• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சனிப்பெயர்ச்சி 2020: சனிபகவானுக்கு எது ரொம்ப பிடிக்கும் - எது பிடிக்காது தெரியுமா

|
  Sani Peyarchi 2020 | Mesham | சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- மேஷ ராசிக்கு பலன்கள் எப்படி ?

  சென்னை: திருக்கணிதப்பஞ்சாங்கப்படி சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு தை 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் இடப்பெயர்ச்சி அடைகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி சனிபகவான் இடப்பெயர்ச்சி டிசம்பர் 27ஆம்தேதிதான் என்று திருநள்ளாறு ஆலயம் அறிவித்துள்ளது என்றாலும் சனிபகவான் செய்யும் மாயங்கள் இப்போது முதலே 12 ராசிக்காரர்களுக்கும் செயல்பட ஆரம்பித்திருக்கும். சனிபகவானுக்கு பிடித்தது என்ன பிடிக்காதது என்ன? என்று அவரது பயோடேட்டாவை பார்க்கலாம்.

  சனிபகவானுக்கு பிடித்த தானியம் எள். அந்த எள்ளில் இருந்து எடுக்கப்பட்ட நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அவரை மனதார வேண்டினால் நன்மையே நடக்கும். ஈஸ்வரப்பட்டம் பெற்றவர் சனீஸ்வரன். அவரவர் வினைக்கேற்ப பலன்கனை வழங்குவதில் நீதி தவறாதவர் சனீஸ்வரன். எனவேதான் மக்களுக்குச் சனிபகவானிடம் சற்று அச்சம் உண்டு

  தொழில் காரகன் கர்ம காரகன் ஆன சனி பகவான் ஆட்சி பெற்றால் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஆற்றல் உள்ளவர், கடும் உழைப்பினால் உயர்ந்த இடத்திற்கு வருபவர், நிலையான சொத்துக்கள், நிலம், வாகனம், வீடு ஆகியவற்றை சேர்ப்பவர், தீர்க்காயுள் உள்ளவர்.

  ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவான் உச்சம் பெற்றிருந்தால் அவர் தொழில் துறையில் சாதனை படைப்பவராகவும் மேலும் தொழில் துறை சார்ந்த சங்கங்களில் தலைமை பொறுப்புகளில் வருபவராகவும் ஆவார், கோயில் ஆன்மீக திருப்பணிகளில் செல்வாக்கு பெற்றவர், நீதிமானாக திகழ்வார், கர்ம வீரராக திகழ்வார், தன் இலட்சியத்தை நோக்கி பொறுமையாக நகர்ந்து வெற்றி அடைவார்.

  சனி பயோடேட்டா

  சனி பயோடேட்டா

  சனிபகவானின் நட்சத்திரங்கள் - பூசம், அனுஷம், உத்திரட்டாதி, பால் - அலி நிறம் - கறுப்பு தேவதை - யமன் பிரத்தியதி தேவதை -பிரஜாபதி இரத்தினம் - நீலக்கல் மலர் - கருங்குவளை குணம் - குருரன் ஆசன வடிவம் - வில் தேசம் - சௌராஷ்டிரம் சமித்து - வன்னி திக்கு - மேற்கு சுவை - கசப்பு உலோகம் - இரும்பு வாகனம் - காகம் பிணி - வாதம்,வாய்வு தானியம் - எள் காரகன் - ஆயுள் ஆட்சி - மகரம், கும்பம் உச்சம் - துலாம் நீசம் - மேஷம் மூலத்திரிகோணம் - கும்பம் நட்பு - புதன், சுக்கிரன், இராகு, கேது பகை - சூரியன், சந்திரன், செவ்வாய் சமம் - வியாழன் உபகிரகம் - குளிகன் உறுப்பு - தொடை திசை காலம் - 19 வருடங்கள் கோசார காலம் - இரண்டரை வருடம் ஸ்தலம் - திருநள்ளாறு, குச்சனூர்

  சனியின் நிறம் கருப்பு

  சனியின் நிறம் கருப்பு

  சனிபகவானுக்கு பிடித்த நிறம் கருப்பு என்று எல்லோருக்கும் தெரியும். கருப்பு நிற துணியை வைத்து வழிபடுவதை சனிபகவான் மிகவும் விரும்புவார். சனிக்கிழமை அதிகாலை வேளைகளில் குளித்து விட்டு சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபம் போடலாம். சுந்தர காண்டம் பாராயணம் செய்வதும் ஏழரைச் சனியின் தோஷத்தை குறைக்கும். சனியின் கோபப் பார்வையில் இருந்து தப்பிக்க காக்கைக்கு தினந்தோறும் சாதம் வைக்க வேண்டும். உளுந்து தானியத்தை தானம் செய்யலாம்.

