with it and reduce its impact.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X