அட்டம சனி, அர்த்தாஷ்டம சனியா?... கலங்க வேண்டாம் #சனிப்பெயர்ச்சி2017
இந்த சனிப்பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு அட்டம சனியாக அமைகிறது. கன்னி ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனியாக அமைகிறது.
Recommended Video
சென்னை: சனி பெயர்ச்சி சிலருக்கு நன்மையும், சிலருக்கும் சோதனையாகவும், சில ராசிக்காரர்களுக்கு வேதனையாகவும் இருக்கும். ரிஷப ராசிக்காரர்களுக்கு அட்டம சனியாக அமர்கிறார் சனி பகவான்
ஜன்ம ராசிக்கு எட்டாவது ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது அட்டம சனி என்று அழைக்கப்படுகிறது. அகப்பட்டவனுக்கு அட்டமத்து சனி என்ற பழமொழியே இருக்கிறது.
ஜன்ம ராசிக்கு நான்காவது ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது அர்த்தாஷ்டம சனி என்று அழைக்கப்படுகிறது. கன்னி ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனியாக அமர்கிறார். சனியை கண்டு அச்சம் வேண்டாம் அதற்கேற்ப பரிகாரங்கள் இருக்கின்றன.
தண்ணியில கண்டம்
சனிபகவான் 7வது இடத்தில் இருந்து ராசிக்கு 8வது இடத்திற்கு இடம் பெயர்கிறார். இதுநாள்வரை கண்டக சனியாக இருந்தவர் அஷ்டமத்து சனியாக மாறுகிறார்.
அகப்பட்டவனுக்கு அட்டமத்து சனி என்று கவலைப்பட வேண்டாம். ரிஷப ராசிக்காரர்களுக்கு சனிபகவான் யோகாதிபதி எனவே கவலைப்படாமல் வெற்றி நடை போடுங்கள். சனிபகவான் சோதனை தருவார் வேதனை தரமாட்டார்.
எச்சரிக்கை தேவை
தீமை நடப்பது போல தெரிந்தாலும் அது நன்மையாகவே இருக்கும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது எச்சரிக்கை தேவை. நீர் நிலைகளில் பயணிக்கும் போது கவனம் தேவை. தனுசில் அமர்ந்து சனி பகவான் 3வது பார்வையாக 10வது இடத்தை பார்க்கிறார். தொழில் ஸ்தானத்தின் மீது விழுவதால் தொழில் மாற்றம் ஏற்படும். வேலை மாற்றம் ஏற்படும்.
நாவடக்கம் தேவை
7வது பார்வையாக 2வது இடத்தை குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் குடும்பத்தில் சலசலப்புகள் ஏற்படும். நாக்கினால் பிரச்சினை ஏற்படும். வாயை மூடி பேசவும்.
10வது பார்வையாக 5வது இடத்தை பார்க்கிறார். குழந்தைகள் இடத்தில் எச்சரிக்கை தேவை. படிப்பில் அக்கறை காட்டவும்.
பலன்தரும் பரிகாரம்
அட்டமத்தில் சனி, 6ல் குரு இருப்பதால் உடல் நலம் பாதிக்கும். விநாயகர், ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம் துன்பங்களில் இருந்து விடுபடலாம். இது பொது பலன்தான். தசாபுத்தி சரியாக இருந்தால் நன்மையே நடக்கும்.
அச்சம் வேண்டாம்
ராசியின் 3வது இடத்தில் இருந்து ராசிக்கு 4வது இடத்திற்கு அர்த்தாஸ்டம சனியாக இடம் பெயர்கிறார். புதனும், சனியும் நண்பர்கள் என்பதால் தொல்லைகள் ஏற்படும் என்று அஞ்ச வேண்டாம். தொல்லைகள், துயர்கள் எதுவும் ஏற்படாது.
உறவில் விரிசல்
தனவரவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பழைய வாகனங்களை விற்று விட்டு புதிய வாகனங்களை வாங்குவீர்கள். சனி பெயர்ச்சி பல மாற்றங்களை ஏற்படும். கணவன் மனைவி உறவில் சில விரிசல்கள் ஏற்படும். அனுசரித்து விட்டுக்கொடுத்து போகவேண்டும். விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுபோவதில்லை.
நோய் நொடிகள்
மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். எனவே படிப்பில் மந்தமாக இருக்கும்.
உங்களுடைய 6வது இடத்தை பார்ப்பதால் நோய் நொடிகள் ஏற்படும். எதிரிகளிடம் கவனம் தேவை. சனிபகவான் உங்கள் ராசிக்கு10வது ஸ்தானத்தை பார்ப்பதால் வேலைக்கு செல்பவர்களுக்கு பணிமாற்றம் ஏற்படும். உங்கள் ராசியை 10வது பார்வையாக பார்ப்பதால் சின்னச் சின்ன உடல்வலிகள் வந்து நீங்கும்.
சனிபகவானுக்கு வழிபாடு
பெண்களுக்கு வீட்டிலும் வெளியிடத்திலும் மதிப்பும், மரியாதையும் ஏற்படும். 4வது இடத்தில் வருவதால் தாயாரின் உடல் நலத்தில் அக்கறை தேவை. கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள சனிபகவானை வணங்கினால் நன்மைகள் ஏற்படும். இது பொதுவான பலன்தான். உங்களுக்கு நடக்கும் தசாபுத்திக்கு ஏற்ப நல்ல பலன்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.