  மாற்றுதிறனாளிகளுக்கு உதவி

  மாற்றுதிறனாளிகளுக்கு உதவி

  பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், முதியோர்கள், ஆதரவற்றோர், கடின உழைப்பாளிகள், தொழிலாளிகள், பாரம் தூக்குவோர், துப்புரவு தொழிலாளிகள் போன்றவர்களுக்கு செய்யும் உதவியும், தொண்டும் சனீஸ்வரருக்கு மிகவும் பிடித்தமானதாகும்.

  நல்லெண்ணெய் தீபம்

  நல்லெண்ணெய் தீபம்

  சனி தசை, சனி புத்தி, ஏழரை சனி, அஷ்டமத்து சனி, அர்தாஷ்டம சனி, கண்டச்சனியால் பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமைகளில் சிவன் கோவிலுக்குப் போய் விளக்கு போடுங்க. காகத்திற்கு தயிர் கலந்த எள் சாதம் வையுங்க. காகம் சனியின் வாகனம், நம் முன்னோர்கள் காகங்கள் வடிவத்தில் நம்மை பார்க்க வருகின்றனர் எனவே முன்னோர்கள் வழிபட்டால் சனிபகவான் மகிழ்ச்சி அடைவார்.

  சனிக்கு பிடிக்காத விசயங்கள்

  சனிக்கு பிடிக்காத விசயங்கள்

  தாமிரம் சூரிய பகவானுக்கு உகந்தது. சனிபகவானுக்கு உகந்தது இரும்பு பாத்திரம். எனவே தாமிர பாத்திரங்களை யாருக்கும் தானமாகக் கொடுக்க வேண்டாம். இது சனிபகவானின் கோபத்தை அதிகரிக்க கூடிய ஒன்றாகும். இதனால் தானம் கொடுப்பவருக்கும் அதை வாங்குபவருக்கும் நஷ்டம் மற்றும் உடல்நிலை கோளாறு ஏற்படலாம். அதே போல கத்தரிக்கோலை கொடுக்காதீங்க அதுவும் சிக்கலாகி விடும்.

  சிவப்பு துணி கொடுக்காதீங்க

  சிவப்பு துணி கொடுக்காதீங்க

  சனிக்கிழமை அன்று யாருக்காவது நீங்கள் சிவப்பு நிற துணியை தானமாகக் கொடுக்க வேண்டாம் ஏனெனில் அது உங்களுக்கு சமூகத்தில் பெரிய அவமானத்தை ஏற்படுத்தக்கூடும். சனிக்கிழைமைகளில் வெள்ளை துணியை பரிசளிப்பது உங்களுக்கு திருமணம் தொடர்பான பல பிரச்சினைகளை உண்டாக்கும். கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்படும்.

  சனியை சாந்தப்படுத்துங்கள்

  சனியை சாந்தப்படுத்துங்கள்

  நீதி நேர்மை இல்லாதவர்கள், சுத்தம் இல்லாத வீடுகள், அழுக்கான ஆடை அணிபவர்கள், பிறன்மனை நோக்கும் ஆண்கள், அடுத்தவர்கள் வாழ்க்கையை கெடுக்க நினைக்கும் வஞ்சக எண்ணம் கொண்டவர்களைக் கண்டாலே சனிபகவானுக்குப் பிடிக்காது. சனியை சாந்தப்படுத்தும் வகையில் வணங்குங்கள் நல்லதே நடக்கும்.

   
   
   
  English summary
  Physically the planet Saturn represents Shani Dev. Shani is also the brother of Yama and is considered the god of justice. Shani Dev is black in complexion and is born to Chaya Devi and Lord Surya Dev (Sun god). The story of Shani is quite interesting and revealing of his incomparable powers and qualities.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
  X