For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சனிப்பெயர்ச்சி: தனுசுவில் இருந்து மகரத்திற்கு இடம் பெயர்ந்தார் சனி பகவான்

இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி திருக்கணிதப்படி இன்று தை 10ஆம் தேதி ஜனவரி 24ஆம் தேதி காலை 10.03க்கு நிகழ்ந்துள்ளது. சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் பிரவேசித்துள்ளார். பரிகாரம் செய்பவர்கள் பர

Google Oneindia Tamil News

Recommended Video

    Sani Peyarchi 2020 | Mesham | சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- மேஷ ராசிக்கு பலன்கள் எப்படி ?

    சென்னை: இதுநாள் வரை தனுசு ராசியில் சஞ்சரித்த சனிபகவான் மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். திருக்கணித பஞ்சாங்கப்படி இந்த சனிப்பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது. வாக்கியப் பஞ்சாங்கத்துக்கும் திருக்கணிதத்துக்கும் இடையிலான சனிப்பெயர்ச்சி குறித்த இடைவெளி பொதுவாக ஒருசில மாதங்கள் மட்டுமே இருக்கும். இந்த ஆண்டு பன்னிரண்டு மாத இடைவெளிக்குக் காரணம் 2017ஆம் ஆண்டு நிகழ்ந்த சனிப்பெயர்ச்சிதான்.

    திருக்கணிதப்படி 2017ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதியே சனி பகவான், மூல நட்சத்திரம் தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிவிட்டார். அதன் பிறகு, 2017 ஜூன் 21ஆம் தேதி வக்கிரமாகி விருச்சிக ராசிக்கு வந்த சனிபகவான் மீண்டும் தனுசு ராசிக்கு அக்டோபர் மாதம் பெயர்ச்சியாகிவிட்டார்.

    வாக்கிய பஞ்சாங்கப்படி டிசம்பர் 19, 2017 ல் தான் நிகழ்ந்தது. அதே போல இந்த ஆண்டும் இன்று திருக்கணிதப்படி சனிப்பெயர்ச்சி நிகழ்கிறது. வாக்கிய பஞ்சாங்கப்படி டிசம்பர் 26ஆம் தேதி நிகழ உள்ளது.

    கிரகப்பெயர்ச்சி

    கிரகப்பெயர்ச்சி

    நவகிரகங்கள் தினசரியும் நகர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. கிரகங்களின் சஞ்சாரம் மனித வாழ்க்கையில் சில மாறுபாடுகளையும் நன்மைகளையும் தீமைகளையும் ஏற்படுத்துகிறது. சந்திரன் சீக்கிரம் நகரும் கிரகம், ஒரு ராசியில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறையும் சனி பகவான் மெதுவாக நகர்பவர் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகளும் சஞ்சரிக்கிறார். குரு ஓராண்டுக்கு ஒருமுறையும், ராகு கேது கிரகங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறையும் இடப்பெயர்ச்சி அடைகின்றன. சனிபகவான் என்றாலே பயம்தான் எனவேதான் சனிப்பெயர்ச்சி அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழகத்தில் வாக்கிய பஞ்சாங்கம்

    தமிழகத்தில் வாக்கிய பஞ்சாங்கம்

    தமிழகத்தில் பெரும்பாலான ஆலயங்களில் வாக்கியப் பஞ்சாங்கமே பின்பற்றப்படுகிறது. ஆற்காடு ஸ்ரீ சீதாராமையர் சர்வ முகூர்த்த பஞ்சாங்கம், திருநெல்வேலி பஞ்சாங்கம், ராமநாதபுரம் வாக்கியப் பஞ்சாங்கம், 28-ம் நம்பர் பாம்புப் பஞ்சாங்கம், ஸ்ரீ காஞ்சி மடத்து பஞ்சாங்கம், சிருங்கேரி மடம் பஞ்சாங்கம், ஸ்ரீரங்கம் வாக்கிய பஞ்சாங்கம், ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் தேவஸ்தான வாக்கியப் பஞ்சாங்கம், திருக்கோயில் அனுஷ்டான பஞ்சாங்கம் என்பவை புகழ்பெற்ற வாக்கியப் பஞ்சாங்கப் புத்தகங்களாகும்.

    திருப்பதியில் திருக்கணிதம்

    திருப்பதியில் திருக்கணிதம்

    வாக்கியப் பஞ்சாங்கத்தைப் போன்றே முக்கியத்துவம் வாய்ந்த பஞ்சாங்கங்களாகக் கருதப்படுவது திருக்கணிதப் பஞ்சாங்கம். திருக்கணித முறைப்படி இன்று சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. இரு பஞ்சாங்கங்களின் அடிப்படையில் சாதாரணமாக ஓரிரு மாத இடைவெளிகளில் நிகழும் கிரகப்பெயர்ச்சி ஏன் இந்த முறை ஏறக்குறைய ஓராண்டுக்கால இடைவெளியில் நிகழ்கிறது.

    திருநாள்ளாறு சனி பகவான்

    திருநாள்ளாறு சனி பகவான்

    தமிழகம் தவிர இந்தியாவின் பல மாநிலங்களில் திருக்கணிதப் பஞ்சாங்கத்தையே பின்பற்றுகின்றன. மத்திய அரசு அங்கீகரித்துள்ள ராஷ்ட்ரிய பஞ்சாங்கம் திருக்கணிதத்தால் ஆனது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமலை திருப்பதி தேவஸ்தானமும் திருக்கணிதப் பஞ்சாங்கத்தை ஏற்றுக்கொண்டு கடைப்பிடித்துவருகிறது. வாக்கியப் பஞ்சாங்கம் தமிழ்நாட்டில் மட்டுமே பின்பற்றப்படுகிறது. திருநள்ளாறு ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி வாக்கியப்பஞ்சாங்கப்படி பின்பற்றப்படுகிறது.

    மகரத்தில் சனிபகவான்

    மகரத்தில் சனிபகவான்

    இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி திருக்கணிதப்படி இன்று தை 10ஆம் தேதி ஜனவரி 24ஆம் தேதி காலை 10.03க்கு நடைபெறுகிறது. சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் பிரவேசித்துள்ளார். பரிகாரம் செய்பவர்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம்.

    திருக்கணிதம் சரிதான்

    திருக்கணிதம் சரிதான்

    பஞ்சாங்கத்தில் இருக்கக் கூடிய நேர மாறுபாடு, கிரகங்களின் இயக்கம் உள்ளிட்டவற்றை சரிசெய்யும் பொருட்டு காஞ்சி மகா பெரியவரின் உத்தரவின் பெயரில் ஜோதிடர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் இந்தியாவில் உள்ள பல்வேறு ஜோதிடர்களை அழைக்கப்பட்டிருந்தனர். அந்த கூட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள திருக்கணித பஞ்சாங்கம் தான் சரி என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கும்பத்திற்கு ஏழரை தொடங்குகிறது

    கும்பத்திற்கு ஏழரை தொடங்குகிறது

    தற்போது பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் பெரும்பாலும் திருக்கணித பஞ்சாங்க முறைப்படி தான் ஜாதாகம் கணிக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணத்தால் திருக்கணித முறைப்படியிலான கிரக பெயர்ச்சி பின்பற்றுவது அவசியமாகிறது. எனவே இந்த சனிப்பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிவடைகிறது. அதே நேரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது.

    English summary
    Saturn is changing its Sign from 24th January 2020. This transit on Tirukanitha panchangam.Know how it will affect you in both good and bad ways.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X